மேஷம்

மேஷ ராசிநாதன் செவ்வாய் இந்த மாதம் 21-ஆம் தேதி வரை 4-ல் நீசமாக இருக்கிறார். என்றாலும் செவ்வாயின் உச்சநாதன் மகரச்சனி செவ்வாயைப் பார்ப்பதால் செவ்வாய்க்கு நீசபங்க ராஜயோகம் ஏற்படுகிறது. 3-க்குடைய புதன் 3-ல் ஆட்சியாகிறார். சகோதரவழியில் நன்மைகள் ஏற்படும். தன்னபிக்கையும் தைரியமும் அவ்வப்போது கைகொடுக்கும். சனி வக்ர கதியில் இயங்குவதால் தொழில் மந்தநிலையில் இருக்கும். ஒரு தொகை செலவழித்த பின்னரே, அடுத்த தொகை கைக்கு வந்துசேரும். பணியாளர்களால் சில தொல்லைகள் ஏற்படும். வந்த பணியாளர்களும் ஒத்துழைப்பு தர மறுப்பர். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அலுவலுகப் பொறுப்புகள் அதிகரிக்கும். ஆனாலும் உழைப்பிற்கேற்ற பலன் உண்டாகாது. பணிபுரியும் இடத்தில் எதிர்ப்பார்த்த சலுகைகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். செவ்வாய் 5-ல் திரிகோணம் பெற்றபிறகு நினைத்தவை நிறைவேறும். எண்ணியது ஈடேறும். கருதியது கைகூடும். குருபார்வை ராசிநாதனுக்குக் கிடைப்பதால் மாதப் பிற்பாதியில் நன்மைகள் உண்டாகும்.

tt

ரிஷபம்

Advertisment

ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 3-ல் கடகத்தில் இருக்கிறார். அவரை 9-க்குடைய சனி பார்க்கிறார். சகாய ஸ்தானத்தில் சுக்கிரன் சஞ்சரிக்குபொழுது தைரியம், தன்னம்பிக்கை அதிகமாகும். அவருடன் 12-க்குடைய செவ்வாய் இணைந்திருக்கிறார். அது அவருக்கு நீச ஸ்தானம். சனி பார்வையால் நீசபங்கம் பெறுகிறார். தொழில் துறையில் சில மாற்றங்கள் ஏற்படும். நடக்கும் தொழி-ல் புதிய பங்குதாரர்கள் வந்து இணைவர். 10-ல் குரு வக்ரம். உத்தியோகத்துறையில் உள்ளவர்களுக்கு மறுக்கப்பட்ட சலுகைகள் கிடைக்கும். சிலருக்கு ஓய்வுபெற்ற பிறகும்கூட கௌரவப் பணி நீடிப்பு பற்றிய தகவல் வரலாம். 2-க்குடைய புதன் ஆட்சி. குடும்ப ஸ்தானம் வலுவடைவதால் குடும்ப முன்னேற்றம் கூடுதலாக இருக்கும். 10-ல் குரு நின்று 2, 6-ஆம் இடத்தைப் பார்ப்பதால் பொருளாதாரம், ஒற்றுமை எல்லாம் நன்றாக விளங்கும். பொதுவாழ்விலும் புதிய பொறுப்புகள் மற்றும் பதவிகள் வர வாய்ப்புண்டு. சுபகாரியச் செலவு களால் விரயங்களும் உண்டாகும். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியடை யும்.

மிதுனம்

மிதுன ராசிநாதன் புதன் ஆட்சி யாக இருக்கிறார். 9-ல் குரு திரிகோணம் பெற்று ராசியைப் பார்க்கிறார். உங்கள் செயல்பாடு, திறமை எல்லாம் நன்றாக இருக்கும். என்றாலும் அட்டமத்துச் சனி ஒருபுறம் நடந்துகொண்டிருப்பதால் சில காரியங்களில் தாமதம், தேக்கம் உண்டாகலாம். 2-ல் செவ்வாய் நீசபங்கம் பெறுகிறார். அவ்வப் போது குடும்பத்தில் சிற்சில குழப்பங் கள் வந்து விலகும். சகோதர- சகோதரி களால் பிரச்சினைகளும் எழலாம். சிலருக்கு குடியிருப்பு மாற்றம், உத்தியோக இடமாற்றம் போன்றவை உண்டாகும். எனினும் அவை திருப்தியும் தரும். கொடுக்கல்- வாங்க-ல் பிரச்சினை நிலவினா லும் பாதிப்புக்கு இடமிருக்காது. 2-க்குடைய சுக்கிரன் 12-ல் இருப்பதால் அந்நியர் தனம் உங்களிடத்தில் புரளும். விரயத்திற்கேற்ற வருமானம் வந்துகொண்டிருக்கும். 10-க்குடைய குரு 9-ல் நிற்பது தர்மகர்மாதிபதி யோகத்தை ஏற்படுத்தும். தொழில் துறையில் லாப நோக்கம் கருதி எடுக்கும் முயற்சிகள் கைகூடும். அரசியல் ஈடுபாடு அதிகரிக்கும்.

