வைணவ நெறியைப் பரப்பிய ஆழ்வார்களில் சற்று வித்தியாசமானவர் குல சேகராழ்வார். அரச பதவியில் இருந்தவர். அரச போகங்களையெல் லாம் துறந்து, அதில் பற்றற்றவராய், எப் பொழுதும் திருமாலையே- குறிப்பாக இராமபிரானையே நினைத்து வாழ்ந்தவர். குலசேகராழ்வார் பற்றிய தனியன் (சுலோகம்).

"கும்பே புறர்வஸௌ ஜாதம் கேரளே சோளபத்தநே

கௌஸ்துபாம்ஸம் சுராதீஸம் குலசேகரமாஸ்ரயே'

என குறிப்பிட்டுள்ளபடி-

Advertisment

கேரள மாநிலம் கொல்லிநகர் ஊரில், மாசி மாதம், புனர்வசு நட்சத்திரத்தில், திருமாலின் கழுத்திலிருக்கும் கௌஸ்துபம் என்கிற ஆபரணத்தின் அம்சமாகப் பிறந்தார் என துதிப்பாடல் தெரிவிக்கிறது.

ss

கேரள மாநிலம் கொல்லிநகரைத் தலை நகரமாகக்கொண்டு அரசாட்சி புரிந்துவந்த திடவரதன் என்கிற அரசனுக்கு மகனாகப் பிறந்த ஆண் குழந்தைக்கு, அரசன் குலசேகரன் என்னும் பெயரை வைத்தான். காரணம், தன்னுடைய குலத்தைக் காப்பான்; குலத்தின் மணியாக விளங்குவான் என்னும் தொலைநோக்குடன் இப்பெயர் வைக்கப்பட்டது.

Advertisment

திருமாலின் பரிபூரண ஆசி யுடன் பிறந்த குலசேகரன் கல்வியிலும், அரச போர்ப் பயிற்சியிலும் மிகவும் சிறந்து விளங்கினார்.

இளம் வயதுமுதல் திருமால் பக்தியில் அதிக நேரம் திளைத்திருந்தார். இளவரசனான குல சேகரனுக்கு அரசன் முறைப்படி முடி சூட்டி, அரசாள பயிற்சி யளித்தான். சத்திரிய தர்மப்படி, போரில் பகைவர்களை தோற்கடித்து பல வெற்றிகளைக் கண்டார்.

ஒரு நாட்டில் அரசராக இருந்தாலும், அரசாட்சியில் முழு கவனம் செலுத்தாமல் எப்பொழுதும் ஸ்ரீமத் இராமாயண காலக்ஷேயம் (சொற்பொழிவு) கேட்பதிலேயே மிகுந்த ஆர்வம் கொண்டவராய் இருந்தார். கலாக்ஷேபத்தின் இடையிடையே வரும் சம்பவங்களை முன்பு நடந்தது என எண்ணா மல், தற்சமயம் நிகழ்வதாக நினைத்து அடிக்கடி உணர்ச்சிவசப்பட்டு சில முடிவு களை எடுப்பார். அந்த சமயத்தில் அமைச்சர் கள், வைணவப் பெரியவர்கள் அரசரை ஆசுவாசப்படுத்துவார்கள்.

வைணவத்தில் மிகுந்த நம்பிக்கையும், அதீத பக்தியும் கொண்டவராக இருந்த குலசேகரன் ஸ்ரீரங்கம் சென்ற சமயத்தில் ஸ்ரீரங்கநாதப் பெருமாளுக்கு மூன்றாம் சுற்றுப் பாதையைக் கட்டினார். அந்த சுற்றுப் பாதைக்கு இன்றும் குலசேகர சுற்றுப்பாதை (பிராகாரம்) என்றே பெயர். இங்குதான் பவித்ரோற்சவ மண்டபத்தை குலசேகரன் கட்டினார். திருமால்மீது இருந்த அளவற்ற பக்தியின் காரணமாக ஸ்ரீரங்கநாதப் பெருமாளுக்கு தனது மகளான சேரகுல வல்லி இளவரசியைத் தருமணம் செய்து வைத்தார். இந்த திருமணம் குலசேகரரின் இஷ்ட தேவதையான இராமபிரானின் பிறந்த தினமான சித்திரை மாதம் ராமநவமி யன்று நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. இன்றைக்கும் ஸ்ரீரங்கத்தில் ராமநவமியன்று திருக்கல்யாண உற்சவம் சிறப்பாக நடைபெறுகிறது. பெரியாழ்வார் போன்றே குலசேகரரும் ஸ்ரீரங்கநாதப் பெருமாளுக்கு இதன்மூலம் மாமனார் ஆனார். ஸ்ரீரங்கநாதப் பெருமாளுக்கு கைங்கர்யம் செய்த குலசேகரர் பின்னர் திருமலைக்குப் புனிதப் பயணத்தை மேற்கொண்டார்.

ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் வீற்றிருக்கும் திருமலைக்குச் சென்றவுடன் மனதளவில் மிகுந்த மகிழ்ச்சியடைந்த குலசேகரருக்கு அங்கேயே தங்கி இப்பிறவியிலும், அடுத் தடுத்த பிறவிகளிலும் எப்பொழுதும் இறைத் தொண்டு புரியவேண்டுமென்கிற எண்ணம் ஏற்பட்டது.

இந்திரலோகத்தில் கிடைக்கும் பெரிய பதவி தனக்குக் கிடைத்தாலும், அதைவிட திருமலையில் தங்கி, ஏதாவது உயிரினமாக வாழ்ந்து பெருமாளுக்கு கைங்கர்யம் செய்யவேண்டும் என்னும் எண்ணமே அவருக்கு இருந்தது. இதை அவர் எழுதிய பாசுரம்மூலம் உணரலாம். அதில் ஒன்றுதான் "திருவேங்கடச் சுனையில் மீனாய்ப் பிறக் கும் விதியுடையேன்' என்கிற பாடலில் பாடியுள்ளார். அதாவது திருமலையில் வாழ தான் மீளாகப் பிறக்கவேண்டும் என வேண்டுகிறார். கடைசியில் அலங்காரப் பிரியரான திருவேங்கடப் பெருமாளை தினமும் தான் பார்த்துக்கொண்டே இருக்கவேண்டும் என்பதற்காக, "படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே' என மனமுருகப் பாடினார்.

குலசேகரரின் உண்மையான பக்தியைப் போற்றும்வண்ணம் அவருக்கு குலசேகராழ் வார் என்னும் திருநாமம் பின்னாளில் ஏற்பட்டது. அவருடைய வேண்டுகோளை நிரூபிக்கும் வண்ணம் திருமலையில், திருவேங்கடபெருமாள் கருவறையின் படியை "குலசேகரப்படி' என்று அழைக்கப்படுகிறது.

திருமால்மீது கொண்ட பக்தியின் காரணமாகப் பாடிய பாசுரத்திற்கு "பெருமாள் திருமொழி' என்று பெயர். இவரைப் பற்றி சொல்லும்போது "பெருமாளை அறியாதார், பெருமாளை அறியாதோர்' என்பார்கள். அதாவது குலசேகராழ்வாரை அறியாதவர்கள் பெருமாளை (திருமால்) அறியாதவர்கள் என்பது பொருள்.