மிழக சட்டமன்ற நிகழ்வுகள் குறித்து இந்த இதழில் நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார் சட்டமன்றத்தின் காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை.

தமிழக சட்டமன்றத்திற்கு நான் புதியவன் கிடையாது. ஏற்கனவே 2006-2011 கலைஞர் ஆட்சியின்போது இந்த அவையில் இருந்திருக்கிறேன். அந்த வகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான இன்றைய ஆட்சியிலும் நான் எம்.எல்.ஏ.வாக இருப்பது பெருமை யாக இருக்கிறது. அ.தி.மு.க. ஆட்சியில் எம். எல்.ஏ.வாக இருப்பதற்கும், தி.மு.க. ஆட்சியில் எம்.எல். ஏ.வாக இருப்பதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு.

stalin

பொதுவாகவே, சட்டமன்ற ஜனநாயகம் என்பது ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் இருந்ததில்லை. எதிர்க் கட்சிகளின் குரல் வளையை இறுக்குவதில் ஜெயலலிதா ஆட்சியே விஞ்சி நிற்கும். தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களுக்கு சேவை செய்ய வேண்டுமாயின் அ.தி.மு.க. ஆட்சியில் எதிர்க்கட்சிகள் திணறவேண்டியதிருக்கும்.

Advertisment

பொதுவெளியில், பொதுவாழ்க்கையில் எதிர்க்கட்சி களை ஒடுக்குவது போலவே சட்டமன்றத்திலும் நடந்து கொள்வது ஜெயலலிதாவின் இயல்பாகவே இருந்தது. சுருக்கமாகச் சொல்வதானால், எதிர்க்கட்சிகள் முன்வைக் கும் பிரச்சினைகளை காது கொடுத்துக் கேட்கக் கூட விரும்பியதில்லை ஜெயலலிதா. இதனால், சட்டமன்றத்தின் நேரம் வீணடிக்கப்பட்டு அமளிகள், ரகளைகள், வெளியேற்றம், வெளிநடப்புகள் என அதிகம் நடந்தன.

இதனால் மக்களின் பிரச்சினை கள், தொகுதிகளின் பிரச்சனைகள் விவாதிக்கப்படுவது குறைந்துபோயிருந் தது. அதன் நீட்சியாகத்தான் கடந்த எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சி யிலும் பெரும்பாலும் நடந்ததை நாம் கவனித்திருக்கிறோம்.

sse

Advertisment

அ.தி.மு.க. ஆட்சியின் சட்டமன்றத்திற்கு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது இன்றைய சட்டமன்றம். அவையின் மாண்புகளையும் மரபுகளையும் பாதுகாப்பதில் உறுதியாக இருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். சட்டமன்ற ஜனநாயகமும் சட்டநெறிமுறைகளும் அழுத்தமாக தூக்கிப்பிடிக்கப்படுகின்றன. அதற்கேற்ப எதிர்க்கட்சிகளின் குரல், அவையில் அதிகமாக எதிரொலிக்க பேரவைத் தலைவர் அப்பாவுவும், முதல்வர் ஸ்டாலினும் அனுமதிப்பதை ஒவ்வொரு நாளும் உணரமுடிகிறது.

கடந்த 9-ந் தேதி சபை கூடியதும் கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்பட் டது. தங்களின் தொகுதி சார்ந்த பிரச்சனைகளை உறுப்பினர்கள் எழுப்பினர். அதற்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் பதிலளித்தனர். கேள்வி நேரம் முடிந்ததும் 110-விதியின் கீழ் சில அறிவிப்பு களை செய்தார் முதல்வர் ஸ்டாலின்.

