ருவர் மகிழ்வுடன் வாழ நல்ல இல்வாழ்க்கைத் துணையும், தொல்லையற்ற சொந்த இல்லமும் அவசியம். ஜோதிட ரீதியாக நிலத்துக்குக்காரகன் செவ்வாய். திருமண விஷயத்திலும் செவ்வாயின் பங்கு முக்கியமானது. இந்த செவ்வாய்க்கு அதிதேவதை முருகப் பெருமானே!

எனவே, முருகனை வணங்க நல்ல மணவாழ்வும், மனையோகமும் அமைவது திண்ணம் எனலாம்.

ஜாகத்தில் செவ்வாய் ஆட்சி, உச்சம் பெற்று சுக்கிரனோடு தொடர்பு பெற்றுவிட்டாலே அனேகமாக சொந்தவீடு அமைந்துவிடும். பெரும் வசதி படைத்தவர் மாதம் லட்ச ரூபாய் கொடுத்து வாடகை வீட்டிலிருப்பார். குறைந்த வருமானம் சம்பாதிப்பவரோ சொந்த பிளாட் வாங்கி அமோகமாக இருப்பார். இதற்கெல்லாம் காரணம் உண்டு.

"வீட்டைக் கட்டிப்பார்; கல்யாணம் பண்ணிப்பார்' என்று பழமொழி உண்டு. வீடு கட்டுவதென்பது நம் ஒவ்வொருவரின் கனவும்கூட. மனைவி, வீடு இவையிரண்டும் அமையக் கொடுத்துவைக்க வேண்டும். இதில் எப்படியும் மனைவி அமைந்துவிடுகிறார்.

Advertisment

murugan

ஆனால், சொந்த வீடு அமைவது மிகப்பெரிய சாதனையாக உள்ளது. ஜோதிடரீதியாக, ஜாதகத்தில் லக்னத்திற்கு 4-ஆம் ஸ்தானம் சிறப்பாக அமைந்திருப்பவர்களுக்கு எதிர்பாராமல் சொந்த வீடு, மனை யோகம் அமைகிறது. சிலரோ நிலம் வாங்கவேண்டுமென்று பணத்தைப் பையில் எடுத்துக்கொண்டு அலைவார்கள். ஓர் அங்குல நிலம்கூட சரியாக அமையாது. பிறகு ஏதாவதொரு செலவில் கையிலிருந்த காசும் கரைந்து போகும்.

இன்னும் சிலரோ, வீடு வாங்க வசதி இருக்காது; ஆனால் கடன் வாங்கியாவது ஒரு இடத்தை வாங்கி வீடும் கட்டிவிடுவார்கள். இதே நிலைதான் சொந்த வீடு தேடுபவர் களுக்கும். பணத்தில் புரள்பவர் சொந்த வீடில்லாமல் இருப்பார். அவரிடம் வேலை பார்க்கும் குமாஸ்தாவோ சொற்ப சம்பளத்தையே இறுக்கிப் பிடித்து சேர்த்து வைத்து, சொந்த வீட்டை வாங்கிவிடுவார். நிலம் வாங்கியவர்கள், பிளாட் வாங்கியவர்களைக் கேட்டுப்பார்த்தால் தெரியும்-அவர்கள் எவ்வளவு சிரமங்களை சந்தித்திருப்பார்கள் என்று!

"அப்பாடா, நொந்து நூலாகி எப்படியோ பிளாட் வாங்கிவிட்டேன்' என்பார்கள். வீடு அமைவது சாதாரண விஷயமில்லை.

ஒருவர் தன் சுய சம்பாத்தியத்தில் வீடு வாங்கினாலும், கடன் வாங்கி வீடு வாங்கினாலும், மூதாதையர் சொத்துமூலம் வீடு கிடைக்கும் அமைப்பிருந்தாலும் சொந்த வீட்டில் குடியிருக்கும் பாக்கியம் வேண்டும்.ஏனென்றால், எத்தனையோ பேர் சொந்தவீடு இருந்தும் அதில் குடியிருக்க முடியாமல், வாடகை வீட்டில் குடியிருக்கும் நிலையில் உள்ளனர். அதுபோன்று கடன் வாங்கி வீடுகட்டினாலும், அந்த வீட்டை கடன் பிரச்சினை தாங்காமல் விற்றுவிடும் நிலையில் இருக்கின்றனர். பூர்வீக வீடு இருந்தும் அதில் குடியிருக்க முடியாமல் தவிப்பவர்கள் எத்தனையோ பேர். நீதிமன்ற வழக்கு போன்ற காரணங்கள் இருக்கும்.

சொந்தவீடு யோகம்தரும் கிரக அமைப்புகள்

சொந்த வீட்டுமனை அமைய ஜாதகரீதியாக நான்காம் பாவம் பலமாக அமைந்திருக்கவேண்டும். நவகிரகங்களில் சுக்கிரனை வீடு யோக காரகன் எனவும், செவ்வாயை பூமிகாரகன் எனவும் குறிப்பிடுகிறோம். செவ்வாய் ஆட்சி, உச்சம் பெற்று சுக்கிரனோடு தொடர்பு பெற்றுவிட்டால் அநேகமாக சொந்தவீடு அமைந்துவிடும்.

