டந்த 2021-2022-ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையை சட்டசபையில் சமர்ப்பித்த நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், "தொழில் வளர்ச்சியில், பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள மாவட்டங்களான திருவண்ணாமலை, தருமபுரி, நெல்லை, விருதுநகர், விழுப்புரம் மாவட்டங்களில் தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும்'' என அறிவித்தார்.

yy

திருவண்ணாமலையை அடுத்த பாலியப் பட்டு கிராமத்தில் சிப்காட் அமைக்க முடிவு செய்த வருவாய்த்துறை, தொழில்துறை அதி காரிகள், கடந்த டிசம்பர் மாதம் பாலியப்பட்டு, புனல்காடு, செல்வபுரம், வாணியம்பாடி, அண்ணாநகர், அருந்ததியர் காலனி பகுதியை வந்து பார்வையிட்டுள்ளனர். 6 ஆயிரம் மக்கள் வசிக்கும் இந்த கிராமத்திலுள்ள 1200 ஏக்கர் விவசாய நிலங்களை, சிப்காட் அமைக்க கையகப்படுத்த முடிவுசெய்து வரைபடம் தயாரித்துள்ளார்கள். விவசாய நிலங்களைக் கையகப்படுத்தி சிப்காட் அமைக்க முடிவுசெய்வதை எதிர்த்து மக்கள் போராட்டத்தைத் துவங்கினர். போராட்டத்துக்கு சி.பி.எம்., பா.ம.க., நாம் தமிழர் கட்சி, பெரியார் திராவிடர் கழகம், மக்கள் அதிகாரம் அமைப்பு, மே 17 இயக்கம் போன்றவை ஆதரவு தெரிவித்தன. மார்ச் 31-ஆம் தேதியோடு போராட்டம் தொடங்கி 100-ஆவது நாளானதால் பாலியப்பட்டு மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராம மக்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு தருவதற்காக ஊர்வலமாக வந்தனர்.

நூற்றுக்கும் அதிகமான விவசாயிகள் ஆண்கள், பெண்கள் என வந்தவர்களின் கைகளில் தங்களது நிலங்களில் விளையும் தர்ப்பூசணி, கத்தரிக்காய், நெல், சாமந்தி பூ, மல்லிப்பூ, போன்றவற்றை தட்டில் வைத்து சீர்வரிசைபோல் கொண்டுவந்தனர். இவர்களை மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயி லிலேயே டி.எஸ்.பி அண்ணாதுரை தலைமையில் குவிக்கப்பட்டிருந்த போலீஸார் தடுத்துநிறுத்தினர். "அனை வரையும் உள்ளே அனுமதிக்கவேண் டும், எங்கள் வாழ்வாதார பிரச்சனைக் காக கலெக்டரை சந்திக்க வந்துள்ளோம்' என கோஷமிட்டபடி நுழைவாயி லேயே சுட்டெரிக்கும் வெயிலில் தரையில் அமர்ந்தனர் மக்கள்,

Advertisment

iii

பின்னர் காவல்துறை அவர் களை உள்ளே அனுமதித்தது. மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் உதவி ஆட்சியர் இருவரும் மக்களை சந்தித்தனர். அப்போது "எங்கள் பகுதியில் சிப்காட் அமைக் கக்கூடாது' என தனித்தனியாக 265 மனுக்கள் கொடுக்கப்பட்டது. வேளாண்மைத்துறை பட்ஜெட் தாக்கலின்போது, "விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படமாட்டாது என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். முதலமைச்சரின் பேச்சுக்கு முக்கியத்துவம் தந்து பொன் விளையும் பூமியை சிப்காட்டுக்காக கையகப் படுத்துவதை அதிகாரிகள் கைவிட வேண்டும்'' என விவசாயிகள் சார்பாக அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத் தார் சி.பி.எம். வழக்கறிஞர் அபிராமன்.

