திருவனந்தபுரத்திலிருந்து காசர்கோடு வரை நிறைய கோவில்கள், அரண்மனைகள், அக்ரஹாரங்கள் போன்ற இடங்கüல் உயிரோட்டமுள்ள சுவரோவியங்களைப் பார்க்க முடிகிறது.
இந்த இடங்கüல் முதன்மையான தெய்வங்கüன் தனி உருவங்கள், மகாபாரதம், இராமாயணம் போன்ற கதைகளும் ஓவியங் களாக வரையப்பட்டிருப்பதை நாம் காண முடியும்.
பொதுவாக பழைய காலத்தில் ஓவியங் கள் தாள, பிரமானங்கள் அடிப்படையில் தான் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/art_7.jpg)
முக்கியமாக சிவா, விஷ்ணு, பிரம்மா தச தாளத்திலும் சரஸ்வதி, லட்சுமி, பார்வதி, இராமர், கிருஷ்ணர் போன்றவர்கள் நவ தாளத்திலும், மற்ற தெய்வங்கள் அஷ்ட தாளத்திலும், விநாயகர், பாலகிருஷ்ணா, முருகன் போன்றவர்கள் பஞ்சதாளத்திலும் மனிதர்கள் சப்தார்த்த தாளத்திலும் வரையப்பட்டிருக்கிறார்கள்.
பஞ்சவர்ணங்களான பச்சை, மஞ்சள், சிவப்பு, வெள்ளை, கருப்பு வண்ணங்கள் சேர்ந்து நம்மை வசீகரிக் கக்கூடிய வகையில் இந்த ஓவியங்கள் வரையப்பட்டிருக்கிறது. இவையெல் லாம் சிற்ப ரத்னா நூலில் தியான சுலோகங் களாகவும் எழுதப்பட்டிருக்கிறது. முக்கியமாக திருவனந்தபுரம் பத்மநாப அரண்மனை, மட்டாஞ்செரி அரண்மனை, கிருஷ்ணபுரம் அரண்மனை போன்ற இடங்கüல் ஓவியங்கள் அலங்கரிக்கிறது..
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/art1_2.jpg)
ஏற்றுமானூர் சிவாலயம், வடக்கும் நாதன் ஆலயம், மருதூர் வட்டம் தன்வந்திரி ஆலயம், பனையன்னார் காவு, திருக்குடித்தான ஆலயம், கோட்டக்கல் ஆலயம், தொடிக்களம் ஆலயங்கüலும் மிக முக்கியமான ஓவியங்கள் காணப் படுகிறது.
கிருஷ்ணபுரம் அரண்மனையில் கஜேந் திர மோட்சம், மட்டாஞ்செரி அரண்மனை யில் இராம, இராவண யுத்தம், ஏற்றுமானூர் சிவாலயத்தில் அனந்த சயனம், கோட்டக் கல் ஆலயத்தில் பிரதோஷ விருத்தம் இப்படி நாம் சொல்லிக் கொண்டே போகலாம்.
இதேபோல இந்த ஓவியங்கüல் பாவங் களும் நவரசங்களும் மிக அற்புதமாக வரையப்பட்டுள்ளது.
முக்கியமாக கர்ப்பக் கிரகங்களைச் சுற்றியும், ஆலய நுழைவு வாயிலிலும் ஓவியங்கள் வரையப்பட்டிருப்பதை நாம் இன்றும் காணலாம்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2024-08/art-t_0.jpg)