கடந்த சில மாதங்களுக்கு முன்பு அ.தி.மு.க.வின் மத்திய மாவட்ட நட்சத்திரப் பேச்சாளர் ஒருவர் சேலத்தி-ருந்த எடப்பாடியாரைச் சந்தித்திருக்கிறார். உங்களுக்கு ஒன்னு தெரியுமா, நம்ம கட்சியின் தலைமைப் பேச்சாளர்கள் மொத்தம் 382 பேர்ல, கடந்த 9 வருசத்தில் 114 பேர் இறந்திட்டாங்க என்று சொன்னதைக் கேட்டு ஆடிப்போனாராம் எடப்பாடி.
ஏம் என்னாச்சுண்ணே என்று எடப்பாடி பதற்றமாகக் கேட்டதும், ஒண்ணு சொல்றேன் தெரிஞ்சுக் குங்க. ஒரு அடிபம்ப ஆறு மாசம் அடிக்காம மூலைல போட்டுட்டா அதோட வாசரும், பம்பும் வேலை செய்யாது கெட்டுப் போயிரும். கழட்டி அதத் தூர வீசிட்டு வேற புது வாசர், கப்ளிங், போட்டு மாட்டி அடிச்சாத் தான் அந்த அடி பம்பு வேலை செய்யும். இந்த நெலமயிலதாம் இருக்காங்க நம்ம தலைமைக் கழகப் பேச்சாளர்க. அம்மா இருந்த வரைக்கும் தலைமைக் கழகப் பேச்சாளர்கள நல்லா கவனிச்சாங்க. குடும்பங்களும் நல்லா இருந்தது. "உங்க ஆட்சியில கவனிக்காம விட்டதன் விளைவுதான்... இந்தப் பரிதாப நிலை' என்று சொல்லியிருக்கிறார்.
இதன்பின் ஓ.பி.எஸ்.ஸிடம் இதைப் பற்றி இ.பி.எஸ். பேசியதையடுத்து, தலைமைக் கழகத்திலிருந்து மொத்தப் பேச்சாளர்களும் கிரேடு வாரியாகப் பிரிக்கப் பட்டு அவர்களுக்குத் தொகை கள் அனுப்பப்பட்டு உயிரூட் டப்பட்டு வருகிறார்களாம்.
அ.தி.மு.க.வின் தலைமைக் கழகப் பேச்சாளர் கள் பலரிடம் நாம் பேசிய போது... "எங்க பேரோ, படமோ அடையாளமோ வேண்டாம்ணே' என்றவர்கள் பல விஷயங்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்கள்.
"அம்மா இருந்த நாள் வரைக்கும், தலைவர் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் பொதுக்கூட்டம், அண்ணா பிறந்த நாள், கட்சித் தொடக்க நாள், தொழிலாளர் தினம், கட்சிப் பிரச்சாரம்னு மாசம் ரெண்டு பொதுக் கூட்டத்தில் அனைத்து தலைமைக் கழகப் பேச்சாளர் களும் பேசக் கூடிய வாய்ப்பு கிடைக்கும். அதை தலை மைக் கழகமே அறிவிக்கும். அதன்படி மாவட்டத்தி லுள்ள கழக நிர்வாகிகள் கூட்ட ஏற்பாடுகளைச் செய்வாங்க. அதன் மூலமாக, எங்களுக்கு மாசம் தோறும் கணிசமான தொகை கிடைக் கும். அதோட மட்டுமில்ல வருடந்தோறும் தீபாவளி, பொங்கல்னு நேரத்தில பேச்சாளர்களுக்கு சிறப்பா ஒரு தொகையும், ஒரு செட் டிரஸ்சும் தருவாக. தேர்தல் நேரத்தில தலைமைக் கழகப் பேச்சாளர்களில நட்சத்திர பேச்சாளர்கள் மற்றும் ஏ.பி.சி.ண்ணு கிரேடா பிரிச்சி 2 லட்சம், ஒன்றரை லட்சம், ஒரு லட்சம், ஐம்பதாயிரம்னு ஒவ்வொரு பிரிவு பேச்சாளர்களுக்கும் தருவாக. கட்சிப் பேச்சாளர்க குடும்பங்களக் குறைவில்லா மப் பாத்துக்குவாக. எங்க ஜீவனம் நிம்மதியாக கழிஞ்சது.
அம்மா மறைஞ்சதுக்கப் புறம் எங்க நிலைமையே கொட சாய்ஞ்சி போச்சு. பொதுக் கூட்டம், வருமா னம், கட்சியின் இரட்டைத் தலைமையோட ஆதரவில் லாம போனதால, இதையே நம்பியிருக்குற பல பேச்சா ளர்க குடும்பங்க, வறுமைல ஆடிப் போயிடுச்சி. அடுப்ப கோழி கிண்டுற நெலமைக்கு ஆளானோம். ஏதோ உரை மோர் இருக்குற ஒரு சில பெரிய பேச்சாளர்க மட்டுந் தேன் தாக்கு புடிச்சாக, மத்தவங்க வறுமையால உடல் தளர்ந்து பொசுங்கிப் போய்ட்டாங்க. இதத் தாங்க மாட்டாம பல பேரு இறந்தும் போயிட்டாக. ஆட்சி அதிகாரத்தில இருக்கு றப்ப, தலைமை, பேச்சாளர்களக் கண்டுகொள்ளாததால் வந்த துயரம்தான் இது. ஆட்சியில் இருக்கும்போதே கவனிக்கலியே, ஆட்சி போனப்ப கவனிக்கவா போறாகன்னு பல பேரு நொந்து நொறுங்கிப் போனாங்க. இரட்டைத் தலைமை ஆட்சிலருந்த நாலு வருஷமா எங்க நெலம இப்படி தரையளவு போயி ருச்சிய்யா. இப்ப எங்களப் பேசச் சொன்னா, மைக் முன்னால நிக்க முடியாது. கை, காலெல்லாம் உதறல் எடுத்துரும். பேச்சே வரா துய்யா. அந்தளவுக்குக் கெட் டுப் போயிருச்சி மனசும் ஒடம்பும்.
காலம் கடந்த ஞானோ தயமா இப்ப ஒரு வருஷமாத் தான் கட்சியோட ரெட் டைத் தலைமைல மாத்தம் தெரியுது. யாரு பாத்த பார்வையோ, போன தீபாவளிக்கு கட்சித் தலைமைலருந்து ஒவ்வொரு பேச்சாளர்க அக்கௌண்ட் லயும் இருபதாயிரம் போட் டாங்க. பொங்கலப்போ ஒரு தொகையும் குடுத்தாங்க. அப்புறமா போன சட்ட மன்றத் தேர்தல்ல, நட்சத் திரப் பேச்சாளர்களுக்கு மூனு லட்சம், மத்த ஏ.பி.சி.ன்னு மூனு கிரேடு பேச்சாளர் களுக்கு 2 லட்சம் ஒன்றரை லட்சம், ஒரு லட்சம்னு இரட்டைத் தலைமை குடுத்தாகய்யா. இந்தத் தீபாவளிக்கு பத்தாயிரம் குடுத்தாக. பொற்கிழியும் தாரேம்னு சொல்லியிருக்காக. இந்த மாத்தத்தால போன உசுருகளத் திரும்பப் புடுச்ச மாதிரி இப்ப கொஞ்சம் தெம்பு வந்துருக்குய்யா. அது நீடிக்கணும்யா... அப்பத் தான் கட்சிக்கு மறுவாழ்வு கெடைக்கும்யா'' என்றனர் உள்ளர்த்தமாய்.