மேஷம்
மேஷ ராசிநாதன் செவ்வாய் இம்மாதம் முழுவதும் மிதுன ராசியில், சுயசாரமான மிருகசீரிடத்தில் சஞ்சரிக்கிறார். தைரியம், தன்னம்பிக்கை இவற்றில் குறை ஏதுமில்லை. என்றாலும் எதிர்காலம் பற்றிய ஒருசிறு மனசஞ்சலம் இருந்துகொண்டிருக்கும். ஜென்ம ராகுவால் அந்த சந்தேகம் ஏற்படும். 5-க்குடைய சூரியன் 7-ல் நீசமாக இருக்கிறார். 17-ஆம் தேதி முதல் நீசம் விலகி விருச்சிகத்திற்கு மாறுவார். அதன்பிறகு மனதில் வகுத்த திட்டங்களை செயல்படுத்தும் முயற்சிகள் மேலோங்கும். அரசுவழி ஆதாயங்கள் மாத இறுதியில் கை கூடும். 12-ல் உள்ள குரு ஒருசில நேரம் விரயத்தை யும் அலைச்சலையும் தரலாம். 9-ஆமிடத்தை ராசிநாதன் செவ்வாய் பார்க்கிறார். பூர்வீக சொத்து அல்லது தகப்பனார்வகையில் சொத்து கள் மீதுள்ள விவகாரம் விலகும். நன்மைகள் தென்படும். கணவன்- மனைவிக்குள் கருத்து வேறுபாடு நிலவினாலும் ஒற்றுமை குறையாது. செவ்வாய்க்கிழமை முருகனை வழிபடவும்.
ரிஷபம்
ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 6-ல் ஆட்சி யாக இருக்கிறார். 6-ஆமிடம் மறைவு ஸ்தானம் என்றாலும் சுக்கிரனுக்கு அது (துலாம்) ஆட்சி வீடு என்பதால் மறைவு தோஷம் பாதிக்காது. 2-க்குடைய புதனும் அவருடன் இணைந்திருக் கிறார். 12-க்குடைய செவ்வாய் 2-ல் சஞ்சாரம். பொருளாதாரத்தில் ஒருசில நேரம் நன்றாக இருந்தாலும் பலநேரம் பற்றாக்குறை நிலை நீடிக்கும். திட்டமிட்டு செயல்படும் காரியங் களில் தாமதம் உண்டாகலாம். குடும்பநலனில் அக்கறை காட்டுவதும் அவசியமான ஒன்றா கும். 13-ஆம் தேதிமுதல் சுக்கிரன் 7-ல் மாறுகி றார். அக்காலகட்டம் கணவன்- மனைவிக் குள் வாக்குவாதம், சச்சரவுகள் உருவாக லாம். தொழில்துறை யில் எதிர்பார்த்த அனு கூலங்கள் உண்டாகும். 16-ஆம் தேதிமுதல் குரு வக்ர நிவர்த்தி யானபிறகு வேலை, உத்தியோகத்தில் முன்னேற்றங்கள் உருவாகும். 10-க்குடைய சனி 9-ல் நிற்பதால் தர்மகர்மாதிபதி யோகம் உங்களுக்குத் துணையாக நின்று செயல்படுத்தும். வெள்ளிக்கிழமை துர்க் கையை வழிபடவும்.
மிதுனம்
மிதுன ராசிநாதன் புதன் மாதத் தொடக்கத்தில் 5-லும் (துலாம்) பிறகு 6-லும் (விருச்சிகம்) மாறுகிறார். உங்கள் எண்ணங்களிலும் திட்டங்களிலும் முயற்சிகளிலும் ஆரம்பத்தில் தோல்விக்கும் தொய்விற்கும் இடமில்லை. அஷ்டமத்துச்சனி நடைபெறுவதால் தாமதம் ஏற்படலாமே தவிர தடையேதும் ஏற்படாது. செலவுகள் சற்று அதிகமாகக் காணப்படும். ஒருசிலருக்கு தொழில்ரீதியாக அல்லது உத்தியோகரீதியாக அலைச்சல்கள் இருக்கத்தான் செய்யும். 11-க்குடைய செவ்வாய் ஜென்மத்தில் நின்று 4-ஆமிடத்தைப் பார்க்கிறார். குடியிருப்பு வகையில் இடமாற்றம் உண்டாகும். 10-ல் குரு ஆட்சி; 16-ஆம் தேதிமுதல் வக்ர நிவர்த்தி அடைகிறார். வேலையிலும் தனியார் துறையிலும் இருப்பவர்களுக்கு நன்மை உண்டாகும். தொழில் துறையினருக்கு அனு கூலமும் தென்படும். ஒருசிலருக்கு பூர்வீக சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் தோன் றும். தேகநலம் தெளிவுபெறும். சனிக்கிழமை தோறும் பைரவரை வழிபாடு செய்யவும்.