குறிப்பாக, தமிழர்களின் நாகரிகத் தைப் பறைசாற்றும் வகையில் தண்பொருநை என்றழைக்கப்பட்ட தாமிரபரணி ஆற்றங்கரை நாகரிகம் 3,200 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை அறிவித்தார். மேலும், கீழடி உள்ளிட்ட அகழாய்வின் போது கிடைக்கப்பெற்ற தொல்லியல் ஆதாரங் களையும், அரியவகை பொருட்களை யும் விவரித்தார். அதனை காட்சிப் படுத்துவதற்காக பொருநை அருங்காட்சியகம் 15 கோடியில் அமைக்கப்படும் என அறிவித்தார் முதல்வர். இந்திய துணைக் கண்டத்தின் வரலாறு, இனி தமிழ்நிலப் பரப்பிலிருந்துதான் தொடங்கி எழுதப்பட வேண்டும் என்பதை வரலாற்றுச் சான்று களின் அடிப்படையில் அறிவியல் வழிநின்று நிறுவுவதே இந்த அரசின் கடமை என முதல்வர் சொன்னது…தமிழினத்தின் பெருமையையும் தமிழ் மொழியின் ஆளுமையையும் தமிழர்களின் நாகரிகத்தையும் உலகிற்குப் பறைசாற்றுவதாக இருந்தது.

sse

தாமிரபரணியின் ஆற்றங்கரை நாகரிகம் குறித்த தொல்லியல் ஆய்வு முடிவுகள், கண்டெடுக்கப்பட்ட பொருட்களின் புகைப்படங்கள், அதுகுறித்த விபரங்கள், முதல்வரின் அறிவிப்பு ஆகியவை அனைத்தும் தொகுக்கப்பட்ட, "பொருநை ஆற்றங்கரை நாகரிகம்' என்ற நூல் தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் வெளியிடப்பட்டது.

இதன்மீது பேசிய உறுப்பினர்கள் அனைவரும் தமிழர்களின் நாகரிகத்தையும் மொழியின் மாண்புகள் குறித்தும் எடுத்துச் சொல்லி முதல்வரின் அறிவிப்பினை வரவேற்று பேசினர். எனக்கான வாய்ப்பு கிடைத்தபோது, முதல்வரின் அறிவிப்பினை வாழ்த்திப் பேசிவிட்டு,”கீழடி ஆய்வில் இருந்த அமர்நாத் ராமகிருஷ்ணன் என்ற தொல்லியல் ஆய்வாளர் ஒருவரை ஒன்றிய அரசு திட்டமிட்டு திடீரென்று வேறு மாநிலத்துக்கு இடமாற்றம் செய்தது. எதற்காக மாற்றப்பட்டார்? என ஒன்றிய அரசு பதில் சொல்லவில்லை. அமர்நாத் ராமகிருஷ்ணனை அதே பணியில் மீண்டும் அமர்த்தவேண்டும் என்ற ஆதரவு குரல்கள் அதிகரித்தன. ஆனால், ஒன்றிய அரசின் முடிவுக்கு ஒத்துழைக்கும் வகையில் முந்தைய அ.தி.மு.க. அரசு வாய்மூடி மௌனியாக இருந்தது. அதன்பிறகு கனிமொழி என்ற வழக்கறிஞர் நீதிமன்றத்தில் முறையிட்டு அமர்நாத்தை திரும்ப கொண்டுவரும் முயற்சியில் இறங்கினார்.

தமிழர்களின் பண்பாட்டுக் கூறுகளை கண்டறியும் அகழாய்வுகள் குறித்து இன்றைக்கு நீங்கள் (முதல்வர்) இந்த சபையில் அறிவித்திருக்கிறீர்கள். ஆனால், தமிழர்களின் நாகரிகத்தையும் பண்பாடுகளையும் அடையாளப்படுத்தும் வரலாற்று ஆவணங்களை மூடி மறைக்கவும் மறுதலிக்கவும் ஒன்றிய அரசு தொடர் முயற்சியில் இருந்து வருகிறது. சமஸ்கிருதம்தான் மூத்த மொழி என்பதை நிலைநிறுத்தவும் அவர்கள் திட்டமிட்டு செயலாற்றினார்கள். அந்த நிலையில், முந்தைய அ.தி.மு.க. அரசு, ஒன்றிய அரசின் திட்டத்திற்கு துணையாக இருந்தது ஏன்?’என்று கேள்வி எழுப்பியதோடு, தமிழின் தொன்மையைக் குறித்து விரிவாகப் பேசினேன்.

