ரண்டு கழகங்களின் பெருந்தலைகள் மல்லுக்கட்டும் மாவட்டங்களில் முக்கியமானது திண்டுக்கல். இப்போதே திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் சடுகுடு தொடங்கிவிட்டது.

இந்த மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டமன்ற தொகுதிகளில், திண்டுக்கல் ஒன்றுதான் மற்றவற்றைவிட சின்னத் தொகுதி. இது 48 dindugalsrinivasanவார்டுகளைக் கொண்ட மாநகராட்சியையும் 9 ஊராட்சிகளையும் கொண்டிருக்கும் தொகுதியாகும் .இதன் அரசியல் தட்ப வெப்பத்தை முதலில் பார்ப்போம்.

கடந்த தேர்தலில் திண்டுக்கல் சீனிவாசன் முதன் முதலில் இங்கே போட்டியிட்டு, வென்று அமைச்சராகவும் ஆகிவிட்டார். தனக்கு வாக்களித்த மக்களின் ஆதரவைத் தக்கவைத்துக் கொள்ள, நகரம் முதல் பட்டி தொட்டிகள் வரை தார் ரோடு, சாக்கடை வசதி, பொது அரங்கம், பயணிகள் நிழற்குடை போன்றவற்றைத் தனது நிதி மூலமும் பொதுநிதி மூலமும் செய்து கொடுத்திருக்கிறார்.

இந்தத் தொகுதியை ஏற்கனவே பாலபாரதி மூலம் மூன்று முறை தக்கவைத்த வகையில் சி.பி.எம். இங்கே ddமக்களோடு இணைந்து களத்தில் நிற்கிறது. அது தனது கூட்டணிக் கட்சியான தி.மு.க.விடம் இந்த முறையும் தொகுதியைக் கேட்டு வாங்கிவிடும் எண்ணத்தில் தீவிரமாக இருக்கிறது. தங்கள் விருப்பத்தைத் தி,மு.க. தலைவர் ஸ்டாலின் கவனத்திற்கும் அவர்கள் கொண்டு சென்றிருக்கிறார்கள். ஏற்கனவே மாவட்டத்தின் 4 தொகுதிகளைக் கைப்பற்றி, தி.மு.க. கோட்டையாக அதை மாற்றியிருக்கும் தி.மு.க. வினர், இந்தமுறை மாவட்டத் தலைநகராக இருக்கும் தொகுதியில் உதயசூரியனே உதிக்க வேண்டும் என்று உறுதியாக இருக்கிறார்கள்.

Advertisment

இந்த உள்ளார்ந்த மல்லுக் கட்டுகளுக்கு இடையில் ஆளும் கட்சியின் வியூகங்கள் எப்படி இருக்கிறது என்பதை அறிய, அவர்கள் தரப்பை அணு கினோம். உற்சாகமாகப் பேசத் தொடங்கிய அவர்கள், ""எங்கள் அமைச்சர் சீனிவாசன் கடந்த நான்கரை வருடங்களாக தொகுதி மக்களுக்கு அனைத்து அடிப்படை வசதி களையும் செய்து வருகிறார். அதோடு கொரோனா நிவாரண உதவியாக தொகுதியில் உள்ள ஒரு லட்சத்து 15 ஆயிரம் ரேஷன் கார்டுக்கும் 5 கிலோ அரிசியையும் பல சரக்குப் பொருட்களையும் அவருடைய மகன்களான ராஜ்மோகன். வெங்கடேஷ் உள்ளிட்ட கட்சியினரோடு சேர்ந்து மக்களிடம் சேர்த்திருக்கிறார்.

dd

திண்டுக்கல் மாநரில் உள்ள 48 வார்டுகளையும் நான்கு பகுதியாகப் பிரித்து 12 வார்டுக்கு ஒரு பகுதிச் செயலாளர்ளை நியமித்திருப்பதோடு, ஒன்றியத்தையும் இரண்டாகப் பிரித்து மேற்கு ஒன்றிய செயலாளராக தனது அண்ணன் மகனான ராஜசேகரனை நியமித்திருக்கிறார். இதன் மூலம் கட்சிப் பணிகள் தொய்வில்லாமல் நடக்கும்படி செய்திருக்கிறார். இதனால் தொகுதியில் எங்கள் கட்சி வலுவாக இருக்கிறது. அவரை எதிர்த்து யார் நின்றாலும் வெற்றிபெற முடியாது'' என்கிறார்கள் அழுத்த மாகவே.

Advertisment

இது சம்பந்தமாக மாநகர பொறுப்பில் உள்ள தி.மு.க. உ.பி.களிடம், அவர்களின் வெற்றி வியூகம் பற்றிக்கேட்டபோது, ""இந்த மாவட்டம் கடந்த தேர்தலிலேயே எங்கள் கோட்டையாகிவிட்டது. அதனால்தான் மாவட் டத் தலைநகரான திண்டுக்கல் தொகுதியைக் கூட்டணி கட்சி களுக்குக் கொடுக்கக்கூடாது என்று, கடந்த மாதம் தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்திலேயே எங்கள் நகர செயலாளர் ராஜப்பாவும். ஒன்றிய செயலாளர் ddநெடுஞ்செழியனும் வலியுறுத்தியதோடு, திண்டுக்கல் தி.மு.க. மா.செ.வான ஐ.பி. செந்தில்குமாரை நிறுத்தினால், எதிரிகளைத் தூசிபோல் பறக்கவிடலாம்னு சொன்னார்கள். அவர் இப்போது பழனி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பதால், அந்தத் தொகுதியை விட்டுவிட்டு இங்கே போட்டியிட வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகிறோம்.

இந்தத் தொகுதி, தி.மு.க. ஆட்சியில் அமைச்சராக இருந்த ஐ.பி. மூலம், பல நலத்திட்டங்களைப் பெற்று ஆசிர்வதிக்கப் பட்ட தொகுதியாக மாறியது. நிறையபேர் கட்சியில் உறுப்பினர்களாக ஆக ஆர்வம் காட்டி வருகிறார்கள். இருப்பினும் ஆளுங் கட்சியைப் போல், தி.மு.க.விலும் 48 வார்டுகளையும் நான்கு பகுதிகளாகப் பிரித்து பொறுப்பாளர்களை நியமிக்கவேண்டும் என்று கட்சித் தலைமையிடம் கேட்டுக்கொண் டிருக்கிறோம். கட்சியை வளர்க்க எங்கள் முன்னாள் அமைச்சர் ஐ.பி.யும். மாவட்டச் செயலாளர் ஐ.பி.எஸ்.சும் இன்னும் அதிரடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதன் மூலம் வரும் தேர்தலில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை. மிரண்டோட வைக்கவேண்டும்'' என்கிறார்கள் வைராக்கியமாய்.

தொகுதியைக் குறிவைத்து அர சியல் கட்சிகள் வரிந்துகட்டத் தொடங்கியதால், இப்பவே தகிக்கத் தொடங்கிவிட்டது திண்டுக்கல்.

-சக்தி