""ஹலோ தலைவரே... ஆட்சி முடிகிற நேரத்தில் அமைச்சர்கள் -ஆளுங்கட்சி மாவட்டச் செயலாளர்களின் அடாவடி அதிகமா இருக்குன்னு காவல்துறையினர் மத்தியில் கொந்தளிப்பு அதிகமா இருக்கு''’’
""போலீஸ்துறைக்கு அமைச்சரான முதலமைச்சர்தானே பொறுப்பேற்கணும்?''’’
""அவர் ஆம்பளை ஜெயலலிதாவா தன்னைத்தானே நினைச்சிக்கிட்டிருக்காரு. அமைச்சர்கள், மா.செ.க்கள் உள்ளிட்ட ஆளுந்தரப்பினரின் தலையீடுகள் பற்றி போலீசார் அனுப்பிய புகார்களைத் திரட்டிய டி.ஜி.பி. திரிபாதி ஏற்கனவே எடப்பாடியை சந்திச்சி கொடுத்திருந்தாரு. எடப்படியோ, "காவல்துறையில் ஆளுங்கட்சித் தலையீடு இல்லாமல் இருக்க, இது ஒண்ணும் காமராஜர் காலம் இல்லை'ன்னு எரிச்சலோடு திருப்பியனுப்பிட்டார். அதோடு, இப்படி ஒரு ஸ்ட்ரிக்ட்டான போலீஸ் அதிகாரியை வச்சிக்கிட்டு தேர்தலை சமாளிக்க முடியாதுன்னும் முடிவு பண்ணிட்டாராம்.''’’
""ம்...''’’
""அந்தச் சமயம் சேலத்துக்குப் போயிருந்த எடப்பாடியிடம் உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணியும் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் டி.ஜி.பி. மேட்டர் பற்றி பேசியிருக்காங்க. அப்பதான் சுகாதாரத்துறை முன்னாள் செயலாளரான பீலா ராஜேஷின் கணவரான ராஜேஷ்தாஸ் பெயர் சிபாரிசு செய்யப்பட்டு, ஸ்பெஷல் டி.ஜி.பி.யா நியமிக்கப் பட்டாரு. தனக்கு கொடுத்த அசைன்மெண்ட் படி, போலீஸ்காரர்கள் எல்லாம் மகிழ்ச்சியாக இருப்பதுபோல் ஒரு மாயத் தோற்றத்தை வாட்ஸ்ஆப் குரூப்களில் உருவாக்கிக்கிட்டிருக் காராம் ஸ்பெஷல் டி.ஜி.பி.! இது போலீஸ் துறைக்குள் பெரும் புகைச்சலை ஏற்படுத்தியிருக்கு. "தன்னோட சொந்தத்துறையின் உண்மை நிலையையே மறைக்கும் முதல்வர்தான், வெற்றிநடை போடும் தமிழகம்னு விளம்பரப்படுத்திக்குறாரு'ன்னு போலீசார் குமுறுறாங்க.''’’
""எல்லாத் துறைகளிலும் இதே குமுறல்தான்...''’’
""அடுத்த மேட்டருக்கு வர்றேங்க தலைவரே...… சசிகலா அண்ணி இளவரசியோட சம்பந்தி கட்டை பாஸ்கர் கைதானது பற்றி போனமுறையே நாம பேசியிருந்தோம். கட்டை பாஸ்கரோ, தான் கைதாகக் காரணமே இளவரசி குடும்பம்தான்னு கருவிக்கிட்டு இருக்காராம். அவர் மகள் கீர்த்தனாவைத்தான் இளவரசி மகனான விவேக் திருமணம் செய்திருக்கிறார். ஒரு பெண் குழந்தையும் இருக்குது. இளவரசி மகள்களுக்கும் கீர்த்தனாவுக்கும் சரிப்படலையாம். ஒரு கட்டத்தில் அம்மா வீட்டுக்கே திரும்பிவிட்டாராம் கீர்த்தனா. இதையொட்டி விவேக்கிற்கும் அவர் மாமனார் பாஸ்கருக்கும் இடையே தகராறு வெடிச்சிருக்கு''’’
""அடக் கொடுமையே''’’
""பிறந்த வீட்டுக்கே வந்த கீர்த்தனா, கணவனைப் பிரிஞ்சி இருக்க முடியாமல் கொஞ்ச நாளிலேயே புகுந்த வீட்டுக்குக் கிளம்பியிருக்கிறார். ஆனா அவரோட அப்பா கட்டை பாஸ்கர் அதை விரும்பலை. ஆனா, அப்பா பேச்சை மீறி கிளம்பிட்டாராம் கீர்த்தனா. இதன் பிறகும் மாமனாருக்கும் மாப்பிள்ளைக்கும் இடையில் கடும் தகராறாம். அப்ப பாஸ்கர் கடுமையாக மிரட்டியதைப் பார்த்து டென்ஷனான விவேக் டீம்தான், ஆந்திர போலீஸுக்கு சில தகவல்களைக் கொடுத்து, அவரைக் கைதுபண்ண வச்சதா, ஜெயிலுக்குப் போன பாஸ்கர் குமுறுறாராம். குடும்பச் சிக்கல்கள் பெருசாகிக்கிட்டே போகுதாம்.''’’
