கடந்த நக்கீரன் இதழில் "மாஸ்டர் சந்திப்பு சீக்ரெட்! கைமாறிய நிதி'! என்ற தலைப்பில் அட்டைப்படக் கட்டுரை வெளியிட்டிருந்தோம். அதில் தமிழக தியேட்டர்களில் 100% இருக்கைக்கு எடப்பாடி அரசு அனுமதியளிக்கும் நல்லசேதி வரும் என்ற நம்பிக்கையில் "மாஸ்டர்' ஹீரோ விஜய் இருப்பதாகவும் எழுதியிருந்தோம். நாம் எழுதியது போலவே, 100% இருக்கைக்கு அனுமதியளித்து கடந்த 04-ஆம் தேதி உத்தரவிட்டது அரசு.
இந்த உத்தரவை அனைத்து சினிமா சங்கங்கள், தியேட்டர் அதிபர்கள் சங்கங்கள், முன்னணி நடிகர்கள்-நடிகைகள் வரவேற்று, ஒட்டுமொத்த கோலிவுட்டும் கொண்டாட்டத்தில் திளைக்கிறது. எங்களுக்கு இந்த ஆண்டு 100% மகிழ்ச்சிப் பொங்கல் என உற்சாகத்தில் இருக்கிறது கோடம்பாக்கம்.
சிம்புவின் செண்டிமெண்ட் டச்!
அதே செய்தியில் "சிம்புவின் ‘ஈஸ்வரனுக்கு இம்சை' என்ற செய்தியும் வெளியாகியிருந்தது. ஒருவழியாக இம்சை அரசர்களை ஆஃப் பண்ணி ’ஈஸ்வரனும் பொங்கலுக்கு ரிலீசாகும் என்ற நம்பிக் கையில், "" "மாஸ்டர்' படம் தயாராகி ஒருவருடம் ஆகியும் தியேட்டர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக காத்திருந்த அண்ணன் விஜய்யின் "மாஸ்டர்' படத்துடன் எனது ஈஸ்வரனும் வருகிறது. அண்ணனின் ரசிகர்கள் ஈஸ்வரனைப் பாருங்கள், எனது ரசிகர்கள் மாஸ்டரைப் பாருங்கள். திரையுலகம் செழிக்க வேண்டும்''’என சென்ட்டி மெண்ட் டச்சுடன் அறிக்கைவிட்டுள்ளார் சிம்பு.
நிதி அகர்வாலுக்கு இரட்டை இனிப்பு!
ஜெயம் ரவியுடன் ஜோடி போட்ட ‘"பூமி' ’(ஓ.டி.டி.யில்), சிம்புவின் முறைப்பெண்ணாக நடித்துள்ள ‘"ஈஸ்வரன்'’ என இரண்டு படங்கள் பொங்கலுக்கு ரிலீஸ் ஆவதால் இரண்டு வகை இனிப்பு சாப்பிட்ட தித்திப்பில் உள்ளார் ஹீரோயின் நிதி அகர்வால். "ஈஸ்வரன்' ஆடியோ ரிலீஸ் விழாவில் பேசிய டைரக்டர் பாரதிராஜா, “""பரவாயில்ல இந்தப் பொண்ணு நல்லாவே தமிழ் பேசுது''’என பாராட்டியதில் கரும்பைக் கடித்த சந்தோ ஷத்தில் இருக்கும் நிதிஅகர்வால், அடுத்த தாக உதயநிதிக்கு ஜோடி போட்டு, மகிழ்திருமேனி டைரக்ட் பண்ணி வரும் படத்தின் இரண்டாம்கட்ட ஷூட் டிங்கிற்காக வெயிட்டிங்கில் உள்ளார்.
தர்ஷா குப்தாவுக்கு தலைப் பொங்கல்!
பொண்ணுக்கு சொந்த மாநிலம் கர்நாடகம் என்றாலும் கோயம்புத்தூரில் படித்து வளர்ந்ததால் சரியான உச்சரிப்புடன் தமிழ் பேசுகிறார். சன் டிவியில் ஒளிபரப்பாகும் ‘"மின்னலே'’, விஜய் டி.வியின் ‘"செந்தூரப் பூவே'’ சீரியல்கள் மூலம் பிரபலமானாலும் சினிமாவில் நடித்து தென்னிந்தியா முழு வதும் பிரபலமாகவேண்டும் என்பதுதான் தர்ஷாவின் லட்சியமும் வெறியும்.
அந்த லட்சியம் இப் போது ‘"பழைய வண்ணாரப் பேட்டை'’ ‘"திரௌபதி'’ படங்களை டைரக்ட் பண்ணிய மோகன் ஜி மூலம் நிறைவேறி யுள்ளது.
மோகன்ஜி டைரக்ட் பண்ணும் மூன்றாவது படத்தில் தல அஜீத்தின் மச்சினன் ரிச்சர்ட்டு ரிஷிக்கு ஜோடி போட்டு கோலிவுட்டில் அறி முகமாக இருப்பதால் தர்ஷா குப்தாவுக்கு இது தலைப் பொங்கல்தானே.
-ஈ.பா.பரமேஷ்வரன்
_____________
தேங்காய் சில்லு!
சர்க்கரைப் பொங்கலை மட்டும் சாப்பிட்டா ரொம்ப இனிச்சுக் கெடக்கும்கிறதால் கூடவே தேங்காய் சில்லையும் ஒரு கடி கடிச்சுக் கிட்டா அந்த சுவையே தனிதான். அதுமாதிரிதான் இங்கே சில தேங்காய் சில்லு சங்கதிகள்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் டைரக்ஷனில் சூர்யா நடிக்கும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம். வெற்றிமாறன் டைரக்ஷனில் கலைப்புலி தாணு தயாரிப்பில் ‘"வாடிவாசல்'’முடிந்ததும் கலாநிதி மாறனுடன் கைகுலுக்குகிறார் சூர்யா.
நடித்துக்கொண்டிருக்கும் நாலு படங்களுக்கு மத்தியில் புதியவர் கார்த்திக் டைரக்ஷனில் ‘"முகிழ்'’என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார் விஜய்சேதுபதி. இதில் வி.சே.வுக்கு ஜோடியாக ரெஜினா கசாண்ட்ரா நடிக்கிறார். அதைவிட முக்கியமான சங்கதி என்னன்னா வி.சே.வின் மகள் பூஜா, "முகிழ்' மூலம் தமிழ் சினிமாவில் உதயமாகிறார்.
பி.சுமித்ரா என்பவரின் தயாரிப்பில் சினிமா பத்திரிகையாளர் கோடங்கி ஆபிரஹாம் இயக்கியுள்ள ‘"மலர்'’குறும் படத்தை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டார்.
புதுமைப்பித்தனான ரா.பார்த்திபன், இந்த ஆண்டு டிஜிட்டல் காலண்டரை ரிலீஸ் பண்ணியுள்ளார்.