சசிகலாவுக்கான ஜாமீன் தொகையை நடராஜன் சகோதரர் பழனிவேலு அவரது மனைவி, டாக்டர் வெங்கடேஷ் மனைவி ஹேமா மற்றும் ஜெயா டி.வி. நிர்வாக இயக்குநர் விவேக் ஆகியோர் 10 கோடியே 10 லட்சம் ரூபாய் வெள்ளைப் பணமாக கட்டியுள்ளனர். ஆனால் இந்தப் பணத்தை வெள்ளைப் பணமாக ஒருவர் கொடுக்க தயார் செய்யப்பட்டிருக்கிறார். அவர் மீது அமைச்சர் துரைக்கண்ணு விவகாரத் தைப்போலவே அதிரடி ரெய்டுகளை முதல்வர் எடப்பாடி நடத்தியுள்ளார் என்கிறது அ.தி.மு.க. வட்டாரங்கள்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/sasi_76.jpg)
கடந்த செப்டம் பர் 23ஆம் தேதி அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனின் உதவியாளர் கர்ணன் என்பவர் பிரதீப், ரகு உள்பட 7 பேரால் அவரது அலுவலகத்தில் இருந்து கடத்தப்படுகிறார். அவரது அலுவலகத்தில் வேலை பார்த்த பெண் ஊழியர் கற்பகம் என்பவர் காவல் துறைக்கு தகவல் கொடுக்கிறார். கடத்தப்பட்ட கர்ணன் அரை மணி நேரக் கடத்தலுக்குப் பிறகு அவரது ஏ.டி.எம். கார்டில் இருந்து 50 ஆயிரம் ரூபாய் எடுத்துக்கொண்டு வாழப்பாடி என்ற இடத்தில் விடு விக்கப்படுகிறார்.
அவரிடம் ஒரு வீடியோ வாக்குமூலம் வாங்கப்படுகிறது. அந்த வீடியோ வாக்குமூலம் இரண்டு செல் போன்களில் ரெக்கார்டு செய்யப்படுகிறது. ஒரு செல்போன் பிரதீப் பிடமும், இன்னொரு செல்போன் ரகுவிட மும் இருக்கிறது. பெண் ஊழியர் கற்பகம் கொடுத்த புகாரால் வெளியே வந்த இந்த சம்பவத்தில் கர்ணனிட மிருந்து ரெக்கார்டு செய்யப் பட்ட வீடியோ வாக்குமூலம் விரைவில் வெளிவர இருக் கிறது. அதில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் சிக்கப்போகிறார் என்கிற செய்தி பரபரப்பாக திருப்பூர் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/sasi1_14.jpg)
அமைச்சரின் உதவியாளர் பல வில்லங்கமான விஷயங் களை பேசியுள்ளார். திருப்பூர் முழுவதும் உள்ள விபச்சார விடுதிகளிலும் சட்ட விரோத மதுபார் களிலும் அமைச்சர் உடுமலை ராதா கிருஷ்ணன் தரப்புக்கு உள்ள தொடர்பு பற்றி அவர் அந்த வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளாராம். கர்ணனின் இன்றைய சொத்து மதிப்பு 50 கோடி. இதுதவிர அவரை கடத்திச் சென்ற பிரதீப் பின் பெண் நண்பரிடம் 40 லட்சம் ரூபாய் ஏமாற்றியுள்ளார். தேடப்படும் குற்றவாளியான ரகுவின் மனைவியிடம் கர்ணன் தவறாக நடந்துள்ளார். இவைதான் கடத்தலுக்கு காரணம் என்கிறது திருப்பூர் போலீஸ் வட்டாரங்கள். ஆனால் ஒரு அமைச்சரின் உதவியாளரை கடத்திய குற்றவாளிகளுக்கு ஜாமீன் கேட்டு தொடரப்பட்ட மனுவிற்கு அரசு வழக்கறிஞர் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. அந்த குற்றவாளிகளில் ஒரு சில பேருக்கு அ.தி.மு.க. வழக்கறிஞர்களே தம்பி பிரபாகரன் என்கிற வழக்கறிஞரை ஆஜராக சொல்லி ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.
