rameswaram

காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரிவரை வாழும் ஆன்மிக பக்தர் கள் அனைவருக்கும் ஒருமுறையாவது ராமேஸ்

Advertisment

வரம் வந்து இறைவனைதரிசித்துச் செல்ல வேண்டும் என்பதே ஆவலாக இருக்கும்.

இந்தியாவின் புண் ணிய திருத்தலங்கள் நான்கு. துவாரகா, பூரிமற்றும் பத்ரிநாத், அதில்நான்காவதாக ராமேஸ்வரம் அமைந்துள்ளது. இராமபிரான் பிரம்மஹத்தி தோஷம் போக்க சிவனை வழிபட்டதால் ராமேஸ்வரத்தில் ஆண்டு முழுவதும் தர்ப்பணம் செய்வது. திதி, பிண்டம், பிரதானம்முதலான பித்ரு கடமைகளைச் செய்வதற்கு உகந்த திருத்தலமாக விளங்கி வருகின்றது. தோஷம் நீங்க இராமரால் உருவாக்கப்பட்ட இங்குள்ள தீர்த்தங்களில் நீராடி பக்தர்கள் புனிதமடைகிறார்கள். இவ்வாலயத்தில் கோலோச்சும் ராமநாதீஸ்வரர், அம்பாள் ஸ்ரீ பர்வதவர்த்தினி.

Advertisment

காசியும் ராமேஸ்வரமும் மனிதர்கள் வாழ்வில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இங்கு யாத்திரை வருபவர்கள் ராமேஸ்வரத்திலுள்ள அக்னி தீர்த்தம் (கடல்) நீராடி பிறகு மற்ற தீர்த்தங்களிலும் குளித்த பிறகு இங்குள்ள மணல் மற்றும் தீர்த்தம் ஆகியவற்றை காசிக்கு எடுத்துச்செல்வார்கள். மணலை காசியிலுள்ள கங்கையில் வீசிவிட்டு அக்னி தீர்த்த நீரை காசி விஸ்வநாத்திற்கு அபிஷேகம் செய்வார்கள். பிறகு காசியி-ருந்து கங்கை நீரை எடுத்துவந்து ராமநாதபுரம் ராமநாத ஈஸ்வரருக்கு அபிஷேகம் செய்வது தீவிர பக்தர் கள் தற்போதும் கடைபிடிக்கும் நிகழ்வுகள். இந்தியா முழுவதும் காசிக்குச் செல்லும் யாத்ரிகர்கள் நீராடி அம்மனை தரிசனம்செய்தபிறகு இங்கு ராமேஸ்வரம் வந்து நீராடி ராம-ங்கேஸ்வரர் விஸ்வநாதரை தரிசனம் செய்தபிறகுதான் தங்கள் யாத்திரையை நிறைவு செய்கிறார்கள்.

மற்ற ஆலயங்களில் இல்லாத சிறப்புஇங்கு மட்டும் உண்டு.

மனிதர்கள் வாழ்வில் தெரிந்தோ# தெரியாமலோ குற்றச் செயல் களுக்கு ஆளாகிறார்கள்.

ஒவ்வொரு குடும்பத்திலும் மரணம் என்பது தவிர்க்கமுடியாதது. அது பல விதங்களில் நிகழ்கிறது. முன்விரோதம் காரண