dd

வரலாற்று சிறப்புமிக்க முதல்வரின் அறிவிப்பிற்கும் சரி, நான் முன்வைத்த கேள்விக்கும் சரி அ.தி.மு.க.வினர் பதில் சொல்ல முடியவில்லை. தமிழர்களின் நாகரிகத்தை உயர்த்திப்பிடிக்கும் வகையில் ஓரிரு வார்த்தைகள் பேசக் கூட அ.தி.மு.க. தயாராக இல்லை. நன்றிகூட சொல்லாமல் அமைதியாகவே இருந்தனர் அ.தி.மு.க. தலைவர்கள். இது, சபையின் துரதிர்ஷ்டம்தான்.

முதல்வர் ஸ்டாலினின் வசமிருக் கும் காவல் துறையின் மானியக் கோரிக் கைகள் எடுத்துக்கொள்ளப்பட்டன. இதன் மீதான விவாதத்தில் பேசிய தி.மு.க. உறுப்பினர் சுதர்சனம், கொட நாடு கொள்ளை, கொலை சம்பவம் குறித்து பேசியபோது, நீதிமன்றத்தில் இருக்கும் வழக்கைப் பற்றி இங்கு பேசுவது மரபு கிடையாது. அதனால் அதை சபைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, செங்கோட்டை யன் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். முதலமைச்சர் குறுக்கிட்டு, வழக்கைப் பற்றி பேசவில்லை. கொடநாடு சம்பவத்தைத்தான் பேசினார். அதனால், அவைக் குறிப்பிலிருந்து நீக்கத் தேவையில்லை என மறுத்தார்.

அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள பா.ம.க.வின் சட்டமன்ற தலைவர் ஜி.கே.மணி பேசும்போது, கடந்த காலங் களில் நடந்த தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட காவல்துறையினர் செய்த பல தவறுகளைச் சுட்டிக்காட்டி பேசிவிட்டு, அதுபோன்ற தவறுகள் நடக்கக்கூடாது; பொது மக்களிடம் காவல்துறையினர் கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டும் என்றார். கடந்த அ.தி.மு.க. அரசின் காவல்துறை தவறுகளை சுட்டிக்காட்டி பா.ம.க. தரப்பில் பேசியதை தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கட்சிகளுமே ஆச்சரியத்துடன் கவனித்தன.

பா.ஜ.க.வின் சட்டமன்ற தலைவர் நயினார் நாகேந்திரன் பேசும்போது, முன்னாள் எம்.எல்.ஏ.க்களின் குடும்பம் வறுமையில் இருக்கு. நீங்கள் கொடுக்கும் 20,000 பென்சன் அவங்களுக்குப் போதலை. உயர்த்திக் கொடுக்கணும் என்று சொன்னபோது, அ.தி.மு.க. தங்கமணி, எங்கள் ஆட்சியில் 25,000-ஆக உயர்த்தியிருக்கிறோம் என்றார்.

அதற்கு முதல்வர் ஸ்டாலின், "அ.தி.மு.க.வினரைப் பார்த்து, நீங்கள் 5000 உயர்த்தி 25,000 மாக அறிவித்தீர்கள். 1 வருசம் ஆச்சு. ஆனா, நீங்க அதைக் கொடுக்கலை. உங்கள் அறிவிப்பெல்லாம் வெற்று அறிவிப்புகள்தான். நடைமுறைப் படுத்தமாட்டீங்க. அதற்கு இந்த பிரச்சினையே ஒரு உதாரணம் என்று ஒருபிடி பிடித்துவிட்டு, பா.ஜ.க. வைத்த கோரிக்கையை இந்த அரசு பரிசீலிக்கும்'' என்றார்.

