மிழகத்தில் அரசியல் கட்சிகள் யாருடன் கூட்டணி என்ற நிலையிலிருந்து மாறி, யார் யாருக்கு எந்த எந்த தொகுதிகள் என வேட்பாளர் தேர்வுப் பட்டியலுக்குப் பறந்துவிட்டன. கடைசியாக பிரதமர் மோடி சென்னைக்கு வந்தபோதுகூட அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார். தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில் கலந்துகொண்ட பொழுது, பிரதமர் அவரது பெர்சனல் போன் நம்பரை எடப்பாடியிடம் கொடுத்து வைத்திருந்தார். மோடியின் இந்த போன் நம்பர் பரிமாற்றம்தான் அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி வரும் என எதிர்பார்த்தவர்களுக்கு ஒரே நம்பிக்கையாக இருந்தது.

ee

பா.ஜ.க. மா.தலைவருக்கும் எடப்பாடிக்கும் இடையே மோதல் வெடித்து உச்சகட்டமாகப் போனபோது அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும் இரு துருவங்களாய் ஆனது. அமித்ஷாவோ, அ.தி.மு.க.வுக்கான கதவுகள் திறந்திருக்கிறது என அறிவித்தார். பிரதமர் இரண்டு முறை தமிழகத் திற்கு வந்ததே அ.தி.மு.க.வுடனான கூட்டணியை உறுதி செய்யத்தான். பிரதமர் வருகைக்கு முன்பாக மத்திய அமைச்சர் பியூஷ்கோயலும் முன்னாள் நீதியரசர் சதாசிவமும் எடப்பாடியிடம் பேசி பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என உறுதியாகச் சொன்னார்கள். சதாசிவத்திடம் பேசிய எடப்பாடி, இதில் நீங்கள் தலையிடாதீர்கள் எனச் சொல்லிவிட்டார். பியூஷ்கோயல், எடப்பாடியிடம் நேரடியாகப் பேசியது சரியாக வராததால் ஜக்கிவாசுதேவ் மூலம் வேலுமணியை எடப்பாடியிடம் பேசவைத்தார். டெல்லி சார்பாக வேலுமணி -எடப் பாடிக்கு இடையிலான பேச்சு இருவருக்குமிடையே மோதலாகவே மாறியது. "நீ உன் வேலையைப் பார்'’ என வேலுமணியைப் பார்த்து எடப்பாடி சொல்லிவிட்டார்.

கடைசியாக நாலாம் தேதி சென்னை வந்த பிரதமர் தனது பெர்சனல் எண்ணிலிருந்து எடப்பாடி யைத் தொடர்புகொண்டார். பிரதம ரின் போனை எடப்பாடி எடுக்கவில்லை என மத்திய உளவுத்துறை வட்டா ரங்கள் தெரிவிக்கின்றன. அதன்பிறகு வேறு, வேறு சேனல்கள் மூலம் எடப்பாடியிடம் பேச்சுவார்த்தை நடத்திய பிரதமருக்கு நெருக்கமான வர்கள், “"பிரதமர் கேட்டுக் கொண்டதால்தான் நான் பா.ஜ.க. கூட்டணிக்கு வரச் சம்மதித்தேன்'’என எடப் பாடியை சொல்லச் சொன் னார்கள். அதற்கு பதிலளித்த எடப்பாடி, "நான் பா.ஜ.க. எதிர்ப்பில் நீண்ட தூரம் வந்து விட்டேன். நாங்கள் வைத்த முதல் கோரிக்கை எம்.ஜி. ஆரையும் ஜெயலலிதாவை யும் கேவலமாகப் பேசிய பா.ஜ.க.மா.தலைவரை மாற்ற வேண்டும் என்பது. அதை டெல்லி பா.ஜ.க. மதிக்கவில்லை''’என வருத்தப்பட்டார்.

Advertisment

"இப்பொழுது நீங்கள் கூட்டணிக்கு சம்மதம் தெரிவியுங்கள் அடுத்த அரை மணி நேரத்தில் பா.ஜ.க. மா.த. தமிழ்நாட்டில் இருக்கமாட்டார்'’என டெல்லி பா.ஜ.க. சொன்னது. அதற்கு பதிலளித்த எடப்பாடி, “"காலம் கடந்து விட்டது எதுவாக இருந்தாலும் ஜெகன்மோகன் ரெட்டி, சந்திரசேகர ராவ், நவீன்பட்நாயக் போல ஜெயித்துவரும் எம்.பி.க்களை வைத்து பா.ஜ.க. அரசுக்கு நாங்கள் ஆதரவளிப்போம். இந்தியா கூட்டணிக்குள் நாங்கள் செல்லமாட்டோம்'’என ஒரு உறுதியையும் எடப்பாடி கொடுத்தார். அதைக் கேட்டு அமைதியானது டெல்லி பா.ஜ.க. தரப்பு.