மாக கொலை, விபத்தில் மரணம், இயற்கை மரணம், நோய்வாய்ப்பட்டு மரணம், தங்கள் குடும்பத்தில் முன்னோர்களை பராமரிக்காமல் ஆதரவற்ற நிலையில் கடைசிக் காலத்தில் அவர்களைத் தனியாக தவிக்கவிடுவது, அவர்கள் வறுமையில் வாடி இறக்கும்போது தங்கள் சந்ததிகளுக்கு சாபம் இடுவார்கள். என்னை இப்படி நடுத்தெருவில் விட்டுவிட்டார்களே என்று. அப்படிப்பட்டவர்கள் விடும் சாபம், பெண் களால் ஏற்படும் சாபம் இப்படி பல்வேறு சாபங்களால் பாதிக்கப்படுகிறார்கள். இதன் காரணமாக பல குடும்பங்களில் பிள்ளைகளுக்கு திருமணங்கள் தடை படுவது எடுத்த காரியத்தில் தடை, வியாபாரத் தில் நஷ்டம், குழந்தை பாக்கியம் இல்லாமை, பணியில் இருப்பவர் களுக்கு பல்வேறு தொந்தரவுகள், பதவி உயர்வுகிடைக்காமல் தவிப்பு, குடும்பத்தில் எந்தநல்ல செயலை செய்தாலும் அது விருத்தியாகாமல் முடக்கம். இப்படி பல்வேறு இடர்பாடுகளைச் சந்தித்து வாழ்க்கையில் வெற்றி பெறமுடியாமல் துவண்டுபோய் கிடப்பவர்கள். ஏராளம்.... ஏராளம்....

அப்படிப்பட்டவர்கள் தங்கள் பிறப்பின்அடிப்படையில் கணிக்கப்பட்ட ஜாதகத்தின்பலாபலனை அறிய ஜோதிடர்களிடம் காட்டும்போது அவர்கள் மேற்கண்ட சம்பவங்களால் உங்கள் குடும்பத்தில் இப்படிப்பட்ட தடைகள் நேர்கின்றன. எனவே அந்த தடைகள் நீங்க நீங்கள் ராமேஸ்வரம் சென்று திலஹோமம். செய்வது, கடற்கரையில் முன்னோர்களுக்கு திதி கொடுப்பது, இப்படி முன்னோர்களுக்கான சடங்குகளை முறைப் படி செய்தால் அவர்கள் சந்தோஷம் அடைந்து வாரிசுகளுக்கு ஆசி வழங்குவார்கள். இது ராமபிரான் காட்டியவழி என்று கூறுகிறார்கள்சிரார்த்தம் செய்துவைக்கும் புரோகிதர்கள்.

அதன்படி ராமேஸ்வரம் வந்து முன்னோர்களுக்கு கைங்கரியம் செய்த பிறகு அக்னிதீர்த்தம் என்னும் கடலில் நீராடி பிறகுகோவிலை சுற்றி அமைந்துள்ள 22 தீர்த்தங்களிலும் குளித்தபிறகு ராமநாதீஸ்வரரை வழிபாடு செய்வதன்மூலம் அனைத்து தடைகளும் நீங்கி வாழ்க்கையில் வெற்றி கிடைக்கும். அதன் அடிப்படையில்தான் இந்தியா முழுவதும் இருந்து பக்தர்கள் ராமேஸ்வரத்தில் ஆண்டு முழுவதும் கடல் அலைபோல மோதுவதுபோல பக்தர்களும் வந்து கூடுகிறார்கள்.

தோஷ நிவர்த்தி செய்வதற்காக கோவில்வளாகத்தை சுற்றிலும் கடற்கரை பகுதி களிலும் ஏராளமான புரோகிதர்கள் உள்ளனர். மிகச்சிறப்பானவகையில் பக்தர்களின் கிரியைகளை பூர்த்திசெய்து வைக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களில் சங்கர மடம் அருகில் தோஷநிவர்த்தி செய்துவருபவர்களில் ஒருவர், ராஜாசர்மா வாத்தியார். (நீத்தார் சடங்கு செய்பவர்கள் வாத்தியார் என்றும் அழைக்கப்படுகிறார்கள்) அவரிடம் நாம் கேட்டோம். பித்ரு தோஷம், பிரம்மஹத்தி தோஷம் ஆகியவற்றை இங்குவந்து முறைப் படி சாங்கியம் செய்து தீர்த்தங்களில் நீராடிஇறைவனை வழிபடுவதன்மூலம் அவர்களது

குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். திருமணமாகி குழந்தைபேறு இல்லாத வர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். அரசு மற்றும் தனியார் துறைகளில் பணியில்உள்ளவர்களுக்கு பதவி உயர்வுகள். எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி. வியாபாரத்தில் முன்னேற்றம் உட்பட குடும்பத்தில் ஏற்பட்ட தடைகள் அனைத்தும் விலகி நலம்பெறுகிறார்கள்.

