ப் விநாயக சதுர்த்திக்காக வாங்கி வழிபட்ட சிலைகளை தொடர்ந்து வீட்டில் வைத்து வழிபடலாமா? -அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை

விநாயகர் சதுர்த்திக்கு வணங்கிய பிள்ளையார் சிலையை அருகிலுள்ள குளம், ஆறு, கடலில் கரைத்துவிடுவதே நல்லது. நீங்கள் வணங்குவது மண் பிள்ளையார். நாளடைவில் அது பின்னமாகாமல் இருக்க வேண்டும். தவறுதலாக பின்னமாகிவிட்டால் மனம் கஷ்டப் படும். இதற்கு விநாயகரை வழிபட்டோமா, தண்ணீரில் கரைத்தோமா என நிம்மதியாக இருக்கலாம். அடுத்து, முற்காலத்தில் ஊர்க் குளத்தில்தான் கரைப்பார்கள். பிள்ளையார், களிமண் கொண்டு செய்யப்பட்டிருப்பார். களிமண்ணைக் கரைக்கும்போது, அந்த மண் குளத்தினடி யில் தங்கிவிடும். இதனால், வெய்யில் காலத்தில் நிறைய நீர் உறிஞ்சி வீணாவது தடுக்கப்படும். நீங்கள் ஒரே பிள்ளையாரை வாழ்நாள் முழுவதும் பத்திரப்படுத்தி வணங்கினால், பிள்ளையார் செய்யும் கலைஞர்களின் பிழைப்பு எப்படி நடக்கும்? அவர்களைப் பற்றியும் யோசிக்கவேண்டும். அதனால் வருடாவருடம் புதுப்பிள்ளையார் சிலை வாங்கி வழிபடுங்கள். சுபிட்சம் பெறுங்கள்.

aa

ப் இன்றைய அவசர உலகில் பல்லி சத்தமிடுவது, பூனை குறுக்கே போவது போன்ற சகுனங்கள் பார்ப்பது அவசியமா? -ரேவதி, மதுரை

மகாபாரத யுத்தம் ஆரம்பிக்கும்போது, அர்ஜுனன், "நிமித்தானி ச பச்யாமி விபரீதானி கேசவ' என ஸ்ரீகிருஷ்ணரிடம் கூறுகிறார். அதாவது, "கேசவா, நான் விபரீதமான நிமித்தங்களைப் பார்க்கிறேன்' என உரைக்கிறார். நாம் சகுனம் எனக் கூறுகிறார். நிமித்தம் என்பது வரப்போவதை ஏதோவொரு வகையில் அடையாளம் காட்டுவதாகும். அதில் ஒருவகை சகுனமாகும். பறவைகளால் நிகழத்தப்படுவது மட்டுமே சகுனம். பூனை குறுக்கே போனால் அது நிமித்தம். கருடன் ஒரு பட்சி. இடம்போனால் என்ன பலன், வலம் போனால் என்ன பலன், இன்ன பறவை கத்தினால் இன்ன பலன் என சகுன சாஸ்திரம் கூறுகிறது. எனவே மனிதர்களுக்கு நிகழப்போகும் நன்மை- தீமைகளை, தெய்வம் மிகுந்த இரக்கத்தோடு மனிதருக்கு குறிப்பாக உணர்த்துகிறது. இதனை கடவுளின் கருணை என்ற நோக்கில் மட்டுமே புரிந்துகொள்ளவேண்டும். இவற்றைப் புரிந்து சற்று விழிப்புடன் இருக்கவேண்டும். சகுனங்களை எல்லாராலும் எந்நேரத்திலும் அறிந்துகொள்ள இயலும். ஆனால் அநேக நிமித்தங்களைப் புரிந்து உள்வாங்குவது மிகச் சிரமம். சிலருக்கு மட்டுமே தெய்வ சங்கல்பத்தால், உள்ளுணர் வால் புரிந்துகொள்ள இயலும். தயவுசெய்து சகுனங்களைப் புறக்கணிக் காதீர்கள். அவை கூறப்போகும் செய்திகளை, நிகழ்வுகளை மனதால் படிக்க முயலுங்கள். சகுனம் ஒரு எச்சரிக்கை மணியாகும். நமது பூர்வ கர்மப்பலனைத்தான் நிமித்தமும், சகுனமும் தெரிவிக்கின்றன.