ஊர்வலத்தில் வந்த உண்ணா மலை, ஜோதியம்மா, செல்லம்மாள் ஆகியோர், “"வருஷம் முழுவதும் பயிர் விளையற பூமி. இது கட்டாந் தரை, விவசாயமே நடக்கறதில்லை அப்படின்னு பொய் சொல்லி எங்க நிலத்தை அபகரிக்க முயற்சி செய்றது எந்த விதத்தில் நியாயம்? நிலத்தைத் தந்துட்டு எங்க புள்ளைங்கள தெரு வுல நிறுத்தச் சொல்றாங்களா?'' என்றார். விவசாயி நாராயணசாமி, "2007-ல் முதலமைச்சர் கலைஞர், நிலம் இல்லாதவர்களுக்கு நிலம் தரும் திட்டத்தின்கீழ் 2 ஏக்கர் நிலத்தை எங்கள் கிராமத்தைச் சேர்ந்த சிலருக்கு வழங்கினார். எனக்கும் இரண்டு ஏக்கர் தந்தார். அந்த இடத்தை சீர்செய்து, கிணறு வெட்டி விவ சாயம் செய்துவரு கிறோம். அன்று அவர் தந்த இடத்தை இன்று எங்களிடமிருந்து அபகரிப்பது என்பது கூலிக்காரனான நீ குடி யானவனாகாதே, எனச் சொல்லாமல் சொல்வது போல் உள்ளது'' என்றார்.

விவசாயி சம்பத்தோ, “"நாங்கள் சிப்காட்டுக்கு எதிரானவர்கள் இல்லை. விவசாயம் செய்யமுடியாத நிலப் பகுதியில் சிப்காட் அமைக்கலாம். ஆனால் நன்றாக விவசாயம் நடக்கும் பகுதியில் சிப்காட் அமைப்போம் என்பது எந்தவிதத்தில் சரியானது? வி.ஏ.ஓ.விடம் மனு தந்தோம், சாலை மறியல் செய்தோம், சங்கிலிப் போராட்டம், தொடர் முழக்கப் போராட்டம் நடத்தினோம், தகவல் உரிமை சட்டத்தின் படி மனு தந்தோம். 75-ஆவது நாள் கிரிவலப் பாதையில் ஊர்வலம் நடத்தினோம். இத்தனை போராட்டம் நடத்தியும் எங்களை அரசுத்துறை யாரும் கண்டுகொள்ளவில்லை. இதுவே எங்களுக்கு மன உளைச்சலைத் தருகிறது''’என்றார்.

போராட்ட ஒருங்கிணைப்பாளர்களோ, “"பாலியப்பட்டு கிராமத்திலிருந்து 3 கி.மீ தூரத்தில் பெரியகோளாப்பாடியில் சிப்காட் அமைக்கப்பட்டுள்ளது, அதை டெவலப் செய்யாமல், இந்த பகுதியை குறிவைக்க காரணமே கவுத்தியப்பன்-வேடியப் பன் மலைதான். இந்த மலையிலுள்ள இரும்புத் தாதுக்களை வெட்டியெடுக்க 10 ஆண்டுகளுக்கு முன்பு ஜிண்டால் நிறுவனம் முயற்சி எடுத்தது. மக்கள் நடத்திய போராட்டத்தால் தடுக்கப் பட்டது. உச்சநீதிமன்றம் வரை அந்நிறுவனம் முயற்சித்தும் மக்கள் கருத்துப்படி முடிவெடுங்கள் என்றது. இப்போது சிப்காட் அறிவிப்பு தந்து, இந்தப் பகுதியிலுள்ள விவசாய நிலங்களை கையகப்படுத்த முடிவுசெய்துள்ளார்களோ என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. அமைச்சர் எ.வ.வேலு, யார் தடுத்தாலும், போராடினாலும் சிப்காட் வந்தே தீரும் என கூட்டத்தில் பேசுவது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது''’என்கிறார்கள்.

பாலியப்பட்டு மக்கள் போராட்டம் தொடங்கி 100 நாட் களைக் கடந்துவிட்டது. இவ்வளவு நடந்தும் மக்கள் பிரதிநிதிகள், மாவட்ட நிர்வாகம், அம்மக்களைச் சந்தித்துப் பேசவோ, கேள்விக்குப் பதில் சொல்லவோ, அவர்களின் பயத்தைப் போக்கவோ, தொழிற்பேட்டை குறித்து விளக்கம் சொல்லவோ முயற்சிக்கவேயில்லை. இது ஆட்சியாளர்கள் மீதும், அதிகாரிகள் மீதும் மக்களிடம் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment