1, 10, 19, 28-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு எண்ணிய எண்ணங்கள், நினைத்த நினைவு கள், கொண்ட லட்சியம், வெகுநாள் ஆசை, கண்ட கனவு என அத்தனையும் மாத முற்பகுதியில் அழகாக- அம்சமாக ஈடேறும். இவை அனைத்தும் நிறைவேறுவதால் ஏற்படும் திருஷ்டி, மாதப் பிற்பகுதியில் அலைச்சல் மற்றும் செலவுகளைத் தரும். அரசியல்வாதிகள் மாத முற்பகுதியில் நன்மையும், பிற்பகுதியில் செலவையும் காண்பர். வீடு விற்க எண்ணியவர்களுக்கு மாத முற்பகுதியில் விற்றுவிடும். பெற்றோர் நிலை கவலை தரும் வகையில் ஆரம்பித்து பின் சரியாகிவிடும். சிலருக்கு குத்தகைக்கு எடுத்த இடத்தை மாற்றம் செய்யும் சூழல் வரும். சிலரது கைபேசி கீழே விழும் வாய்ப்புண்டு. வியாபார பங்குதாரரிடம் மனக்கசப்பு ஏற்படலாம். கல்வி, கல்விக்கான பயிற்சி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு தொழில் செய்பவர்கள் தங்கள் இடத்தை மாற்றும் நிலை ஏற்படலாம். வைதிக வேலை செய்பவர்களும் மாறுதலை சந்திக்கக்கூடும். தொலைகாட்சியில் பணிபுரிவோர் வேறிடம் செல்வர். இந்த தேதிகளில் பிறந்தோர் இம்மாதம் நிறைய மாற்றங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். சிலருக்கு மருமகன் வருவார். சிலரது மாமியார் உங்களுடன் வந்து தங்கக்கூடும். மறுமணம் கைகூடும். மாதப் பிற்பகுதியில் அரசு உதவியால் சிலரது கடன் அடைபடும். உங்கள் தொழில், வியாபாரம், ஜீவன ஆதாயம் போன்றவை எதிர்மறை ஏற்றம் தரும். மாத முற்பகுதியில் நல்ல பண வரவும், பிற்பகுதியில் செலவும் உண்டு. விவசாயிகள் எதிர்பாராத நன்மை கிடைக்கப் பெறுவர்.
அதிர்ஷ்ட எண்கள்: 9, 18, 27.
எச்சரிக்கை எண்கள்: 7, 16, 25.
பரிகாரம்: உங்கள் பெற்றோர் வயதுடையவர்களுக்கு முடிந்த அளவு உதவி செய்யுங்கள். உங்களுக்குரிய ரத்தினம் மாணிக்கம்.
2, 11, 20, 29-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
மாத முற்பகுதியில் மிகுந்த செலவு, குழப்பம், சீற்றமான யோசனைகள் ஏற்படும். என்றாலும் மாதப் பிற்பகுதியில் சீராகிவிடும். அரசுமூலம் பண உதவி கிடைக்கும். தொலைக்காட்சியில் பணிபுரிபவர் மாதப் பிற்பகுதியில் தங்களது பழைய இடத்தில் பணிபுரிய வாய்ப்புண்டு. தொலைபேசியில் ஏற்பட்ட சிக்கல் சரியாகிவிடும். வீடு, மனை, வாகனம் விஷயமாக உங்கள் மூத்த சகோதரியின் அனுசரணை கிடைக்கும். பூர்வீக மனை பற்றிய செய்தி கிடைக்கும். வாரிசுகளின் திருமணம் நிறைவேறும். பங்கு வர்த்தகம் சரிவதுபோல் இருந்து, பின் லாபம் தரும். கலைத்துறையினர் தங்கள் தொழில் பற்றிய பதட்டம் நீங்கி நன்மை பெறுவர். இதுவரையில் இருந்துவந்த உடல் உபாதை நீங்கிவிடும். உங்களில் சிலர் விருப்பத் திருமணம் செய்துகொள்வீர்கள். தந்தையின் உடல்நிலை