தினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில், தமிழகத்தின் மேற்குப் பகுதியான கொங்கு மண்ட லத்தில், ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்தும், கிழக்கிந்திய கம்பெனியின் வரி வசூலை தடுத்து நிறுத்தியும் போர்புரிந்தவர் தான் தீரன் சின்ன மலை. தீரன் சின்னமலையோடு ஏராளமான போர்ப்படை தளபதிகள் இணைந்து போரிட்டனர். அப்படையில் குறிப்பிடத்தகுந்தவர் பொல்லான். ஒவ்வொரு சமூகமும் அவர்தம் சமூகம் சார்ந்த வீரர்களை தங்கள் சமூகத்தின் அடையாளமாகப் போற்றி வருகிறார்கள். அதில், தீரன் சின்னமலை கொங்கு வேளாளர் கவுண்டர்களின் அடையாளமாகவும், பொல்லான் அருந்ததியினர் சமூகத்தின் தலைவ ராகவும் புகழ் வணக்கம் செலுத் தப்பட்டு வருகிறார்கள்.

pp

தீரன் சின்னமலையின் போர் வியூ கத்தில் பொல்லானின் பங்கு மிக முக்கியத் துவம் வாய்ந்தது. ஆங்கிலேயர்களின் நிர்வாக அமைப்புக்குள்ளேயே பணிபுரிந்து, அவர்களின் போராட்ட யுக்திகளை தீரன் சின்னமலைக்கு உளவு மூலமாக அனுப்பி, ஆங்கிலேயப் படை களைத் தோற்கடிக்க தீரன் சின்னமலைக்கு வலதுகரமாகப் பணியாற்றியவர் பொல்லான். ஒரு கட்டத்தில் ஆங்கிலேயப் படை தீரன் சின்னமலை யைப் பிடித்து சங்ககிரி கோட்டையில் வைத்து தூக்கிலிட்டது. சின்னமலைக்கு வலதுகரமான பொல்லானை சுட்டுக் கொன்றது. நாட் டின் விடுதலைக்காக உயிர்த்தியாகம் செய்தவர்கள்தான் தீரன் சின்னமலை யும், பொல்லானும். தீரன் சின்னமலை யைப் போலவே பொல்லானுக்கும் அரசு மரியாதை வேண்டும் என அருந்ததியர் சமூக அமைப்புகள் அரசிடம் கோரிக்கை வைத்தன. கலைஞரின் ஆட்சிக் காலத்திலேயே கோரிக்கை ஏற்கப்பட்டு அதற்கான பணி தொடங்கப்பட்டது. ஆனால் அடுத்துவந்த அ.தி.மு.க. ஆட்சியில் அனைத்தும் தடைப் பட்டன. தி.மு.க.வோ சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதிப்படி பொல்லானுக்கான அரசு மரியாதையை தொடர்ந்து செலுத்திவருகிறது.

மேலும், அவரது சொந்த கிராமமான ஈரோடு மாவட்டம் ஜெயராமபுரத்தில் முழு உருவ வெண்கலச் சிலையும், மணி மண்டப மும் அமைக்க வேண்டுமென்ற கோரிக்கை யை ஏற்று, சென்ற 23ஆம் தேதி ஈரோடு ஆட்சி யர் அலுவலகத்தில் பல்வேறு அமைப்புகளோடு ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியது. பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துச்சாமி, செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான அந்தியூர் செல்வராஜ், கணேசமூர்த்தி, ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அதியமான் உட்பட பலரும் கலந்துகொண்ட னர். "மிக விரைவாக மணிமண்டபப் பணி தொடங்கும்" என அமைச்சர்கள் அறிவித்தார் கள். "எங்களது மூதாதையர் பொல்லான். அவரின் வீரத்தை, தியாகத்தை போற்ற இந்த அரசு எடுக்கிற நல்ல முயற்சியை நாங்கள் வரவேற்கிறோம்'' எனக் கூறினார் பொல்லானின் வாரிசு தாரரான ஜெயராமபுரம் கருப்புசாமி.

Advertisment