ப் கோவில்களில் எந்திரத்தால் இசைக்கப்படும் மங்கள ஓசை நல்லதா? -ரஞ்சித், பெருபாக்கம்

தற்போதைய விஞ்ஞான வளர்ச்சியில் சில விஷயங்களை ஒப்புக்கொள்ளவேண்டும். சில விஷயங்களைத் தவிர்த்துவிட வேண்டும். கோவில்களில் மங்களவாத்தியம் கண்டிப்பாக முழங்கப்படவேண்டும். அது மனிதன் இசைத்தாலும், எந்திரம்மூலம் முழங்கினாலும் பெரிய வித்தியாசம் கிடையாது. நல்ல விஷயங்களை, மாறுதல்களை மனமுவந்து ஏற்றுக்கொள்வோம். ரோபோ யானை பரவாயில்லை; ரோபோ ஐயர் வந்தால்தான் சற்று பிரச்சினையாகும். அது சரி; கோவில் களுக்கு ஜீன்ஸ் டைட்ஸ், அரை டவுசர், முக்கால் டவுசர், துப்பட்டா இல்லாமல் வருவது என இவற்றைப் பற்றி பக்தர்களே, சற்று யோசிக்கவேண்டும்.

ப் கோவில் திருவறை முன்னால் தாலி கட்டிக்கொள்வது சரியானதா? -அ. யாழினி பர்வதம், சென்னை-78

நன்றாகத் தாலி கட்டலாம். இது ஒருவித கொடுப்பினைதான். சில ஜாதகங்களைப் பார்க்கும்போது. அவர்கள் திருமணத்தைக் கோவில் சந்நிதியில் வைத்துத் தாலிகட்டி, பசுவுக்கு அறுகம்புல் மாலைபோட்டு வணங்குவதைப் பரிகாரமாகவே கூறுகிறோம். பிறகு வரவேற்பை வேறிடத்தில் அமர்க் களமாக நடத்திக்கொள்ளலாம். கோவிலில் வைத்து நடக்கும் திருமணத்தில், இருக்கும் தோஷங்கள் அடிபட்டுப் போகும். அந்த தோஷங்களை இறைவனே தன்புறமாக இழுத்துக்கொள்கிறார். கோவிலில் திருமணம் நடத்துவது மிக நல்லது. சிலருக்குத் திருமணம் தடைப்பட்டுக்கொண்டே இருக்கும். அவர்கள் விரும்பிய, குறிப்பிட்ட கோவிலில் நடத்துகிறோம் என மனதார வேண்டிக்கொள்ளுங்கள். திருமணம் உடனே நடக்கும். வாழ்வும் செழுமையாக அமையும்.

ப் தமிழகத்திலேயே முதன்முறையாக தஞ்சை மாவட்டம், திருபுவனத் தில் பெண்களே கும்பாபிஷேகம் செய்தார் கள். இதுகுறித்து உங்கள் கருத்து? -கவிதா, ஆற்காடு