Advertisment

கடகம்

கடக ராசிக்கு 10-க்குடைய செவ்வாயும் 11-க்குடைய சுக்கிரனும் ஒன்றுகூடி ஜென்ம ராசியில் நிற்கிறார்கள். 9-ல் நிற்கும் குருவை 10-க்குடைய செவ்வாய் பார்ப்பதும் ஒரு வகையில் தர்மகர்மாதிபதி யோகம்தான். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு திறமைக் குரிய அங்கீகாரம் கிடைக்கும். எதிலும் அவசரப்படாமல் பொறுமை, நிதானத்தைக் கடைப்பிடிப்பது நன்மை தரும். 2-க்குடைய சூரியன் 12-ல் இருப்பதால் வீண்விரயம், மருத்துவச் செலவு போன்ற உபாதைகள் உண்டாகலாம். 17-ஆம் தேதிக்குப் பிறகு, ஜென்ம ராசியில் சூரியன் மாறிய பிறகு விரயங்கள் கட்டுக்குள் இருக்கும். 11-க்கு டைய சுக்கிரன் ஜென்ம ராசியில் சஞ்சரிக் கும் காலம் (18-ஆம் தேதிவரை) ஓரளவு நற்பலன் உண்டாகும். வருமானம் திருப்தி தரும். வாழ்க்கைத் துணையால் ஏற்பட்ட பிரச்சினைகள் விலகி சுமூக தீர்வுகள் ஏற்படும். பிள்ளைகளின் முன்னேற்றம் கருதி எடுக்கும் முயற்சிகள் கைகூடும். உடன்பிறப்புக்கள்வகையில் நடைபெறும் சுபநிகழ்வுகளுக்கு நீங்களும் உதவி செய்வீர் கள். உங்கள் திட்டம், எண்ணங்கள் செயல் வடிவம் பெறும்.

சிம்மம்

இந்த மாத முற்பகுதிவரை சிம்ம ராசிநாதன் சூரியன் 11-ல் லாப ஸ்தானத் தில் இருக்கிறார். அவரை 5-க்குடைய குரு பார்க்கிறார். குருவின் பார்வை ராசிநாதனுக்கு, ராசிக்குக் கிடைக்கிறது. எனவே உங்கள் செயல்பாடுகளில் முன்னேற்ற மும், காரியங்களில் தேக்கமற்ற நிலையும், வம்பு வழக்குகளில் வெற்றியும் காணலாம். தொழி-ல் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த மாற்றங்கள் கிடைக்கும். உங்கள் பேச்சுக்கும் செயலுக்கும் மதிப்பு உண்டாகும். வேலையில் கேட்ட சலுகைகள் கிடைக்கும். 6-க்குடைய சனி ஆட்சி பெறுவதாலும், செவ்வாய் 12-ல் நின்று அவரைப் பார்ப்பதாலும், கடன்கள் ஒருபுறம் அடைபட்டாலும் மறுபுறம் கடன் வாங்கும் சூழலும் ஏற்படலாம். ஒரு கடனை அடைக்க இன்னொரு கடன் வாங்கவும் நேரலாம். எனினும் குரு ராசியைப் பார்ப்பதால் கௌரவம் பாதிக்கப்படாது. மரியாதை கெடாது. சிலருக்கு பூர்வீக சொத்துகள் விற்பனையாவதில் தாமதமாகலாம். சகோதரவழி உடன்பாடு கருத்து வேறுபாடாக அமையும். புதிய முயற்சிகளில் ஈடுபடலாம்.