அந்த வழக்கு விசா ரணையிலும், அதன் தொடர்ச்சி யான நடைமுறைகளிலும் அ.தி.மு.க. தனி பாணியைக் கடைப்பிடிக்கிறது. கடத்தலின் பின்னணியில் பெரிய இடத்து விவகாரம் சம்பந்தப் பட்டிருப்பதால், அரசு மிகவும் மென்மையாகவே நடந்து கொள்கிறது என்கிறார்கள் திருப்பூர் அதிமுகவைச் சேர்ந்தவர்கள். அதுமட்டுமல்ல கர்ணன் கடத்தப்பட்ட கார், முருகவேல் என்கிற அ.தி.மு.க. பிரமுகரின் மருமகனுக்கு சொந்தமானகார். அவர், இந்த வழக்கில் சேர்க்கப்படவில்லை. உடுமலை ராதாகிருஷ்ணனின் அரசியல் எதிரியான பொள்ளாச்சி ஜெயராமனின் நெருங்கிய ஆதரவாளர்தான் இந்த முருகவேல்.
கர்ணன் கடத்தப்பட்டபோது உடுமலை ராதா கிருஷ்ணன் உடுமலையிலோ, சென்னையிலோ காணப்படவில்லை. அவர் சென்னை வழியாக டெல்லிக்கு சென்றிருந்தார். அவர் டெல்லியில் இருக்கும் நேரத்தில் கர்ணன் மட்டும் கடத்தப்படவில்லை. அவரது உதவியாளர்கள் 3 பேர் கர்ணனைப் போலவே கடத்தப்பட்டிருக்கிறார்கள். கர்ணன் கடத்தப்பட்ட இடம் அமைச்சரின் தொகுதி
அலுவலகம். அங்கு கற்பகம் என்கிற பெண் ஊழியர் மீடியாவுக்கும் போலீசுக்கும் தகவல் தெரிவித்ததால் இந்த விஷயம் வெளியே வந்தது. மற்ற பி.ஏ.க்கள் கர்ணனைப் போலவே கடத்தப்பட்டது வெளியே வரவில்லை என்கிறார்கள் திருப்பூர் மாவட்ட அதிமுகவினர்.
உடுமலை ராதாகிருஷ்ணனின் மனைவி கிருஷ்ணா பிருந்தாவும், தினகரனின் மனைவி அனுராதாவும் கோவையில் உள்ள கிருஷ்ணம்மா கல்லூரி என்கிற பிரபலமான கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள் என்பது மட்டுமல்ல அவர்கள் இருவரும் ஒரே அறை தோழிகள். அதனால் டிடிவி தினகரனுக்கு நெருக்கமாகி சசிகலாவின் சிபாரிசில் வீட்டு வசதித்துறை அமைச்சராக உடுமலை ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்றுக்கொண்டார். ஆரம்பம் முதலே ஒரு கேபிள் டிவி நிறுவனத்தை நடத்தி வந்த உடுமலை ராதாகிருஷ்ணன் வீட்டு வசதித்துறை அமைச்சரானதும் குறுகிய காலத்தில் பெரிய வசதி படைத்தவரானார். சசிகலாவின் செல்வாக்கு குறைந்த பிறகு, உடுமலையிடம் இருந்த வீட்டு வசதித்துறையை பிடுங்கி ஓ.பி.எஸ்.க்கு கொடுத்துவிட்டு அவரை கால்நடைத்துறை மந்திரியாக்கினார் எடப்பாடி.
தேர்தலை சந்திக்க ஒவ்வொரு மாவட்ட மந்திரிக்கும் கட்சி நிதி என ஒரு பெரிய தொகையை சமீபத்தில் பிரித்துக் கொடுத்தது அ.தி.மு.க. தலைமை. அந்த தொகை உடுமலை ராதாகிருஷ்ணனுக்கும் அளிக்கப்பட்டது. அமைச்சராக இருந்து சேர்த்த சொத்து கூடவே அ.தி.மு.க.வால் வழங்கப்பட்ட தேர்தல் நிதி என உடுமலை ராதாகிருஷ்ணனின் சொத்து மதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது.
கோடிகளில் புரண்ட உடுமலை ராதாகிருஷ்ணன் செய்த ஒரு வேலை சமீபத்தில் எடப்பாடியை டென்ஷன் ஆக்கியது. சசிகலாவுக்கு நெருக்கமாக டிடிவி தின கரனுடன் தொடர்பு வைத்துக்கொண்டு தமிழக அமைச்சரவையில் நடப்பதையெல்லாம் உடுமலை ராதாகிருஷ்ணன் தினகரனிடம் சொல்லி வருகிறார் என்கிற சந்தேகம் எடப்பாடிக்கு எப்போதும் உண்டு. சசிகலாவின் ஸ்லீப்பர் செல் என எடப்பாடியால் சந்தேகிக்கப்படும் உடுமலை ராதாகிருஷ்ணன் கேபிள் டிவி நிறுவனங்களுக்கு உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையை நடத்தி வருகிறார்.
