பிரதமர் மோடியையும் அமைச்சர் அமித் ஷாவையும் சந்திக்க எடப்பாடி தரப்பில் எடுக்கப் பட்ட முயற்சிகள் வீணான நிலையில், டெல்லியை தொடர்பு கொள்வதையும் சந்திக்க முயற்சிப்பதையும் சமீபகாலமாக நிறுத்தியிருந்தார் எடப்பாடி பழனிச்சாமி. ஆனால், அவர்களை எப்படியும் சந்தித்தே தீரவேண்டும் என்று திடீரென எடுக்கப்பட்ட பகீரத முயற்சியில் அமித்ஷாவை மட்டுமே சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது.
மாஜி அமைச்சர்கள் சி.வி.சண்முகம் எம்.பி., எஸ்.பி.வேலுமணி சகிதம் 3 நாள் பயணமாக டெல்லிக்கு புறப்பட்ட எடப்பாடி பழனிச்சாமிக்கு, மோடி மற்றும் அமித்ஷாவின் அப்பாயின்ட் மெண்ட் கிடைக்கவே இல்லை. மத்திய அமைச்சர் பியூஸ்கோயலிடம் வேலுமணி கெஞ்சிய கெஞ்ச லில், அமித்ஷாவின் அப்பாயின்ட்மெண்டை மட்டும் வாங்கிக்கொடுத்தார் பியூஷ்கோயல்.
கடைசி வரைக்கும் மோடியின் அப்பாயின்ட் மெண்ட் கிடைக்காததால் தனது 3 நாள் டெல்லி பயணத்தை அமித்ஷாவை சந்தித்த கையோடு தனது சகாக்களுடன் தமிழகம் திரும்பினார் எடப்பாடி.
எடப்பாடியையும் அவரது சகாக்களையும் தனது அலுவலகத்தில் சந்தித்தார் மத்திய அமைச்சர் அமித்ஷா. சுமார் 35 நிமிடங்கள் அந்த சந்திப்பு நடந்தது. சந்திப்புக்கு பிறகு வெளியே வந்த எடப்பாடி பழனிச்சாமி,”"இது, மரியாதை நிமித்தமான சந்திப்புதான். நாங்கள் அரசியல் ஏதும் பேசிக்கொள்ளவில்லை''’என்று மட்டும் பத்திரிகையாளர்களிடம் சொல்லிவிட்டுச் சென்றார்.
"அவசரம் அவசரமாக முயற்சி எடுத்து டெல்லிக்குச் சென்று அமித்ஷாவை சந்திக்க வேண்டிய அவசியம் என்ன?' என்பது குறித்துதான் தற்போது அ.தி.மு.க. தலைவர்களிடையே பெரும் விவாதம் நடந்துகொண்டிருக்கிறது. ஓ.பி.எஸ்., சசிகலா, தினரகன் ஆகிய மூவரும்கூட தங்களின் டெல்லி சோர்ஸ்கள் மூலம், எடப்பாடியின் டெல்லி ரகசியத்தை விசாரித்து தெரிந்து வைத்திருக் கிறார்கள்.
எடப்பாடியின் டெல்லி விசிட் பரபரப்பாக எதிரொலிக்கும் நிலையில், அது குறித்து நாம் விசாரித்தபோது, "அதிமுகவின் ஒற்றை தலைமை விவகாரத்தில் பா.ஜ.க. தலைமை தன்னை ஆதரிக்க வேண்டும்' என எதிர்பார்த்தார் எடப்பாடி. குறிப்பாக, கட்சியில் தனக்குதான் செல்வாக்கு இருப்பதை நிரூபித்த நிலையில், மோடியும் அமித்ஷாவும் தன்னை ஆதரிப்பார்கள் என நினைத்தார். ஆனால், அவர்களோ, ’"உங்கள் உள்கட்சி விவகாரத்தில் தலையிட நாங்கள் விரும்பவில்லை. சந்திப்பு வேண்டாம்' என சொல்லி தவிர்த்தனர். இருப்பினும் அவர்களை தனிப்பட்ட முறை யில் சந்திக்க பலமுறை எடப்பாடி முயற்சித்தும் பலனில்லை.