மேலும் தோஷ நிவர்த்திக்காக வரும் பலர் எங்களிடம் நான் நேர்மையாக நியாயமாக சம்பாதித்து வாழ்கிறேன். யாருக்கும் எந்த தீங்கும் செய்வதில்லை. நிறைய தானதர்ம காரியங்கள் செய்கிறேன். அப்படியிருந்தும் என் குடும்பத்தில் சிக்கல்கள், பிரச்சனைகள், தடைகள் ஏற்படுகின்றன என்று வேதனையுடன் கூறுகிறார்கள். உண்மைதான் தற்போது வாழும் சந்ததிகள் நல்லவர்கள்தான்.

ஆனால் அவர்கள் முன்னோர்களில் யாராவது தவறு செய்திருப்பார்கள் இவர்களேகூட முற்பிறவிகளில் பாவத்தை செய்திருக்கலாம். இது பல தலைமுறைகளைக் கடந்து வாழ்பவர்களுக்கு அதற்குரிய தண்டனைகளை வழங்கும். அதிலிருந்துவிடுபட ராமேஸ்வரம் வந்து தோஷநிவர்த்தி பூஜைகள்செய்து ராமநாதீஸ்வரரை வழிபடுவதன்மூலம் அந்த குடும்பங்களுக்கு மங்களகரமான வாழ்வு அமையும்.

எவ்வளவோ மக்கள் சாபத்தினால்பாதிக்கப்பட்டுள்ளனர். அப்படிப்பட்ட வர்களில் வசதி படைத்தவர்களும் இருக்கலாம், வசதி குறைவானவர்களும் இருக்கலாம். ஆனால் ராமேஸ்வரம் வந்து இறைவனை வணங்குவதற்கு அவர்களுக்கு சரியான வழி காட்டுதல் இல்லா மல் வரமுடியாமல் போகலாம்.இறைவன் யார் யாருக்கு பாவத்தி-ருந்தும் சாபத்தி-ருந்தும் விமோசனம்அளிக்கவேண்டும் என்று விரும்புகிறாராரோ, அப்படிப்பட்டவர்களைஎந்த ரூபத்திலாவது இங்கு வரவழைத்து விடுவார். குடும்பத்தில் இயற்கை மரணங்கள், துர்மரணங்கள் ஆகிய வற்றின்மூலம் மறைந்தவர்களுக்கு தில ஹோமம் செய்வதன்மூலம் அதிலிருந்து விடுபடுகிறார்கள்அதில் மகாலட்சுமி தீர்த்தத்தில் நீராடினால், சகல ஐஸ்வர்யங்களும் பெருகும். சாவித்திரி, காயத்திரி, சரஸ்வதி ஆகிய தீர்த்தங்களில் நீராடினால், இதுவரை முன்னோர்களுக்கான சடங்குகளை செய்யாதவர்களும் சந்ததியே இல்லாதவர்களும்கூட நற்கதியை அடைவார்கள்; மோட்சத்தை பெறுவார்கள்.

இங்குள்ள சங்கு தீர்த்தத்தில் நீராடினால்,நன்றி மறந்த பாவங்கள் அகலும். சக்கர தீர்த்தத்தில் நீராடினால் இதுவரை இருந்துவந்த தீராதநோய் தீரும். சேது மாதவ தீர்த்தத்தில் நீராடினால் செல்வம் கொழிக்கும். கடன் பிரச்சினைகளி-ருந்து விடுதலை பெறலாம்.

நள தீர்த்தத்தில் நீராடினால் இறைவனின் திருவடியை அடைந்து சொர்க்கலோகத்தை காணமுடியும். நீல தீர்த்தத்தில் நீராடினால்யாகம் செய்வதால் ஏற்படக்கூடிய பலன்களைப் பெறலாம். கவய தீர்த்தத்தில் நீராடினால் மனவலிமையைப் பெறலாம். மனதில் இருந்த குழப்பங்களும் ஏன் பயமும் விலகும்.

