"தென்னாடுடைய சிவனே போற்றி; எந்நாட்ட வர்க்கும் இறைவா போற்றி' என்பது சைவ சமயத்திலுள்ள வர்கள் அடிக்கடி உச்சரிக்கும் வார்த்தை. அத்தகைய சிவ பெருமானுக்கு ஏராளமான ஆலயங்கள் தென்னாட்டில் உள்ளன. அப்படிப்பட்ட ஒரு ஆலயம் கடலூர் மாவட்டம், மங்களூர் என்னும் ஊரில் அமைந்துள்ளது. இவ்வாலய இறைவன் காளத்தீஸ்வரர்; இறைவி ஞானாம்பிகை.
சிவபெருமான் பிறப்பும் இறப்பும் இல்லாதவர்; உலக உயிர்களைத் தோற்றுவிப்பவர்; பிரளய காலத்தில் அனைத் தையும் அழித்துத் தன்னுள் ஒடுக்கி தான் மட்டுமே நிலையாக இருப்பவர் என்பதை சைவசமய இலக்கியங்கள் உட்பட பல்வேறு நூல்கள் தெரிவிக்கின்றன. சிவன் என்றால் சிவந்தவன். அஷ்டமாசித்திகளை உபதேசித்தவர் என்பதால் இவருக்கு ஆதிசித்தன் என்னும் பெயரும் உண்டு. மேலும் இவர் மங்களமாக- எங்கும் மறைபொருளாக நீக்கமற நிறைந்திருப்பவர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/raghu-kethu_3.jpg)
இவருக்கு ருத்திரன் என்னும் பெயருமுண்டு. ருத்திரன் என்றால் துன்பங்களைத் துடைப்பவர் என்று பொருள். சிவன் அருவம், அருவுருவம், உருவம் என மூன்று வடிவங்களில் காட்சியளிக்கிறார். பு-த்தோல் ஆடையை அணிந்துகொண்டாலும், அறுசுவை உணவு, ஆலகால விஷம் என எதை ஏற்றுக்கொண் டாலும் அந்த உணவு, உடை ஆகியவற்றால் உண்டாகும் நன்மை- தீமைகளைப் பொருட் படுத்தாதவர். அனைத்து உயிர் களுக்குமாக அவற்றை ஏற்றுக் கொள்கிறார். அனைத்துயிர் களின்மீதும் பேரருள் கொண்ட வர்.
சிவபெருமானை வணங்கு பவர்கள் சிறந்த ஒழுக்கங்களை யும் உயர்ந்த தத்துவ ஞானத் தையும் பெறுவார்கள். இந்து சமய வழிபாட்டு முறைகளின் ஆணிவேர் சிவனே. சிவ வழி பாட்டின் மூலத்தை ஆராய்ச்சி செய்தவர்கள் 8,000 ஆண்டு களுக்கு முன்னர் சிந்துசமவெளி நாகரிக காலத்திற்கு நம்மைக் கொண்டுசெல்கிறார்கள்.
ஆனால் சைவசமயம் எல்லாக் காலத்திலும் இருந்துள்ளது என்று புனித நூல்கள் கூறுகின் றன. மனிதன் ஞானம் பெறு வதற்கு சைவ சமய நெறிகளைப் பின்பற்றினால் போதும்.
கோவில் என்றாலே அது இந்துக்கள் வழிபடும் இடம் என்னும் நிலையைக் கடந்து, தற்போது பல மதத்தினரும் அயல்நாட்டினர் உட்பட இந்துமதக் கோட்பாடுகளைப் பின்பற்றுவதோடு, இந்து தெய்வங்களை வழிபடுவதற்கு வருகை தருகிறார்கள். அந்த அளவுக்கு சைவ, வைணவ சமயக் கருத்துகள் பலரையும் ஈர்த்துள்ளன. சிவன்மீது மனதைக் குவியச்செய்தால் நமது உடலெங்கும் பரவிநிற்கும் சக்தி புலப்படும். நமது உள்ளம் உள்ளொளி பெற்றுப் புனிதமடையும். இப்படி மனித இனத்தை வாழ்விக்கவே சிவ வழிபாடுகள், சிவாலயங்கள் உருவாகியுள்ளன.
