மேஷம்

2021 புத்தாண்டு மேஷ ராசிக்கு நான்காம் இடமான கடகத்திலும், ஆறாவது லக்னமான கன்னியிலும் பிறக்கிறது. கடந்த ஆண்டு, எல்லாம் சிறப்பாக அமையுமென்று எதிர்பார்த்த அனைவருக்கும், உலகையே புரட்டிப்போட்டதுபோல "கொரோனா' நோய்த்தொற்று ஏற்பட்டு உலகை ஸ்தம்பிக் கச் செய்துவிட்டது. இவ்வாண்டு அது படிப்படி யாகக் குறைந்து நற்பலன்கள் ஏற்படுமென்று எதிர்பார்க்கலாம். இந்த மாதம் முழுவதும் மேஷ ராசிநாதன் செவ்வாய் ஆட்சியாக இருக்கிறார். எனவே, உங்கள் செயல்பாடுகள் தயக்கமில்லாமல் பூர்த்தியாகும். வீடு, மனை வாங்கும் திட்டம் யோசனையோடு மட்டுமல்லாமல்; அந்த காரியத்தை நிறைவேற்றி முடிக்கலாம். அதற்கான வாய்ப்புகளும் அமையும். 7-க்குடைய சுக்கிரன் 8-ல் மறைந் தாலும், செவ்வாய் அவரைப் பார்ப்பதால் மறைவு தோஷம் விலகும். 6-ஆம் தேதிமுதல் சுக்கிரன் 9-ல் திரிகோணம் பெறுவார். கணவரால் மனைவிக்கும் மனைவியால் கணவருக்கும் ஆதாயமும் அனுகூலமும் உண்டாகும். பொருளாதாரத்தில் சிறிய சிரமங்கள் ஏற்பட்டாலும், இரண்டாம் இடத்தை குரு பார்ப்பதால் அவற்றை சமாளிக்கலாம். ஆன்மிக நாட்டம் அதிகமாகும். பூர்வீக சொத்துப் பிரச்சினை சுமுகமாக அமைய பொன்னமராவதி அருகில் செவலூர் சென்று பூமிநாத சுவாமியை வழிபடவும்.

ரிஷபம்

இந்த மாதம் 6-ஆம் தேதிமுதல் ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 8-ல் மறைகிறார். என்றா லும் சுக்கிரனுக்கு வீடு கொடுத்த குரு ஜென்ம ராசியைப் பார்ப்பதால் சுக்கிரனுக்கு மறைவு தோஷம் பாதிக்காது. அட்டமத்துச் சனியும் விலகியதால், உங்களு டைய செல்வாக்கு, மதிப்பு, மரியாதை, கௌரவம் எல்லாம் சிறப்பாக அமையும். குரு பார்க்க கோடி நன்மை என்பதற்கிணங்க, ரிஷப ராசியைப் பார்க்கும் குரு பல நன்மைகளைத் தருவார் என்பதில் ஐயமில்லை. திருமணத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஆண்- பெண்களுக்குத் திருமண வாய்ப்புகள் நிறைவேறும். கடந்தகாலத்தில் நிலவிய மறைமுக எதிர்ப்புகளும் வேண்டாத விமர்சனங்களும் தேவையற்ற தடைகளும் விலகும். உங்கள் முதுகுக்குப் பின்னால் புறம்பேசியவர்கள், உங்கள் முகத்தைப் பார்த்தவுடன் அசடுவழிய வணக்கம் சொல்லிவிட்டு ஒதுங்கிப் போய் விடுவார்கள். ரிஷப ராசிக்கு ராஜயோகாதிபதி சனி 9-ல் ஆட்சி பெறுகிறார். குரு சனியுடன் இணைந்து நீசபங்க ராஜயோகம் பெறுகிறார். தொழில் மேன்மை, உத்தியோக உயர்வு, ஊதிய உயர்வு, சொந்தத் தொழில் லாபம் போன்ற பலன்களை எதிர்பார்க்கலாம். வெள்ளிக் கிழமை மகாலட்சுமிக்கு நெய் தீபமேற்றி தாமரை மாலைசாற்றி வழிபடவும்.