கவாட்ச தீர்த்தத்தில் நீராடினால் தேக ஆரோக்கியம் கிடைக்கும். கந்தமான தீர்த்தத்தில் நீராடினால் இதுவரை நம் குடும்பத்தில் இருந்த தரித்திரங்கள் அனைத்தும் விலகும், பிரம்மஹத்தி விமோசன தீர்த்தத்தில் நீராடினால் பிரம்மஹத்தி தோஷம், பில்லி சூனியம் ஏவல் முதலான தீயசக்திகள் நம்மைவிட்டு விலகும். சந்திர தீர்த்தத்தில் நீராடினால் கல்வியில் கலைகளில் சிறந்து விளங்கலாம், நினைத்த கல்வியை பெறமுடியும் கல்வியில் ஏற்படும். தடைகள் விலகும். சூரிய தீர்த்தத்தில் நீராடினால் ஞானமும் யோகமும் பெறலாம். கிரக தோஷங்கள் அனைத்தும் நீங்கும். கோடி தீர்த்தத்தில் நீராடினால் தேவதைகளின் கோபத்தி-ருந்து விடுபடலாம். அவர்களின் அருள் நமக்கு கிடைக்கும்.சிவ தீர்த்தத்தில் நீராடினால் சகலசெல்வங்களையும் பெறலாம். குழந்தைபாக்கியம் கிடைக்கும். பொன், பொருள் சேர்க்கைவரும். சரும தீர்த்தத்தில் நீராடினால் சகல நோய்களும் தோஷங்களும் நீங்கும். கயா, யமுனா, கங்கா, தீர்த்தங்களின் நீராடினால் இந்த பிறப்புக்கான முழு பயனையும் அடையலாம். கோடி தீர்த்தத்தில் நீராடினால் மகாபுண்ணியம்.

இது ஸ்ரீ ராமர் சிவ-ங்க அபிஷேகத் திற்கு பயன்படுத்திய தீர்த்தம். இது சிவனாரின் அருளையும் ஸ்ரீ இராமபிரானின் அருளையும் ஒருசேர பெற்று நம் குடும்பத்திலும் வெளிவட்டார பழக்க# வழக்கத்திலும் நிம்மதியும் கௌரவமும் கிடைக்கும் என்கிறது கோவில் தல புராணம். கடலிலேயே கலந்திருக்கிறது. அக்னி தீர்த்தம். இதில் முதலில் நீராடியபிறகே பக்தர்கள் மற்ற தீர்த்தங்களில் நீராடி இறைவனை வழிபடவேண்டும். இதன்மூலம் எந்தப் பிறவியிலோ செய்தபாவங்கள் நீங்கி புண்ணியங்கள் இந்த பிறவியில் நம்மை வந்தடையும் என்கிறார் ராஜாசர்மா வாத்தியார். ஆண்டு முழுவதும் அனைத்து நாட்

களிலும் சடங்குகள் செய்து வைக்கப்படுகிறது, இருந்தும் ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை, தை அமாவாசை ஆகிய நாட்களில் அக்னி தீர்த்த கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க பல்லாயிரக்கணக்கானோர் கூடுவது வழக்கம்.

கோவிலுக்குள் கணபதி ராமநாதசாமி பர்வதவர்த்தினி விஸ்வநாதர் விசாலாட்சி சேது மாதவர் ஜோதிர்-ங்கம் சகஸ்ர -ங்கம் வஜ்ரேஸ்வரர் மூன்று இடங்களில் நடராஜன் பள்ளிகொண்ட பெருமாள் ஆஞ்சனேயர் சிவ துர்க்கைமகாலட்சுமி 63 நாயன்மார். இவர்கள் அனைவரையும் தரிசனம் செய்யலாம். கோவில் மூலஸ்தானத்தில் இராமர், சீதை, லட்சுமணன், அனுமன் கரங்களில் சிவலிங்கம், சுக்ரீவன்,அனுமன் சிவ-ங்கத்துடன் வந்துள்ள தகவலை சுக்ரீவன் இராமரிடம் பணிந்து கூறுவது போன்றசம்பவத்தை எடுத்துக்காட்டும் விதத்தில்அமைக்கப்பட்டுள்ளது. நடராஜர் சந்நிதியின் பின்புறம் ஒருகை மட்டுமே உள்ளது. இதற்கு தினமும் பூஜை நடைபெறுகிறது. இதற்கு காரணம் யோகக்கலையில் தேர்ச்சிபெறவும் நாகதோஷ நிவர்த்திக்காகவும் இந்த சந்ததியில் நமது கண்களுக்குத் தெரியாத நாகவடிவில் சூட்சம வடிவில் பதஞ்சலிமுனிவர் அமர்ந்திருக்கிறார்.