மங்களூர் ஞானாம்பிகை உடனுறை காளத்தீஸ்வரர் ஆலயம் 12-ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது. முஸ்-ம் மன்னர்கள் படையெடுத்து வந்தபோது நமது இந்து ஆலயங்கள் தாக்கப்பட்டன. இந்த ஆலயத்தின்மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதனால் பெரிய அளவில் சேதாரம் ஏற்படவில்லை என்றாலும், தாக்குத-ன்போது ஆலய முகப்பு வாச-ல் இருபுறமுமுள்ள கருங்கல்-ல் பீரங்கி குண்டுகள் துளைத்து சேதமான வடு கருமை நிறத் தில் பதிந்துள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/raghu-kethu1.jpg)
இவ்வாலயத்தில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான திருமணங்கள் நடைபெறுகின்றன. ஜாதகரீதியாக ராகு- கேது தோஷம் உள்ளவர்கள் அருகிலுள்ள சிவாலயங் களுக்குச் சென்று வழிபடுவார்கள். சர்ப்ப தோஷமுள்ள மனிதர்களுக்குத் திருமண வாழ்க்கையில் தடைகளை ஏற்படுத்தும். அவற்றி-ருந்து விடுபட ராகு- கேது பகவானை அர்ச்சனை செய்து வழிபட்டு நிவர்த்திபெறவேண்டும். அதன் காரணமாகத்தான் ஜோதிடர்கள் ஆந்திர மாநிலத்திலுள்ள காளஹஸ்தி கோவிலுக்குச் சென்று ராகு காலத்தில் பச்சைக் கற்பூர அபிஷேகம் செய்துவந்தால் சர்ப்ப தோஷம் விலகும் என்று கூறுகின்றனர். அங்கு செல்லமுடியாதவர்கள் கும்பகோணம் அருகிலுள்ள திருநாகேஸ்வரம் சென்று ராகு பகவானுக்குப் பாலா பிஷேகம், அர்ச்சனை செய்து வழிபடுமாறும், அடுத்து பூம்புகார் அருகிலுள்ள கீழ்ப்பெரும்பள்ளம் கேது பகவான் கோவிலுக்குச் சென்று வழிபடும்படியும் அறிவுறுத்துகிறார் கள்.
தோஷமுள்ளவர்கள் பரிகாரம் தேடி சம்பந்தப்பட்ட கிரகங்களை ஏன் வழிபடவேண்டும் என்னும் கேள்வி சிலருக்கு எழும். அதற்கு மிக எளிமையான உதாரணம்...
நம்மைவிட பலமுள்ள பெரிய எதிரி இருந்தால், நாம் கோபம்கொண்டு அவருடன் மோதினால் நம் கதி அதோகதிதான். அப்படிப்பட்ட சமயத்தில் புத்திசா-த்தனமாக நடந்துகொள்பவர்கள் அந்த எதிரியிடமே சரணடைவார்கள். "ஐயா, நான் சாமானியமானவன். என்னை விட்டு விடுங்கள்' என்று சரணாகதி அடைந்தால், "அடப்பாவமே, நம்மையே அடைக்கலமாகத் தேடிவந்துள்ளான்; அவனைத் துன்புறுத்தக் கூடாது' என்று கருணை காட்டுவார்கள்.
அதைப்போலத்தான் அண்ட சராசரங்களை யும் ஆட்டிப்படைக்கும் கிரகங்கள் நம்மைத் தாக்கும்போது அவர்களிடம் சரணடைவதே பரிகாரமாகும். அந்த அடிப்படையில்தான் தோஷப் பரிகாரம். அவர்களை நாடிச்சென்று சரண்புகுந்தால் தோஷநிவர்த்தி கிடைக்கும்.
அப்படிப்பட்ட ராகு- கேது இருவரும் ஒரே இடத்தில் இருந்து தோஷநிவர்த்தி தரும் தலமாக விளங்கிவருகிறது மங்களூர் காளத்தீஸ்வரர் கோவில். அறுபத்து மூன்று நாயன்மார்களில் கண்ணப்ப நாயனார் தனது கண்களை இறைவனுக்குக் அர்ப்பணித்த இடம் ஆந்திரமாநிலம், காள ஹஸ்தியிலுள்ள காளத்தீஸ்வரர் கோவில். அதே பெயருடன் அதே தோஷநிவர்த்தி தரும் ஆலயமாக விளங்கிவரும் இவ்வாலயத்தின் இறைவனுக்குப் பின்புறம் ராகு- கேது தனிச் சந்நிதியில் அமர்ந்துள்ளனர். அவர்களுக்கு வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் தோஷநிவர்த்திக்காக விசேஷ பரிகார பூஜைகள் நடைபெறுகின்றன.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/raghu-kethu2.jpg)
சில வருடங்களுக்குமுன்பு ஒரு மகா சிவராத்திரியன்று ஏராளமான பக்தர்கள் ஆலய வழிபாட்டில் கலந்துகொண்டிருந்த னர். அப்போது நாகம் ஒன்று கோவிலுக் குள் சென்று பக்தர்களுக்குக் காட்சி கொடுத்து விட்டு மறைந்துள்ளது. அதிசயமான காட்சி என்கிறார்கள் அதை தரிசித்த பக்தர்கள்.