துறையின் மீது நான் பேசும்போது, கொடநாடு என்று சொல்லாமல், நாடுகளின் மர்மங்களை இந்த அரசு வெளிக் கொண்டு வரவேண்டும். அதனை நீண்ட நெடிய நாட்களுக்கு மறைக்கக்கூடாது. அதேபோல, அம்மையார் ஜெயலலிதா வின் மர்ம மரணத்திலிருக்கும் சந்தேகங்களை வெளிக் கொண்டு வருவோம் என்று தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை யில் சொல்லியிருக்கிறீர்கள். அதுகுறித்த உண்மைகளை ஆராயாமல் இருக்கிறீர்கள். தர்மயுத்தம் நடத்தியவர் தர்பாரில் இணைந்த பிறகு அதைப்பற்றி வாய் திறப்பதில்லை‘’என்றேன். அதற்கு அ.தி.மு.க. தரப்பிலிருந்து கூச்சல் எழுந்தது.

கூச்சல் அடங்கியதும் தொடர்ந்து நான் பேசியபோது, "காக்கைகள், குருவிகளைப் போல சுட்டுக்கொன்றதாக இங்கு ஜி.கே.மணி பேசினார். அப்படி சுட்டது எந்த ஆட்சி? 1987-ல் எம்.ஜி.ஆர். ஆட்சியின்போது 27 பாட்டாளிகளை சுட்டுக் கொன்றனர். அதேபோல 2018-ல் தூத்துக்குடியில் அதே அ.தி.மு.க. போலீஸ்தான் 17 பேரை சுட்டுக்கொன்றது. பாட்டாளிகளை கொன்றதும் அ.தி.மு.க. போலீஸ்; தொழி லாளர்களை கொன்றதும் அ.தி.மு.க. போலீஸ். அந்த அ.தி. மு.க.வோடுதான் நீங்க கூட்டணி வைத்திருக்கிறீர்கள்'' என்று பேசியதும், அ.தி.மு.க. உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்து கலாட்டா செய்தனர். இதற்கு "பாயிண்ட் ஆஃப் ஆர்டர்' கேட்டார் எடப்பாடி பழனிச்சாமி. அப்போது குறுக்கிட்ட சபாநாயகர், "இரண்டு சம்பவங்களும் அ.தி.மு.க. ஆட்சியில் நடந்ததுதானே? நடக்காததை ஒன்றும் அவர் சொல்ல லையே'' என்று சொல்லி ஏற்க மறுத்தார்.

காவல்துறை மானியக் கோரிக் கையின்போது பேசிய எடப்பாடி பழனிச்சாமி, "அ.தி.மு.க. ஆட்சியில் மதச்சண்டை, சாதிச் சண்டை, ரவுடி கள் ராஜ்ஜியம் எதுவும் கிடையாது. போலீஸார் சுதந்திரமாக செயல்பட்டனர்'' என்று சொன்ன தும், சட்டென்று எழுந்த அவைமுன்னவர் துரைமுருகன், "உங்கள் ஆட்சியில்தான் ரவுடிகள் பெரிய கத்தியால் கேக்வெட்டி கொண்டாடினர். முட்டிக்கு கீழே சுடவேண்டும் என்பதுதான் போலீசாரின் வழக்கம். ஆனா, உங்க ஆட்சியில் போலீஸ், தூத்துக்குடியின் ஜீப்பில் ஏறிநின்று சுட்ட சம்பவங்களெல்லாம் நடந்தது'' என்று பதிலடி தந்தார்.

அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், "கொடநாடு எஸ்டேட்டில் ஜெயலலிதா தங்கியிருக்கிறார். முதல்வரின் முகாம் அலுவலகமாகவும் அந்த பங்களா செயல்பட்டது. அந்த பங்களாவில் நடந்த குற்றங்களை எதில் சேர்ப்பது? அங்கு பொருத்தப்பட்டிருந்த கேமராக்கள் அகற்றப்பட்டுள்ளன. இதெல்லாம் உங்களுக்கு தெரியுமா? தெரியாதா? சம்பவம் நடந்தபோது நீங்கள்தானே முதல்வர். இந்த குற்றங்களுக்காக என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?'' என சரமாரியாக கேள்வி எழுப்ப... ஆளும்கட்சி தரப்பிலிருந்து மேஜையை தட்டி ஆர்ப்பரித்தனர்.