eps

அ.தி.மு.க.வுக்கு ராஜ்யசபா உறுப்பினர்களும் இருக்கிறார்கள். விரைவில் இரண்டு ராஜ்யசபா உறுப்பினர்கள் புதிதாக அ.தி.மு.க. முகாமிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்கள். அவர்களது ஆதரவு கிடைத்தால்கூட போதுமானது என டெல்லி பா.ஜ.க. திட்டமிடுகிறது. இப்படி அ.தி.மு.க., பா.ஜ.க. உறவு இந்த தேர்தலில் முறிந்து போனவுடன் அ.தி.மு.க.வுடன் கூட்டணி பேசி வந்த சரத்குமாரை பா.ஜ.க. வளைத்துக்கொண்டது. அவர் தூத்துக்குடி யிலும், ராதிகா விருதுநகரிலும் போட்டியிடுகிறார் கள். எச்.ராசா தென்சென்னையைக் குறி வைக் கிறார். பொன்னார் கன்னியாகுமரியில் மீண்டும் களம்காண தயாராகிவருகிறார். அவருக்கு போட்டியாக எல்.முருகனால் காங்கிரசிலிருந்து இழுத்து வரப்பட்ட விஜயதாரணிக்கு எதிராக மிகக்கடுமையான போராட்டத்தை பொன்னார் ஏற்கனவே நடத்தியிருக்கிறார்.

ஆனால் பா.ஜ.க. மா.த. தோல்வி பயத்தில் வேட்பாளர் லிஸ்ட்டில் அவரது பெயரைக் கொண்டு செல்லவில்லை. கடும் கோபமடைந்த பா.ஜ.க. டெல்லி தலைமை, “"இந்த பாராளுமன்றத் தேர்தலில் தமிழக பா.ஜ.க.வின் இத்தனை பின்னடைவு கூத்துகளுக்கும் நீதான் காரணம். எல்லா குளறுபடிகளையும் உன் வாய்த்துடுக்கால் செய்துவிட்டு, தேர்தல் களத்தில் நான் போட்டியிட மாட்டேன் என நீ ஒதுங்க முடியாது. நீ சமைத்த உணவை நீயே சாப்பிட்டு முடி'’என மா. தலைவரிடம் சொல்லிவிட்டதாக கமலாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அ.தி.மு.க. முகாமிலும் சீட் ஒதுக்கீடு வேகமாக நடைபெற்று வருகிறது. கன்னியாகுமரி -நாசரேத் பசிலியான், தென்காசி -கிருஷ்ணசாமி, சேலம் -எடப்பாடிக்கு நெருக்கமான காண்ட்ராக் டர், நாமக்கல் -கிறிஸ்டி நிறுவனத்துக்கு நெருக்க மான ஒருவர், கிருஷ்ணகிரி -கே.பி.முனுசாமியின் மகன் என லிஸ்ட் போட்டிருக்கும் எடப்பாடி, திருநெல்வேலிக்கு வேட்பாளர் கிடைக்காமல் தடு மாறுகிறார். ஓ.பி.எஸ். குலதெய்வம் கோவிலுக்குப் போய் சாமி கும்பிட்டுக்கொண்டிருக்கிறார். டி.டி.வி.யோ தேர்தலுக்கும் அவருக்கும் தொடர்பே இல்லை என்பதுபோல வீட்டில் இருக்கிறார். பா.ஜ.க. மா.த.வோ இந்த தேர்தலில் வேட்பாளர் லிஸ்ட்டில் இடம் பெற ஒரு மெகா வசூல் வேட்டையை நடத்திக்கொண்டிருக்கிறார். நடக்கும் வசூல் வேட்டையை வைத்து ஒரு பாராளுமன்றத் தொகுதிக்கு பத்து கோடி ரூபாய் பா.ஜ.க. மா.த. கொடுப்பார் என கூட்டணி வேட்பாளர்கள் எதிர்பார்த்துக் காத்துக்கிடக்கிறார்கள்.

இதற்கிடையே ஒன்றிய அரசு, தமிழகத்தில் ஓட்டுக்கு வேறெந்த கட்சியும் பணம் கொடுத்து விடக்கூடாது என, பண விநியோகத்தை தடுப்பதற்கான வேலைகளை தேர்தல் கமிஷன் மூலம் கடுமையாக எடுத்துவருகிறது.

Advertisment