கடகம்
கடக ராசிக்கு 9-க்குடைய குரு 9-ல் ஆட்சிபெற்றாலும் வக்ரகதியில் செயல் பட்டுவருகிறார். இம்மாதம் 16-ஆம் தேதிமுதல் வக்ரநிவர்த்தியான பிறகு தேகநலன் நன்றாக இருக்கும். 10-க்குடைய செவ்வாய் 12-ல் மறைந் தாலும் சுயசாரம் பெறுகிறார். தொழில் துறையில் மந்தநிலை காணப்பட்டாலும் குரு ராசியைப் பார்ப்பதால் சமாளித்துவிடலாம். 2-க்குடைய சூரியன் 5-ல் திரிகோணம் பெற்றபின் குரு பார்வையைப் (17-ஆம் தேதிமுதல்) பெறுகிறார். பொருளாதாரத்தில் தாராள வரவு- செலவுகள் உண்டாகும். சேமிப்புக்கும் இடம் ஏற்படும். 3-ஆமிடத்தை குரு பார்ப்பதால் தைரியமும் தன்னம்பிக் கையும் குறையாது. மாதக் கடைசியில் செவ்வாய் ரிஷபத்திற்கும் மாறுவார். அதன்பிறகு மேலும் முன்னேற்றம் உண்டாகும். என்றாலும் சிலநேரம் ஏதோ ஒரு மனச்சலனம் வந்து போகும். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். மனச்சலனம் குறைய சித்தர்கள் ஜீவசமாதி சென்று வழிபடவும்.
சிம்மம்
சிம்ம ராசிநாதன் சூரியன் மாத முற்பகுதி வரை. 3-ல் நீசமாக இருக்கிறார். அவருடன் 3-க்குடைய சுக்கிரன் ஆட்சி. 2-க்குடைய புதன் சேர்க்கை. தொடக்கத்தில் பணத்தட்டுப்பாடு நிலவினாலும் சூரியன் நீசம் தெளிந்த பிறகும், புதன் 4-ல் கேந்திரம் பெற்ற பிறகும் பணத் தேவைகள் பூர்த்தியாகும். செயல்களில் நிதானம் தேவை. 9-க்குடைய செவ்வாய் 11-ல் இருப்பதால் பூமி, வீடு, மனை சம்பந்தப்பட்ட விஷயங்களில் காரிய ஜெயம் ஏற்படும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் அமைப்புகளும் உண்டாகும். 8-ஆமிடத்து குரு 16-ஆம் தேதிமுதல் வக்ரம் நிவர்த்தியடைகிறார். பிள்ளைகளால் நிலவிவந்த மனக்கிலேசம் மாறும். அவர்கள்வகையில் தடைப்பட்டுவந்த- தாமதப்பட்டு வந்த நல்லவை நிறைவேறும். வீண் கவலையும் அகலும். தொலைதூரப் பயணம் ஒன்றால் நன்மை விளையும். ஞாயிற்றுக்கிழமை சிவனுக்கு நெய்தீபமேற்றி வழிபடவும்.
கன்னி
கன்னி ராசிநாதன் புதன் 9-ஆம் தேதிவரை 2-ல் இருக்கிறார். 12-க்குடைய சூரியனுடன் சேர்க்கை. மாதத்தின் முதல் வாரம் செலவுகளும் விரயங்களும் உண்டாகும். 2-ல் உள்ள கேதுவால் குடும்பத்தில் சில சச்சரவுகள், கணவன்- மனைவிக்குள் கருத்து வேறுபாடு கள் நிலவும். 5-ஆமிடத்துச்சனி ஆட்சியாக இருப்பதால் உங்கள் மனதில் எண்ணிய திட்டம் செயல்பாடு இவற்றில் முன்னேற் றம் ஏற்பட வழிவகுப்பார். உத்தியோகப் பணிகளில் எதிர்பார்த்த சில வாய்ப்புகள் காலதாமதமாகலாம். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகளும் அலைச்சல்களும் சற்று அதிகரிக்கலாம். அரசு தொடர்பான பணிகளில் இருந்துவந்த இழுபறியான சூழ்நிலைகள் மறையும். தந்தைவழி உறவினர் ஒருவரால் உதவியும் ஒத்தாசையும் உண்டாகும். ஒருசில கணவன்மார்களுக்கு மனைவியால் அல்லது மனைவிவழியில் நன்மைகள் ஏற்படலாம். உத்தியோகத் தினருக்கு மேலதிகாரிகளால் பாராட்டும் ஆதரவும் உருவாகும். புதன்கிழமை சக்கரத்தாழ்வாரை வழிபடவும்.