கவனிக்கப்பட வேண்டும். வியாபாரம், தொழி-ல் மறைமுக லாபம் நிறைய கிடைக்கும். அரசியல்வாதிகள் மாதப் பிற்பகுதியில் நன்மையும் கௌரவமும் கிடைக்கப்பெறுவர். பெண்களுக்கு கர்ப்பம் உறுதிப்படுத்தப்படும். உங்கள் மருமகள் சற்று கோபத்தை காண்பிக்கக் கூடும். இது உங்கள் மாமியாரின் கைங்கர்யத்தால் நடக்கும். இளைய சகோதரர் சற்று செலவு ஏற்படுத்துவார். விவசாயிகள், பெருநஷ்டம் வந்துவிடுமோ என்று அஞ்சும் நேரத்தில், அரசின் உதவிகள்மூலம் ஆற்றுப்படுத்தப்படுவீர்கள். மாதப் பிற்பகுதியில் உங்கள் சொற்கள் நல்ல பலனைக் கொண்டுவரும். குடும்பத்தைவிட்டுப் பிரிந்திருந்தவர்கள் மீண்டும் ஒன்றுசேர்வர், இந்த மாதம் உங்கள் எதிரிகள் வேறிடம் செல்வர்.
அதிர்ஷ்ட எண்கள்: 6, 15, 24.
எச்சரிக்கை எண்கள்: 8, 17, 26.
பரிகாரம்: விவசாயம், தோட்டவேலை, கீரை விற்கும் பெண்களுக்கு முடிந்த உதவி செய்யவும். உங்களுக்குரிய கல் முத்து.
3, 12, 21, 30-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த மாதம் சில எதிர்பாராத- நினைத் தறியாத நன்மைகள் நடைபெறும். ஆனாலும் என்ன... நீங்கள் மிகவும் குழப்பமடைவீர்கள். வீடு வாஸ்து சரியில்லை; விற்றுவிடலாமா என்று யோசிக்க, அதன்பின்தான் அது அரசு குவாட்டர்ஸ் என்பது ஞாபகத்துக்கு வரும். இதுபோல பல செயல்கள் தோன்றும். உங்கள் செலவுகளே பண வரவுக்குக் காரணமாக அமையும் அற்புதம் நடக்கும். கலைஞர்கள் சற்று அவமானப்படும் சூழ்நிலை ஏற்பட்டாலும், அதி-ருந்து வெளிவருவது மட்டுமல்ல; அது புதிய வாய்ப்புகளையும் பெற்றுத்தரும். அலைந்து திரிந்து கொஞ்சம் போதையை ஏற்றிக்கொள்ள மனம் தூண்டும். உங்களில் சிலரது வாரிசுகள் வீணாகஅலைவதால் காவல்துறையின் தண்டனைக்கு ஆளாகக் கூடும். இருந்தாலும் உங்கள் சாமர்த்தியத்தால் நோயும் எதிரியும் ஓடிவிடும். சிலருக்கு திருமணம் நிச்சயமாகும். தந்தைவழி சொந்தத்தில் அமையக்கூடும். மாதப் பிற்பகுதியில் உங்களது தந்தை அல்லது அரசால் தொல்லை வரலாம். உங்களது வியாபார பங்குதாரர்கள் அல்லது அங்கு பணிபுரிபவர்கள் முரண்டுபிடித்து இம்சை தரக்கூடும். உங்கள் மூத்த சகோதரி அல்லது மருமகள்மூலம் சற்று தொல்லை ஏற்பட்டு பின் சரியாகிவிடும். முன்பு எப்போதோ செய்த முதலீடுகள் அல்லது பங்கு பத்திரங்கள் இப்போது எதிர்பாராத வருமானத்தைத் தரும். பிற இன, மத ஆட்களிடம் கவனமாகப் பழகவேண்டும். உங்கள் தொழி-ல் அரசு தலையீட்டால் சில குழப்பங்கள் ஏற்படலாம். உங்கள் வேலையில் இந்த மாதம் ஏற்படப்போகும் இடமாறுதல் முத-ல் மலைப்பையும் கோபத்தையும் தந்தாலும், பின்னர் அதுவே உங்களுக்கு மகிழ்ச்சியான மன நிறைவைத் தரும்விதமாக மாறிவிடும்.