ஒரு கட்டத்தில், பா.ஜ.க. ஆதரவும், கூட்டணி தோழமையும் தேவையில்லை. அவர்களை உதறிவிடலாம் என்று அவரைச் சுற்றியிருந்த மூத்த தலைவர்களின் கோரிக்கைக்கு இணங்கி டெல்லியை உதறினார் எடப்பாடி. அதற்கேற்ப, சந்திக்கும் முயற்சியை கைவிட்டதுடன், பொதுக்குழுவுக்கு எதிரான வழக்குகள் மாறி, மாறி அலைக்கழித்ததால் நீதிமன்றங்களின் மூலமாகவே சாதிப்பதில் கவனம் செலுத்தினார் எடப்பாடி. அவரின் திட்டத்தையறிந்து எடப்பாடியின் விளையாட்டை வேடிக்கை மட்டுமே பார்த்தபடி இருந்தது டெல்லி.
அதேசமயம், அ.தி.மு.க. அரசியலை வேவு பார்த்துக்கொண்டி ருந்த ஐ.பி., "எடப்பாடி பக்கம் தான் அ.தி.மு.க. இருக்கிறது' என ரிப்போர்ட் அனுப்பியது. அதற்கான காரணங்களும் அதில் விவரிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில்தான், கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீதான 12 கோடி ரூபாய் ஊழல் வழக்கை லோக் ஆயுக்தா விசாரிக்க வேண்டுமென்று கடந்த வாரம் கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதன்படி வழக்கை பதிவு செய்துள்ள லோக் ஆயுக்தா, முதல் குற்றவாளியாக கர்நாடகாவின் முதல்நிலை காண்ட்ராக்டரும் எடப்பாடியின் உறவினருமான சந்திரகாந்த் ராமலிங்கத்தை சேர்த்தது. இதனையறிந்து அதிர்ச்சியடைந்தார் எடப்பாடி. (2022- மே 21-23 இதழில், "எடியூரப்பா மீது வழக்கு; எடப்பாடிக்கு சிக்கல்!' என்ற தலைப்பில் நாம் பதிவு செய்திருந்தோம்)
காரணம், இந்த ராமலிங்கத்தின் மூலம் கோடிக்கணக் கான பணத்தை கர்நாடகாவில் எடப் பாடி முதலீடு செய்திருக்கிறார் என்பதுதான். எடியூரப்பா மகனுக்கு ராமலிங்கம் 12 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததற்கான ஆடியோ ஆதாரம் லோக் ஆயுக்தா விடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. லோக் ஆயுக்தா மூலம் விசாரிக்கப் படும் வழக்குகள் சீரியஸாக இருக்கும். இதன் விசாரணையின் போது, எடப்பாடியின் முதலீடுகள் அம்பல மாகலாம் என்ற பயம்தான், அவரை டெல்லிக்கு அவசரமாக ஓட வைத்தது; அமித்ஷாவை சந்திக்கத் துடித்தது எல்லாம்.
அமித்ஷாவுடனான சந்திப்பில், சந்திரகாந்த் ராமலிங்கத்துக்கு எதிரான வழக்கில் தனது பெயர் வந்து விடாமல் இருக்க உதவி கோரி யிருக்கிறார் எடப்பாடி. இதற்கு எந்த பதிலையும் அமித்ஷா சொல்லவில்லை. இதனையடுத்து, தி.மு.க. அமைச்சர்கள் மற்றும் முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தின ருக்கு எதிராக சேகரித்த தகவல்களையும், தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு கெட்டுக் கிடக்கிறதாகத் தொகுக்கப்பட்ட தகவல்களையும் தனித்தனி ஃபைல்களாக அமித்ஷாவிடம் கொடுத்துள்ளார் எடப்பாடி.