அவரிடம் வேண்டிக்கொண்டால் ராகு-கேது தோஷநிவர்த்தி பெறமுடியும். பதஞ்சலிமுனிவர் முக்தி அடைந்த தலம் இது என்கிறார்கள் இவ்வாலய அர்ச்சகர்கள்.

கோவில் வளாகத்தைச் சுற்றி 22 தீர்த்தங்கள். மேலும் ராமேஸ்வரம் பகுதியில் 31 தீர்த்தங்கள் என 53 தீர்த்தங்கள். இதில் பிரதானமாக 22 தீர்த்தங்களை கட்டாயம் நீராடவேண்டும் என்கிறார்கள் பக்தர்கள். இதில் ஜடாதீர்த்தம் மிக முக்கிய மானது. அதில் அப்படி என்ன விசேஷம். மகா பாரதத்தில் எழுதிய மகரிஷி வேதவியாசர். இவரது மகன் சுகர். இவருக்கு அனைத்து மேக பாராயணங்கள், புராணங்கள், இதிகாசங்கள் எனஅனைத்தையும் கற்றுக் கொடுத்தார் வியாசர். சுகரும் அவருடன் இருந்த முனிவர்களும் வியாசரிடம் உங்கள் மூலம் அனைத்தையும் கற்றோம். ஆனால் சித்தம் ஒருநிலையில் ஞானத்தன்மை அடையவில்லை. அதற்குவழி கூறுங்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு வேதவியாசர் ராமேஸ்வரத்திலுள்ள ஜடா தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபட்டால் உங்கள் மனதிலுள்ள அஞ்ஞானம் நீங்கிமெய்ஞானம் கிடைக்கும். (இந்த தீர்த்தத்தில்தான் இராமர் தனது ஜடாமுடியை அலசி படிந்திருந்த அழுக்கை போக்கினார்) மனம் சாந்தியடையும் அதேபோல் விசுவாமித்திர முனிவரும் இங்குவந்து ஜடா தீர்த்தத்தில் நீராடியுள்ளார். இவர்களைப்போல பல்வேறுமுனிவர்கள் இங்குவந்து நீராடி தங்கள் புனித தன்மையை மெருகேற்றி உள்ளனர்.

மேலும் ஆதிசங்கரரர் பிரதிஷ்டை செய்தபடிக லிங்கம் ராமநாதசுவாமி மூலஸ்தானத்தில் அமைந்துள்ளது. தினந்தோறும் இந்த ஸ்படிக லிங்கத்திற்கு பாலாபிஷேகம் செய்யப்படுகிறது. அம்பாள் பர்வதவர்த்தினி அன்னையின் பீடத்திற்கு கீழே ஆதிசங்கரரர் உருவாக்கிய ஸ்ரீ சக்கரம் அமைந்துள்ளது. இந்தியாவிலுள்ள 51 சக்தி பீடங்களில் இந்த பீடம் சேது பீடம் என்று அழைக்கப்படுகிறது. சித்திரை மாத பிறப்பன்று அம்பிகைக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடைபெறுகிறது.