அதிர்ஷ்ட எண்கள்: 6, 15, 24.
எச்சரிக்கை எண்கள்: 7, 16, 25.
பரிகாரம்: இள வயதுடைய உறவுப் பெண்களிடமோ அல்லது வெளிப் பழக்கத்திலோ சட்டென்று கோபப்படாமல் நிதானமாகப் பழகவும். பூர்வீக இடத்தில் பணிபுரிபவர்களுக்கு முடிந்த பண உதவி செய்யவும். உங்களுக்குரிய ரத்தினம் கனக புஷ்பராகம்.
4, 13, 22, 31-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த மாதம் தகவல்கள், செய்திகள், வாய்ப்புகள் போன்றவை வந்துசேரும் மாதமாக அமையும். தகவல் தொடர்புத் துறை, அரசு ஒப்பந்தம் அல்லது கைபேசி சம்பந்தமான வேலை கிடைக்கும் செய்தி வரும். கேட்ட கடன் கிடைக்கும். அரசு சார்ந்த மனை அல்லது பிளாட் கிடைக்கும். பணப்புழக்கம் இருந்துகொண்டே இருக்கும். உங்களது சிலரின் வாரிசுகளுக்கு வேலை கிடைக்கும். இளைய உடன்பிறப்புக்குத் திருமணம் நிச்சயமாகும். உங்கள் தந்தையின் பெயரிலுள்ள வீட்டை விற்பதற்கு முயன்றுகொண்டிருந்தால் இப்போது அந்த முயற்சி பயனளிக்கும். உங்கள் மனையை அரசு கையகப்படுத்தி இருந்தால், அதற்குரிய தொகை இப்போது கிடைத்துவிடும். வாகன வகையில் முதலீடு உண்டு. உங்களில் சிலர் வியாபாரம், தொழில் நிமித்தமாக குட்டி யானை போன்ற வாகனம் வாங்குவீர்கள். அதற்கு அரசு கடனுதவி கிடைக்கும். பங்கு விற்பனை லாபம் தரும். திரைப்படம், தொலைகாட்சிக் கலைஞர்கள் தகவல் தொழில் நுட்பம்மூலம் பணமும் புகழும் அடைவார்கள். விளையாட்டுத் துறை சார்ந்தவர்கள் இடமாற்றம் பற்றிய தகவல் கிடைக்கப் பெறுவர். வீட்டுக் கடன் கிடைக்கும். தூரமாக இருந்த எதிரிகள் உங்கள் எதிரிலேயே வந்துவிடுவார்கள். திருமணம் சிலபல குளறுபடிகளுக்குப் பிறகு நடக்கும். வியாபாரம், தொழி-ல் மறைமுக வருமானம் கிட்டும். மாதப் பிற்பகுதியில் உங்களது தந்தை இடம் மாறுவார். குலதெய்வ காணிக்கையை அனுப்பி வைப்பீர்கள். மூத்த சகோதரர் சற்று இன்னலுக்கு உள்ளவார். அரசியல்வாதிகள் குறுக்குவழியில் மேன்மை பெறுவர். சிலர் கைபேசியை மாற்றுவார்கள். சிலருக்கு இதுபோலவே மனைவியை மாற்றமுடிந்தால் நன்றாக இருக்குமே என்ற அற்ப சிந்தனையும் வரும்.