ஜென்ம லக்னத்திற்கு நான்காம் அதிபதி ஆட்சி, உச்சம் பெற்றிருந்தால் பலமான வீடு யோகமும், அதிகப்படியான சொத்து யோகமும் உண்டாகும். நான்காம் அதிபதி கேந்திர ஸ்தான (1, 4, 7, 10) அதிபதிகளுடன் இணைந்து அமைந்தாலும், திரிகோண ஸ்தானங்களில் அமைந்தாலும், 5, 9-ஆம் அதிபதிகளின் சேர்க்கை பெற்றாலும் சொந்த வீடு யோகம் உண்டாகும்.

நான்காம் அதிபதியும், நான்காம் வீட்டையும் குருபோன்ற சுபகிரகம் பார்வை செய்வது நல்லது. நான்காம் வீட்டதிபதி பலம்பெறுவது மட்டுமின்றி, சுக்கிரனும் பலமாக இருந்தால் சொந்த வீடு யோகம் உண்டாகி, அதன்மூலம் மகிழ்ச்சி ஏற்படும்.

பூமிகாரகன் செவ்வாய் ஆட்சி, உச்சம் பெற்று 4-ல் இருந்து அல்லது 4-ஆம் அதிபதி யின் சேர்க்கை பெற்றிருந்தால், ஒருவருக்கு பூமியோகம் உண்டாவது மட்டுமின்றி, பூமியுடன் கூடிய வீட்டை வாங்கக்கூடிய யோகம் உண்டாகும்.

காலபுருஷனுக்கு நான்காம் பாவாதிபதி யான சந்திரனும் செவ்வாயும் இணைந்து "சந்திர மங்கள யோகம்' பெற்றாலும், ஜனன ஜாதக நான்காம் பாவாதிபதியும் செவ்வாயும் இணைவு பெற்றுவிட்டாலும் சொந்த வீடு அமைந்துவிடுகிறது.

ஜனன ஜாதகத்தில் நான்காம் வீட்டில் எத்தனை பலமான சுபகிரகங்கள் அமைகி றதோ, நான்காம் வீட்டதிபதியுடன் எத்தனை பலமான சுப கிரகங்கள் சேர்க்கைபெறுகிறதோ, நான்காம் வீட்டை எத்தனை பலமான சுபகிரகங்கள் பார்வை செய்கிறதோ அத்தனை வீடுகள் அமையக்கூடிய யோகம் உண்டாகும்.

ஒருவரின் பிறந்த ஜாதகத்தில் செவ்வாய் எந்த பாவாதிபதியானாலும், பஞ்சமகா புருஷ யோகங்களுள் ஒன்றான "ருசக யோக'த்தை அடைந்தால், அவர்களுக்கு அரண்மணை போன்ற வீடுகள் அமைந்துவிடும். என்றா லும் செவ்வாய் அசுபத் தொடர்பு பெற்று விட்டால், அந்த வீடே அவர்களுக்கு பிரச் சினையாக அமையும்.

புதன், குரு, சனி, சுக்கிரன் ஆகிய நான்கு கிரகங்கள் நான்காம் பாவாதிபதிகளாகி, முறையே பத்ர யோகம், ஹம்ச யோகம், சச யோகம், மாளவ்ய யோகம் ஆகிய மகா புருஷ யோகங்களுள் ஏதாவது ஒன்றைப் பெற்றுவிட்டால், அவர்களுக்கு அரண்மனை போன்ற வீடுகளும் ராஜவாழ்க்கையும் அமைந்துவிடும்.

அழகிய சொகுசு வீடுகளுக்குக் காரக னான சுக்கிரன், சூரியனைக் கடந்து நின்று சுபவெசி யோகம் பெற்றுவிட்டாலும் மிக அழகான சொகுசுமிக்க வீடு அமைந்துவிடும்.

ஜெய்மினி விதிப்படி, செவ்வாய் ஆத்ம காரகனாக அமைந்து, காரகாம்சத்தில் சந்திரன் மற்றும் சுக்கிரன் நிற்பது மற்றும் காரகாம் சத்திற்கு நான்கில் சுபகிரகங்கள் நிற்கும் அமைப்பிருந்தால் வசதியான வீடு அமையும்.

ஜாதகத்தில் மேற்கண்ட அமைப்பிருந்தும் சொந்தவீட்டுக் கனவு நிறைவேறவில்லையா? அப்படியென்றால் நீங்கள் சிறுவாபுரி முருகனைத்தான் சரணடையவேண்டும்.

தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட் டத்தில் உள்ள சின்னம்பேடு பகுதியில் அமைந் திருக்கிறது புகழ்பெற்ற முருகன் கோவில். சென்னைக்கு வடமேற்கே சென்னை- கொல்கத்தா நெடுஞ்சாலையில், சென்னை யிலிருந்து 33-ஆவது கிலோமீட்டரிலிருந்து இடப்புறம், பச்சைப்பசேலென்றிருக்கும் வயல்களைக் கடந்து மூன்று கிலோமீட்டர் சென்றால் சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமியின் அழகிய திருக்கோவிலை அடையலாம். சென்னையிலிருந்து செங்குன்றம்- காரனோடை வழியாகவும், மீஞ்சூர்- பொன்னேரி வழியாகவும் இந்த ஊரை அடையலாம். இவ்வூர், சிறுவாபுரி, சின்னம்பேடு, சிறுவை, தென் சிறுவாபுரி, குசலபுரி எனப் பல பெயர்களால் அழைக்கப் படுகிறது.

அசுவமேத யாகம் செய்ய விருப்பம் கொண்ட ராமபிரான் யாகப் பசுவாக குதிரையை ஏவிவிட, அது வால்மீகி முனிவரின் ஆசிரமத்தின் அருகில் வந்தது.

அங்கு வளர்ந்து வந்த ராமனின் பிள்ளை களான லவனும் குசனும் அந்த யாக குதிரையைக் கட்டிப்போட்டுவிட்டனர். இதையறிந்து குதிரையை மீட்டுப்போக வந்த லட்சுமணனாலும் சிறுவர்களை வெல்ல முடியவில்லை. ராமனே நேரில் வந்து சிறுவர்களிடம் போரிட நேர்ந்தது. இவ்வாறு சிறுவர்களான லவனும் குசனும் அம்புவிட்ட இடமே சிறுவாபுரி என்று வழங்கப்படுகிறது.

சிறுவாபுரி முருகனின் முன் வலக்கரம் அடியவருக்கு அபயமளிக்க, பின் வலக்கரம் ஜபமாலை ஏந்தியிருக்க, முன் இடக்கரம் இடுப்பிலும், பின் இடக்கரம் கமண்டலம் தாங்கியும் பிரம்ம சாஸ்தா கோலத்தில் இருக்கிறார். பிரம் மனை தண்டித்து பிரம்மனின் படைப்புத் தொழிலை ஏற்ற கோலமிது. இம்முருகனை வழி பட்டால் வித்தைகள் பல கற்றுப் பேரறிஞர் ஆகலாம் என்று அருண கிரிநாதர் பாடியுள்ளார்.

வாஸ்து அதிபதியான பிரம்மாவை தண்டித்து படைப்புத் தொழிலையேற்ற கோலத்தில் காட்சியளிப் பதால்,இவரை வழிபடுவதால் வாஸ்து தோஷம் நீங்கி வீடு கட்டுவதிலுள்ள தடைகள் விலகுமென்பது நம்பிக்கை. மணக்கோலத்தில் காட்சி தரும் இதுபோன்ற சிலை வேறெங்கும் இல்லை. இந்த தலத்தில் முருகப் பெருமான் வள்ளியுடன் தங்கியிருந்ததால், இந்த முருகப்பெருமானை வணங்குவோருக்குத் திருமணத்தடை நீங்கி மனம்போல துணை அமையும் என்பது ஐதீகம். ஆறு செவ்வாய்க்கிழமை தொடர்ந்து காலையில் மாலை சாற்றி வழிபட்டு வந்தால், ஆறா வது வாரம் முடிவதற்குள் இனிமையான வாழ்க்கைத்துணை அமையும். அதுபோல, சொந்தவீட்டுக் கனவும் நிறைவேறும்.

இங்குள்ள சிலைகளில் பாலசுப்பிரமணிய சுவாமி, ஆதிமூலர், நவகிரகங்கள் தவிர, மற்ற சிலைகள் பச்சைக்கல்லில் செய்யப் பட்டவை. இதுபோல வேறெங்கும் காண்பத ரிது. கொடிமரத்துக்கு அருகில் முருகப் பெருமானின் மரகதப்பச்சை மயில் வீற்றிருக் கிறது. கோவிலின் தென்மேற்கு மூலையில் மரகதக்கல்லில் சூரியனார் சிலை, நேரெதிரில் கிழக்கே திருமுகம் கொண்ட மரகத விநாயகர் (ராஜகணபதி) சிலை, முருகப்பெருமானுக்கு தெற்கே அண்ணாமலையார் சிலைகள் உள்ளன. இங்குள்ளது போன்ற பெரிய மரகதலிங்கம் வேறெங்குமில்லை.

பூமி சம்பந்தமான அனைத்து கோரிக்கைகள் நிறைவேறவும், வீடு இல்லாதவர்களுக்கு புதிய வீடு அமையவும், பிள்ளைப்பேறு இல்லாதவர்கள் பிள்ளைப்பேறு பெறவும், கடன் தொல்லைகள் தீரவும் சிறுவாபுரி சிறந்த பரிகாரத் தலமாக விளங்குகிறது.

நம்பிக்கையுடன் பிரார்த் தனை செய்தவர்களின் பிரார்த் தனைகள் நிûவேறி வருவது நிதர்சன உண்மையாகும். தை மாதத்தில் கிரகப்பிரவேசத் திற்கு நாள் குறித்துவிட்டு, நம்பிக்கையுடன் சிறுவாபுரி செல்லுங்கள். சொந்த வீட்டில் குடியேறு வது நிச்சயம்!