ரே உத்தரவில் ஆப்கானிஸ்தானின் அத்தனை மக்களின் தலையிலும் மண்ணை வாரிக் கொட்டியுள்ளனர் தாலிபான்கள். புதிதாக அமைந்துள்ள தாலிபான் அரசின் ஆப்கான் கல்வி அமைச்சர் அப்துல் பாகி ஹக்கானி, "கடந்த 20 ஆண்டுகளில் பள்ளி, கல்லூரிகளில் படித்துப் பெற்ற பட்டங்கள் செல்லாது'’என அறிவித்துள்ளார்.

நிதிச் சுமையைக் காரணம் காட்டி அமெரிக்க படை ஆப்கானை விட்டு நடையைக் கட்ட முடிவுசெய்ததுமே, தாலி பான்கள் சுறுசுறுப்பாகினர். எதிர் பார்த்ததுபோல் மிக வேகமாக ஆப்கான் அவர்கள் வசமாகியது. ஒவ்வொரு பகுதியும் ஆப்கான் வசமாகத் தொடங்கிய நிலையில் அங்குள்ள அமெரிக்கர்கள், பிற தேசத்தவர்கள் மட்டுமின்றி ஆப் கான் மக்களுமே நாட்டைவிட்டு வெளியேறத் தொடங்கினர்.

tt

அதற்குக் காரணம், முன்பு தாலிபான்களின் ஆட்சி நடை பெற்றபோது, தாலிபான்கள் காட்டிய கெடுபிடியும், பிற் போக்குத்தனமும்தான். பெண்கள் கல்வி கற்கக்கூடாது, மதரஸா படிப்புக்கே முன்னுரிமை, வணிகம், இசை, சினிமா, விளையாட்டு போன்ற எதற்குமே இடமில்லாதது போன்றவைதான்.

Advertisment

அதனாலேயே தாலிபான் களின் கையில் ஆட்சி வருவதற் குள் முடிந்தவர்கள் விமானம் மூலமாகவும், வசதியில்லாதவர்கள் பொருட்களை மூட்டை கட்டிக் கொண்டு கால்நடையாக பாகிஸ்தான் எல்லைக்கும், அவசர அவசரமாக நாட்டைவிட்டு வெளியேறினர். ஆப்கானின் தேசிய கால்பந்து விளையாட்டுக் குழுவைச் சேர்ந்த பெண்களும் ஆண்களும் அடித்துப் பிடித்துக் கொண்டு நாட்டைவிட்டு தப்பியோடினர்.

2001-ல் தாலிபான் ஆட்சி அகன்றதும் ஆப்கானிஸ்தானில் படிப்படியாக பெண்கள் கல்வி பயிலும் நிலை அதிகரித்துவந்தது. அதாவது, அதற்கு முன்பு 17 சதவிகித பெண்கள் மட்டுமே படித்துவந்த நிலையில் மெல்ல மெல்ல இருபது ஆண்டுகளில் அது 30 சதவிகிதமாக அதிகரித்தது. இந்த சதவிகிதம் இனி வேகமாக இறங்கத் தொடங்கும்.

பெண்கள் கல்வி பயிலக்கூடாது என முழுமையாக பல்கலைக்கழகங்கள் தடை விதிக்கவில்லையென்றாலும், அவர் களுக்கான கட்டுப்பாடான உடை விதிமுறைகள் வகுக்கப்பட்டுள் ளன. அது இல்லாமல் யாரும் பல்கலைக்கழகத்துள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். “ஆணும் பெண்ணும் சேர்ந்து படிப்பது (Co-ed) இஸ்லாமுக்கு எதிரானது. தவிரவும், அது தேச மதிப்பீடுகளுக்கும் ஆப்கானியர்களின் மரபுக்கும் எதிரானது” என தாலிபான்கள் அறிவித்திருக்கின்றனர்.

Advertisment

இனி, ஆண்களும் பெண்களும் சேர்ந்து பயில்வது அனுமதிக்கப்படாது. வேறு வழியில்லாமல் சேர்ந்து பயிலும்போதும் வகுப்பறையில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் நடுவே திரை தொங்கவிட வேண்டும். முடிந்தவரை ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனி வகுப்புகளே நடத்தப்படவேண்டும் என கெடுபிடிகள் அதிகரித்துள்ளன.

வகுப்பறையில் ஆணுக்கும் பெண்ணுக்கும் தனித் தனி நுழைவாயில்கள் அமைக்கப்படவேண்டும். பெண்களுக்கு பெண் ஆசிரியர்கள் மட்டுமே பாடம் நடத்தவேண்டும். ஆண் பேராசிரி யர்கள் நடத்தக்கூடாது என்ற அளவுக்குப் போய்விட்டனர். இதனால் பல்வேறு பல்கலைக்கழகங்களில் மாணவிகளின் வருகை சரிந்துள்ளது.

ttt

தவிரவும், பள்ளிகளில் ஆயிரக்கணக்கான பெண் ஆசிரியர்களை சத்தமின்றி நீக்கிவிட்டு, அந்த இடத்தில் ஆண் ஆசிரியர்களை நியமித்துள்ளனர். காபூலின் காலிப் பல்கலைக்கழகத்தில் தாலிபான் ஆட்சி அமைவதற்கு முன்பு 2400 பேர் வரை பயின்றனர். அதில் அறுபது சதவிகிதம் பெண்கள். அதாவது 1400-க்கும் அதிகமான பேர் பெண்கள். தற்போது வெறும் 21 பெண்களே படிக்கவருகின்றனர்.

ஆப்கான் தங்கள் வசமாகத் தொடங்கியதும், தாலிபான்கள் தாங்கள் ஒன்றும் அத்தனை பிற்போக்குவாதிகள் அல்ல எனக் காட்டிக்கொள்வதற்காக,"பெண்கள் வேலைக்குச் செல்வதைத் தடுக்கமாட்டோம், கல்வி பயில்வதைத் தடுக்கமாட்டோம்' என வீராப்பு அறிக்கைகள் வெளியாகின.

ஆனால் அப்போதே அதை சர்வதேச சமூகங்களும், தாலிபான்களின் மீது நம்பிக்கையற்றவர்களும் சந்தேகமாகப் பார்த்தனர். தற்போது ஆப்கான் கல்வியமைச்சர் அப்துல் ஹக்கானியின் அறிக்கை, பெண்களின் கல்வி பயில்வதில் மட்டுமல்ல… ஒட்டுமொத்தமாக கல்வியின்மேலே தாலிபான்கள் நம்பிக்கை இல்லாதவர்கள் என்பதை உறுதிசெய்துள்ளது.

தாலிபான்களின் துப்பாக்கியும், ஏவுகணைகளும் விளைவிக்கும் கேடுகளைவிட, அவர்களின் பழமைவாத கொள்கைகள் ஆப்கானிஸ்தானுக்கு மிக மோசமான கேடுகளை விளைவிக்கும். அதன் தொடக்கப்புள்ளிதான் இந்த அறிவிப்பு என விமர்சனங்கள் எழத் தொடங்கியிருக்கின்றன.