இந்த முறை ரஜினி ரசிகர்களுக்கு உற்சாக தீபாவளிதான். காரணம், நவம்பர் 4 தீபாவளி அன்று "அண்ணாத்த' ரிலீஸ் ஆகிறது. பொதுவாக, ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி களின் சராசரி வயது அதிகமாகி விட்டது. ஏன், ரஜினி நடிக்க வந்த காலத்தில் சினிமாவுக்கு வந்த தமிழ்-இந்தி நடிகர்கள் அண்ணன், அப்பா, தாத்தா கேரக்டருக்குப் போய்விட்டனர். ரஜினி இப்பவும் மாஸ் ஹீரோதான். "அண்ணாத்த' 500 "சி' வியாபாரமாகியிருப்பதாகப் பேச்சு.
அரசியல் தொடர்பாக அவரது மாறுபட்ட அறிவிப்புகள், கடைசியாக உடல்நலனை முன்னிட்டு அரசியலுக்கே வராமல் ஒதுங்கியது, மக்கள் மன்றம் மீண்டும் ரசிகர் மன்றமாக ஆனது, ரசிகர்கள் பல கட்சிகளுக்கு சென்றது, ஆனாலும் அவர்கள் என் ரசிகர்கள்தான் என ரஜினி சொன்னது என பலவித திருப்பங்களுக்குப் பின் "அண்ணாத்த' வருகிறது.
சோளிங்கர் நகரில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட ரஜினி ரசிகர் மன்றத்தின் மாவட்ட செய லாளர் சோளிங்கர் ரவி தலைமையில் "அண்ணாத்த' படம் வெளியீட்டு விழா பிரச்சார கொண்டாட் டத்தை, செல்ஃபி எடுப்பதற்கான பேனர் வைத்து துவங்கியுள்ளனர். "அண்ணாத்த' ரஜினி ஸ்டில் கொண்ட பேனர் முன் ரசிகர் மன்ற நிர்வாகிகள், ரசிகர்கள் போட்டோ எடுத்துக்கொண்டனர்.
இது குறித்து மாவட்ட செயலாளர் சோளிங்கர் ரவி நம்மிடம், "வேலூர் மாவட்டத்தில் ரயில் நிலையம், பேருந்து நிலையம் என பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சம்பந்தப்பட்ட துறையில் முறையாக அனு மதி வாங்கி "அண்ணாத்த' செல்பி பலகை வைக்கவுள் ளோம். யார் வேண்டுமானா லும் செல்பி எடுத்துக்கொள்ள லாம்'' என்றார்.
"அண்ணாத்த' திரைப் படம் தமிழ்நாட்டில் 700-க்கும் அதிகமான தியேட்டர்களில் தீபாவளி அன்று வெளியாகிறது. "சன் பிக்சர்ஸ்' தயாரித்துள்ள இந்தப் படத்தின் வெளியீட்டு உரிமையை உதயநிதியின் "ரெட் ஜெயன்ட்' நிறு வனம் வாங்கியுள்ளது. கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வு என தியேட் டர்களில் 100% இருக்கைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. "ரஜினி படம் அதுவும் உதயநிதி வெளியீடு என்ற நிலையில், தீபாவளியன்று வேறு திரைப்படங்கள் வெளியாக தியேட்டர் கிடைக்கவிடாமல் செய்கிறார்கள்' என்கிற முணுமுணுப்பு திரைத்துறை வட்டாரங் களில் எழுந்துள்ளது.
இந்த சர்ச்ச்சைகளுக்கு இடையே, ரஜினிக்கு மத்திய அரசு அறிவித்த "தாதா சாகேப் பால்கே விருது' டெல்லியில் வழங்கும் விழா, அக்டோபர் 25 என்பதால், அதற்கு முதல்நாள் செய்தியாளர் களிடம் பேசிய ரஜினி, "இந்த விருதைப் பெறுவதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் இதனைக் காண, எனது குருநாதர் பாலசந்தர் இல்லாதது வருத்தத்தை ஏற்படுத்துகிறது'' என கூறியுள்ளார். "அண்ணாத்த' ரிலீஸ் நேரத்தில் ரஜினியின் இந்த சந்திப்பும் படத்திற்கு ஒரு புரமோஷன்தான்.