"காளத்தீஸ்வரர், ஞானாம்பிகை, ராகு- கேது, வள்ளி, தெய்வானையுடன் முருகன், பைரவர், நவகிரகங்கள், துர்க்கை ஆகியோரை வழிபட்டு தோஷநிவர்த்தி பெறுகிறார் கள். முக்கிய தோஷநிவர்த்தித் தலமாக மங்களூர் காளத்தீஸ்வரர் கோவில் சிறப்பாக விளங்கிவருகிறது'' என்கிறார்கள் பல்வேறு ஆன்மிகப் பணிகளைச் செய்துவரும் அரசுப்பள்ளி தலைமையாசிரியர் கச்சி மயிலூர் நடராஜன், மங்களூர் கிள்ளிவளவன்.
இவ்வாலய இறைவனுக்கும் நந்திக்கும் பிரதோஷ வழிபாடு சிறப்பாக நடத்தப்பபட்டுவருகிறது. 18 பிரதோஷ காலத்தில் இங்குவந்து நந்தியையும், இறைவனையும், அம்பாளையும், ராகு- கேதுவையும் வழிபட்டால், நிச்சயம் நீண்டகாலம் குழந்தையில்லாத தம்பதிகளுக்கு குழந்தை பிறக்கும். இப்படி மகப்பேறு பெற்ற தம்பதிகள் ஏராளம்... இவ்வாலயத்திலுள்ள முருகப்பெருமான் நவகிரகங்களைப் பார்த்தபடி கிழக்குநோக்கி உள்ளதால், இவ்வாலய முருகனை வழிபடுவோருக்கு நவகிரக தோஷம் நீங்குகிறது. ஆலய தல விருட்சமாக வில்வமரம் உள்ளது.
திருமணத்தடை, குழந்தை பாக்கியமின்மை, கடன் தொல்லை, நீதிமன்ற வழக்கு, நோய் நொடிகளால் பாதிக்கப்பட்டவர்கள், கண்நோய் சம்பந்தப்பட்டவர்கள் என பலதரப்பினரும் இறைவனை வழிபட்டு குணமடைந்துள்ளனர்;
பலனடைந்துள்ளனர். தற்போது பள்ளியில் படித்துக்கொண்டே இறைவனுக்குப் பூஜைசெய்து வருகிறார் நிதிஷ்குமார்.
இந்த ஊருக்கு மங்களூர் என்று எப்படி பெயர் உருவானது? மன்னர்கள் காலத்தில் இவ்வூரில் மங்கம்மாள் என்ற பெண்மணி குறுநில ராணியாக ஆட்சிசெய்து வந்துள்ளார். அவரது பெயரில் மங்களூர் என்று அழைக்கப்படுகிறது. இன்னொரு காரணமும் கூறப்படுகிறது. மங்கலகரமான ஊராக விளங்கியதால் மங்கலபுரம் என்று அழைக்கப்பட்டு, காலப்போக்கில் மங்களபுரம், பிறகு மங்களூர் என்று அழைக்கப் படுகிறது.
மன்னர்கள் காலத்தில் முக்கிய பகுதியாக விளங்கியுள்ளது என்பதற்கு உதாரணமாக, ஒரு தலைநகரமாக இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. இவ்வூருக்கு மேற்கே அரசங்குடி என்னும் ஊர் உள்ளது. இப்பகுதியை ஆட்சிசெய்த அரசன் குடிலமைத்துத் தங்கியதால் அரசன்குடி என்று அழைக்கப்பட்டு தற்போது அரசங்குடி எனப்படுகிறது.
அதேபோல் மங்களூரை ஒட்டி உள்ளது மலையனூர். இங்கு ஆஜானுபாகுவான உடலமைப்புகொண்ட மாவீரன் ஒருவர் இருந்துள்ளார். மலையன் வசித்த ஊர் என்னும் பொருளில் மலையனூர் என்று அழைக்கப்படுகிறது.
அதேபோல் ம.புடையூர் என்னும் ஊர் உள்ளது. முன்பு படையூர் எனப் பட்டது. காரணம் இப்பகுதி வழியாக படையெடுத்துச்சென்ற மன்னன் ஒருவன் முகாம் அமைத்துப் பல மாதங்கள் இங்கு தங்கியதால் படையூர் என்றழைக்கப்பட்டு, காலப்போக்கில் புடையூர் என்றானது.
சிறப்பு வாய்ந்த ராகு- கேது தோஷ நிவர்த்தித் தலமான மங்களூர் சென்று வழிபட்டு நல்வாழ்வு பெறுவோம்.
சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், வேப்பூரையடுத்து ஆவட்டி பஸ் நிறுத்தம் உள்ளது. இங்கிருந்து மேற்கே ஏழு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது மங்களூர். ஆவட்டியி-ருந்து அனைத்து போக்குவரத்து வசதிகளும் உள்ளன. ஆலயத் தொடர்புக்கு அலைபேசி: 96291 48050.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-08/raghu-kethu-t.jpg)