துலாம்
இம்மாதம் 13-ஆம் தேதிவரை துலா ராசிநாதன் சுக்கிரன் ஜென்ம ராசியில் ஆட்சியாக இருக்கிறார். திட்டமிட்ட பணிகளில் பொறுமையுடன் செயல்பட்டால் மேன்மை உண்டாகும். புதிய வேலை நிமித்தமான முயற்சிகளில் சாதகமான பலன்களை எதிர்பார்க்கலாம். 11-க்குடைய சூரியன் ஜென்ம ராசியில் நீசம்பெறுவதால் சிலநேரம் செயல்பாடுகளில் காரிய ஜெயம் தாமதப்படும். 12-க்குடைய புதன் 9-ஆம் தேதிமுதல் 2-ஆமிடத்திற்கு மாறுகிறார். அந்நிய தனம் கையில் புரளும். என்றாலும் தேவைகள் நிறைவேறுவதில் சங்கடங்கள் ஏற்படலாம். சகோதரவழியில் சகாயம் உண்டாகும். விட்டுக்கொடுத்து செல்வதன்மூலம் சில அனுகூலமான பலன்களைச் சந்திக்க நேரும். குரு 2-ஆமிடத்தைப் பார்த்தாலும் தனவரவு காலதாமதமாக வரும். 2-க்குடையவர் 9-ல் திரிகோணம் பெறுகிறார். குலதெய்வம் சம்பந்தமான கோவில் பணிகளில் முக்கிய பொறுப்பு வகிக்கலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சற்று நெருக்கடியான சூழல் ஏற்படலாம். வெள்ளிக்கிழமை லட்சுமி நாராயணரை வழிபடவும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிநாதன் செவ்வாய் 8-ல் மறைகிறார். 8-க்குடைய புதன் 9-ஆம் தேதிமுதல் விருச்சிக ராசியில் சஞ்சாரம். இருவரும் பரிவர்த்தனை யோகம் பெறுகிறார் கள். ஆக, செவ்வாய் 8-ல் மறைந்த தோஷம் பாதிக்காது. 10-க்குடைய சூரியன் 12-ல் மறைவு, நீசம். தொழில்ரீதியாக மந்தமான செயல்பாடுகள் உண்டாகும். எதிர்பாராத சில விரயம் ஏற்படலாம். ஜென்ம ராசியை 2-க்குடைய குரு பார்ப்பதால் எப்படியோ சமாளிக்கும் ஆற்றல் உருவாகும். ஒருசிலருக்கு பொருளாதாரச் சூழ்நிலைகளை சமாளிப்பது என்பது ஒரு கடினமான செயலாக அமையும். 3-ல் ஆட்சிபெற்ற சனி தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் தருவார். 3-ஆமிடத்தை ராசிநாதன் செவ்வாயும் பார்க்கிறார். உடன் பிறந்த சகோதரி- சகோதரவழியில் ஆதரவும் அனுகூலமும் எதிர்பார்க்கலாம். சுபவிரயச் செலவுகள், மொய் செய்முறைச் செலவுகளும் ஏற்படும். அரசு ஊழியர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றமும் கிடைக்கும்! செவ்வாய்தோறும் முருகனின் வேலுக்குப் பாலாபிஷேகம் செய்யவும்.
தனுசு
தனுசு ராசிக்கு 11-க்குடைய சுக்கிரன் ஆட்சி. 9-க்குடைய சூரியன் 11-ல் நின்றாலும் நீசம் பெறுகிறார். சில காரியங்களில் வெற்றி உண்டாகும். சில காரியங்கள் எதிர்பார்த்தபடி அமையாமல் சங்கடத்தைத் தரும். 2-ல் உள்ள சனியை 12-க்குடைய செவ்வாய் பார்க்கிறார். விரயங்களைச் சந்தித்து பிறகுதான் லாபத்தை எதிர்கொள்ள நேரும். தொழில்துறையினர் மற்றும் வியாபாரிகளுக்கு பெரியளவு வரும்படி அமையாதது வருத்தத்தைத் தரும். 5-ஆமிடத்து ராகு உங்கள் திட்டங்களை சரிவரச் செய்ய உந்துதல் படுத்துவார். ஏழரைச்சனியின் கடைசிக்கூறு பாதச்சனி நடைபெறுவதால் ஏற்றமும் இறக்கமும் மாறிமாறி ஏற்படலாம். மனம் தளராமல், முயற்சி அகலாமல் நம்பிக்கையுடன் செயல்படுவது மிக அவசியம். முயற்சியுடையார் இகழ்ச்சியடையார் என்ற கருத்தை மனதில்வைத்து விடாமுயற்சியுடன் செயல்படவும். ஒருசிலருக்கு கண் உபாதைகள் வந்து விலகும். சனிக்கிழமைதோறும் ஆஞ்சனேயரை வழிபடவும்.