மேல்மருவத்தூர் கோவிலில் எல்லா தெய்வ கைங்கரியங் களையும் பெண்கள் தான் செய்கிறார் கள். பெண்கள், தற்காலத்தில் கும்பாபிஷேகமும் செய்கிறார்கள். உண்மையைச் சொல்ல வேண்டு மென்றால், இது அவ்வளவு முக்கியத் துவம் வாய்ந்த செய லல்ல என்பேன். கும்பாபிஷேகம் போன்ற நிகழ்வு களை, அதற்கென் றுள்ள அந்தணர் களே செய்யவேண் டும். பிறப்பிலிருந்தே அவர்கள் அதற் கென்று கற்பிக்கப் பட்டு பழக்கப்படுத் தப் பட்டிருக்கிறார் கள். எனவே, இறைவனின் முக்கிய நிகழ்ச்சிகளில் அதற் கென்று உரியவர்களை நியமிப்பதே சரியாகும். பெண்களின் உடற்கூறுகள் சில இடர்பாடுகளுக்குரியது. சில விஷயங்களைத் தவிர்ப்பதே நல்லது. பெண்களை மட்டம் தட்டுகிறேன் என எண்ணவேண்டாம். மனைவி இறந்தபிறகு கணவர்களுக்கு கர்மாநுஷ்டானங்கள் செய்யும் உரிமை கிடையாது. ஆண்களை விடவும். நிறைய சிறப்பு கள் பெண்களுக்கு உள்ளன. அதுவே போதும்.

ப் சித்தர்களை தரிசிக்க, ஆசிகள் பெற என்ன வழி? -ஏ.மூர்த்தி, திருவள்ளூர்

உங்கள் கேள்விக்கு, ஸ்ரீரமண மகரிஷியின் வாழ்வில் பதில் உள்ளது. மகரிஷியின் அணுக் கத் தொண்டர்களில் ஒருவர் வைகுந்தவாசர். ஒருநாள் நள்ளிரவில் ரமணர், யார் துணை யுமில்லாமல், தனியாக அண்ணாமலையை நோக்கிச் சென்றார். அப்போது அவருக்கு ஏதேனும் துணை தேவைப்படுமோ என்றெண்ணி, பக்தர் வைகுந்த வாசர் அவர் பின்னாலேயே சென்றார். இரவு ஒரு மணி. பகவான் நடந்துசெல்லும் ஓசை மெதுவாகக் கேட்டது. சற்று நேரத்தில் அது வும் நின்றுவிட்டது. பகவான் எங்கு சென்றார் என பக்தருக்குத் தெரிய வில்லை. அப்போது திடீரென்று மரச் செருப்பு அணிந்து யாரோ நடந்துவரும் சப்தம் கேட்டது. நேரம் செல்லச்செல்ல அந்த சப்தம் இவரின் அருகில் கேட்டு, பின் கடந்தும் சென்றுவிட்டது. இவர் மிகவும் பயந்துவிட்டார். உடல் வியர்த்தது. சற்று நேரத்தில் பகவான் அங்குவந்தார். பக்தர் தான் கேட்ட ஓசையைப் பற்றிக் கூறினார். அதற்கு பகவான், "ஓ. நீயும் அதைக் கேட்டாயா. சித்த புருஷர்கள் அப்படி நடமாடுவது உண்டுதான். ஆனால் இப்போது இங்குவந்தது,. மலையில் தவம் செய்து கொண்டிருக்கும் அருணயோகியான அந்த அருணாசலர்தான். அவரைப் பார்ப்பது மிகமிக அரிதானது. அவர் வந்துசென்ற ஓசையை நீ கேட்டதே நல்லதுதான்'' என்று புன்னகையுடன் கூறினார். பக்தர் உடல் சிலிர்த்துப் போனார். ஆக, சித்தர்களை தரிசிப்பதற்கும், ஆசிகள் பெறவும் வழியென்று ஒன்றும் கிடையாது. அது முழுக்க சித்தர்களின் இஷ்டம் தான். உங்களுக்குக் கொடுப்பினை இருந்தால், சித்தர் தரிசனம் கிடைக்கும். அவர்கள் வெவ்வேறு உருவங்களில் வரக்கூடும் என்றும் நம்பப்படுகிறது. அது சரி; யாரோ ஒரு சித்தர் பறந்து வந்து, "தம்பி, எப்படி இருக்க?' எனக் கேட்டால், நீங்கள் பயத்தில் மயங்கி விழுந்துவிடுவீர்கள்தானே!

