டெல்லிக்குப் போன எடப்பாடி பழனிச்சாமி இரண்டு விசயங்களுக்காக பா.ஜ.க. தலைவர்களுடன் பேசினார். முதல் விசயம், “எந்தக் காரணத்தைக் கொண்டும் இரட்டை இலையை முடக்கிவிடாதீர்கள். இரண்டாவதாக, "சுப்ரீம்கோர்ட்டிலும் தேர்தல் கமிஷனிலும் எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க. அணியே உண்மையான அ.தி.மு.க. என அங்கீகரிக்க ஏற்பாடுகள் செய்யுங்கள்'’ என்பதுதான்.

ஓ.பி.எஸ்.ஸை ஆடிட்டர் குருமூர்த்தி ஆதரிக்கிறார். ஆர்.எஸ்.எஸ்.ஸில் உள்ள முக்கிய சிந்தனையாளர்கள் இரட்டை இலையை முடக்க வேண்டும்; ஓ.பி.எஸ்., சசிகலா, தினகரன், பா.ஜ.க. இணைந்த ஒரு அணியை உருவாக்க வேண்டும். எடப்பாடியை வீழ்த்த வேண்டும் என்று நினைக்கின்றனர். ஏனென் றால் எடப்பாடி காங்கிரஸ் ஆதரவு நிலையை அவரது ஆலோசகர் தேர்தல் வியூக அமைப்பாளர் சுனிலின் மூலம் எடுக்க நினைக்கிறார்.

sasi

Advertisment

ஓ.பி.எஸ்., சசிகலா, தினகரன் இணைத்து பா.ஜ.க. அமைக்கும் அணிக்கு ரஜினியை தலைவ ராக கொண்டு வந்து முன்னிறுத்த வேண்டும். இந்த அணிதான் தமிழகத்தில் தாமரையை மலரச் செய்யும் என்பதுதான் ஆர்.எஸ்.எஸ்.ஸில் உள்ள முக்கிய சிந்தனையாளர்கள் அமைத்திருக் கும் வியூகம். இந்த வியூகத்தை தெரிந்துகொண்ட எடப்பாடி அந்த வியூகங்களுக்கு தனது பாணியில் பதில் சொல்லியிருக்கிறார்.

அமித்ஷாவை சந்தித்த எடப்பாடி அ.தி.மு.க. நிர்வாகிகள் பட்டியலை கிளை வாரியாக சமர்ப்பித்து இருக்கிறார். அத்துடன் பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்துப் பெற்ற பிரம்மாண வாக்குமூலங்களையும் கொடுத்திருக்கிறார்.

"தங்களிடம் மத்திய உளவுத்துறை இருக்கிறது. மாநிலத்தில் பா.ஜ.க. கட்சி இருக்கிறது. அவர்கள் மூலமாக இதன் உண்மைத் தன்மையை கண்டறிந்து கொள்ளுங்கள். எனது தலைமையி லான அணியில்தான் 96 சதவிகித அ.தி.மு.க. இருக்கிறது'’என்று எடப்பாடி சொல்லியிருக்கிறார். அதற்கு பதில் அளித்த அமித்ஷா, "உங்களால் தமிழகத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி இடைத் தேர்தலில் ஒருவரைக்கூட உங்கள் கட்சி சார்பில் தேர்தலில் போட்டி போட வைக்க முடியவில்லையே, ஏன்?'' என கேட்டார்.

ttb

Advertisment

அதற்கு பதில் அளித்த எடப்பாடி, “"நானும் ஓ.பி.எஸ்.ஸும் சேர்ந்து கையெழுத்துப் போட்டால்தான் தேர்தல் கமிஷன் இரட்டை இலைச் சின்னத்தைக் கொடுக்கும். ஓ.பி.எஸ். ஸுக்கும் எனக்கும் இடையே சண்டை ஏற் பட்டதால்தான் உள்ளாட்சி இடைத் தேர்த லில் எங்களால் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட வைக்க முடியவில்லை''’என்றார்.

அதைக்கேட்ட அமித்ஷா, "நீங்கள் 96 சதவிகித நிர்வாகிகளை வைத்திருக்கிறேன் என்கிறீர்கள். உங்களை விட இரட்டை இலைச் சின்னம் பெரியது. அந்தச் சின்னம்தான் அ.தி. மு.க. அதுதான் உங்களை உயிர்ப்புடன் வைத் திருக்கிறது. அந்தச் சின்னத்தை ஓ.பி.எஸ்.ஸுக் காக ஏற்கெனவே நாங்கள் முடக்கினோம். மீண்டும் முடக்கினால் உங்களால் அ.தி.மு.க.வை வெற்றிகரமாக நடத்திச்செல்ல முடியுமா?''’எனக் கேட்ட வர், மேலும்...