அதிர்ஷ்ட எண்கள்: 5, 14, 23.
எச்சரிக்கை எண்கள்: 9, 18, 27.
பரிகாரம்: உங்கள் வீட்டில் வேலைசெய்பவருக்கோ அல்லது அலுவலகத்தில் வேலைசெய்பவருக்கோ கைபேசி கட்டணத்தொகை கொடுத்து உதவுங்கள். உங்களுக்குரிய ரத்தினம் கோமேதகம்.
5, 14, 23-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த மாதம் உங்களில் பலருக்கு அரசுவேலை கிடைக்கக் கூடும். பணப்புழக்கம் அதிகரிக்கும். உடன்பிறப்புகளுடன் முத-ல் மனஸ்தாபம் ஏற்பட்டாலும், பிறகு அவர்கள்மூலம் ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள். தாயாரின் நலன் கவனிக்கப்பட வேண்டும். கலைஞர்கள், திரைப்படம், தொலைகாட்சி தொழில்நுட்பப் பணிபுரிவோர் நல்ல லாபமும் இடமாற்றமும் கிடைக்கப் பெறுவர். சிலரது மருமகன் சற்று மனஸ்தாபம் கொள்ள நேரிடும். சிலரது தீய பழக்கம் ஏதோவொன்று வீட்டிற்குத் தெரியவரும். பங்கு பத்திரம் திடீர் லாபம் தர வழியுண்டு. உங்களது வியாபார பங்குதாரர் அல்லது உங்கள் துணைவர் உங்களிடம் கைமாற்றாகக் கடன் கேட்பார்கள். உங்கள் தந்தை பயன்படாத, தேவையற்ற விஷயம் காரணமாக வீட்டைவிட்டு வெளியேறக் கூடும். வாக்கு சம்பந்தமான தொழில் செய்பவர்கள் நல்ல லாபம் பெறுவர். கைபேசி அவமானத்தையும் ஆதாயத்தையும் ஒன்றாகக் கொண்டுவந்து சேர்க்கும். மாமியார்மூலம் தொழில் வாய்ப்பும் வருமானமும் கிட்டும். மாமனார் தள்ளவும் முடியாத- கொள்ளவும் முடியாத நிலையில் இருப்பார். கருவுற்ற பெண்கள் கவனமாக இருப்பது அவசியம். வாரிசு வேண்டுவோருக்கு சிலபல சோதனைகளுக்குப் பிறகு வாரிசு நிச்சயமாகும். சிலருக்கு எதிர்பாராத நேரத்தில் மறுமணம் நடக்கும் வாய்ப்புண்டு. வேலை உயர்வின் காரணமாக குடும்பம் வேறிடம் செல்லும் சூழல் ஏற்படும். சிலர் வீட்டின்மீது கடன்வாங்க நேரும். மாதப் பிற்பகுதியில் விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடியாகும் சுழல் வரும். சில அரசியல்வாதிகள் பற்றிய வேண்டாத- அவமானகரமான செய்திகள் வரக்கூடும்.
அதிர்ஷ்ட எண்கள்: 6, 15, 24.
எச்சரிக்கை எண்கள்: 9, 18, 27.
பரிகாரம்: உங்கள் குடும்பத்தில் அல்லது தெரிந்தவர்கள் வீட்டில் திருமணம் நிச்சயமாகி இருக்கும் இளம்பெண்ணுக்கு முடிந்தால் ஒரு பட்டுப் புடவை அல்லது முடிந்த அளவில் ஒரு புடவை தாம்பூலத்து டன் தரவும். உங்களுக்குரிய ரத்தினம் மரகதப் பச்சை.