ப் கோபுரத்தை தரிசித்தால் கடவுளை வணங்கிய பலன் கிடைக்குமா? -அயன்புரம் த. சத்தியநாராயணன்

கோபுர தரிசனம் கோடி புண்ணியம்தான். எனினும், கோவிலுனுள் சென்று இறைவனை தரிசிப்பது மிக மேன்மை. எனினும் சில சந்தப்பங்களில் கோபுர தரிசனம் செய்து பலன்பெறலாம். வீட்டில் துக்கநிகழ்வு நடந்தால், குறிப்பிட்ட காலத்துக்கு கோவில் செல்லக் கூடாதென்று சாஸ்திரம் கூறுகிறது. அந்தப் பொழுது களில் கோவில் வழியாகச் செல்லும்போதும் அல்லது இறைவனை தரிசிக்கும் ஆவல் ஏற்படும்போதும் கோபுர தரிசனம் செய்தால் போதுமானது. இன்றைய அவசர யுகத்தில், ஆண்களும் பெண்களும் அவதி அவதியாக அலுவலகம் செல்கின்றனர். போகும் அவசரத்தில், கோபுரத் தைப் பார்த்து ஒரு கும்பிடு போட்டுவிட்டுப் போகவேண்டியதுதான். இதிலும் புண்ணியம் கிடைக்கத்தான் செய்யும்.

ப் கைகளில் ஆயுதம் ஏந்தாத தெய்வம் உள்ளதா? -எஸ். சுந்தர், திருநெல்வேலி-7

ஏனில்லை? குழந்தை கிருஷ்ணர் எந்தவித ஆயுதமுமின்றி தவழ்கிறாரே. அவரின் ஒரே ஆயுதம் அவரின் மந்தஹாசப் புன்சிரிப்புதான். தொட்டமளூர் கிருஷ்ணரைப் போய்ப் பாருங்கள். அந்த அழகு கிருஷ்ணரைக் கொஞ்சி, இடுப்பில் வைத்து வீட்டிற்குக் கொண்டு போனால் என்னவென்று ஒரு பேரார்வம் பொங்கிவரும். சில ஆலயங்களில் கிருஷ்ணர் புல்லாங்குழலுடன், பசு மாடு, கன்றுடன் நிற்பார். இதுவும் ஆயுதம் ஏந்தாத தெய்வத்தையே குறிக்கும்.

ப் "ஒருமைக்கண்' எனத் தொடங்கும் குறளின்படி, மறுஜென்மம் எடுத்தவர்களை எப்படி அடையாளம் காணலாம்? -என்.ஜே. ராமன், திசையன்விளை

திருவள்ளுவர், தனது கல்வி அதிகாரத்தில் 398-ஆவது குறளாக- "ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப்பு உடைத்து' என்று கூறுகிறார். ஒருவன், ஒரு பிறப்பில் கற்ற கல்வி யானது அவனுடைய ஏழு பிறப்பிலும் சென்று உதவும் தகைமை உடையது என்று பொருளாகும். உங்களைச் சுற்றியிருப்பவர்களை உற்று நோக்கினாலே, இதற்கான விடை கிடைத்துவிடும். சில குடும்பங்களில் பெற்றோர் படிப்பு வாசனையே இல்லாமல் இருப்பர். அந்தக் குடும்பமும் மிகவும் சுமாரான சூழலில் இருக்கும். அவர்கள் வீட்டில் ஒரு குழந்தை மட்டும், மிக உயர்ந்த கல்விகற்றுத் தேர்ந்து விடும். இதற்கு பூர்வஜென்ம புண்ணியமே காரணமாக அமையும். இதேபோல், கோடு சரியாகப் போடத் தெரியாத குடும்பத்தில் நல்ல ஓவியர் தோன்றக்கூடும். ஒழுங்காக பேசத்தெரியாத வீட்டிலிருந்து, ஒரு கவிஞர், பேச்சாளர் தோன்றுகிறார். ஆக, ஒருவர் ஒரு பிறப்பில் கற்ற கல்வி, அவரது ஏழு பிறப்பிலும் உதவுகிறது என்பதை இந்த சிறு உதாரணம்மூலம் தெரிந்து கொள்ளலாம்.