கந்தர் அலங்காரத்தின் சிறப்பு!
முருகனின் அழகு
முருகனின் கருணை
முருகனின் வீரம்
முருகனின் காதல்
முருகனின் அரவணைப்பு
முருகனின் பெருந்தன்மை
முருகனின் பெருங்கோபம்
முருகனின் பேரன்பு
முருகனின் எளிமை
முருகனின் வ-மை
முருகனின் ஆற்றல்
முருகனின் ஆற்றுப்படுத்தல்
முருகனின் வேகம்
முருகனின் விவேகம்
முருகனின் ஞானம்
முருகனின் லீலை
முருகனின் வேல் திறம்
முருகனின் மயில் திறம்
முருகனின் சேவல் திறம்
முருகனின் ஆயுதத் திறம்
முருகனின் ஆபரணத் திறம்
முருகனின் பாதாதி கேசம்
முருகனின் கேசாதி பாதம்
இப்படியாக முழுக்க முழுக்க முருகப் பெருமானின் சிறப்பு களையே, சீர்களையே பாக்களாய்ப் புனைந்திருக்கிறார் அருணகிரிநாதர்.
கிரியா சக்தி
இச்சா சக்தி
ஞான சக்தி
இவை மூன்றின் ஒன்றிணைப்பாய் திகழ்கிறார் முருகன்.
நேர்மையான தனிமனிதர்களுக்கு ஊக்கத்தை வழங்குவார்;
நேர்மையான இல்லறவாசிகளுக்கு செல்வத்தையும், ஆரோக்கியத்தையும் வழங்குவார்;
நேர்மையான அடியவர்களுக்கு ஞானத் தையும், மறுபிறப்பற்ற-பிறப்பறுத்தலையும் வழங்குவார்;
இந்த மூவித நம்பிக்கைகளில் "கந்தர்அலங்காரம்' பாடல்களைக் கட்டமைத்தி ருக்கிறார் முருகனே விரும்பிய முருகத் தொண்டர் அருணகிரியார்."உள்ளப்பூர்வமாக முருகப்பெருமானின் பாதங்களைச் சரணடைந்தவர்களை எமன் அண்டமுடியாது. எமன் வந்தால் அவனை முதுகு பிளந்துபோகும்படி அடிப்பான் முருகன். தன் பக்தர்களை எமலோகம் அனுப்பவிடாமல் தடுத்து, தன்னுடன் கலக்கச் செய்வான்' என்று உறுதிபடத் தெரிவித்திருக்கிறார் அருணகிரிநாதர்.
"தேவாதி தேவர்களையே அசுரர் களிடமிருந்து காத்த ஆறுமுகன், சாதாரண மனிதர்களாகிய நமது வாழ்க்கையை காப்பான்' என்கிற உத்திரவாதத்தை "கந்தர்அலங்காரம்' படிப்பவர்களுக்கு உண்டாக்கு வார் அருணகிரியார்.
அருணகிரியை காத்த முருகன்!
அருணகிரியின் காலம் 13#ஆம் நூற்றாண்டின் இறுதி என்றும், 15#ஆம் நூற்றாண்டு என்றும் இருவேறு கருத்துக்கள் நிலவினா
லும், அவர் பிறந்தது திருவண்ணாமலையில்.
அருணகிரி பிறந்த கொஞ்ச நாட் களிலேயே அவரது தந்தையார் இறந்துவிட, தாயாரின் பாதுகாப்பில் வளர்ந்தார். அருணகிரி சிறுவனாக இருந்தபோதே தாயாரும் இறந்துவிட, தன் அக்கா ஆதியின் பாதுகாப்பில் வளர்ந்தார். தம்பியின்மீது மிகுந்த அன்பைப் பொழிந்தார் ஆதி.
சிறுவயதிலேயே தமிழ் இலக்கியங்களைக் கற்றவர் அருணகிரி. முருகப்பெருமானை வணங்கும் வழக்கம் சிறுவயதி-ருந்தே அருணகிரிக்கு இருந்தது. இருந்தும் திருமணத்திற்குப்பிறகு அருணகிரியின் நடத்தையில் உண்டான மாற்றம் அவரின் மனைவி மற்றும் சகோதரியை மனம் வாடச் செய்தது.
