இறைவனும் மனித ஆன்மாவும் வெவ்வேறல்ல; ஒன்றே' என்னும் அத்வைத சித்தாந்தை வகுத்த ஆதிசங்கரர், அதை எல்லாராலும் கடைபிடிக்க முடியாதென்று ஆறு சமயங்களை வகுத்தார்.
காணாபத்யம்- கணபதி வழிபாடு.
சைவம்- சிவ வழிபாடு.
சாக்தம்- அம்பாள் வழிபாடு
கௌமாரம்- கந்தன் வழிபாடு.
வைணவம்- மகாவிஷ்ணு வழிபாடு.
சௌரம்- சூரிய வழிபாடு.
இவற்றில் எந்த மார்க்கத்தை மேற்கொண்டாலும் முக்தி கிட்டும் என்று கூறி, பல தலங்கள் சென்று தரிசித்து அம்பாள்மீது எண்ணற்ற துதிகள் செய்தார்.
அம்பாள் வழிபாட்டுக்கு நவராத்திரி மிகச் சிறப்பானதாகக் கருதப்படுகிறது. தயை மிகுந்தவள் தாய்- பெண். புரட்டாசி மாத நவராத்திரி வழிபாடே பெரும் பான்மையாகக் கடைப் பிடிக்கப்படுகிறது. திருப்பதி வேங்கடேசப் பெரு மாளுக்கு நவராத்திரி யின் போதுதான் பிரம் மோற்சவம் நடத்தப்படு கிறது. அம்பாள் வழி பாட்டுக்கு உகந்த நாள் பௌர்ணமி.
கன்னிப் பெண்ணால் தான் தனக்கு மரணம் நிகழவேண்டுமென வரம் வாங்கிய மகிஷாசுரன், அந்த ஆணவத் தில் அனைவரையும் துன்புறுத்த ஆரம்பித் தான். அப்போது பிரம்மா, விஷ்ணு, சிவ சக்திகள் ஒன்றிய அம்பிகையாக பராசக்தி தோன்றி, தசமி நாளில் அசுரனை அழித் தாள். அந்த நாளில் எந்த செயலைச் செய்தா லும் அது வெற்றிபெறும் என்பதால் அது விஜயதசமி எனப்பட்டது. வாயு, அனுமன், பீமன் அம்சமாகத் தோன்றிய மாத்வகுரு மத்வாச்சாரியார் அவதரித்ததும் விஜய தசமி நாளில்தான்.
நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் அம்பிக்கையை துர்க்கையாகவும், அடுத்த மூன்று நாட்கள் மகாலட்சுமியாகவும், இறுதி மூன்று நாட்கள் சரஸ்வதியாகவும் வழிபடுகிறோம். பத்தாம் நாள் மகிஷா சுரமர்த்தினியாக வணங்குகிறோம். இதை சாரதா நவராத்திரி என்பர்.
வங்காள மாநிலத்தில் சக்தி வழிபாடு தான் பிரதானமாகத் திகழ்கிறது. கருவறை யில் காளியின் உருவமே இருக்கும். அங்கு துர்க்கா பூஜையென்று ஆறாம் நாள் மாலையில் ஆரம்பிப்பார்கள். இதில் லட்சுமி, சரஸ்வதியுடன் பிரதானமாக வணங்கப்படுபவள் மகிஷாசுரமர்த்தினியே. கணபதி, முருகனையும் காணலாம். தேவியின் உற்சவ அலங்கார விக்ரகத்தை, விநாயகர் சிலையை நீரில் கரைப்பதுபோல விஜயதசமியன்று கரைத்துவிடுவர்.
சாரதா நவராத்திரி தவிர, தேவி உபாசகர்கள் வழிபடும் மேலும் மூன்று நவாத்திரிகள் உண்டு.
