துரையின் மையப்பகுதியில், ஏறத்தாழ 2000 கோடி ரூபாய் மதிப்பு கொண்ட மிகவும் பழமையான விக்டோரியா எட்வர்டு மன்றம் செயல்பட்டு வருகிறது. இதற்குச் சொந்தமான 1.87 ஏக்கர் இடத்தை அபகரிக்க மாவட்ட பதிவாளர் மற்றும் அதிகாரிகளை கவர்னரின் முன்னாள் ஆலோசகரான ராஜகோபால் மிரட்டினாராம். மேலும் ஆக்கிரமிக்கும் நோக்கில், மன்றத்திலிருந்து 2018-ல் நீக்கப்பட்ட 18 உறுப்பினர்களைத் தனது கண்ட்ரோலில் இவர் வைத்திருக்கிறார் என்றும் அதன் செயலாளர் இஸ்மாயில் குற்றம்சாட்டி வருகிறார்.

2

அவர் நம்மிடம்... "கடந்த 2018 ஜூனில் மன்றத்தின் பொதுக்குழுவால் நீக்கப்பட்ட உறுப்பினர்கள், விக்டோரியா எட்வர்டு மீட்பு இயக்கம் என்று சொல்லிக்கொண்டு, பொய்யான புகார்களை தமிழக முதல்வர் மற்றும் ஆளுநர், மாவட்ட ஆட்சியர் என பலருக்கும் அனுப்பினார்கள். இதனால், மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையின்படி, மாவட்ட பதிவாளர் தலைவர் செந்தமிழ் செல்வன், சார்பதிவாளர், கண்காணிப்பாளர் ஆகியோருடன் விக்டோரியா எட்வர்டு மன்றத்தை ஆய்வு செய்து, டிசம்பர் 2018-ல் அறிக்கை சமர்ப்பித்தார். அதில் விக்டோரியா மன்ற மீட்பு இயக்கத்தினர் என்பவர்கள், சட்டவிரோத லெட்டர் பேட் அமைப்பினர் என்றும், இது பதிவு செய்யப்படாத அமைப்பு என்றும் கூறி, அந்த புகார் மனுக்களை 2019 டிசம்பரில் தள்ளுபடி செய்தார் ஆட்சியர்.

உடனே, மீட்பு இயக்கத்தினர் மேல்முறையீடாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனுத் தாக்கல் செய்தனர். அதுவும் 2020-ல் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில் மீட்பு இயக்கத்தினர், தற்போதைய தலைமை தகவல் ஆணையரான இராஜகோபாலை சந்தித்து அவரிடம் பேரம் நடத்தி, அவரின் உதவியோடு மாவட்ட பதிவாளரை சென்னைக்கு அழைத்து மிரட்டி, மீண்டும் பழைய புகாரின் அடிப்படையில் விசாரிக்கச் செய்ததோடு மன்றச் செயலாளராகிய என்னையும் நிர்வாக குழுவினரையும் நேரில் அழைத்து விசாரிக்காமல் ஒருதலைப் பட்சமாக, மாவட்ட ஆட்சியருக்கு தனி அலுவலரை நியமிக்க கடந்த ஜனவரியில் பரிந்துரை செய்யவைத்தனர். இது எல்லாமே சட்டத்திற்குப் புறம்பானவையே. இப்போது, எட்வர்டு மன்றத்தின் சொத்துக் களை சூறையாட இராஜகோபால் தயாராகிவிட்டார். அவருக்கு ஒன்றிய அரசின் முழு ஆதரவு இருக்கிறது. அவர்கள் என்னை என்ன வேண்டுமானாலும் செய்ய லாம். அடிக்கடி எனக்கு மிரட்டல் வரத் தொடங்கி யிருக்கிறது. எனக்கு எதுவும் நடந்தால், அதற்கு ராஜகோபாலும் இந்த மீட்பு இயக்கம் என்ற பெயரில் இருக்கும் லெட்டர்பேட் குழுவும்தான் பொறுப்பு''’என்றார் கலக்கமாய்.