"இந்தியப் பிரதமர் மோடி எங்களிடம் பேசினார். வன்னியர்களுக்கு தனியாக தேர்தல் நேரத்தில் 10.5 சதவிகிதம் இட ஒதுக்கீடு தருவது தவறு என்று கூறினார். நீங்கள் அதைக் கேட்க வில்லை. பிரதமரின் எதிர்ப்பையும் மீறி உங்க ளது சொந்த மாவட்டமான சேலம் மாவட் டத்தில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக அந்த இட ஒதுக்கீட்டைக் கொண்டு வந்தீர்கள். அதேபோல் சசிகலா, தினகரன் ஆகியோரை நாங்கள் பா.ஜ.க. அணியில் சேர்த்து நிற்க வைக் கிறோம் என்று ஆலோசனை சொன்னோம். அதனையும் நீங்கள் கேட்கவில்லை. இப்போது ஓ.பி.எஸ்.ஸை ஒருங்கிணைப்பாளராக மறுபடியும் கொண்டு வாருங்கள். அவருடன் இணைந்து சசிகலா, தினகரன் ஆகிய மூவரோடும் இணைந்து கட்சியைக் கொண்டு செல்லுங்கள்''’என அமித்ஷா கூறினார்.

இதைக் கேட்ட எடப்பாடி அடங்கிப் போனார். “"பிரதமர் 10.5 சதவிகிதம் இட ஒதுக்கீட்டை வன்னியர்களுக்குத் தரவேண்டாம் என்று சொன்னதை நான் கேட்கவில்லை. அதற்கான பலனை நான் அனுபவித்துவிட்டேன். அ.தி.மு.க.வின் தேர்தல் தோல்விக்கு அது ஒரு முக்கியக் காரணம். ஆனால், அதே நேரத் தில் சசிகலா, தினகரன் ஆகியோரை நான் மிகவும் மதிக்கிறேன். நான் இன்று அ.தி.மு.க. தலைவராக வளர்வ தற்கு அவர்கள் செய்த உதவிகள்தான் அடிப் படைக் காரணம் என்பதை நான் மறக்கவில்லை''’என்றும் எடப்பாடி கூறினார்.

மேலும், "ஓ.பி.எஸ்., தினகரன், சசிகலா ஆகியோரிடம் இணைந்து செயல்பட்டால் பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. அமைக்கும் கூட்டணி வரும் பாராளுமன்றத் தேர்தலில் பெரும் வெற்றி பெறும் என்பதையும் நான் அறிவேன். ஆனால், இம்மூவரையும் அ.தி.மு.க.வுக்குள் அனுமதித் தால் கட்சியில் பெரும் குழப்பம் ஏற்படும். அவர்களை நீங்கள் கடந்த சட்டமன்றத் தேர்த லில் சொன்னதைப் போல பா.ஜ.க. அணியில் சேர்த்துக் கொள்ளுங்கள். அவர்களை நான் வெற்றிபெற வைக்கிறேன், ஆனால், இதற்காக இரட்டை இலையை நீங்கள் முடக்கி னால் நாற்பது பாராளுமன்றத் தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெற்றுவிடும்''’ என்றார்.

அத்துடன், "ஓ.பி.எஸ்.ஸை பா.ஜ.க.வில் சேர்த்து அவரை தமிழக பா.ஜ.க. தலைவராக்கி அவரது மகனுக்கு மத்திய மந்திரி பதவி கொடுத்துவிடுங்கள். தமிழக பா.ஜ.க. தலைவராக உள்ள அண்ணாமலை தமிழகத்தில் பா.ஜ.க. வளர்ச்சி பெற வைப்பதற்கு பொருத்தமில்லாத நபர். அவரது செயல்பாடுகள் மக்கள் மத்தியில் பா.ஜ.க.விற்கு எதிரான கருத்துக்களையே உருவாக்கி வருகிறது அவர் தி.மு.க.வை எதிர்க்கும் விவகாரங்களில் தேவையில்லாமல் மக்கள் மத்தியில் வெறுப்பை சம்பாதித்து வருக்கிறார். நாடகம் நடத்தும் அவரைவிட இல.கணேசன் போன்ற நல்ல ஆர்.எஸ்.எஸ். தலைவரை பா.ஜ.க.விற்கு தலைவராக நியமியுங்கள்''’என எடப் பாடி அமித்ஷாவிடம் விளக்கினார்.