ராமநவமியை ஒட்டிய ஒன்பது நாட்கள் வசந்த நவராத்திரி, லலிதா நவராத்திரி என்பர். தை மாதத்தில் ஒன்பது நாட்கள் சியாமா- மாதங்கி (தேவியின் மந்த்ரிணி) நவராத்திரி எனப்படும். ஆடி மாதத்தில் வாராஹி (தேவியின் படைத்தலைவி) நவராத்திரி கொண்டாடுவர்.
சப்த மாதர்கள்
அசுரவதத்தின்போது பராசக்திக்குத் துணையாக பிரம்மனின் சக்தியான பிராம்மி, திருமாலின் சக்தியான வைஷ்ணவி, மகேஸ்வரரின் சக்தியான மாகேஸ்வரி, முருகனின் சக்தியான கௌமாரி, இந்திரனின் சக்தியான இந்த்ராணி, ஈசனின் சக்தியான சாமுண்டி, அனந்தவராஹ சக்தியான வாராஹி ஆகிய எழுவரும் துணைநின்றனர். இவர்களே சப்த மாதர்கள் ஆவர்.
தசமகாவித்யா
மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்கள் போன்று, தேவியின் பத்து வடிவங்களை தசமகா வித்யா என்பர். காளி, புவனேஸ்வரி, தூமாதேவி, தாரா, திரிபுர பைரவி, பகளாமுகி, ஸ்ரீவித்யா, சின்னமஸ்தா, ராஜமாதங்கி ஆகியோரே அவர் கள். (இந்த அவதாரங்களுக்குத் தனித்தனியே காரணங்கள் உள்ளன.) சப்த மாதர்களை மாரியம்மன் கோவில் களிலும், இன்னும் சில கோவில்களில் பிராகாரத் திலும் காணலாம். தசமகாவித்யா தேவிகளை ஒன்றாகக் காண்பதரிது. ஒருசில தனிக்கோவில் களில் காணலாம்.
லலிதா
அம்பாளை வழிபட, துதிக்க பல சகஸ்ர நாமங்கள் உள்ளன. இவற்றுள் உன்னதமானது லலிதா சகஸ்ரநாமம். (1,008 நாமங்கள்.) லலிதா தேவி காமேஸ்வரரின் (சிவன்) பத்தினி; பண்டாத சுரனை அழிப்பதற்காகத் தோன்றியள். இவளது சகஸ்ரநாமத்தை ஹயக்ரீவர் அகத்தியருக்குக் கூறவில்லை. அதைத் தனக்குக் கூறுமாறு அகத்தி யர் கேட்க, "அது பரமரகசியம். விழைந்து கேட்டா லன்றி அதை எவருக்கும் கூறக்கூடாதென்பது அம்பாள் ஆக்ஞை. நீ விரும்பிக் கேட்டதால் சொல்கிறேன்'' என்று லலிதா சகஸ்ரநாமத்தைக் கூறினார்.
அதைக்கேட்ட அகத்தியர், "என் மனம் ஆனந் தம் அடையவில்லையே'' என்று மீண்டும் கேட்க, ஹயக்ரீவர் அம்பாளிடம் உத்தரவு பெற்று, 300 நாமங்கள்கொண்ட லலிதா திரிசதி, பீஜாக்ஷரங் கள் பொருந்திய 15 பஞ்சதசியைக் கூறியருளினார். அம்பாள் வழிபாட்டுக்கு சகஸ்ரநாமமும் திரிசதியும் மிகவும் உன்னதமானவை.
அன்னை அருள்பொழியும் பல தலங்கள், சக்தி பீடங்கள் உள்ளன. ஒரு சிலவற்றை சிந்திப்போமா?
பாளையங்கோட்டை ஆயிரத்தம்மன் நெல்லை மாவட்டத்தில் பல அம்மன் கோவில்கள் உள்ளன. இந்த அம்மன் அனை வருக்கும் மூத்தவளாம். ஒருசமயம் இப்பகுதி யில் வாழ்ந்த மக்களில் பலர் வெப்பநோயால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் அம்மனை வேண்ட, அவள் ஆயிரம் கண்களால் அவர் களைப் பார்த்து குணப்படுத்தினாளாம்.
