மகாராஷ்ட்ரா மாநிலம், அவுரங்காபாத் திற்கு அருகில் தவ்லதாபாத் என்னும் நகரம் உள்ளது. அங்கிருந்து 11 கிலோமீட்டர் தூரத்திலிருக்கும் வாருள் என்ற ஊரில்தான் கிரிஷ்னேஸ்வர் ஆலயம் எனப்படும் குஸ்மேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தை கணேஸ்வர், துமேஸ்வர் ஆலயம் என்றும் குறிப்பிடுவார்கள்.
சிவ புராணத்தில் 12 ஜோதிர்லிங்கத் தைப் பற்றி கூறப்பட்டிருக்கிறது. அவற்றில் பன்னிரண்டாவது ஜோதிர்லிங்கம் இது. பழமையான இவ்வாலயத்தை, 16-ஆவது நூற்றாண்டில் மாலோகி ராஜே போஸ்லே என்பவர் புதுப்பித்துக் கட்டினார். சத்ரபதி சிவாஜியின் தாத்தாவான இவர் தீவிரமான சிவபக்தர். ஒருநாள் அவருக்கு பாம்புப் புற்றுக்குள் ளிருந்து புதையல் கிடைத் தது. அந்த பணத்தைத்தான் கோவிலைப் புதுப்பிப்பதற் காக அவர் செலவிட்டார். (இந்த ஆலயம் தவிர, காசி விஸ்வநாதர் ஆலயம், விஷ்ணுபாத மந்திர் ஆகிய ஆலயங்களையும் இவர் புதுப்பித்துக் கட்டியிருக்கிறார்.) சத்ரபதி சிவாஜியின் தாத்தாவுக்குப் பின்னர் 18-ஆவது நூற்றாண் டில் புதுப்பித்துக் கட்டியவர் மா அகல்யா பாயி ஹோல்கர் என்னும் அரசி.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/verma_8.jpg)
கிரிஷ்னேஸ்வர் என்றால் கருணைமனம் கொண்டவர் என்று பொருள்.
இந்த கோவிலுக்கு அருகில், ஏக்நாத் என்னும் புகழ்பெற்ற முனிவரின் குருநாதரான ஜனார்த்தன் மகாராஜின் சமாதி உள்ளது. இந்த ஆலயத்திலிருந்து அரை கிலோமீட்டர் தூரத்தில் எல்லோரா சிற்பங்கள் இருக் கின்றன.
இந்த ஆலயத்திற்கு வந்து இங்கிருக்கும் ஜோதிர்லிங்கத்தை வழிபட்டால், இந்தப் பிறவியின் பயனை அடைந்துவிட்டதாக இந்து தர்மம் கூறுகிறது.
நேபாளத்திலிருக்கும் சிவாலயமான பசுபதிநாத் ஆலயத்திற்கு இங்குவரும் பக்தர் கள் செல்வார்கள்.
இந்த கோவிலை அனைவரும் தர்சிக்கலாம்.
கர்ப்பக் கிரகத்திற்குள் யாரும் நுழையலாம். அப்போது ஆண்கள் மார் பில் ஆடை இருக்கக் கூடாது.
இந்த ஆலயத்தில் மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களையும் ஓவிய வடிவில் வரைந்து வைத்திருக்கிறார்கள்.
ஆலயத்தில் 24 தூண் கள் இருக்கின்றன. கர்ப்பக்கிரகம் 17பு17 சதுர அடியைக்கொண்டது.
இந்த ஆலயத்தைப் பற்றி ஒரு கதை இருக்கிறது...
தேவகிரி என்ற மலையில் சுதர்மா என்றொரு அந்தணர் இருந்தார். அவர் எப்போதும் சிவனை வழிபட்டுக்கொண்டி ருப்பார். அவரது மனைவியின் பெயர் சுபேஹா.
இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்துவந்தனர். ஆனால், ஒரேயொரு குறை... அவர்களுக்குக் குழந்தை இல்லை. அதனால் அவர்களை அருகிலிருப்பவர்கள் கேவலமாகப் பேசினர்.
தன்மூலம் குழந்தை பாக்கியம் இல்லை யென்பதை உணர்ந்த அந்தணரின் மனைவி, தன் கணவருக்குத் தனது தங்கை கிரிஷ்மா வைத் திருமணம் செய்துவைத்தாள்.
அந்த தங்கை தினமும் சிவனுக்குப் பூஜை செய்வாள். தினந்தோறும் களிமண்ணைக் கொண்டு 100 சிவலிங்கங்களைச் செய்து, அவற்றை குளத்தில் விடுவாள். அந்த பூஜைக்கு "பார்த்திர் சிவலிங்க பூஜை' என்று பெயர்.
அவள் செய்த பூஜையின் விளைவாக, சிவன் மகிழ்ந்து அவளுக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்க வரமருளினார். அந்த குழந்தை நல்ல குணத்துடன் வளர்ந்துவந்தது.
குழந்தை பிறந்தபிறகு, தங்கையின் புகழ் அனைத்து இடங்களிலும் பரவியது. அதனால் அவளது தமக்கை பொறாமைகொண்டாள்.
காலத்தின் ஓட்டத்தில் சிறுவன் வளர்ந்து வாலிபனானான். அவனுக்குத் திருமணம் நடந்தது. தமக்கையின் மனதில் பொறாமை மேலும் அதிகரித்தது. ஒருநாள் யாருக்கும் தெரியாமல் தங்கையின் மகனை கத்தி யால் குத்திக் கொன்று விட்டாள் அக்கா. உடலை குளத்தில் வீசியெறிந்துவிட்டு வீட்டிற்குவந்து படுத் துக்கொண்டாள்.
சுதர்மா தொடர்ந்து சிவனை வழிபட்டு வந்தார்.
இரண்டாவது மனைவியான கிரிஷ்மா களிமண்ணில் சிவ லிங்கத்தைச் செய்து நீரில்விட்டாள். அப்போது அந்த குளத்திற்குள் ளிருந்து இறந்த இளைஞன் வெளியே வந்தான். அனைவரும் மனமுருக சிவனை வழிபட்டனர்.
அவர்கள் பூஜைசெய்த இடத்தில் ஒரு பெரிய ஜோதி தோன்றியது. அதிலிருந்து சிவன் பிரசன்னமாகி, நடந்த உண்மையைக் கூறினார்.
தன் கையிலிருந்த சூலத்தால் சிவன் கொலைசெய்த சுபேஹாவை தாக்க முயல, கிரிஷ்மா, "என் அக்காவை எதுவும் செய்யவேண்டாம். என் மகன்தான் எனக் குக் கிடைத்துவிட்டானே!' என்று இறைஞ் சினாள்.
அவளது பரந்த மனதுக்கு மகிழ்ந்த சிவபெருமான், "வேண்டும் வரம் கேள்'' என்று கூறினார்.
அதற்கு கிரிஷ்மா, "நாங்கள் செய்த பூஜைக்கு மனமிரங்கி நீங்கள் இங்கு தோன்றினீர்கள். தொடர்ந்து நீங்கள் இதே இடத்தில் இருந்து மக்களுக்கு அருள்செய்ய வேண்டும்'' என்று கேட்டுக்கொண்டாள்.
அவ்வாறே சிவபெருமானும் அருளினார்.
சென்னையிலிருந்து ஹைதராபாத் சென்று, அங்கிருந்து இந்த ஆலயத்திற்குச் செல்லலாம்.
சென்னையிலிருந்து ஹைதராபாத் 700 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. பயண நேரம் 13 மணி. அங்கிருந்து அவுரங்காபாத் ஒன்பது மணிநேர பயண தூரத்தில் உள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-08/verma-t.jpg)