""அ.தி.மு.க. முதல்வர் வேட்பாளரை நாங்க ஏற்போம்னு பா.ஜ.க சொன்னதால கூட்டணி சிக்கல் ஒரு வழியா தீர்ந்திருச்சின்னு சொல்றாங்களே?''’’
""ஆமாங்க தலைவரே. பா.ஜ.க.வின் மேலிடப் பார்வையாளரான சி.டி.ரவி மூலம், இப்படி ஒரு அறிவிப்பை பா.ஜ.க. வெளியிட்டு, எடப்பாடித் தரப்பை நிம்மதிப் பெரு மூச்சு விட வச்சிருக்கு. இந்த திடீர் முடிவுக்கு என்ன காரணம்னு, பா.ஜ.க. தரப்பிலேயே நாம் விசாரிச்சப்ப, "நாங்கள் ரஜினியை நம்பியிருந்தோம். அவர் கடைசி நேரத்தில் எங்க கழுத்தை அறுத்துட்டார். இப்ப இங்கே தி.மு.க. கூட்டணிக்கு சாதகமான அலை வீசத் தொடங்கியிருக்கு. இந்தமுறை குறைந்தது 10 எம்.எல்.ஏ.க்களையாவது சட்டமன்றத்துக்குள் அனுப்பத் துடிக்கும் எங்கள் மேலிடம், அ.தி.மு.க.வும் இல்லைன்னா, நம்ம கதை ’அரோகரா’தான்ங்கிற முடிவுக்கு வந்துடுச்சி. அதோடு எங்க வேட்பாளர்களை வெற்றி பெற வைக்கவும் ஒரு சீக்ரெட் திட்டம் வகுக்கப் பட்டிருக்கு'ன்னு சொல்றாங்க.''’’
""அப்படி என்ன சீக்ரெட் திட்டமாம்?''’’
""ஓட்டுப் பதிவுக்கான மின்னணு எந்திரத்தில் சில மேஜிக்குகளை செய்யலாம்னு பா.ஜ.க தலைமை திட்டமிட்டிருக்குதாம். அதன்மூலம் வெற்றிகளைக் குவிக்கும்போது, இந்த மின்னணு டெக்னிக் பற்றிய ரகசியம் வெளிப்படாமல் இருக்க, கூட்டணி பலத்தில் ஜெயித்தது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கவும் அவங்க தலைமை விரும்புதாம். அதுக்கு அ.தி.மு.க. கூட்டணி உதவும்ங்கிற எண்ணத்தில்தான் அதோடு கூட்டணியைத் தொடரும் முடிவுக்கு பா.ஜ.க. வந்திருக்குதாம். இதைச் சொன்ன பா.ஜ.க.வினர், நாங்க அ.தி.மு.க.விடம் இறங்கிப் போக முடிவெடுத்த நேரத்தில், அ.தி.மு.க. தலைமையே எங்களிடம் தானாக இறங்கி வந்துடுச்சின்னு சொல்லிச் சிரிக்கிறாங்க’''’
""எப்படியாம்?''’’
""தன்னை முதல் வர் வேட்பாளராக ஏத்துக்கிட்டு, தங்களுடன் கூட்டணியைத் தொடரணும்னு எடப்பாடித் தரப்பு, டெல்லிக்குத் தூது விட்டுச்சாம். அதற்கு ஈடாக, தமிழகத்தில் பா.ஜ.க.வின் தேர்தல் செலவுகளை ஏற்பதோடு, தமிழக சட்டமன்றத் தேர்தலோடு சேர்ந்து நடக்கவிருக்கும் 5 மாநில தேர்தலில், பா.ஜ.க. போட்டியிடும் 2 மாநிலங்களுக் கான தேர்தல் செலவையும் தானே ஏற்பதாகவும் சொல்லியிருக்கு. இந்த ஆஃபரை ஏற்றுக்கிட்டு, முதல்வர் வேட்பாளர் விஷயத்தில் பா.ஜ.க. தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டதாம். பா.ஜ.க.வுடன் கூட்டணி உருவாகாமல் போனால், எடப்பாடி உள்ளிட்ட சீனியர்கள் பலரின் ஊழல் விவகாரங்களை டெல்லி கையில் எடுக்கலாம்ங்கிற அச்சமும் அ.தி.மு.க.வுக்கு இப்பவும் இருக்குது.''’’