அப்போதுமுதல் ஆயிரத்தம்மன் என்று பெயர் கொண்டுவிட்டாள்.
ஒருசமயம் ஆங்கிலேய அதிகாரி ஒருவர், தன் காவலர்கள் பலர் இல்லாதது கண்டு, "எங்கே அவர்கள்?' என்று கேட்க, அவர்கள் அம்மன் கோவிலுக்குச் சென்றிருப்பதாக பதில் கிடைத்தது. உடனே கோபத்துடன் புறப் பட்டு கோவிலுக்குச் சென்ற அவர், "இந்த கற்சிலையையா கும்பிடுகிறீர்கள்?' என்று சொல்லி, தன் துப்பாக்கியால் அம்மன் விக்ரகத்தை சுட்டார். விக்ரகத்தின் கைகள், மூக்கு, மார்புப் பகுதிகள் சேதமடைந்தன. காவலர்களை விடுதிக்குச் செல்லுமாறு உத்தரவிட்டார்.
வீடு திரும்பியபோது, இவர் சுட்டதால் அம்மன் சிலையின் எந்த பாகங்கள் சேத மடைந்ததோ, அதே இடங்களில் காயம்பட்டு அவரது மனைவி, மகன், மகள் ஆகிய மூவரும் துடித்துக்கொண்டிருந்தனர். இவருக்கும் வெப்பநோய் ஏற்பட்டு வேதனையுற்றார். அருகிலிருந்தவர்கள், "அம்மனுக்கு நீங்கள் செய்த குற்றமே இதற்குக் காரணம்' என்று சொல்ல, வியப்பிலும் அச்சத் திலும் ஆழ்ந்த அவர் உடனே அம்மன் சந்நிதிக்கு விரைந்து சென்றார். அவளைப் பணிந்து மனமுருக மன்னிப்பு வேண்டினார். சிறிது நேரத்திலேயே அனைவரும் நலமடைந்தனராம். இதற்குப் பிராயச்சித்தமாக வெள்ளிக் கவசம் செய்து அம்மனுக்கு அணிவித் தாராம்.
சேதமான சிலையை வணங்கக் கூடாதென்று பக்தர்கள் பதிய சிலை செய்து பிரதிஷ்டைக்கு ஏற்பாடு செய்தனர். அவர்கள் கனவில் தோன்றிய அம்பிகை, "உங்கள் தாயின் உடலுக்கு ஏதேனும் ஊறு நேர்ந்தால் அவளை விரட்டிவிடுவீர் களா? எனது இந்த சிலையே இங்கு இருக்கட் டும். புதிய சிலையை சிவன் கோவிலில் வைத்து வழிபடுங்கள்' என்றாளாம்.
எனவே கோவிலிலுள்ள தெய்வ விக்ரகங் களை வெறும் கற்சிலையென்று எண்ணி விடக்கூடாது.
பேராத்து செல்லியம்மன்
இந்த ஆலயம் நெல்லை வண்ணாரப் பேட்டை பகுதியில், தாமிரபரணி நதியின் கிழக்குக் கரையில் உள்ளது.
இந்த ஆலயம் உருவானவிதம் வியப்பானது.
அம்பாள் பக்தர் ஒருவர் தாமிரபரணி நதிக் கரையில் நீண்ட தூரம் நடந்தேசென்று அம்மனை தரிசித்துவருவது வழக்கம். வயதாக வயதாக நடப்பதற்கு மிகவும் சிரமப்பட்டார். ஒருநாள் சென்றபோது, நடக்கவியலாமல் ஓரிடத்தில் சோர்ந்து அமர்ந்துவிட்டார். அப்போது அங்குவந்த சிறுமி ஒருத்தி, "என்ன தாத்தா... உடம்புக்கு முடியலையா? கவலைப் படாதீங்க. ஆதோ... ஆத்துல மிதந்துவர்ற எலுமிச்சம் பழத்தைப் பாருங்க' என்றாள். அவருக்கு உடலில் புத்துணர்வு வந்ததுபோல இருந்தது. எழுந்து ஆற்றிலிறங்கி எலுமிச்சம்பழத்தை எடுக்கச் சென்றார்.
