புராண காலங்களில் சிலசமயம், தெய்வம் மிக கோபம்கொண்டு சிலரை, சில பகுதிகளை அழித்ததாகக் கூறப்பட்டுள்ளது. முனிவர்களும் சாபம்தந்த வரலாறுகளைப் படித்திருக்கிறோம். தற்போதுள்ள கொரோனா என்னும் நோய்த்தொற்று காரணமாக இவ்வுலகில் பல பகுதிகள் கடும் துன்பத்திற்கு ஆளாகி இருக்கின்றன. இது யார், எதற்குக் கொடுத்த சாபமென்று யோசிக்கவேண்டும். சாபம் ஒன்றல்ல இரண்டல்ல. அதற்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. மனிதர்களில் பலர் ஒழுக்கம் நேர்மையின்றி காட்டுமிராண்டிகள்போல சுயநலப் பேய்களாக மாறிவிட்டனர். இவர்களைப் படைத்த தெய்வமே முகம் சுளிக்குமளவுக்கு இவர்களது நடத்தை உள்ளது. கொஞ்சமாவது நியாயம், தர்மப்படி நடக்கத் தொடங்குவதுதான் இதற்கான ஒரே பரிகாரம்.
தெய்வ சந்நிதியின்முன் அனைவரும் சமம். நடப்பு நிலையோ வேறாக உள்ளது. பணம் படைத்தவரும் அரசு, காவல் பதவிகளில் உள்ள மிகப்பெரிய அதிகார வர்க்கத் தினரும் வரும்போது அவர்களுக்கு முதல் மரியாதை தந்து சலுகை காட்டப் படுகிறது. ஆலய நிர்வாகத் தினர் இந்த விஷயத்தில் கவனம்செலுத்த வேண்டும்.
முன்பெல்லாம் காளி கோவில்களில் ஆடு, கோழி போன்றவை பலிகொடுக்கப்படும். தற்போதும் சிறுதெய்வங்கள் மற்றும் சில குலதெய்வ ஆலயங்களில் இவ்வழக்கம் நடைமுறையில் உள்ளது. சில காளிகள் ரத்தம் தோய்ந்த மாமிசப் படையல்களால் வெகு ப்ரீத்தியும் அமைதியும் கொள்வர். ஐந்தறிவு ஜீவனைக் காக்கவேண்டும்; இதுபோன்ற உயிர்பலி எல்லாம் கூடாது என்று சொல்வது இரக்கமுடையவர்களின் இயல்புதான். இது வரவேற்கத்தக்க அம்சமே. அதேசமயம் இதில் நுணுக்கமான ஒரு விஷயம் உள்ளது. இத்தகைய பலிகளை காளி ஏற்றுக்கொண்டு அந்த ஊரைக் காத்து நிற்பாள் என்றொரு ஐதீகம் உள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் இதுகுறித்த உண்மைத் தன்மையை ஆராய வேண்டும்.
நதிகள், காற்று ஆகியவை மாசடைந்து விட்டன. இவற்றையெல் லாம் கண்காணித்து, அவற்றை ஒழுங்கு படுத்து வதற்கான நடவடிக்கை எடுத்து, சீர்செய்ய வேண்டிய பொறுப்பு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் என்னும் அமைப் புக்கு உள்ளது. பொது வாக, இந்த வாரியம் ஆரம் பிக்கப்பட்ட பிறகுதான் நதிகள், ஆறுகள், காற்று போன்றவை மிகவும் மாசடைந்துவிட்டன என்பதே நிதர்சனமான உண்மை. இதற்குமுன்பு இந்த அளவுக்கு அசுத்த மும் அழுக்கும் நிரம்பியவையாக ஆறுகள் இருந்ததில்லை. இதற்குள் உள்ள சுயநல காரணங்களே இத்தகைய மாசு பெருக்கத்திற்குக் காரணம் என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். சம்பந்தப்பட்டவர்களும் புரிந்துகொள்ள வேண்டும்.
பெண்கள், குழந்தைகளின் நிலை மிகவும் பாதுகாப்பற்றதாக உள்ளது. பல தவறுகளுக்கு மூலகாரணமாக அலைபேசியில் வரும் காட்சிகளே உள்ளன என கூறுகின்றனர்.
இதைத் தடுக்கும் பொறுப்பிலுள்ள அதிகாரிகள் இந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். இதுபோன்ற தவறான படங்கள் வெளிவராமல் முதலிலேயே தடுக்கமுடியாதா? விஞ்ஞானிகளும் ஒன்றுசேர்ந்து இதற்கான முயற்சிகளில் ஈடுபடவேண்டும். அறிவியலாளர் சந்திரனில் காலடி வைத்ததும், செவ்வாயில் கை வைத்ததும் மகிழ்ச்சிதான். ஆனால் பூமியில் பெண்களின்- குழந்தைகளின் பாதுகாப்புக்கு, தடைசெய்யவேண்வற்றை முதலிலேயே தடைசெய்யுங்கள். இது மிகவும் அவசியமானது.
நீதித்துறையும் தங்கள் நீதிகளை விரைந்து வழங்கவேண்டியது முக்கியம். தாமதமான நீதி மறுக்கப்பட்ட நீதிக்குச் சமமென்பதை நாம் உணரவேண்டும். பெண்கள்மீதான குற்றங்களிலாவது இதனை விரைந்து நடைமுறைப்படுத்த வேண்டும்.
தற்காலத்தில் அன்னதானம் போன்ற தர்ம காரியங்கள் செய்பவர்கள் படம் எடுத்துக்கொண்டே தானம் வழங்கு கிறார்கள். தானம் தருவது நல்ல விஷயம்தான். ஆனால் அதிலும் விளம்பரம் தேடுவது மிகவும் தவறான செயல். இதைப் பார்த்து தர்மதேவதை தலையில்தான் அடித்துக்கொள்வாள். இது போன்ற செயல்கள் இன்னும் ஏராளமாக உள்ளன.
கொரோனா என்னும் மாயா இருள் எங்கும் வியாபித்துள்ளது. அந்த மாய இருளை ஒழித்து உலகை ஒளிமயமாக்கும் சக்தி காளியிடம் மட்டுமே உள்ளது. காளியை வணங்கும்போது அனைத்து தெய்வங்களையும், அவர்களது ஆயுதங் களையும் சேர்த்து வணங்குவதற்குச் சமமாகும். எனவே தினமும் காளியை வணங்குங்கள். வீட்டில் செம்பருத்தி, அரளிச் செடிகள் இருப்பின், அந்த மலர்களைக்கொண்டு துர்க்கையை வணங்கவும். எங்கும் நிறைந்த காளி எல்லாரையும் ரட்சித்துக் காக்கட்டும்.