இதன் பிறகு, அ.தி.மு.க. அரசியல் சூழலை எடப்பாடி பேச, ’"எல்லோரும் ஒற்றுமையாக இருந்தாதான் ஆளும் கட்சியை (தி.மு.க.) எதிர்க்க முடியும். ஒற்றுமையா இருப்பதில் என்ன சிக்கல்? உங்களிடம் கட்சி இருப்ப தாக நீங்கள் காட்டுகிறீர்கள். அது மாறக்கூடியதுதானே! இருந் தாலும் ஆரோக்கியமாக அரசியல் பண்ணுங்கள். பார்க்கலாம்'’ என சிரித்தபடியே சொல்லி அவர்களை அனுப்பி வைத்தார் அமித்ஷா’என்கிறார்கள் உளவுத் துறையினர்.
எடப்பாடிக்கு நெருக்க மான அ.தி.மு.க. சீனியர்களிடம் விசாரித்தபோது, "தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையை வைத்து தேவையற்ற ரெய்டுகளை முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக ஏவுகிறது தி.மு.க. அரசு. ரெய்டுகளில் எதுவும் சிக்குவ தில்லை. ஆனாலும் எங்கள் இமேஜை கெடுக்க வேண்டும்ங் கிறதுதான் தி.மு.க.வின் நோக்கம். ஆனால், இந்த ஒன்னரை வருசத்தில் ஸ்டாலின் குடும்பம் சும்மா இருக்கவில்லை. எங்களை கரப்ஷன், கமிஷன், கலெக்சன் என சொன்ன அவர்கள், அதே வேலை யைத்தான் செய்து கொண்டிருக் கிறார்கள். ஒன்றரை வருசத்தில், வருமானத்துக்கு அதிகமான சொத்துக்களை சேர்த்துள்ள தி.மு.க. அமைச்சர்கள், ஸ்டாலின் குடும்பத்தினரின் விவரங்கள் இந்த ஃபைலில் இருக்கிறது. அவர்கள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றெல்லாம் அமீத்சாவிடம் சொல்லியிருக்கிறார் எடப்பாடி.
அதன்பிறகு அ.தி.மு.க. அரசியலை குறித்து பேச்சு திரும்பியுள்ளது. அப்போது பேசிய வேலுமணி, "ஒற்றைத் தலைமையை கட்சித் தொண் டர்கள் விரும்புகின்றனர். எடப்பாடி தலைமையை ஏற்க அவர்கள் தயாராக இருக்கிறார்கள். நீங்களும் ஆதரித்தால் நாங்கள் தெம்பாக இருப்போம்''’ எனச் சொல்ல, "பழனிச்சாமியின் அரசியலை நாங்களும் பார்த்துக்கொண்டுதானிருக்கிறோம். நல்லா பண்ணுங்க. எங்கள் ஆதரவு உங்க ளுக்கு உண்டு''’ என அமித்ஷா சொல்ல... எடப்பாடி, சண்முகம், வேலுமணி மூவருக்கும் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி!
எடப்பாடி-அமித்ஷா சந்திப்பு நடந்தபோது காசிக்கு வந்திருந்தார் ஓ.பி.எஸ். சந்திப்பை ஜீரணிக்கமுடியாத அவர், காசியிலிருந்து அப்படியே டெல்லிக்கு வந்து மோடி யையும் அமித்ஷாவையும் சந்திக்க பல்வேறு முயற்சிகளை எடுத்திருக்கிறார். ஆனால், அவருக்கு அப்பாயின்ட்மெண்ட் கொடுக்கப் படவில்லை. இதிலிருந்தே அவரை டெல்லி புறக்கணிக்கத் துவங்கியுள்ளதை புரிந்துகொள்ள வேண்டும். ஆக, இனிதான் எடப்பாடியின் அரசியலை ஓ.பி.எஸ். பார்க்கப் போகிறார்''’என்று விவரிக்கிறார்கள்.