கன்னி

கன்னி ராசிநாதன் புதன் 10-ல் ஆட்சியாக அமர்கிறார். இக்காலம் ஒரு நற்காலம். தொழில் ஸ்தானத்தில் புதன் சூரியனுடன் கூடி புதாதித்ய யோகத்தை உருவாக்குவதால், தொழில்துறையில் முன்னேற்றகரமான சூழல் தென்படும். அரசு காரியங்களில் நிலுவையில் கிடந்த உதவிகள் இப்போது கிடைப்பதற்கான அமைப்பும் உருவாகும். அரசியல் செல்வாக்கு அதிகரிக்கும். அதிகார வர்க்கத்தினரின் ஆதரவோடு ஒருசிலருக்கு புதிய பொறுப்புகளும் கிடைக்கலாம். சுயதொழில் தொடங்கும் முயற்சியில் இறங்குவீர்கள். 18-ஆம் தேதி முதல் 2, 9-க்குடைய சுக்கிரன் 12- ல் மாறுகிறார். எனவே களஸ்திர காரகன் மறைகிறார். கணவன்- மனைவிக்குள் ஒற்றுமைக்குறைவு ஏற்படலாம். 3-ல் உள்ள கேது சகோதர- சகோதரிவகையில் மனவருத்தங்களையும் மனக்கசப்புகளையும் உண்டாக்கலாம். 4-க்குடைய குரு 6-ல் மறைகிறார். வீடு, வாகனம், தேக சுகம் இவற்றில் பிரச்சினைகளை சந்திக்க நேரும். கணவர்வழி உறவினர் களால் செலவும் சங்கடங்களும் உண்டாகும்.

துலாம்

துலா ராசிநாதன் சுக்கிரன் 10-ல் இருக்கிறார். 10-ஆமிடம் தொழில், வாழ்க்கை, ஜீவன ஸ்தானம். அங்கு நிற்கும் சுக்கிரனால் தொழில்வளம் பெருகும். புதிய பங்குதாரர்கள் வந்திணைந்து பொருளாதாரத்தைப் பெருக்க வழிவகை செய்வார்கள். குடும்பத்தில் சுபமங்கள நிகழ்வுகளால் செலவுகள் ஏற்படலாம். அது சுபச்செலவாகும். வெளிநாடடில் வேலைக் காக முயற்சித்தவர்களுக்கு அனுகூலமான சூழல் அமைந்து வெளிநாடு செல்லும் முயற்சிகள் கைகூடும். 9-க்குயை புதன் 9-ல் ஆட்சி பெறுகிறார். பெற்றோர் வழியில் ஆதரவு கிடைக்கும். தாய்மாமன் அல்லது மைத்துனரால் உதவி, ஒத்தாசை உண்டாகும். 3-க்குடைய குரு 5-ல் வக்ரம் பெற்று ராசியைப் பார்க்கிறார். உடன்பிறப்பு கள் வழியே சிறு விரயம் ஏற்படலாம். தேக நலனில் அக்கறை காட்டுவது அவசியம். உத்தியோகம் சம்பந்தமாக சிலருக்கு இடமாற்றம் ஏற்பட்டாலும் அது நன்மை தரும் மாற்றமாக அமையும். கேட்ட சலுகைகள் இதுவரை கிடைக்கவில்லையே என்று கவலைப்பட்ட வர்களுக்கு இப்போது அது கிடைத்து மகிழ்ச் சியை உண்டாக்கும். 2-ல் உள்ள கேது வாக்கு, நாணயத்தைக் காப்பாற்ற இயலாதவராக்கும். யாருக்கும் வாக்குறுதி தரவேண்டாம்.