காமத்தில் திளைத்துக் கொண்டிருந்த அருணகிரி அதற்காக பிற பெண்களையும் நாடிச் சென்றார். இதில் குடும்பம் வறுமைப்பட்டது. அவருக்கும் பெருநோய் எனப்படும் குஷ்டம் உண்டானது.
அவரிடம் செல்வம் பெற்ற பெண் களெல்லாம் இப்போது அவரை வெறுத்து ஒதுக்கினர். அவரின் இச்சைக்கு அவரின் மனைவியும் உடன்படவில்லை.
தன் குடும்ப நிலைக்கும், தனது இந்த இழிநிலைக்கும் தானே காரணம் என மனம் நொந்த அருணகிரி வீட்டைவிட்டு வெளியேறி, "மனம் போன போக்கில் போனதன் விளைவை' எண்ணி கால்போன போக்கில் போனார். அப்போது ஒரு பெரியவர் "நீ முருகக் கடவுளை நேசி' எனச்சொன்னார்.
அருணகிரிக்கு குழப்பம்!
"புலனடக்கமின்றி, கிடைத்தற்கரிய மனிதப்பிறவியை இப்படி பாழாக்கிய தன்னை முருகன் ரட்சிப்பாரா?' என்பதுதான்
அவரின் குழப்பம்.
அதனால் தன் வாழ்வை சுயமாக முடித்துக்கொள்ள முடிவெடுத்தார். ஆண்டவன் எடுக்க வேண்டிய முடிவை அருணகிரியால் எடுக்கமுடியுமா என்ன?
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கோபுரத்திற்கு ஏறி தற்கொலை செய்வதற்காக குதித்தபோது, இரு கைகள் தாங்கிப் பிடித்தது.
"தன்னைக் காத்தது யார்?' எனஅருணகிரி நோக்கியபோது "அருணகிரிநாதா' என அழைத்து காட்சியளித்தார் முருகப்பெருமான்.
அருணகிரியின் நாவில் "ஓம்' என தன் வேலால் எழுதி "திருப்புகழ்' பாடச் சொல்-, அருணகிரியின் தயக்கத்தைப் போக்கும்விதமாக "முத்து முத்தாகப் பாடு' என முதல் வார்த்தையை எடுத்துக் கொடுத்தார் முருகப் பிரான்.
அந்த நொடியி-ருந்து தன் இறுதி நொடிவரை "முருகன் புகழ்' பாடினார்.
இப்படியாக அருணகிரிநாதரின் வரலாறு செவிவழிக்கதைகள் வழியே உருவானது.
கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, திருப்புகழ், திருவகுப்பு, சேவல் விருத்தம், மயில் விருத்தம், திருவெழுகூற்றிருக்கை ஆகிய தலைப்புகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார் அருணகிரியார்.
எல்லாப் பாக்களும் முருகனுக்கே!
தமிழ்க் கடவுளாக, தமிழ் வளர்க்கும் கடவுளாக வணங்கப்படும் குறிஞ்சித் தலைவனான முருகனுக்கு...
குன்று தோறும் நின்றாடும் குமரனுக்கு என்றும் இளமை குன்றாத் தமிழில் எத்தனையோ பக்தி இலக்கியங்கள் எழுதப்பட்டது; எழுதப்படுகிறது; எழுதப்படும்.
முருகப் பெருமானால் உயிர் மீட்கப் பட்டு "உலகம் உய்யஉன் வாயால் திருப்புகழ் பாடு' என முருகனாலேயே ஞானஸ்தனாக்கப்பட்டஅருணகிரிநாதர் மனம்உருகிப் பாடிய அரும் பாக்கள் நூறின் தொகுப்பே "கந்தர் அலங்காரம்' எனப்படும் "கந்தரலங்காரம்'.
சுமார் ஐநூறு ஆண்டுகள் கடந்த பின்னும் பக்தி இலக்கியத்தில் தனி இடம் பிடித்து, தீராப் புகழுடன் திகழ்கிறது "கந்தர் அலங்காரம்'.
முருகப்பெருமான்மீது கொண்ட முரட்டுப் பக்தியைப்போலவே, சுவையான# அதேசமயம் முரட்டுச் சொற்களால் "கந்தர் அலங்காரம்' பாக்களை அமைத்திருக்கிறார் அருணகிரிநாதர்.