Advertisment

மிதுனம்

கடந்த 2020 டிசம்பரில் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு சனி பெயர்ச்சியானார். எனவே, மிதுன ராசிக்கு அட்டமச்சனி ஆரம்பமானது. 8-க்குடைய சனி 8-ல் ஆட்சியாக இருக்கிறார். 7-க்குடைய குரு 8-ல் சனி வீட்டில் நீசமாக இருந்தாலும் நீசபங்க ராஜயோகம் பெறுகிறார். எனவே, அட்டமத்துச் சனி நடந்தாலும், சனி ஆட்சியாக இருப்பதால் சனியின் பாதிப்பு குறையும். 8-ஆம் இடம் என்பது விபத்து, சஞ்சலம், அதிர்ஷ்டம் போன்றவற்றைக் குறிக்கும். திடீர் அதிர்ஷ்டம் ஏற்படலாம். சிலருக்கு குடியிருப்பு மாற்றம், ஊர்மாற்றம், தொழிலில் இடமாற்றம், தனியார் துறையில் பணிபுரிவோருக்கு வேலையில் பதவி உயர்வுடன்கூடிய இடமாற்றம் உண்டாகலாம். ஒருபக்கம் வருமானம் வந்தாலும் மறுபக்கம் செலவும் விரயமும் ஏற்படத்தான் செய்யும். 2, 12-ஆம் இடங்களை குரு பார்த்த பலன் அதுதான். நண்பர்கள், வகையிலும் உறவினர்கள்வகையிலும் ஆதரவும் சகாயமும் உண்டாகும். சகோதரவழியில் சுபச் செலவுகள் ஏற்பட இடமுண்டு. நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். சில காரியங்களில் தாமதநிலை காணப்படலாம். செவ்வாய்க்கிழமைகளில் சக்கரத்தாழ்வாரை வழிபடவும்.

rasipalan

Advertisment

கடகம்

கடக ராசிக்கு 7-ல் குருவும் சனியும் புதனும் ஒன்றுகூடியிருக்கிறார்கள். குருவும் சனியும் ராசியைப் பார்க்கிறார்கள். 7-ல் நீசபங்க ராஜயோகம் பெற்ற குரு திருமணத் தடைகளை விலக்கி திருமண வாய்ப்புகளை உருவாக்குவார். கட்டட யோகம், காசு பணம் சேமிப்பு, தொழில் முன்னேற்றம், சம்பாத்தியம், வருமானமென்று நன்மைகளை அடையலாம். உங்களுடைய முயற்சிகள் வெற்றியடையும். நம்பிக்கையும் தைரியமும் உங்களுக்குத் துணையாக இருந்து வழிநடத்தும். நினைத் தது நிறைவேறும். எண்ணியது ஈடேறும். இவ்வாண்டு (2021) உங்கள் ராசியிலேயே பிறப் பதால் எந்த காரியத்திலும் வெற்றிவாகை சூடலாம். உங்கள் தொழில் முயற்சிகளில் முன்னேற்றமும், கீர்த்தியும், செல்வாக்கும், பாராட்டும், கௌரவப் பதவியும் ஏற்படும். சமூகசேவை, சமுதாயப்பணி, ஆன்மிக ஈடுபாடு உண்டாகும். தகப்பனார்வகையில் அனுகூலமான பலன்களும் ஆதரவான சூழ்நிலைகளும் உருவாகும். கணவன்- மனைவி உறவு, உபதொழில் சிறப்பாக விளங்கும். சகோதரவகையில் நற்பலன்கள் உண்டாகும். முருகனை வழிபடவும். வேலுக்குப் பாலாபிஷேகம் செய்யவும்.

சிம்மம்

சிம்ம ராசிக்கு 12-ஆவது ராசியான கடகத் திலும் 2-ஆவது லக்னமான கன்னியிலும் இவ்வாண்டு (2021) பிறக்கிறது. சிம்ம ராசிநாதன் சூரியன் மாத முற்பகுதிவரை 5-ல் இருக்கிறார். அங்கு திரிகோணம் பெறுகிறார். உங்கள் எண்ணங்களும் திட்டங்களும் நிறைவேறும். காரியத் தேவைகள் பூர்த்தியாகும். குரு 6-ல் மறைந் தாலும் நீசபங்க ராஜயோகம் பெறுகிறார். 2-ஆம் இடத்தை குரு பார்ப்பதால் பொருளாதாரத் தேவைகள் நிறைவேறும். தொழில் துறையிலும் உத்தியோகத்திலும் பிரச்சினைகளும் சஞ்சலங்களும் ஒருபுறம் காணப்பட்டாலும், சைலன்ஸர் புகையைக் கக்கினாலும், "கடமுடா' என்று சத்தம் எழுப்பினாலும் பிரேக்டவுன் ஆகாமல் ஓடும் வாகனம்போல தொழில் தேக்கமில்லாமல் ஓடும். 10-ஆம் இடத்தை குரு பார்ப்பதால் உத்தியோகத்தில் நிலவிய சீர்கேடுகளைக் களைந்து செம்மைப்படுத்தலாம். அபிவிருத்தி திட்டங்களைச் செயல்படுத்தலாம். ஒருபுறம் வருமானம் இருந்தாலும் மறுபுறம் செலவும் நடந்துகொண்டுதான் இருக்கும். தேக ஆரோக்கியம் நன்றாக இருக்கும். மருத்துவச் செலவுகள் விலகும். சில காரியங்களில் மிகவும் பிரயாசைப்பட வேண்டியிருக்கும். ராகு- கேதுவுக்குரிய பரிகாரத் தலம் சென்று வழிபடவும்.