விருச்சிகம்

விருச்சிக ராசிநாதன் செவ்வாய் 9-ல் நீசமாக இருந்தாலும் சனி பார்ப்பதால் நீசபங்கம் பெறுகிறார். பொதுவாக செவ்வாய், சனி பார்த்தாலும் சேர்ந்தாலும் நல்லதல்ல என்பது ஜோதிடவிதி. என்றா லும் செவ்வாய் மகரத்தில் உச்சமடைவார். சனி அங்கு ஆட்சி. எனவே செவ்வாய்க்கு நீசபங்க ராஜயோகம் ஏற்படுகிறது. உடன் பிறப்புகளும் உடனிருப்பவர்களும் ஆதர வாக இருப்பார்கள். புதிய ஒப்பந்தங்கள் தேடிவரும். ஏழரைச்சனி காலத்தில் கைவிட்டுப்போன வாய்ப்புகள் இப்பொழுது தேடிவரும். 21-ஆம் தேதிமுதல் செவ்வாய் 10-ல் மாறுகிறார். எனவே தொழில்துறையில் லாபமும் வெற்றியும் உண்டாகும். 2-க்குடைய குரு 10-ஆம் இடத்தைப் பார்ப்பதால் புதிய முயற்சிகள் கைகூடும். வாழ்க்கை, ஜீவனம், உத்தியோகம் சம்பந்தமாக எடுக்கும் முயற்சிகள் நற்பலன் தரும். 7-க்குடைய சுக்கிரன் (18-ஆம் தேதிமுதல்) 10-ல் மாறுவார். கணவரால் மனைவிக்கும், மனைவியால் கணவருக்கும் யோகமும் நன்மதிப்பும் ஏற்படும். ஜென்ம கேது, சப்தம ராகு திருமண முயற்சிகளில் தாமதப்பலனை உண்டாக்கு வார்கள். பூர்வ புண்ணியம் சம்பந்தமாக நல்ல பலன்கள் அமையும்.

தனுசு

தனுசு ராசிநாதன் குரு 3-ல் மறைவாக இருக்கிறார். அவரை 12-க்குடைய செவ்வாய் பார்க்கிறார். 2-ல் சனி ஆட்சி, வக்ரம். செவ்வாயின் பார்வை சனிக்கும் கிடைக்கிறது. இம்மாதம் குடும்பச்சுமை கூடும். கொடுக்கல்- வாங்க-ல் கவனம் தேவை. ஜனன ஜாதகத்தில் சந்திர தசையோ சந்திர புக்தியோ நடந்தால், கோட்சாரத் தில் ஏழரைச்சனியும் நடப்பதால் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல் படவேண்டும். பொருட் சேதம் ஏற்படலாம். வீண்விரயங்கள் உண்டாகும். 6-க்குடைய சுக்கிரன் 8-ல் மறைவதால் விபரீத ராஜயோகம் செயல்படும். சிலநேரங்களில் திட்டமிடாத காரியங்களில்கூட நன்மை ஏற்படும். வாழ்க்கைத் துணையின் உத்தியோகம் சம்பந்தமாக நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். 7-ல் இருக்கும் புதன் சொந்த வீட்டில் ஆட்சி. திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடைபெறும். மாமன், மைத்துனர் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். வெளிநாட்டு நிறுவனங்களில் பணிபுரிய அழைப்புகள் வரலாம். 5-ஆமிடத்து அதிபதி 8-ல் மறைவதால், சிலநேரம் திட்டங்களில் மந்தமும் தேக்கமும் உண்டானாலும் தடைப்படாது.

மகரம்

மகர ராசிநாதன் சனி ஆட்சி, வக்ரம். கடகச் செவ்வாய் சனியைப் பார்த்தாலும் செவ்வாய் மகரத்தின் உச்சநாதன். எனவே பெரிய பாதிப்புகளுக்க இடம் ஏற்படாது. ஏழரைச் சனியில் ஜென்மச் சனி நடப்பதால் இடமாற்றம், குடியிருப்பு மாற்றம் உண்டாகலாம். 12-க்குடைய குரு 2-ல் வக்ர கதியில் செயல்படுகிறார். விரயத்திற்கேற்ற வருமானம் வந்துகொண்டேயிருக்கும். எந்தக் காரியத்தையும் கையில் பணத்தை வைத்துக்கொண்டு செய்ய இயலாது. காரியத்தைத் தொடங்கிவிட்டால் ஏதாவது ஒரு வழியில் பணம் புரளும். காரியங்கள் நடைபெறும். 5-ல் உள்ள ராகு பிள்ளைகள்வகையில் எதிர்பாராத செலவுகளை உண்டாக்கலாம். சுக்கிரன் 7-ல் நிற்கிறார். சனி 7-ஆமிடத்தைப் பார்ப்பதாலும் 7-ல் செவ்வாய் இருப்ப தாலும், திருமண வயதையொட்டிய ஆண்- பெண்களுக்கு திருமண முயற்சிகள் தாமதமாகலாம். களஸ்திரகாரகன் களஸ்திர ஸ்தானத்தில் இருந்தால் காரகோ பாவக நாசம் என்பது ஜோதிடவிதி. உத்தியோகத் துறையில் மாற்றம் நிகழலாம். வெளிநாட்டு வேலைக்காக முயற்சிப்பவர்களுக்கு முயற்சி கைகூடும். வெளியூர் அல்லது வெளிமாநில வேலைகளும் சித்தியாகும்.

