தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிறப்பு வாய்ந்த தொன்மையான தென்மண்டலத்தின் தென்காசி மாவட்டத்தின் முக்கிய சிவாலய மான சங்கரன்கோவில் சங்கர நாராயணர் கோயிலின் அரிய பல சிறப்புக்களைக் கொண்ட ஆடித்தபசு திருவிழா ஜூலை 31 அன்று லட்சக்கணக்கான பக்தர்கள் திரள பக்தி கோஷத்துடன் கோலாகலமாக நடந்தேறியது.
தென்மண்டலத்தில் ஆதிபகவான் நடத்திய அதிசய நிகழ்வு தான் இது.
கல்ப கோடி காலத்திற்கு முன்பு நடந்த ரத்தச் சரித்திரம் அது. அப்போதைய கால கட்டத்தில் பக்தர்கள் சைவர்கள், வைஷ்ணவர்கள் என்று இரு கூறாகப் பிளவுபட்டு நின்றார்கள். சைவம் பெரிதா வைணவும் பெரிதா? எது அரியது, பெரியது என்ற ஈகோ பிரச்சினை காரணமாக புல நிலவரம் தெரியாமல் மோதிக் கொண்டார்கள். இரண்டு தரப்பு களுமே நடத்திய மோதலில் வெட்டியும், குத்தியும், குருதிப்புனல் ஒட மாண்டனர். பலர் கழுவிலேற்றப்பட்டனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/kovil_33.jpg)
பூலோகத்தில் பக்தர்கüன் ஈகோ யுத்தம் காரணமாக குருதியாறு ஓடுவதைக் கண்டு பதை பதைத்துப் போன தேவாதி தேவர்கள், அதனை தடுக்க முடியாமல் கை பிசைந்த நேரத்தில் ஆதிபகவன், அண்டசராட்சரத்தையும் அடக்கியாளும் சர்வேஸ்வரனின் பாதம் பணிந்து மன்றாடி னார்கள். பூலோகத்தில் அப்பாவி பக்தர்கள் அடித்துக் கொண்டு மாய்வதைத் தடுக்கவும் அவர்களுக்குள் அமைதி ஏற்படுத்த வேண்டியும் இறைஞ்சி நின்றார் கள்.
பக்தர்கüன் கோரிக்கையை நிறைவேற்ற பரம்பொருளான ஈசன் அப்போது தான் யாருமே எதிர்பாராத அந்த அரிய தோற்றத்தை மேற் கொண்டார். தன் உடலில் சரிபாதி இடது பக்கத்தில் அரியாகவும், வலது பாகத்தில் சிவனாக வும் ஒரு சேர உருவெடுத்து விண்ணுக்கும் மண்ணுக்கும் விசுவரூபமாய் பொறி பறந்தபடி நின்றார் பரம்பொருள். பிரளயமே பிளந்து கிளம்பியதைப் போன்ற தோற்றத்தையும் அசரீரியையும் கண்டு மிரண்டுபோன பக்தர்கள் தங்களையறியாமல் கண்ணீர் பொங்க பரம்பொருüன் பாதம் பணிந்தனர்.
உக்கிரம் தணிந்து சாந்தமான சர்வேஸ்வரன் சைவமும் வைணவமும் இரு கூறல்ல. வெவ்வேறு கிடையாது. இரண்டும் ஒன்றே. அந்த அரிய தத்துவத்தை உங்களுக்கு உணர்த்தவே யாம், தம் உடலில் அரியும் சிவனும் ஒரு சேர உருவெடுத்து காட்சி தந்தோம் என்று பக்தர்கüன் ஆக்ரோஷத்தைத் தணித்து அனைவரையும் ஒற்றுமைப்படுத்தினார். அன்று தொட்டு பூலோகத்தில் ஒடிய குருதிப்புனல் அடங்கியது.
சிவபெருமான் பக்தர்களுக்குக் காட்சியüத்த அந்த அரிய காட்சியினை அடியாளும் தரிசிக்க வேண்டும். பதியாக அடைய வேண்டும், என்ற தன் எண்ண ஒட்டத்தினை உமையவள் பார்வதி தேவியாரும் ஈசனிடம் வெüப்படுத்த.