Advertisment

22இதுகுறித்து விக்டோரியா எட்வர்டு மன்ற மீட்பு இயக்கத் தின் முக்கிய பொறுப்பாளரான ஜெயராமிடம் நாம் கேட்டபோது... "இந்த இஸ்மாயில், எட்வர்டு மன்றத்தின் செயலாளராக கடந்த 1998-ல் இருந்து தற்போது வரை 20 வருடங்களாக இருந்து, பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுவருகிறார். மேலும் எட்வர்டு மன்றத்தின் சொத்துக்களை விற்கவும் முற்படுகிறார். அதோடு, 20 ஆயிரம் சதுர அடி உள்ள விக்டோரியா மன்ற ரீகல் தியேட்டரை, 32 ஆயிரத்திற்கு வாடகைக்கு விட்டதாகக் கணக்குக் காட்டிவிட்டு, தனியாக 40 ஆயிரம் ரூபாய்வரை வாங்குகிறார். 27 கடைகளின் வாடகைக் கணக்கிலும் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. முழுக்க முழுக்க தன் குடும்பச் சொத்துக்களைப் போல இதை நடத்துகிறார். மேலும், ஒவ்வொருமுறை தேர்தலிலும் அவரே வெற்றி பெறுவதற்காக அதிகப்படியான உறுப்பினர்களை சேர்த்தும் முறைகேடான வழிகளில் பதவியைத் தக்கவைத்துக் கொள்கிறார்.

இதையெல்லாம் தட்டிக் கேட்டதனால் எங்களை வெளியேற்றினார். எங்களுக்கு சொத்துக்களை அபகரிக்கவேண்டும் என்ற நோக்கமெல்லாம் இல்லை. அரசே இந்த மன்றத்தை எடுத்து நடத்தவேண்டும் என்றுதான் சொல்கிறோம். இராஜகோபால் மிக நேர்மையான அதிகாரி. மாவட்ட பதிவாள ரான செந்தமிழ் செல்வன் முதலில் அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டதால், மீண்டும் அவரை அழைத்து இராஜகோபால் கண்டித்தார். அவ்வளவுதான். கூடிய விரைவில் நல்லதே நடக்கும்''’என்று புகாரைத் திருப்பிப் போட்டார்.

மேலும் இதுகுறித்து நிரந்தர ஆயுட்கால உறுப்பினரான இந்திய வருவாய் பணியாளர் சம்பத் ஐ.ஆர்.எஸ்.சை சந்தித்தோம்.

Advertisment

அவரோ “"காந்தி மதுரைக்கு வந்து அரை நிர்வாண கோலம் பூண்டு முதன்முதலில் இங்கு வந்துதான் பேசினார். மேலும் காமராஜர், நேரு, பெரியார் போன்ற பெரும் தலைவர்கள் வந்த இடம். எனக்குத் தெரிந்து கடந்த 2018-வரை எந்தப் பிரச்சினையும் இல்லாமல் சென்றது. ஜெயராமன், நவமணி, முத்துகுமார் போன்றவர்கள் வெளியில் வந்தபின்பு பல்வேறு குற்றச்சாட்டுக்களை வைக்கின்றனர். அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்கின்றனர்.

d2

விக்டோரியா மன்ற செயலாளர் மிகவும் கண்டிப்பானவர். இந்த மன்ற வளாகத்தில் மது அருந்தவோ மன்றம் சாராதவர்கள் இங்கு இருக்கவோ அனுமதிப்பதில்லை. மேலும் சில விசயங்களில் வளைந்து கொடுப்பதில்லை. அதனால் கூட அவர்கள் எதிர்க்கலாம். மேலும் இதன் வரு மானமும் இதன் இடமதிப்பும் மிக உயர்ந்து கொண்டே போவதால் அதைக் கைப்பற்றவேண்டும் என்று சிலர் நினைக்கிறார்கள்''’என்கிறார் அழுத்தமாய்.

மன்றத்தின் மற்றொரு ஆயுட்கால உறுப்பின ரான முத்தமிழ் செல்வன் நம்மிடம், "இடம், மக்கள் சேவைக்காக சொசைட்டியாக பதிவு செய்து, நூலகம், கலையரங்கத்தில் நூல் வெளியீடு, சொற் பொழிவு மேலும் மக்கள் நலம் சார்ந்து பணிகள் செய்யவே உருவாக்கப்பட்டது. .அரசிடமிருந்து மானியமோ, பொதுமக்களிடமிருந்து நிதியோ இதற்காக வாங்கவில்லை. அப்படி இருக்கும் பட்சத்தில் எப்படி அரசு இதை எடுக்க முடியும்? மேலும் இங்கு இருக்கும் 2700 உறுப்பினர்களில் ஒருவர்கூட எந்தப் புகாரும் தெரிவிக்காத நிலையில்... இங்கிருந்து வெளியேறிய நபர்களின் குற்றச்சாட்டு எப்படி உண்மையாக இருக்கும்?''’என்கிறார்.

பரபரப்புச் சூறாவளியில் சிக்கிக்கொண்டிருக் கிறது விக்டோரியா எட்வர்டு மன்றம்.

-அண்ணல்