கும்பம்

கும்ப ராசிநாதன் சனி தன் ராசிக்கு 12-ல் மறைந்தாலும் ஆட்சிபலம் பெறுவதால் மறைவு தோஷம் பாதிக்காது. பொதுவாக எந்த ஒரு கிரகமும் ஆட்சி, உச்சம் பெறும்போது அதற்கு மறைவு தோஷம் பாதிக்காது. உதாரணமாக துலா ராசிக்கு 8-ல் ரிஷபத்தில் சுக்கிரன் ஆட்சிபெற்றால் மறைவு தோஷம் பாதிக்காது. 2-க்குடைய குரு ஜென்ம ராசியில் இருக்கிறார். அவர் கும்ப ராசிக்கு தன லாபாதிபதி. எனவே பொருளாதாரப் பற்றாக்குறை விலகும். விரயச் சனியின் ஆதிக்கத்தால் சுபவிரயங்கள் உண்டாகும். 3-க்குடைய செவ்வாய் 6-ல் மறைகிறார். அவர் விரய ஸ்தானத்தைப் பார்ப்பதால் உடன்பிறப்புகள் வழியில் சில விரயம் உண்டாகலாம். ஒரு சிலருக்கு இடமாற்றங்கள், ஊர் மாற்றங்கள் ஏற்படலாம். 10-ல் கேது- தொழில்துறையில் கூட்டாளிகளுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விலகும். 4-க்குடைய சுக்கிரன் 6- மறைகிறார். வீடு, வாகனம் சம்பந்தமாக கடன்கள் நேரும். என்றாலும் மதிப்பு மரியாதை பாதிக்கப்படாது. தேக சுகத்தில் கவனம் தேவை. ஒரு சில சமயங்களில் இனம் புரியாத கவலை ஏற்படலாம்.

மீனம்

மீன ராசிநாதன் குரு தன் ராசிக்கு 12-ல் மறைவு. அவருக்கு வீடு கொடுத்த சனி 11-ல் ஆட்சி பெறுவதால் மறைவு தோஷம் நிவர்த்தியாகும். குருவும் வக்ரம். சனியும் வக்ரம். விரயங்கள் அதிகரிக்கலாம். அதை சுபவிரய முயற்சியாக மாற்ற முற்படுவது நல்லது. ஒரு சிலருக்கு தொழி-ல் விரயம் ஏற்படலாம். என்றாலும் அதை முதலீட்டு விரயமாகக் கருதி லாப முன்னேற்றத்தை நோக்கி செயல்படலாம். 2-க்குடைய செவ்வாய் 5-ல் நீசம். திரிகோணமாகவும் இருக்கிறார். எனவே உங்களது திட்டம், முயற்சி, செயல்பாடு இவற்றில் வேகமும் விறுவிறுப்பும் தென்படும். எனினும் ஏதோ ஒரு சிறுசிறு தாமதங்கள் அவ்வப்போது நேரலாம். 17-ஆம் தேதி முதல் 6-க்குடைய சூரியன் 5-ல் திரிகோணம் பெறுகிறார். பிள்ளைகள்வகையில் நிலவிய குழப்பங்கள் அகலும். அவர்களின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சிகள் பலனளிக்கும். சொந்த பந்தங்களுக்கிடையே செலவுகளும் பிரச்சினைகளும் ஏற்படும் என்றாலும், குற்றம் பார்க்கின் சுற்றமில்லை என்று பெருந்தன்மையாக விட்டுக்கொடுத்து நடந்துகொள்ளுங்கள். இனியொரு ஜென்மாவில் யார் யார் எங்கேயோ- யாருக்குத் தெரியும்?