அப்போது காலில் ஏதோ இடற, என்னவென்று பார்த்தபோது அது எட்டுக் கைகள் கொண்ட அம்மன் விக்ரகம். திரும்பிப் பார்த்த போது சிறுமியைக் காணவில்லை.
வியந்த அவர், அம்மன் தான் இங்கிருப் பதை உணர்த்தினாள் போலும் என்றெண்ணி, பக்தர்களின் துணை கொண்டு இவ்வாலயத்தை எழுப்பி னாராம். இதில் ஒரு விநோதம் என்னவென்றால், துர்க்கமன் என்னும் அரக்கனை அழித்த துர்க்காதேவி, தன் உக்ரம் தணிய இப்பகுதியில் தாமிரபணி நதியில் நீராடினாளாம். அது குட்டத்துறை தீர்த்தம் என்றா னது. அது சர்வரோக நிவாரண தீர்த்தமானது.
ஆங்கில அதிகாரி ஒருவர் தூக்க மின்மை நோயால் அவதிப்பட்டார். "குட்டத்துறையில் நீராடி அம்மனை வழிபட்டால் நோய் நீங்கும்' என்றொருவர் சொல்ல, அதிகாரியும் அங்குவந்து ஒரு விடுதியில் தங்கினார். அப்போது அங்கு விழா நடந்துகொண்டிருந்தது. மேளதாளம், நாதஸ்வரம், மக்களின் ஆரவாரம் என பேரிரைச்சலாக இருந்தது. பயணக் களைப் பிலும், தூக்கமின்மையிலும் இருந்த அதிகாரி ஆத்திரப்பட்டு, வாத்திய ஓசைகளை நிறுத்த உத்தரவிட்டார். அதன்படியே நிறுத்தப் பட்டது. சற்று நேரத்தில் அதிகாரிக்கு வெப்ப நோயும் சேர்ந்துகொள்ள துடிதுடித்தார். "விழாவை நிறுத்தச் சொன்னதுதான் காரணம்' என்று சிலர் சொல்ல, அந்த அதிகாரி அம்மனிடம் சென்று மன்னிப்புக்கோரி, விழாவைத் தொடர்ந்து நடத்துமாறு கூறினார்.
பின்னர் நதியில் நீராடி விடுதிக்குத் திரும்பிய வர் நிம்மதியாக உறங்கினாராம். நன்றிக் கடனாக அம்மனுக்கு வெள்ளிக்கவசம் அணிவித்தாராம்.
மதுரை மீனாட்சி
1812-ஆம் ஆண்டில் ரோஸ்பீட்டர் என்னும் ஆங்கிலேயர் மதுரை ஆளுனராக இருந்தார். பிரம்மாண்டமான ஆலய கோபுரங்களையும், உற்சவங்களையும் கண்டு வியந்தாராம். எதையும் வெறுக்கவில்லை. இந்நிலையில் ஒருநாள் தன் மாளிகையின் மாடியில் உறங்கிக்கொண்டிருந்தாராம்.
அப்போது சிறுமி ஒருத்தி அங்குவந்து அவரைத் தட்டியெழுப்பி, "சீக்கிரமாக எழு' என்றாள். "யார் இந்த சிறுமி... பூட்டிய அறைக்கு எப்படி வந்தாள்' என்று வியந்தபடி அவர் எழுந்து நிற்க, அவர் கையைப் பிடித்து கீழே அழைத்துவந்த சிறுமி வாசலுக்கு வெளியே நிற்கவைத்தாள். அப்போது ஆங்கிலேயர் உறங்கிக்கொண்டிருந்த அறையின் மேற்கூரை சரிந்து விழுந்தது.
