"காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப் பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிப்போம்' என்று பிப்ரவரி 09-ந் தேதி, சேலத்தில் நடந்த விழாவில் பேசினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இதைகேட்ட உற்சாகத்தில், பட்டாசு வெடித்துக் கொண்டாடினார்கள் டெல்டா மக்கள். ஆனால், 20-ந் தேதி தமிழக சட்டப்பேரவையில் அரசு அறிமுகப்படுத்திய சட்ட முன்வடிவு, சேலத்தில் முதல்வர் பேசியதற்கு மாறாக இருந்தது. ஆளுநரின் ஒப்புதலைப் பெற்றிருக்கும் இந்த சட்டதால், காவிரி டெல்டாவிற்கு எந்தப் பயனும் இருக்காது என்று அதே டெல்டா விவசாயிகள் இப்போது கொந்தளிக்கிறார்கள். இதுதொடர்பாக, காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசனைச் சந்தித்து சில கேள்விகளை முன்வைத்தோம்.…

காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்திருப்பது வரவேற்கத்தக்க விஷயம்தானே?

nn

வரவேற்கிறோம். ஆனால், இந்த சட்டத்தில் நிறைய ஓட்டைகள் இருக்கின்றன. அதாவது, பாது காக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டம் 24 கூறுகள், 2 இணைப்பு களைக் கொண் டது. அதில் முதன் மைக்கூறான 4-ல் 21 ஏ-வில்தான் மிகப்பெரிய ஓட்டை. இந்தச் சட்டம் நடைமுறைத் தேதிக்கு முன்னர், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் உள்ள செயல்கள், திட்டங்களைப் பாதித்தல் ஆகாது என்கிறது.

Advertisment

2017 நெடுவாசல் திட்டம். அதன் ஒப்பந்த தாரர் ஜெம் நிறுவனம் எனக்கு வேண்டாமென்று விலகிவிட்டது. அந்தத் திட்டம் எந்த நிலையில் இருக்கிறது என்பது தெரியவில்லை. அதேபோல், 2019 காலகட்டத்தில் காவிரி பாயும் மாவட்டங்களில் வேதாந்தா, ஒ.என்.ஜி.சி. உள்ளிட்ட நிறுவனங் களுக்கு ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது. இந்தத் திட்டங்களை செயல்படுத்தக்கூடாது என்றுதான் விவசாயிகள் போராடுகிறார்கள். புதிய சட்டம் இதையெல்லாம் கட்டுப்படுத்தாது என்றால், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து என்ன பயன்?

சேலம் விழாவில் பேசிய எடப்பாடி, ஹைட்ரோகார்பன் எடுக்கமாட்டோம் என்று தானே அறிவித்தார். பின் எப்படி சட்ட மன்றத்தில் மாறி இருக்கும்?

09-ந் தேதி முதல்வர் வெளியிட்ட அறி விப்பை மிகவும் வரவேற்றோம். ஆனால், 10-ந் தேதி அமைச்சர் ஜெயக்குமார் டெல்லிக்குப் புறப்பட்டுச் செல்லும்போது, சந்தேகம் கிளம்பியது. அந்த சந்தேகத்தை சட்ட முன்வடிவு மெய்ப்பித்திருக் கிறது. முதல்வர் நினைத்தது ஒன்று. டெல்லியில் நடந்தது அதற்கு மாறாக இருந்திருக்கிறது என்றே தோன்றுகிறது. அதனால்தான், பிப்ரவரி 20-ந் தேதிக்கு முன் திட்டங்களைக் கட்டுப்படுத்தாது என்று அவரே குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

நாகை, கடலூர் மாவட்டங்களில் நடக்க விருந்த பெட்ரோலிய முதலீட்டு மண்டலத்தை ரத்து செய்திருக்கிறார்களே?

நல்ல முடிவுதான். நாகை, கடலூர் மாவட்டங்களில் 45 கிராமங்களில் 57 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் செயல்படுத்த இருந்த திட்டம், பல்வேறு எதிர்ப்புகளால் ரத்தாகி இருக்கிறது. அதேநேரம், கடலூர் சிப்காட்டில் உள்ள ரசாயன தொழிற்சாலைகளை மூடவேண்டும் என்று மக்கள் போராடிக் கொண்டிருக்கையில், அதேபகுதியில் ரூ.50 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் பெட்ரோல் சுத்திகரிப்பு ஆலை தொடங்க, அமெரிக்க நிறுவன மான ஹால்டியாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளனர். இதனால் வெளியேறும் கழிவுகளால் விவசாயம் பாதிக்காதா?

அப்படியானால், புதிய சட்டத்தால் எந்தப் பலனும் இல்லை என்கிறீர்களா?

அவசர அவசரமாக அரைகுறையாக இச் சட்டம் இயற்றப்பட்டிருப்பதும், இந்திய அரசுக்குக் கடிதம் எழுதிவிட்டோம் என்று கூறுவதும், நீட் விலக்கு சட்டம் போல ஆகிவிடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது. சிறப்பு வேளாண் மண்டல நிர்வாகத்தைக் கவ னிக்க முதலமைச்சர் தலைமை யில் அமைக்கப்பட்டுள்ள குழுவிற்கு மாறாக, தன்னாட்சி அதிகாரமுள்ள வல்லுநர் குழுவை அமைத்து, அதில் விவசாயப் பிரதிநிதிகளை இடம்பெறச் செய்தால் மட்டுமே, நோக்கம் நிறை வேறும்.

சந்திப்பு: -இரா.பகத்சிங்

___________

நக்கீரன் புலனாய்வு!

சிறைத்துறையில் இடமாற்றம்!

தமிழகத்திலுள்ள சிறைகள் அனைத்துக்கும் சிறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் முறைகேடுகள் குறித்து சிறைத்துறை தலைவர் அலுவலகத்திலிருந்து சுற்றறிக்கை அனுப்பப்பட்ட நிலையில்... அதன் உண்மைத் தன்மையைப் புலனாய்வு செய்து நக்கீரனில் தொடர்ந்து வெளியிட்டு வருகிறோம். இந்நிலை யில், கூடுதல் டி.ஜி.பி. மற்றும் சிறைத்துறை தலைவர் பொறுப்பு வகித்துவந்த ஆபாஷ்குமார் இடமாற்றம் செய்யப்பட்டு, சென்னை, பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி. ஆகியிருக்கிறார்.

-ராம்கி