கன்னி

கன்னி ராசிக்கு 11-ஆவது ராசியிலும், உங்கள் ஜென்ம லக்னமான கன்னியிலும் இவ்வாண்டு (2021) பிறக்கிறது. எனவே, உங்கள் முயற்சிகள் வெற்றியடையும். அதற்கு உறுதுணையாக 5-ல் உள்ள குரு நீசபங்கம் பெற்று உங்கள் ராசியைப் பார்க்கிறார். மக்கள், திட்டம், மனம், உபதேசம், தாய்மாமன், பாட்டனார், பூர்வபுண்ணியம் ஆகியவற்றில் சாதகமான நற்பலனை எதிர்பார்க்கலாம். பிள்ளைகள் வகையில் சுபச்செலவுகள், நன்மைகள் உண்டாகும். திருமணம், பிள்ளைப்பேறு போன்ற சுப காரியங்கள் நடைபெறும். அவர்களின் மேற்படிப்பு, உத்தியோகம் போன்றவையும் மனம்போல் நடந்தேறும். தொழில், எதிர்காலம் பற்றிய விஷயங்களில் மனதில் வகுத்த திட்டங்கள் வெற்றியடையும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளும் கைகூடும். 7-ஆம் இடத்தை சனி பார்ப்பது திருமணத் தடை என்று குறிப் பிடப்பட்டாலும், குருவும் சனியும் ஒன்று கூடியிருப்பதால் திருமணத்தில் தாமதம் ஏற்படலாமே தவிர தடையாகாது. தனவரவு திருப்திகரமாக இருக்கும். வேலையில் உயர்வு போன்ற நற்பலன்களை சந்திக்கலாம். புதன்கிழமை பெருமாளை வழிபடவும். லட்சுமி நாராயணரையும் வழிபடலாம்.

துலாம்

துலா ராசிக்கு 10-ஆம் இடத்திலும், 12-ஆவது லக்னத்திலும் 2021-ஆம் ஆண்டு பிறக்கிறது. துலா ராசிநாதன் சுக்கிரன் 6-ஆம் தேதிமுதல் இரண்டிலிருந்து மூன்றாம் இடத்திற்கு மாறுகிறார். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற போராட வேண்டிய திருக்கும். திட்டமிட்ட காரியங்களை செயல் படுத்து வதில் தாமதம், மந்தத் தன்மை காணப்படும். ஏற்றமும் இறக்கமும் மாறிமாறி ஏற்படும். அதற்காகக் கவலைப்படாமல் அதை ஈடுகட்டும் முயற்சியில் இறங்கி செயல்படுவீர் கள். 11-க்குடைய சூரியன் 14-ஆம் தேதிமுதல் 4-ஆம் இடத்திற்கு மாறுகிறார். அரசாங்க வகையில் எதிர்பார்த்த உதவிகளும் சலுகை களும் சற்றுத் தள்ளிப்போகலாம். பிறருக்கு எதிலும் பொறுப்பெடுத்து ஜாமின் போட வேண்டாம். அவ்வப்போது மருத்துவச் செலவுகள் வந்து விலகும். வீண் கவலைகள் மனதை வருத்தும். பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது. தாயாரின் உடல்நலத்தில் அக்கறை காட்டுவது அவசியம். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகமாகக் காணப்படும். மேலதிகாரிகளிடம் நன்மதிப்பைப் பெறலாம். வெள்ளிக்கிழமைதோறும் துர்கையம்மனை வழிபடவும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்கு கடந்த டிசம்பர் 26-ஆம் தேதிமுதல் ஏழரைச்சனி முழுமை யாக விலகிவிட்டது. 9-ஆம் இடமான கடக ராசியிலும், 11-ஆவது லக்னமான கன்னியிலும் இவ்வாண்டு (2021) பிறக்கிறது. தொட்டது துலங்கும். விட்டது கிடைக்கும். பட்டது துளிர்விடும். ராசிநாதன் செவ்வாய் ஆட்சியாக இருக்கிறார். ராசியையும் பார்க்கி றார். நீங்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த நல்ல தகவல் இனிமேல் கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் உண்டு. பொருளாதார வளம் சிறக்கும். பற்றாக்குறை நிலை அகலும். ஊர் மாற்றம், உத்தியோக மாற்றம் சிலருக்கு ஏற்படலாம். அந்த மாற்றம் ஏற்றமான மாற்றமாக அமையும். ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். எதிர்பார்த்த பதவி உயர்வும் தொழிலில் லாபமும் ஏற்படும். சகோதரவழியில் சகாயம் உண்டாகும். உடன்பிறப்புகள் வகையில் இருந்துவந்த பூர்வீகப் பிரச்சினைகளில் சுமுகத் தீர்வு கிடைக்கும். எந்த காரியத்தையும் முதலீட்டை எதிர்பார்த்துச் செய்யவேண்டிய நிர்ப்பந்தம் வராது. தானாகவே நடைபெறும். விநாயகரை வழிபடவும்.