அந்த தொழிற்சாலையின் கணக்கு வழக்குகளில் இருந்து எடுத்ததுபோல் பத்து கோடி ரூபாய் எடுத்து வெள்ளைப் பணமாக சசிகலாவின் அபராதத் தொகை யைக் கட்ட உடுமலை ராதா கிருஷ்ணன் கொடுத்தார் என்கிற தகவல் எடப்பாடிக்கு வர, உடுமலை எவ்வளவு பணம் வைத்திருக்கிறார்? எங்கெங்கு வைத்திருக்கிறார்? அவரது பலம் என்ன, பலவீனம் என்ன என ஒரு ஆய்வை நடத்தவே அவரது பி.ஏ.க்கள் வரிசையாக கடத்தப்பட்டனர் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/sasi3_0.jpg)
என்ன தலைவரே? கண்டுக்க மாட்டேங்குறீங்க என கட்சிக்காரர்கள் கேட்டால் நீ என்ன ஃபிகரா? உன்ன கண்டுகிறத்துக்கு என அசால்ட்டாக பதில் சொல்வதை வழக்கமாக வைத்திருக்கும் உடுமலை ராதாகிருஷ்ணன், காசு கொடுத்தா ஓட்டுப் போடப்போறாங்க என வாக்காளர்களை எடை போடுபவர். அவரது பி.ஏ. கர்ணன் செய்யாத அட்டகாசம் இல்லை. பெண்கள் விஷயத்தில் படு வீக்கான கர்ணனை பிடித்து, அவர் மூலமாக அமைச்சர் செய்த லீலைகளை பெறுவதற்காகத்தான் கர்ணன் கடத்தப்பட்டார்.
இந்த பி.ஏ.க்கள் கடத்தலில் லோக்கல் போலீசார் ஈடுபடுத்தப்படவில்லை. முழுக்க முழுக்க ஒரு சிறப்பு போலீஸ் படை அமைச்சருக்கு எதிரான கட்சிக்காரர்களை பயன்படுத்தி பி.ஏ.க்களை கடத்தி விவரங்களை வாங்கியது. கர்ணன் மீது பல புகார்கள் லோக்கல் போலீசில் தெரிவிக்கப்பட் டாலும் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என உடுமலை ராதாகிருஷ் ணன் ஒரு நிரந்தர தடையாணையே பிறப் பித்திருந்தார். லோக்கல் மினிஸ்டருக்கு விசுவாசமான போலீசார் இந்த கடத்தல் வேலைகளை அமைச்சருக்கு சொல்லிவிடக் கூடாது என்பதால் மிகவும் திட்டமிடப்பட்டு பி.ஏ.க்கள் கடத்தப்பட்டனர். அவர்களிடமிருந்து அனைத்து விவரங்களையும் எடப்பாடி நியமித்த சிறப்பு போலீஸ் பெற்றுக்கொண்டவுடன் அவர் களை விடுவித்தனர். அதனால் தான் கர்ணனை கடத்திய அ.தி.மு.க.வினரின் ஜாமீன் நடவடிக்கை களுக்கு, நேரடியாக எதிர்ப்புத் தெரிவிக்காமல் மறைமுகமாக உதவும் வகையில் அரசும் கட்சியும் நடந்து கொள்கிறது என்கிறார்கள் திருப்பூர் மாவட்ட அதிமுகவைச் சேர்ந்தவர்கள்.
இந்த ஆபரேஷன் மூலம் பெறப்பட்ட கணக்கு வழக்குகளை வைத்து உடுமலை ராதாகிருஷ்ணனை எடப்பாடி கடுமையாக எச்சரித்துள்ளார் என்கிறது கோட்டை வட்டாரம். கணக்கு வழக்குகளில் என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியவில்லை. ஆனால் உடுமலை அமைதியாக மாறிவிட்டார் என்கிறார்கள் அவருக்கு நெருக்க மானவர்கள்.
இதுபற்றி உடுமலை ராதாகிருஷ்ணனிடம் கேட்டோம். அவர் நமக்கு பதில் அளிக்க மறுத்துவிட்டார். அவர் பதிலளித்தால் அதை வெளியிட தயாராகவே உள்ளோம்.
-தாமோதரன் பிரகாஷ்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-11/sasi-t_0.jpg)