எடப்பாடியின் டெல்லி பயணத்தில் நடந்ததை ஓ.பி.எஸ்.ஸும் விசாரித்திருக்கும் நிலையில், அது குறித்து ஓ.பி.எஸ். தரப்பினரிடம் பேசியபோது, "எடியூரப்பா வழக்கில் எடப்பாடி சிக்கிக்கொள்ளாமல் இருக்க உதவி கேட்டு கெஞ்சவும், தி.மு.க.வுக்கு எதிராக கோள் மூட்டுவதற்கும், தேர்தல் ஆணையத்தில் தங்களுக்கு சாதகமாக உதவ வேண்டியும்தான் அவர்கள் டெல்லிக்கு பறந்தனர். ஓ.பி.எஸ். மீதும் அவரது மகன் ரவீந்திரநாத் மீதும் மோடிக்கு அளவுகடந்த பாசம் உண்டு. ஓ.பி.எஸ்.ஸை ராஜ விசுவாசி என்றுதான் மோடி சொல்வார்.
தனது அறிவுரையின்படி அ.தி.மு.க.வில் இணைந்த ஓ.பி.எஸ்.ஸை, கட்சியிலிருந்து நீக்கியதை மோடி ரசிக்கவில்லை. அதேபோல, சட்டமன்ற தேர்தலின்போது அமித்ஷா வைத்த யோசனையை எடப்பாடி ஏற்க மறுத்ததினால்தான் தி.மு.க. ஆட்சிக்கு வந்துவிட்டதாக அமித்ஷாவின் எண் ணம். இதையெல்லாம் மோடியும் அமித்ஷாவும் மறக்கவில்லை. அதனால்தான் எடப்பாடிக்கு அப்பாயின்ட்மெண்டே இவ்வளவு காலமும் கொடுக்காமல் இருந்தனர். தற்போது பியூஷ்கோயலின் தயவில் அப்பாயின்ட்மெண்ட் பெற்று அமீத்சாவை சந்தித்தனர்.
பழைய விசயங்கள் எல்லாத்தையும் சொல்லி, அவர்களுக்கு செம டோஸ் கொடுத்துள் ளார் அமித்ஷா. குறிப்பாக, ‘எங்களைப் பொறுத்தவரை, நாங்கள் ஏற்படுத்திய இரட்டை தலைமை தொடர வேண்டும்; அப்போதுதான் இரட்டை இலை சின்னம் அ.தி.மு.க. வுக்கு கிடைக்கும். அதனை உணர்ந்து அரசியல் செய் யுங்கள்’ என எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தி ருக்கிறார் அமித்ஷா. தேர்தல் ஆணையத்தின் மூலம் இது நிரூபிக்கப்படும். ஓ.பி.எஸ்.ஸை தவிர்த்து எடப் பாடியால் அரசியல் செய்ய முடியாது. பொறுத்திருந்து பாருங்கள்''‘என்கிறார்கள் அழுத்தமாக.
இந்த நிலையில், எடப்பாடியால் நடத்தப்பட்ட பொதுக்குழு முடிவுகளை தலைமைத் தேர்தல் ஆணையம் ஏற்க மறுத்தநிலையில், இரட்டை தலைமையே 2026 வரை தொடர வேண்டும் என எடப்பாடி தரப்புக்கு சொல்லப்பட்டுள்ளதாம். அதனால், அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்களி டம், எங்களின் விருப்பப்படியே ஒற்றைத் தலை மையை ஏற்று தற்காலிக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை தேர்வு செய்தோம் என்று 20 ரூபாய் பத்திரத்தில் பிரமாண வாக்கு மூலம் வாங்கி அதனை தலைமை தேர்தல் ஆணை யத்திடம் ஒப்படைத்திருக்கிறார் சி.வி.சண்முகம். இந்த நிலையில், மோடியை சந்திக்க மகன் ரவீந்திரநாத்தை தூது அனுப்பியுள்ளார் ஓ.பி.எஸ்.!