ன்னபூர்ணா ஹோட்டல் அதிபர் சீனி வாசன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பா.ஜ.க. மாநில நிர்வாகி வானதி சீனிவாசன் ஆகிய மூவர் இடம்பெற்ற மன்னிப்புக் கேட்கும் வீடியோவில் என்ன இருந்தது என்பதைப் பற்றிய விவரங்கள் நக்கீரனுக்குக் கிடைத்துள்ளது.

அன்னபூர்ணா ஹோட் டல் உரிமையாளர் சீனி வாசன், ஜி.எஸ்.டி. குறைகேட்பு நிகழ்வில் பேசியபோது "வானதி சீனிவாசன் ஹோட்ட லுக்கு வருவார், ஜிலேபி சாப்பிடுவார்'’என்று குறிப்பிட்டார். அதே சமயம், ஜி.எஸ்.டி.யில் உள்ள குறைபாடுகளைப் பற்றியும் விரிவாக விளக்கிப் பேசினார். இது நிர்மலா சீதாராம னையும், வானதியையும் கோபப்படுத்தியது. "சீனி வாசனை கூப்பிட்டு வாருங் கள்' என பா.ஜ.க. கோவை மாவட்ட தலைவருக்கு வானதி உத்தரவிட்டார்.

dd

நிர்மலா தங்கி யிருந்த அறைக்கு அழைத்து வரப்பட்ட அன்னபூர்ணா சீனிவாசன், அறைக்குள் வந்தவுடனேயே கால்மணி நேரம் வார்த்தைகளால் வறுத்தெடுத்துவிட்டார்கள். வானதி, அன்னபூர்ணா சீனிவாசனை தி.மு.க.காரர் எனத் திட்டினார். அதற்கு அவர், நான் எந்தக் கட்சியையும் சாராதவன் எனவும் பா.ஜ.க. ஆடுமலைக்கு தேர்தல் நிதியாக பணம் கொடுத்தது பற்றியும் விளக்கி னார். அவரது வயதுக்குக்கூட மரியாதை கொடுக்காமல் வானதி அவரை ஒருமையில் பேச, அதை நிர்மலா பார்த்துக்கொண்டிருக்க உருக்குலைந்து போனார் சீனிவாசன். ஒரு கட்டத்தில் அவர் எழுந்துநின்று மன் னிப்புக் கேட்டார்.

Advertisment

வானதி, அன்னபூர்ணா சீனிவாசனை கூப்பிடும்போதே வானதி தனியாக நடத்திவரும் ஸ்பெஷல் ‘வார்ரூமைச் சேர்ந்த நான்குபேரை அழைத்திருந்தார். அதில் முக்கியமானவர் ரமேஷ். இன்னொருவர் வானதி யின் பி.ஏ.வான மகேஷ். இதில் ரமேஷ்தான் வீடியோ எடுத்தவர். ரமேஷ் எடுத்த வீடியோ வில் வானதி மரியாதைக் குறைவாக திமிரோடு பேசு வதும், அதை நிர்மலா ஆமோதிப்பதும் எகத்தாளமாக அவரைப் பேசுவதும், அவர் மனமுடைந்து எழுந்து நின்று மன்னிப்புக் கேட்பதும் பதிவாகி இருந்தது. "இதை உடனே வெளியிடு'’என வானதி உத்தரவிட்டார்.

இதை அப்படியே வெளி யிட்டால் வானதி, அமைச்சர் இருவரின் திமிர்த்தனமும் வெளிப்படும் என ரமேஷ் கருத்து சொல்ல, நிர்மலாவிடம் பேசிய வானதி, அதிலிருக்கக் கூடிய வாய்சை டெலீட் செய்ய உத்தரவிடுகிறார். டெலீட் செய்த பிறகு அதை நிம்மியிடம் அனுப்பி ஓ.கே. வாங்கிய பிறகு, வானதிக்கு நெருக்கமான ரமேஷும், தினேஷ் ரோடி என்கிற கோவில்பட்டிக் காரரும் அதை வெளியிடுகிறார் கள்.