இதனை எதிர்கொண்ட எடப்பாடி, "ஜெயலலிதா மறைந்ததும் அந்த சொத்து வேறொருவருக்குப் போய்விட் டது. அதற்கு எப்படி போலீஸ் பாதுகாப்பு கொடுக்க முடியும்?'' என்று எதிர்கேள்வி எழுப்ப, "நான்காண்டு காலம் முதல்வராக இருந்த நீங்கள் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? விசாரணை நடத்தலாம் என கோர்ட் சொன்னபோது அதற்கு உச்சநீதிமன் றத்தில் தடை கேட்டது நீங்கள்'' என்றெல்லாம் முதல்வர் மடக்க, எடப்பாடியால் பதில் சொல்ல முடியவில்லை.

முதல்வர் வைத்த கேள்விகளை எதிர்கொள்ள முடியா மல் தவித்த எடப்பாடி, "புலன்விசாரணை நடந்து வழக்கு கோர்ட்டில் இருக்கிறது. எங்களை குற்றம் சாட்டுவதற்காகவே பேசுகிறீர்கள். இப்படி குற்றம்சாட்டுவதை தவிர்க்கவேண்டும். எங்களுக்கும் அதற்கும் சம்மந்தமில்லை''‘’என்றார். இப்படி முதல்வருக்கும் முன்னாள் முதல்வருக்குமிடையே நடந்த கொடநாடு விவகாரம் சபையில் ஹாட்டாக இருந்தது.

கடந்த 8-ந் தேதி கேள்வி நேரம் முடிந்ததும் ஆதி திராவிடர் நலத்துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறைகளின் மானிய கோரிக்கைகள் எடுத்துக்கொள்ளப்பட் டன. தனது துறை மீதான விவாதங்களுக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் கயல்விழி, "ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் புதிய வகுப்பறைகள், ஆய்வக வசதிகள் உள்ளிட்ட கட்டமைப்புகள் 100 கோடி ரூபாயில் மேம்படுத்தப் படும்; ஆதிதிராவிட பழங்குடியின விவசாயிகளுக்கு துரித மின் இணைப்புத் திட்டத்தின் கீழ் மானியம் வழங்கப்படும்; இச் சமூகத்தின் தொழில் முனைவோர் களுக்கு தொழில் மேலாண்மைப் பயிற்சிகள் அனைத்து மாவட்டங்களிலும் வழங்கப்படும்'' உள்பட பல்வேறு அறிவிப்புகளை செய்தார். அதேபோல, "ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் அமைக்கப்படும்' என்று 110 விதியின்கீழ் அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின். இதெல்லாம் ஆதி திரா விடர்களின் நலனை பாதுகாப்பதாக அமைந்தது.

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் துறையின் மானியக் கோரிக்கைகள் மீது எழுந்த விவாதங் களுக்கு பதிலளித்த துறையின் அமைச்சர் சிவசங்கர், இச்சமூகத்தினருக்கான கல்லூரிகளில் 2.59 கோடி செலவில் செம்மொழி நூலகம் அமைத்தல், விடுதி மாணவர்களுக்கு தனித்திறன் பேச்சுப் பயிற்சி அளித்தல், கல்வி உதவித் திட்டங்களுக்கான பெற்றோரின் ஆண்டு வருமான வரம்பு 2 லட்சத்திலிருந்து 2.50 லட்சமாக உயர்த்தப்படும், முதல் பட்டதாரி என்பதை முதல் தலைமுறை பட்டதாரி என மாற்றம் செய்தல், மாணவியர் விடுதிகளில் பயோ மெட்ரிக் கருவிகள் பொருத்துதல், கல்லூரிகளின் தரம் உயர்த்துதல் உள்ளிட்ட 30 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

இரண்டு நாளில் நடந்த துறை ரீதியிலான மானியக் கோரிக்கைகள் மீது நடந்த விவாதங்கள் ஆரோக்கியமாகவும் அதேசமயம் மிக ஹாட்டாகவும் இருந்தன. எதிர்க்கட்சிகள் எழுப்பிய பிரச்சனைகளுக்கு முதல்வரும் அமைச்சர் களும் குறிப்புகள் எடுத்துக்கொண்டு உடனுக்குடன் பதிலடி தந்தது சபையின் சிறப்பு.