இப்படி சகல பாவங்களையும் போக்கும்ராமேஸ்வரம் ராமநாதீஸ்வரரர் ஆட்சி செய்யும் ஆலயத்தில் முதல் கடவுளான விநாயகரை வணங்காமல் இருக்கலாமா? இங்குள்ள இரட்டை விநாயகரை வணங்கி வழிபட்டால் குழந்தை பாக்கியமும் செல்வ செழிப்பும் பெறலாம். நாக தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள்அக்னி தீர்த்தக்கரையில் நாக சிலையை பிரதிஷ்டை

செய்து வழிபடுகிறார்கள். அவர்கள் வேண்டுதல் நிறைவேறியதும் இவ் வாலய இறைவனுக்கும்அம்பாளுக்கும் புத்தாடை கள் அணிவித்து தங்களது நேர்த்திக்கடனை நிறைவு செய்கிறார்கள்.

ராமநாதீஸ்வரர் கோவி-ல் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது ஐந்து முக அனுமன் கோவில். புகழ்பெற்ற இக்கோவி-ல், இலங்கையில் சிறைப் பட்டிருந்த சீதாதேவியை மீட்பதற்காக வானவர் படையால் இராம சேதுபாலம் கட்டப்பட்டது. அதைக் கட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட கற்கள் பல இக்கோவி-ல் பொருத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஐந்துமுகம் கொண்ட பஞ்சமுக அனுனை தரிசிக்க மறக்கக்கூடாது என்கிறார்கள் ராமேஸ்வரம் வாசிகள். அதேபோல் லட்சுமணன் கோவிலையும் தரிசிக்க வேண்டும். இங்குள்ள லட்சுமண தீர்த்தத்தில் நீராடி லட்சுமணனை வழிபடலாம்.

அன்னை சீதாதேவி தான் கற்புக்கரசி என்பதை நிரூபிப்பதற்காக அக்னி பிரவேசம் மேற்கொண்டார். பத்தினி தெய்வமான

சீதையைத் தொட்ட பாவத்திற்காக அக்னிபகவான் இவ்வாலயம் வந்து கடலில்நீராடி ராமநாதீஸ்வரரை வழிபட்டு தோஷம்

நீங்கபெற்றார். அதுமுதல் இங்குள்ள கடல்நீர் அக்னி தீர்த்தம் என்ற பெயரால்விளங்கிவருகிறது. ஆரம்ப காலத்தில் ராம நாதீஸ்வரரை ஒரு ஓலை குடிசையில்தான் வைத்து வழிபட்டு வந்துள்ளனர். தற் போதைய கட்டடங்கள் பல நூற்றாண்டுகளாக கொஞ்சம் கொஞ்சமாக கட்டப் பட்டுள்ளது. இந்தக் கோவில் கட்டுமான பணிகளுக்கு பாண்டிய வம்சத்து மன்னர்களின் பங்களிப்பு ஏராளம். அதேபோல் இலங்கையை சேர்ந்த மன்னன் ஜெய்வீர சிங்கையார். இவரது காலத்தில் கி.பி (1380#1410)திருகோண மலையி-ருந்து கோவிலின் கருவறையை சீரமைப்பதற்காக கற்கள் கொண்டுவரப்பட்டதாக ஆய்வுகள் கூறுகின்றன. ஜெய்வீர சிங்கையரின் வாரிசானகுண வீரரசிங்கையார், காலத்திலும் கோவில் கட்டமைப்பு செய்வதற்கு பல்வேறு உதவிகளை புரிந்துள்ளார்.

பிறகு 17#ஆம் நூற்றாண்டில் இராம நாதபுரம் தளவாய் சேதுபதி அவர்கள் பிரதான கிழக்கு கோபுரத்தின் ஒரு பகுதி யைக் கட்டியுள்ளார் 18#ஆம் நூற்றாண்டில் முத்துராம-ங்க சேதுபதி காலத்தில் சொக்கட்டான் மண்டபம் கட்டப்பட்டது. இதில் 1212 தூண்கள் அமைந்துள்ளனஅவற்றின் உயரம் தரையி-ருந்து 30 அடி உயரம். இது உலகிலேயே எங்குமில்லாத அமைப்பில் கட்டப்பட்டுள்ளது என்கிறது கோவில் வரலாற்று ஆய்வுகள். கி.பி 1,500#ஆம் ஆண்டுகளில் விஜயநகர மன்னர்கள் புனரமைப்பு பணிகளை சிறப்பாக செய்துள்ளனர். ராமேஸ்வரம் தீவு பகுதியின் தோற்றம் மகாவிஷ்ணு கையில் உள்ள சங்கு போன்ற அமைப்பு உள்ளது என்கிறார்கள்.