ரோடி வெளியிட்ட வீடியோ வுக்கு கடுமையான எதிர்ப்பு வருகிறது. உடனே பயந்துபோய் அந்த வீடியோவை நீக்குகிறார் ரோடி. ஆனால், ரமேஷ் வெளி யிட்ட வீடியோ அதற்குள் வைரலாகிவிட்டது. அதை பா.ஜ.க. நிர்வாகியான சதீஷ் என்பவர் தனது வாட்ஸ்ஆப் பதிவில் டெக்னிகலாக ஒரு கேள்வியைக் கேட்டிருந்தார். அமைச்சர் நிர்மலா நடத்தியது தனிப்பட்ட ரீதியிலான ஒரு சந்திப்பு அல்ல. அறைக்குள் அமைச்சர், வானதி, அன்னபூர்ணா ஹோட்டல் சீனிவாசன் உட்பட ஏழு பேர் இருந்தார்கள். அவர்களில் ஒருவர்தான் வீடியோ எடுத்திருக்க வேண்டும். அவர்கள் எடுக்காமல் வீடியோ எப்படி வெளியே வரும் என சதீஷ் கேள்வி கேட்டிருந்தார். வானதிதான் வீடியோ எடுத்தார் என மறைமுகமாகக் குறிப்பிட்டு சதீஷ் வெளியிட்ட வாட்சப் பதிவு பா.ஜ.க. வட்டாரங்களில் பெரும் அதிர்வை ஏற் படுத்தியது. எனவே சதீஷை பலிகடாவாக்கி பா.ஜ.க.வின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கிவிட்டதாக வானதியின் ஆதர வாளரான மாவட்ட தலைவர் ரமேஷ் அறிக்கை கொடுத்தார்.

Advertisment

ff

அன்னபூர்ணா தரப்பிலும், அவரது நாயக்கர் சமுதாயத்தைச் சேர்ந்த பிரமுகர்கள், சாதிக்காரர்கள் மற்றும் பொதுமக்கள், ஹோட்டல் அதிபர் அவமானப்படுத்தப்பட்ட சம்பவத்தில் பெரும் கொந்தளிப்பு உருவானது. உடனே லண்டனி லிருக்கும் ஆடுமலை, வானதியின் செயலுக்கு மன்னிப்புக் கேட்டு ஒரு அறிக்கை விடுத்தார். கோவை மாநகரின் செல்வாக்குமிக்க நாயக்கர் சமூகத்தில் எழுந்த எதிர்ப்பு, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வானதி, நிர்மலா இருவரின் செயலுக்கும் கண்டனம் தெரிவித்து அறிக்கைகளை வெளிவர வைத்தது.

"கோவை தொழிலதிபர்களின் பிரச்னைகளை நிர்மலாவிடம் சொல்லி தீர்த்து வைக்கிறோம்' என ஆடுமலையும், வானதியும் தனித்தனியாக வசூல் வேட்டை நடத்துவார்கள். கோடிக்கணக்கில் புரளும் எங்கள் பணம் தமிழக பா.ஜ.க.வின் கட்சி நடவடிக்கைகளுக்கு பெரும் ஆதரவாக இருக்கும். இனிமேல் நீங்கள் பணம் கேட்டு வாருங்கள். உங்களுக்கு நாங்கள் என்ன செய்கிறோம் என்பதைப் பாருங்கள்' என கோவை தொழிலதிபர்கள் வட்டாரம் அன்னபூர்ணா ஹோட்டல் சீனிவாசன் அவமதிப்பு வீடியோவால் டென்சனாகி யிருக்கிறது. இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட சதீஷ் ‘என்னை பலிகடாவாக்கி இருக்கிறார் கள்'’என ஒரு அறிக்கை கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

ஆப்பசைத்த குரங்காக இந்த விவகாரத்தில் மாட்டிக்கொண்டு முழிக்கிறார்கள் ‘நிர்மலாவும் வானதியும். எட்டரைக் கோடி தமிழ் மக்களுக்கு ஐந்தரை லட்சம் கோடி முத்ரா லோன் வழங்கியதாக நிர்மலா வெளியிட்ட ஒரு அறிக்கையை கேள்வி கேட்டு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையும் ‘அது பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்’ எனக் கேட்டு பரபரப்பைக் கூட்டியிருக்கிறார். மொத்தத்தில் முழிக்கிறார்கள்... நிர்மலாவும், வானதியும்!

ss

நினைத்தது ஒண்ணு நடந்தது ஒண்ணு அதனால முழிக் கிறாங்க அம்மாக்க இரண்டு...

-தாமோதரன் பிரகாஷ்