6, 15, 24-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் வேலை, தொழில், வியாபாரத்தில் சற்று இடர்ப்பாட்டை சந்திக்கவேண்டி வரும். அதற்குக் காரணம் நீங்களாகவே இருப்பீர்கள். சிலரது தரமற்ற பேச்சும் நாகரீகமற்ற நடத்தையும் பிறரைப் பிரித்துவைக்கக் கூடும். மாதப் பிற்பகுதியில் இதனை உணர்ந்துகொண்டு தங்களைத் திருத்திக்கொள்வதால் இழப்புகள் லாபமாக மாறும். சிலரது வாழ்க்கைத் துணைக்கு வேலை கிடைக்கும். பணப்புழக்கம் ஏற்ற இறக்கமாக இருக்கும். சிலரது குடும்பத்தில் கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் சற்று ஈகோ யுத்தம் ஏற்படலாம். இளைய சகோதரரின் உடல்நலம் பொருட்டு கடன் வாங்கும் சூழல் வரும். சிலருக்கு வாழ்க்கைத்துணையின் பெயரில் மனை வாங்கும் எண்ணம் தோன்றும். வேலைசெய்யும் இடத்தில் அல்லது தொழில்புரியும் இடத்தில் சிலருக்கு காதல் அரும்பி திருமணத்தில் பூர்த்தியாகும். இதில் சில தடைகளை சந்திக்க நேரலாம். உங்களில் ஒருசிலருக்கு தந்தையின் வேலை கிடைக்கக் கூடும். அது அரசுப்பணி அல்லது சீருடைப் பணியாக அமையும். வேறு சிலர் தந்தையின் தொழிலை முன்னெடுத்துச் செல்வார்கள். சிலர் தந்தையின் அரசியல் பாதையில் தடம் அமைத்து செல்லத் தொடங்குவார்கள். வெகுநாட்கள் உங்கள் மனதில் இருந்த அபிலாஷைகள் திடீரென்று நடைமுறைக்கு வந்து பயனளிக்கும். இதன்பொருட்டு சிலர் வேறிடம் செல்லக்கூடும். சீருடைப் பணியாளர்கள் அரசுமூலம் ஆதாயம் பெறுவார்கள். விவசாயிகள் அரசின் உதவித்தொகை கிடைக்கப் பெறுவர். சிலரது மாமியார் தங்களது கௌரவம் பாதிக்கப்பட்டதாக புலம்பக்கூடும். உங்களில் சிலருக்கு காதலும் அதனால் வீண் பிரச்சினைகளும் ஏற்படலாம்; கவனம் தேவை.
அதிர்ஷ்ட எண்கள்: 5, 14, 23.
எச்சரிக்கை எண்கள்: 7, 16, 25.
பரிகாரம்: சீருடைப் பணியாளர்களிடம் கவனமாக, மரியாதையுடன், சட்டத்தை மதித்து நடந்துகொள்ளவும். உங்களுக்கான அதிர்ஷ்ட ரத்தினம் வைரம்.