""எடப்பாடி அரசு மீது, நாடார் சமூகம் கடும் கோபத்தில் இருக்குன்னு சொல்லப்படுதே?''’’
""உண்மைதாங்க தலைவரே, தமிழகத்தின் பெரும்பான்மைச் சமூகங்களில் ஒன்றான நாடார் சமூகத்தை எடப்பாடி அரசு, தொடர்ந்து புறக் கணிப்பதாக அவர்கள் தரப்பு குமுறுது. குறிப்பா, தமிழக அமைச்சரவையில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கான நாடார் பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில், மூன்றுபேருக்காவது அமைச்சர் பதவி கொடுக்கணும்னு கோரிக்கை வைத்தது. அதேபோல் மரமேறும் நாடார்களை எம்.பி.சி. பட்டியலில் இணைக்க வேண்டும் என்றும், தென் மாவட்ட வளர்ச்சிக்கான ராக்கெட் உதிரிப் பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளை அந்தப் பகுதிக்குக் கொண்டுவரணும் என்றும் வேண்டுகோள்களை வைத் தது. ஆனால் எதுவுமே கண்டுகொள்ளப்படலையாம்.''
""ஓ...''’’
""அதேபோல் நாடார் சமூகத்தினர்தான் சேர, சோழ, பாண்டியர்களின் வாரிசுகள்னு ஜெயலலிதாவும், அவரைத் தொடர்ந்து ஓ.பி.எஸ்.சும் சொல்லியும், இதனை வழிமொழிந்து அங்கீகரிக்க மறுத்து விட்டாராம் எடப்பாடி. அதனால் எடப்பாடி அரசுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுக்கும் வியூகத்திலும் அவங்க இருக்காங்க. இந்த நிலையில், அவர்களின் கோபத்தை உதாசீனப்படுத்தி வருவதோடு, வைகுண்டராஜன் மூலம் நாடார் சமூகமே தனக்குப் பின்னால் இருப்பதுபோல எடப்பாடி அரசு பாவ்லா பண்ணுவதும், அவர்களை ரொம்பவே கொதிக்க வச்சிருக்குதுதாம். அண்மையில் இதற்காக வைகுண்டராஜன் சென்னையில் அ.தி. மு.க. ஆதரவுக்காகக் கூட்டிய கூட்டத்தில், வலிமையான எந்த ஒரு அமைப்பும் கலந்துக்கலையாம்''’
""டாக்டர்களும் எடப்பாடி அரசு மீது கோபத்தில் இருக்காங்களே?''
""ஆமாங்க தலைவரே... எடப்பாடி அரசு அண்மையில் தொடங்கியிருக்கும் "அம்மா கிளினிக்'குகளுக்கு போதுமான டாக்டர்கள் கிடைக்கலையாம். அதனால் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருக்கும் டாக்டர்களையும், பிரைவேட்டாக ஆன்லைனில் பிராக்டீஸ் செய்யும் டாக்டர்களையும் "அம்மா கிளினிக்'கிற்கு வரணும்னு எடப்பாடி அரசு நிர்பந்தம் செய்யுதாம். இதனால் அரசுக்கு எதிரான போராட்டத்தில் குதிக்க டாக்டர்கள் சங்கம் வியூகம் வகுத்திருக்கு. இதைப் பார்த்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும், அந்தத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணனும், தமிழகத்துக்காக ஒதுக்கப்பட்ட 5 லட்சத்து 63 ஆயிரம் கொரோனா தடுப்பு ஊசிகளில் இருந்து உங்கள் நலன் கருதி, முதலில் உங்களுக்குதான் அரசு அதைச் செலுத்த இருக்கிறது. அப்படி இருக்க எங்களை எதிர்த்துப் போராடலாமான்னு அவர்களைச் சமாதானப் படுத்த முயற்சிக்கிறாங்களாம்''’’
""நானும் ஒரு முக்கியமான செய்தியைப் பகிர்ந்துக்க விரும்பறேன். சென்னை மாநகராட்சியிலுள்ள சட்ட அதிகாரியான ஜேக்கப்பின் பதவிக்காலம் கடந்த வருடமே முடிந்துவிட்டது. பணி நீட்டிப்பில் இருக்கும் அவருக்கு மீண்டும் பணி நீட்டிப்பு வழங்கத் தீர்மானித்திருக்கிறது எடப்பாடி அரசு. தகுதியுள்ள அதிகாரிகளின் பதவி உயர்வுகளுக்கு வேட்டு வைக்கும் வகையில், இதுபோல் பணி நீட்டிப்பு பாலிஸி யையே எடப்பாடி அரசு கையில் எடுப்பது சரியான்னு அனைத்து அரசு ஊழியர் களும் கொதிக்கறாங்க.''