அவரின் உள் மனச் சிந்தனையை இந்தப் பாடல்களின் பொருளை மட்டுமே வைத்து அறிந்துவிட முடியாது.
கிருபானந்தவாரியார் சுவாமிகள் உள்ளிட்ட சில ஞானஸ்தர்களே "அருணகிரியார் பாடல்களின் முழுப்பொருளை எவரும் அறிய இயலாது' எனச் சொல்-யிருக்கையில் நமக்கு அது கைவராது என்பதே முழு உண்மை.
ஆயினும்...
முருகன் புகழ் பேசும் ஆர்வத்தில்அருணகிரியாரின் சொல்லெடுத்தே இந்த முயற்சியை மேற்கொள்கிறோம்.
அலங்காரப் பாடல்களை அவர் வரிசைப்படி அமைத்திருக்கவில்லை. "முருகனின் பெருமை பேசல்' என்கிற ஒரே நோக்கத்தில் மட்டுமே தன் எண்ணத்தில் உதித்த போதெல்லாம் இந்தப் பாக்களை எழுதியிருக்கிறார்என்பதை படிக்கும்போது உணரமுடியும்.
"கூறியது கூறல்' எனபது சில# பல நேரங்களில் ச-ப்பூட்டக் கூடியதாக அமையும். ஆனால் அருணகிரியாரும் தன் பாடல்களில் "கூறியது கூறி' யிருப்பினும் அவை சுவை குன்றாமல் சொல்லப்பட்டிருக்கிறது.
உதாரணத்திற்குச் சொல்லவேண்டுமானல் பல பாடல்களில் எமனைச் சீண்டியிருக்கிறார் தான் முருகனடிமை என்கிற துணிவில்.
ஆனால் பெரும்பாலும் பாடல்களில் புராண நிகழ்வுகளை, இதிகாச நிகழ்வுகளை போகிற போக்கில்# அதேசமயம் புத்தியில் உரைக்கிறார்போல சொல்-விட்டுப் போகிறார்.
"கந்தர் அலங்காரம்' வாசிக்கும் இளைய தலைமுறையினருக்கு அந்தப் புராண# இதிகாச நிகழ்வுகள் ஓரளவேனும் தெரியவேண்டும் என்பதற்காக அந்தக் கதைகளை சம்பந்தப்பட்ட பாடல்களின் கீழே தந்துள்ளோம்.
அதேபோல....அருணகிரியாரின் பாடல்களின் கூற்றுக்கு வ-மை சேர்க்கும் ஒரே நோக்கத்தில் மட்டுமே திருவள்ளுவர், திருமூலர், மாணிக்கவாசகர், ஒளவையார், பட்டினத்தார், பாரதியார் உள்ளிட்டோரின் பாடல்கள் கையாளப்பட்டுள்ளது.
மற்றபடி... "அருணகிரியாருக்கு முன்பே அவர் சொல்-விட்டார்,அருணகிரியார் சொன்னதைத்தான் இவர் சொல்-யிருக்கிறார்' என்ற பொருளில் உதாரணங்கள் கையாளப்படவில்லை என்பதை மனதில் வலுவாக பதிய வைத்துக்கொள்ளுங்கள்.
அதேபோல....நீங்கள் அறிந்த, உங்களுக்கு நன்கு தெரிந்த புராணக்கதைகளும்இங்கே உதாரணப்படுத்தப்பட்டிருக்கலாம்.
தமிழ்ச் செறிவும், இசைச் செறிவும் நிறைந்த கந்தர் அலங்காரப் பாடல்களை இந்தத் தலைமுறைக்கு எளிய முறையில் கொண்டு சேர்க்கும்வகையில் நமது "ஓம் சரவணபவ' இதழில் தொடராக எழுதுகிறோம்.
முருகப்பெருமானுக்கு...
அருணகிரிநாதருக்கு...
அடியார்களுக்கு...
கௌமாரர்களுக்கு....
தவறுகள் இருப்பின்; அதை திருத்த உதவவேண்டி.... பெரியோர்களுக்கு...
நன்றி!
(பாட்டு வரும்)