7, 16, 25-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த மாதம் ஆட்டைத் தூக்கி குட்டியில் போட்டு, குட்டியைத் தூக்கி ஆட்டில் போட்டு என எதையாவது அதிரடியாகச் செய்து வாழ்வின் வெற்றிக்கோட்டைப் பிடித்துவிட பரபரப்பாக முயல்வீர்கள். இதற்கு உங்கள் வாழ்க்கைத் துணையும் உடந்தையாக இருப்பார். சிலர் தங்களது குறுக்குவழிகளுக்கு, அரசியல்வாதிகளுக்குக் கையூட்டு கொடுத்து சரிசெய்ய நேரலாம். இவையெல்லாம் ஓரளவுக்கு மட்டுமே சரிப்பட்டு வரும். வரும்; ஆனா வராது எனும் அளவில் மாதம் ஓடும் பணப்புழக்கம் சுமாராக அமையும். இளைய சகோதரருடன் சற்று மனத்தாங்கல் ஏற்படலாம். கைபேசி தொல்லை தரக்கூடும். மாதப் பிற்பகுதியில் அரசு ஒப்பந்தம், குத்தகை விஷயங்கள் கூடிவரும். எது நடந்தாலும் தைரியத்தைக் கைவிடாமல் இருப்பீர்கள். சிலருக்கு வீடு, வாகனம் மாற்றும் யோசனை தோன்றும். சிலரது வாரிசுகள் வீடு மாறுவார்கள். தந்தையின் பெயரைக்கொண்டு அல்லது அவர் பெயரில் உள்ள வீட்டைவைத்து கடன் வாங்குவதற்கு ஏற்பாடு செய்வீர்கள். திருமண காரியங்கள் கூடிவரும். சிலருக்கு மாதப் பிற்பகுதியில் காதல் துளிர்க்கும். தம்பதிகள் சண்டையும் சமரசமுமாக இருப்பார்கள். வெகுசில வீடுகளில் மறைமுகத் தொடர்புகள் காரணமாக அவமானம் ஏற்படலாம். மறுமணம் சற்று அலைச்சலைத் தரும். வியாபாரம், தொழில், வேலையில் இடமாற்றம், ஊர் மாற்றம், தொகுதி மாற்றம் நிச்சயம் உண்டு. மாதப் பிற்பகுதியில் மாமியாரின் ஆதரவு கிடைக்கும். மருமகன் உங்களுடன் வாக்குவாதம் செய்வார். சிலரது வாழ்க்கைத் துணை உங்களது தொழில் முதலீட்டுக்கு உதவிசெய்வார்.
அதிர்ஷ்ட எண்கள்: 6, 15, 24.
எச்சரிக்கை எண்கள்: 5, 14, 23.
பரிகாரம்: இந்த மாதம் யாரையும் ஏமாற்ற முயலவேண்டாம். உங்களுக்குரிய ரத்தினம் வைடூரியம்.
8, 17, 26-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த மாதம் பண வரவும் செலவும் சரியாக இருக்கும். சிலர் எண்ணக் குழப்பத்தால் அல்லல்படுவீர்கள். முக்கியமாக வீடு, மனை விஷயமாக மாறிமாறி யோசிப்பீர்கள். நீங்கள் சொல்வதை நீங்களே கேட்கமாட்டீர்கள். உங்கள் தாயாரும் மனைவியும் சற்று பிணக்குகொள்ள நேரும். கைபேசி செலவு வைக்கும். உங்கள் இளைய சகோதரன் அவரது மணவாழ்வு பிரச்சினைகளைக் கூறி உங்களை மனவருத்தம் கொள்ளச் செய்யலாம். மாதப் பிற்பகுதியில் வாகனப் பழுது, வீடு பழுதுபார்ப்பது என இன்னபிற செலவுகள் வரிசையாக வரலாம். தம்பதிகளுக்குள் சற்று கருத்து வேறுபாடு ஏற்படக்கூடும். மறுமணத்திற்குக் காத்திருப்போர் அதற்கான முன்னெடுப்புகளைச் செய்வார்கள். ஏற்கெனவே திருமணமானவருடன் காதல் அரும்ப வாய்ப்புள்ளது. இந்த மாதம் காதல் விஷயங்களைத் தள்ளிவைப்பது நல்லது. சிலர் சிலபல காரணங்களால் போதை வஸ்துகள்மீது நாட்டம் கொள்வர். மாதப் பிற்பகுதியில் தொழி-ல் சற்று அவமானத்தையும் சறுக்கலையும் சந்திக்க நேரிடும். கலைஞர்கள் தொழில் நிமித்தமாக மாத முற்பகுதியில் சந்திக்கும் நபர்களால், மாதப் பிற்பகுதியில் சில இடையூறுகளை சந்திக்கக்கூடும். மூத்த சகோதரரும் அவரது மனைவியும் சில இன்னல்கள் தருவர். அது உங்கள் திருமண வாழ்வில் சலசலப்பை உருவாக்கும். தந்தையின் உடல்நலனில் கவனம் தேவை. சிலரது மாமியாரும் தாயாரும் மனக்கசப்பு கொள்வார்கள். உங்களில் சிலருக்கு பெண் பிள்ளைகளால் சற்று சிரமம் ஏற்படக்கூடும். அது அவர்களது காதல் சம்பந்தமாக இருக்கக்கூடும்.