ஆலய திருவிழாக்கள்: ஆனி மாத# ராமலிங்க பிரதிஷ்டை; ஆடி மாத# திருக் கல்யாண உற்சவம், ஆடி அமாவாசை; மாசி மாத# மகாசிவராத்திரி; மார்கழி மாத#வைகுண்ட ஏகாதசி, இராம நவமி; தை மாத#தை அமாவாசை ஆகிய நாட்களில் கோதண்டராமர் கருட வாகனத்தில்அக்னி தீர்த்தத்தில் எழுந்தருளல் போன்ற திருவிழாக்கள் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய பட்சத்தில் தங்கள் முன்னோர்கள் பூமிக்கு வருகிறார்கள் என்பது ஐதீகம். எமதர்மராஜா அவர்களை அவரவர் குடும்பத்தினரைபார்த்துவருவதற்காக விடுதலை செய்கிறார் என்றும்,இதனால் அந்த மகாளய பட்சம்

அன்று கூட்டம் கூட்டமாக முன்னோர்களுக்கு உரியகாரியங்களை கடற்கரையில் செய்து அவர்களின் ஆசீர் வாதங்களை பெறுகிறார்கள் பக்தர்கள்.சகல பாவங்களைப் போக்குகின்ற ராமேஸ்வரம் ராமநாதசுவரர் ஆலயம் மிகவும் புனிதமானது. வாழ்க்கையில் ஒரு முறையாவது ராமேஸ்வரம் இறைவனை வந்து வழிபட்டு செல்லவேண்டியது பிறவிப் பயன் என்கிறார்கள் ஆலய அர்ச்சகர்கள்.

ராமேஸ்வரம் ராமநாதீஸ்வரரை வழிபாடுசெய்ய வந்திருந்த கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தைச் சேர்ந்த ஆசிரியர் தங்க

வீரப்பன் குடும்பத்தினர் மற்றும் கோவிந்தராஜன் குடும்பத்தினரிடம் கேட்டபோது ""குடும்பத்தில் பல்வேறு தடைகள், சிக்கல்கள். ஏன் இப்படி எல்லாம் நடக்கின்றன என்பதை அறிந்துகொள்வதற்காகஜோதிடர்களை அணுகியபோது, அவர்கள்

மறைந்த நமது முன்னோர்களின் ஆத்மாசாந்தி அடையவேண்டும் என்றார்கள்.

அதற்காக ராமேஸ்வரம் வந்து அவர்களுக் கான திதி, ஹோமம், ஆகியவற்றை செய்தபிறகு குளித்துவிட்டு ராமநாத ஈஸ்வரரையும்அம்பாள் பர்வத வர்த்தினி ஆகியோரை மனமுருக வேண்டி தரிசனம் செய்தோம்.

இது எங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் பெரும் மனநிறைவை ஏற்படுத்தியுள்ளது. இனி எங்கள் குடும்பத்தில் நிம்மதி சந்தோஷம்பெருகும். தடைகள் விலகி சுபகாரியங்கள் நடந்திடும் என்ற நம்பிக்கை ஏற்படுத்தி உள்ளது'' என்கிறார்கள்.

ராமேஸ்வரம் ராம நாதீஸ்வரர் ஆலய வளாகத்தில் வந்து தங்கள் முன்னோர் கடன் தீர்த்து வழிபாடு செய்வதே எல்லாவற்றையும்விட உகந்தது என்கிறார்கள் பக்தர்கள்.

இந்தியாவின் கலாச் சாரத்தை, பண்பாட்டை, ஆன்மிகத்தை இணைக்கும் சங்கிலிதொடராக திகழ் கிறது ராமேஸ்வரம்.