அண்ணாமலையைப் பற்றிச் சொன்னதும் அதைச் சரி என்று அமித்ஷா ஏற்றுக் கொண்டார். ஆனால் இரட்டை இலை முடக்கம், ஓ.பி.எஸ்., சசிகலா, தினகரன் விவகாரம் ஆகியவற்றில் எடப்பாடி சொன்னதை அமித்ஷா ஏற்றுக் கொள்ள வில்லை. "ஓ.பி.எஸ்.ஸை பா.ஜ.க.வில் சேர்த்துக் கொள்ளுங்கள்' என எடப்பாடி சொன்னதைக் கேட்டு வாய்விட்டுச் சிரித்தார் அமித்ஷா.

ஆக, தற்போதைய எடப்பாடியின் டெல்லி விசிட் காரணமாக அ.தி.மு.க. வில் பிரிந்து கிடக்கும் தலை வர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து, தமிழகத் தில் பா.ஜ.க. கூட்டணியை வலுப்படுத்தும் முயற்சியில் இணக்கமான சூழல் ஏற்பட்டுள்ளதாகத் தெரி கிறது. இந்த இணக்கம், வரும் பாராளுமன்றத் தேர்தல்வரை தொடருமா என்பது போகப் போகத் தான் தெரியும்.

-ஆகாஷ்

____________

இறுதிச் சுற்று!

f

மிழக அரசின் மழைக்கால சட்டமன்ற கூட்டம் வழக்கமாக நவம்பரில் கூட்டப்படும். முதல்வரின் வெளி நாட்டுப் பயணம் நவம்பரில் திட்டமிடப்படுவதால், அந்த கூட்டத்தை அடுத்த மாதமே (அக்டோபர்) நடத்த திட்டமிடப்பட்டுள் ளது. அதிகபட்சமாக இந்த கூட்டம் 3 அல்லது 5 நாட்கள் மட்டுமே நடக்கும் என பேரவை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மழைக்கால கூட்டத்தில் நிறைவேற்றப்படக்கூடிய பொருள் குறித்து விவாதிப்பதற்காக தமிழக அமைச்சரவைக் கூட்டத்தை 26-ந் தேதி திங்கள்கிழமை கூட்டியிருந்தார் முதல்வர் ஸ்டாலின். ஆன்லிலைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களை தடுப்பதற்கான சட்டமசோதா, புதிய தொழில் முதலீடுகளுக்கான அனுமதி, அவர்களுக்குரிய சலுகைகள் வழங்குதல் உள்ளிட்டவைகளுக்கு அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்பட்டிருக்கிறது.

ff

.தி.மு.க. தலைமையகத்தில் கடந்த ஜூலை 11-ந் தேதி நடந்த கலவரத்தின்போது பல்வேறு ஆவணங்கள் திருடப்பட்டதாக எடப்பாடி பழனிச் சாமியின் உத்தரவின்பேரில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தமிழக காவல் துறையிடம் புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில் ஓ.பி.எஸ். உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் 60 பேர் மீது வழக்குபதிவு செய்தது போலீஸ். இந்த புகார் சி.பி.சி.ஐ.டி.யிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுதொடர்பாக விசாரணை நடத்திவந்த சி.பி.சி.ஐ.டி போலீசார், எடப்பாடி மற்றும் ஓ.பி.எஸ். ஆதரவாளர்களிடம் விசாரணை நடத்தினர். இந்த நிலையில், அ.தி.மு.க. அலுவலகத்திலிருந்து காணாமல்போன அ.தி.மு.க. தலைமை அலுவலக பத்தி ரம், ஜானகியம்மாள் எழுதி கொடுத்த மூலஆவணம், அண்ணா அறக்கட்டளை யின் ஆவணம், பாண்டிச்சேரி, திருச்சி மற்றும் மதுரையில் உள்ள அ.தி.மு.க. கட்சியின் சொத்துக்கள் அடங்கிய பத்திரம் உள்ளிட்ட முக்கிய மான 113 ஆவணங்களை ஓ.பி.எஸ். ஆதரவாளர்களிடமிருந்து தற்போது மீட்கப்பட்டு அவைகள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக சி.பி.சி.ஐ.டி. போலீஸ் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலை யில், அ.தி.மு.க.வின் தலைமையகத் துக்கு 26-ந் தேதி திங்கள் காலை வந்து அங்கு நடக்கும் சீரமைப்புப் பணிகளை பார்வையிட்டதுடன், கட்சியினருடன் ஆலோசித்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.

-இளையர்