அந்தக் காட்சியினைக் காணவேண்டு மாயின் பூலோகத்தில் புன்னைவனத் தில் எமை நினைத்து தவம் புரிதல் வேண்டும் என்று ஆக்ஞையிட, அம்மையும் அருள் வாக்கினை சிரமேற் கொண்டு பூலோகத்தின் புன்னைவனத்தில் பஞ்சபூதங்கள் பாதுகாக்க, கோக்கள் சூழ அன்னை பார்வதிதேவியார் சிவபெருமானை வேண்டி பல காலம் கடும் தவம் மேற்கொண்டார். உலக நாயகியின் மா தவம் கண்டு மெச்சிய சிவபெருமான சிறப்பு வாய்ந்த அரியும் சிவனுமாக தன் உடலின் ஒருசேர் காட்சியை விஷ்வரூப தரிசனமாய் நிற்க, பூரித்துப் போன தேவியும், சிவகாட்சியை கண்டு தரிசித்தார்.
அடி மாத பௌர்ணமி சுக்கிலபட்ச முகூர்த்தத்தில் அன்னைக்கு இந்த அதிசய காட்சியை ஈசன் அருüயதால் ஆடித்தபசு என்றானது. காணக் கிடைக்காத இந்த அரிய வைபவமும் நிகழ்வு நடந்த இடம் புன்னைவனமாக சங்கரன்கோவிலில் நடந்ததால் அங்கு சிவபெருமான், பார்வதிதேவி யாருக்கு மூன்று மிகப்பெரிய சன்னதி களைக் உள்ளடக்கிய சங்கரநாராயணர் கோயில் என்ற பெரிய ஆலயம் உருவானது என்கிற வரலாற்றை வெüப்படுத்துகிறார் கள் ஆன்மீகப்பற்றாளர்கள்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/kovil1_16.jpg)
சிவாலயமான சங்கரன்கோவில் நகரில் ஆடி மாதத்தில் நடக்கிற ஆடித்தபசு திருவிழா 11 நாள் திருவிழாவாக விமரிசை யாக நடக்க, கடைசி தினத்தன்று அம்மைக்கு சிவபிரான் காட்சியüத்த ஆடித்தபசு காட்சி.
அன்றைய தினம் காலை 1.30 மணியளவில் கோமதி அம்பாள் தங்க சப்பரத்தில் திருக்கோவிலிருந்து புறப்பட்டு ரத வீதியிலுள்ள தபசு மண்டபத்திற்கு எழுந்தருüனார்.
அபிஷேக ஆராதனைக்குப் பின்பு மாலை 5.30 மணிக்கு மேல் சுவாமி ரிஷபவாகனத்தில் திருக்கோயிலிருந்து எழுந்தருü மாலை 7.30 மணிக்கு தபசு மண்டபத்தில் தவமிருக்கும் மோதி அம்பாளுக்கு சங்கரநாராயணராக காட்சி கொடுக்கும் முதல் காட்சி நடந்தேறியது. அது சமயம் லட்சக்கணக்கில் திரண்டி ருந்த பக்தர்கள் அந்த அரிய காட்சியைத் தரிசித்து நாராயணா, சங்கரா என கோஷங்கள் எழுப்பினர் அதனையடுத்து கோமதியம்பாள் சிவலிங்கமாக காட்சிதரவேண்டும் என தபசு மண்டபத்தில் மீண்டும் எழுந்தருüனார்.
இதையடுத்து இரவு 12.05 மணியளவில் சுவாமி, சங்கரலிங்கமாக யானை வாகனத் தில் வந்து கோமதி அம்பாளுக்கு காட்சி கொடுத்த பின்னர், சுவாமி, அம்பாளை திருக்கோயிலுக்கு அழைத்துச் செல்லும் நிகழ்வு நடந்தது. திரளான பக்தர்கள் தரிசத்தபடி வந்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-09/kovil-t.jpg)