மகரம்
மகர ராசிநாதன் சனி ஜென்மத்தில் ஆட்சி. 3, 7, 10-ஆமிடங்களைப் பார்க்கிறார். 4, 11-க்குடைய செவ்வாயின் பார்வையைப் பெறுகிறார். பூர்வீக சொத்து அல்லது சுயசம்பாத்திய சொத்து, நிலம் சம்பந்தப்பட்டவகையில் ஆதாயம், அனுகூலம் ஏற்படலாம். மனையை விற்பதன்மூலம் தனவரவு உண்டாகும். எதிர்பார்த்த தொகையையும் பெறலாம். இரண்டாம் சுற்றை சந்திப்பவர்களுக்கு பொங்குசனியாக செயல்படும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். உடன்பிறந்த வகையில் இருந்துவந்த மனச்சங்கடமும் பிரச்சினைகளும் விலகி ஒற்றுமையுணர்வும் பந்தபாச நேசமும் உருவாகும். நீண்டநாள் நடைபெறாமலிருந்த காரியம் ஒன்று நிறைவேறி மனதிற்கு ஆறுதல் தரும். இந்த ஏழரைச்சனியில் ஜனன ஜாதகத்தில் சந்திர தசையோ சந்திர புக்தியோ நடந்தால் வீண்விரயம், பொருட்சேதம், கவலை, சஞ்சலம் போன்றவற்றை சந்திக்கநேரும். குடும்பநலனில் அக்கறை காட்டுவீர்கள். ஏழரைச்சனியின் வேகம் குறைய சனிக்கிழமை காலபைரவருக்கு மிளகு தீபமேற்றி வழிபடவும்.
கும்பம்
கும்ப ராசிக்கு ஏழரைச்சனியில் விரயச்சனி நடந்துகொண்டிருக்கிறது. ராசிநாதன் விரயமடைவதும் விரயாதிபதியாக இருப்பதும் கவலைக்குரிய விஷயம்தான். வீண் அலைச்சல், விரயம், சங்கடங்கள் போன்றவற்றை சந்திக்க நேரும். 3-ஆமிடத்து செவ்வாய் 5-ல் நின்று 12-ஆமிடத்தைப் பார்ப்பதால் பத்து ரூபாயில் முடியவேண்டிய காரியத்தை ஐம்பது ரூபாய் செலவழித்து முடிக்கவேண்டியது வரும். புதிய முயற்சிகளை சற்று தள்ளிப்போடுவது நல்லது. அரசுவழியில் எதிர்பார்த்த ஆதாயம் தாமதமாகும். 7-க்குடைய சூரியன் 9-ல் நீசம். தகப்பனாருக்கு உடல்நலக்குறைவு, மருத்துவச்செலவு போன்றவை ஏற்படலாம். 9-க்குடைய சுக்கிரன் 13-ஆம் தேதிமுதல் 10-ஆமிடத்திற்கு மாறுகிறார். அது தர்ம கர்மாதிபதி யோகமாகும். எனவே, மழை பெய்தாலும் குடைபிடித்துக்கொண்டு நனையாமல் செல்வதுபோல சில காரியங் களில் பாதுகாப்பாக செயல்படலாம். சனிக் கிழமையன்று காலபைரவருக்கு தயிர்சாதம் நிவேதனம் செய்து வழிபடவும்.
மீனம்
மீன ராசிநாதன் குரு ஜென்ம ராசியில் சஞ்சாரம். பொருளாதாரத் தேக்கம், தொழிலில் மந்தம் போன்ற பலன்களை சந்தித்து மனம் நொந்தவர்களுக்கு இம்மாதம் 16-ஆம் தேதிமுதல் குரு வக்ரநிவர்த்தியாவதால் பெரிய ஆறுதல் உண்டாகும். வணிகத்தில் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். நண்பர்களின்மூலம் வருமான வாய்ப்புகள் உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் சக ஊழியர்களுடன் அனுசரணையுடன் நடந்துகொள்வது அவசியம். ஒருசிலருக்கு கொடுக்கல்- வாங்கலில் இழுபறிநிலை ஏற்பட இடமுண்டு என்பதால் கவனமுடன் செயல்படவும். 2-ல் உள்ள ராகு குடும்பத்தில் நிம்மதியைக் குலைக்கலாம். கணவன்- மனைவிக்குள் வாக்குவாதம், சச்சரவுகளை ஏற்படுத்தலாம். 6-க்குடைய சூரியன் 8-ல் நீசம் பெறுவதால் கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் யோகம் என்பதுபோல திடீர் அதிர்ஷ்டமும் கிடைக்கும். தேகநலத்தில் மருத்துவச் செலவுகள் ஏற்பட்டு விலகும். 4-ஆமிடத்து செவ்வாய் குடியிருப்பில் மாற்றம் தரலாம். வியாழக்கிழமை நவகிரக குருவை வழிபடவும்.