"அங்கு நான் உறங்கிக்கொண்டு இருந்திருந் தால் இந்நேரம் என் நிலை என்னவாகியிருக்கும்' என்று திகைத்தவர், தன்னை அழைத்து வந்த சிறுமியைத் தேட, அவள் வேகமாக மீனாட்சி ஆலயத்துக்குள் சென்று மறைந்ததைக் கண்டாராம். "என் உயிரைக் காப்பாற்றியது அன்னை மீனாட்சியா!' என்று மெய்சிலிர்த்த அவர், மீனாட்சியம்மனின் தங்க குதிரை வாகனத் துக்கு தங்கக் காப்பு வழங்கினாராம்.
திருநணா பவானி
பிரயாகை முக்கூடல்போல காவிரி, பவானி, அமுதநதி (கண்ணுக்குத் தெரியாது) ஆகியவை ஒன்றுசேரும் தலம். பித்ரு தர்ப்பணங்கள் செய்ய மிக உகந்த தென்னாட்டுத் தலம். 1802-ஆம் ஆண்டுமுதல் பத்தாண்டு காலம் ஆளுநராக இருந்த வில்லியம் காரோ என்னும் ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டில் இப்பகுதி இருந்தது. அவர் ஆலய உற்சவங்களையும், மக்களின் ஈடுபாட் டையும் கண்டு ரசிப்பாராம். ஆங்கிலேயர் என்பதால் அவருக்கு ஆலயத்திற்குள் செல்ல அனுமதியில்லை. அதனால் வெளிச்சுவரில் சிறிய துளையிட்டு அதன்வழியே தரிசிப்பா ராம். (அந்தத்துளை இப்போதும் உள்ளது.) ஒருநாள் அவர் ஆலயத்தின் அருகே இருந்த விடுதியின் மாடியில் படுத்துறங்கிக்கொண்டி ருந்தார். அப்போது ஒரு சிறுமி அவரை எழுப்பி கையைப் பிடித்து வெளிய இழுத்துவந்து நிறுத்தினாள். அதேநேரம் மாடியின் கூரை சரிந்து விழுந்தது. வியப்பின் எல்லைக்கே சென்ற அவர் அந்த சிறுமியைப் பார்க்க, ஒரு நொடிப்பொழுது நேரம் அன்னை பவானி யாகக் காட்சியளித்து, பின் ஆலயத்திற்குள் சென்று மறைந்தாளாம். அந்த ஆங்கிலேயர் அன்னை பவானிக்குக் காணிக்கையாக, 10-1-1804-ல் தங்கக் கட்டில் வழங்கினார்.
அதை இப்போதும் காணலாம்.
மகாராஷ்டிர மாநிலம் துல்ஜாபூரில் பவானி ஆலயம் உள்ளது. சக்தி பீடங்களுள் ஒன்று. ஆதிசங்கரர் அருளிய சௌந்தர்ய லஹரியின் 22-ஆவது பவானி நாமாவளியின் பொருளை இங்கு காண்போம்.
"பவன் என்னும் சிவனின் பத்தினியே, நீ என்மீது கருணை பொழிவாயாக' எனறு துதிக்க எண்ணி, "பவானி நீ' என இருபதங்கள் சொன்னதுமே, அந்த பக்தனுக்கு விஷ்ணு, பிரம்மா, இந்திரன் ஆகியோரின் கிரீட ஒளியில் நீராஜனம் செய்யப்படும் உனது சாயுஜ்ஜியப் பதவியை அளிக்கிறாய்.
ஆக, இந்த நவராத்திரி புண்ணிய நாட்களில், கருணாமயமான அம்பிகையை வழிபட்டு அருள் பெறுவோம்!