நெல்லை மாவட் டம் நாங்குநேரியைச் சேர்ந்த கூலித்தொழி லாளியான முனியாண்டி யின் மகன் சின்னத்துரை மற்றும் ஒரு மகள். வள்ளியூரிலுள்ள தனியார் பள்ளியில் படித்தபோது கடந்த ஆண்டு ஆகஸ்டு 10ம் தேதியன்று இரவு இவர்களது வீடு புகுந்த மூன்று மர்ம நபர்கள், மாணவன் சின்னத்துரை யையும் அவரது சகோதரி யையும் அரிவாளால் கொடூரமாக வெட்டி விட்டுத் தப்பியோடினர். விசாரணையில், சாதிய வன்மத்தால் சக மாண வர்களாலேயே சின்னத் துரை தாக்கப்பட்டது தெரிய வந்தது. பட்டியலின மாணவனுக்கு நேர்ந்த இந்த கொடூர சம்பவம் தமிழகத்தில் அதிர்வுகளை ஏற்படுத்தியது.
படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மாணவன் சின்னத்துரை, தன் ப்ளஸ் 2 காலாண்டுத் தேர்வை மருத்துவமனையி லேயே எழுதினார். முதல்வர் ஸ்டாலினும் மாணவனுக்கு உதவ, நெல்லை திருமால் நகரில் அவர்களுக்கு அரசு வீடு ஒதுக்கியதால் அங்கு குடியேறினர்.
அங்கிருந்தபடியே அரசு உதவிபெறும் பள்ளியில் பயின்ற மாணவன் சின்னத்துரை, ப்ளஸ் 2 பொதுத்தேர்வில் 600க்கு 469 மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார் மரணப்படிகளை மிதித்து விட்டுத் திரும்பிய மாணவன், தேர்விலும் நல்ல மதிப்பெண்கள் பெற்றது பரவலாகப் பேசப்பட்டது. முதல்வர் ஸ்டாலினை சந்தித்த மாணவன் சின்னத்துரை, அவரிடம் வாழ்த்துப் பெற்று திரும்பியிருந்தார்.
"அந்த சம்பவத்தில் என்னோட உசுரே போயிரும்னு நெனைச்சேன். நாலு மாசம் கைகளைத் தூக்க முடியல. வலியோடயும் வைராக் கியத்தோடயும் முயற்சி பண்ணேன். என்மேல இரக்கப் பட்டு பள்ளி ஆசி ரியரே மருத்துவ மனைக்கு வந்து எனக்கு மூணு பாடங் கள நடத்திட்டுப் போவாங்க. தாக்குதல் சம்பவத்த தனிமைல நெனைச்சு பயத்துல யும், பதட்டத்திலும் தூக்கம் போயிரும். மூளையிலயும். மன சுலயும் அது பத்தின எண்ணம்தான். என்னோட அம்மாவும், தாத்தாவும், "நடந்தத நெனைச்சு கலங்கப் பிடாது. ஒரே சிந்தன படிப்புன்னு அதையே நெனைச்சா பயமும் நடுக்கமும் போயிரும்'னு தெம்பு சொல்லுவாங்க. வகுப்பு சாரும் எனக்கு மனசு தெம்பாகிற வரைக்கும் தைரியம் சொல்லுவாக.
அவுங்க முயற்சியிலயும், குடுத்த தெம்புலயும், எம் மனசும் மூளையும் ஒரு இடத்துக்கு வந்துச்சு. தெம்பா, படிப்பே சொத்துன்னு படிச்சேன். ஆசிரியர்கள் எனக்கு உதவுனாக. எல்லாரோட ஒத்தாசைலயும் நா தேர்வுல நல்ல மார்க் வாங்க முடிஞ்சது. இனிமே என் வாழ்க்கைல எந்த சங்கடம் வந்தாலும் தைரியமா சந்திப்பேன். அந்தளவுக்கு தயா ராயிட்டேன். முதல்வரய்யாவும் என்னய வாழ்த்துனாக.
படிப்பு மூலம் பெரிய பொறுப்புக்கு வரணும்றதுதான் என்னோட விருப்பம்'' என்று அழுத்தமாகச் சொன்னார் மாணவர் சின்னத் துரை. கல்வி, சாதிய வன்மத்தை உடைத்து நொறுக்கியிருக்கிறது!