அதிர்ஷ்ட எண்கள்: 5, 14, 23.
எச்சரிக்கை எண்கள்: 4, 13, 22, 31.
பரிகாரம்: சிலர் தங்கள் போதைப் பழக்கத்தினால் அவமானத்தை சந்திக்க நேரிடும். எனவே இந்த மாதம் போதையில் அருகில்கூட செல்லவேண்டாம். பிற மதப் பெண்களுக்கு திருமணம் சம்பந்தமான ஏதேனும் உதவி செய்யவும். உங்களுக்குரிய ரத்தினம் நீலம்.
9, 18, 27-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு.
இந்த மாதம் உங்கள் மனை சார்ந்த வேண்டாத செய்திகளால் சிரமப்படலாம். சிலரது திருமண விஷயங்களில் சற்று தடுமாற்றம் ஏற்பட்டு பிறகு சரியாகும். இதற்கு உங்களது வேண்டாத வார்த்தைகளே காரணமாகவே இருக்கும். எனவே பேச்சில் கவனம் தேவை. அரசு சார்ந்த ஒப்பந்தம், அது சம்பந்தமான வேலைகள் நிறைவாக கையெழுத்தாகும். சிலருக்கு அரசு மருத்துவமனை, மருந்தகத்தில் வேலைகிடைக்க வாய்ப்புண்டு. சிலரது மனைவியின் உடல்நலம் சம்பந்தமாக சந்தேகம் ஏற்பட்டு பின் சரியாகும் மாதப் பிற்பகுதியில் உண்மையான, நேர்மையான காதல் கைகூடும். சிலருக்கு மனை, வாகன கடன் கிடைக்கும். தாயார் உடல்நலனில் கவனம் தேவை. உங்கள் வியாபார பங்குதாரரிடம் சற்று மனக்கசப்பு ஏற்பட வாய்ப்புண்டு. இந்த மாதம் நிறைய சந்தேகங்கள் ஒன்று மாற்றி ஒன்று வந்து உங்களைக் குழப்பி, பிறகு தெளிவைக் கொடுக்கும். உங்கள் தந்தை நன்மை, செலவு இரண்டையும் தருவார். தொழி-ல் லஞ்சப் பணம் வருதலும் கொடுத்தாலும் சமமாக இருக்கும். அரசியல்வாதிகள் சின்ன மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடிப்பார்கள். உங்களது மகன் வாகனம் அல்லது மனை அல்லது கைபேசி வாங்குவார். மாதப் பிற்பகுதியில் உங்களுக்கும் வாரிசுகளுக்கும் மனஸ்தாபம் ஏற்படலாம். மாமனார்- மாமியார் அவரவர் இடத்தில் மேன்மை பெறுவார்கள். மாமியார் சில இடையூறுகள் தந்து நன்மையும் செய்வார். சில திரைப்பட, தொலைகாட்சிக் கலைஞர்களுக்கு இந்த மாதம் திருமணம் நடக்கும். பணபலமும் வாய்ப்பும் புகழும் பெறுவார்கள்.
அதிர்ஷ்ட எண்கள்: 1, 10, 19, 28.
எச்சரிக்கை எண்கள்: 4, 13, 22, 31.
பரிகாரம்: இந்த மாதம் மனை விஷயத்தில் கவனமாக இருக்கவேண்டும். வீடு கட்டும் தொழிலாளர்களுக்கு உணவு, தண்ணீர் வாங்கிக் கொடுக்கவும். உங்களுக்குரிய ரத்தினம் பவளம்.
செல்: 94449 61845