தனுசு

தனுசு ராசிக்கு 8-ஆவது ராசியிலும், 10-ஆவது லக்னத்திலும் இந்த 2021 புத்தாண்டு பிறக்கிறது. கடந்த மாதம் டிசம்பர் இறுதியில் ஜென்மச்சனி விலகி பாதச்சனி தொடங்கியது. எடுத்த காரியங்களில் சுணக்கம் ஏற்பட்டாலும், குரு 2-ல், 2-க்குடைய சனியோடு இணைந்து நீசபங்க ராஜயோகம் அடைவதால் பொருளாதாரத் தேவைகள் பூர்த்தியடையும். செலவுகள் திடீர் திடீரென்று முற்றுகையிட்டாலும், அதை சமாளிக்கும் ஆற்றலும் உருவாகும். எப்பாடுபட்டாவது வாக்கு நாணயத்தைக் காப்பாற்றலாம். வேலைக்காக கடல்கடந்து செல்லும் திட்டங்கள் வெற்றியளிக்கும். ஜனன ஜாதக தசாபுக்திகள் பாதகமாக இருந்தால் இழுபறிநிலை நீடிக்கும். கணவன்- மனைவி ஒற்றுமை சாதகமாக இருப்பதால் மற்ற பிரச்சினைகளை தைரியத்துடன் எதிர்கொள்ள முடியும். வில்லங்கம், விவகாரம் போன்றவற்றை சந்திக்கும் நிலை, பூர்வீக சொத்துகளில் பிரச்சினைகள் இருந்தால் அவற்றில் நியாயமான முடிவுகள் உண்டாகும். நீங்களும் நியாயமான பங்கையே எதிர்பார்த்து, பங்காளிகளுக்குள் ஒற்றுமை உணர்வை வளர்க்கப் பார்ப்பீர்கள். உடல் ஆரோக்கியத்திற்கு தன்வந்திரி பகவானை வழிபடவும்.

மகரம்

மகர ராசிக்கு 7-ஆவது ராசியிலும், 9-ஆவது லக்னத்திலும் 2021 புத்தாண்டு பிறக்கிறது. ஏழரைச்சனியில் ஜென்மச்சனி நடக்கிறது. ராசிநாதன் ஆட்சியாக இருப்ப தால் ஏழரைச்சனி உங்களைக் கெடுக்காது. கௌரவம், செயல் தன்மை, கீர்த்தி, செல்வாக்கு, புகழ், பெருமை, ஆற்றல் ஆகியவற்றை செவ்வனே அடையும் வாய்ப்புகள் அமையும். மூன்றாம் இடத்தைப் பார்க்கும் சனி சகோதர ஒற்றுமை, சகாயம் போன்றவற்றை ஏற்படுத்தித் தருவார். ஐந்தில் உள்ள ராகுவை ஜென்மகுரு பார்ப்பதால் பிள்ளைகள்வகையில் நிலவிய தொல்லைகள் விலகும். பிள்ளைகளுக்கு நற்பலன்கள் நடைபெறும். திருமணத் தடைகள் விலகும். பிரிந்துவாழும் தம்பதிகள் ஒருவரையொருவர் புரிந்து இணைந்து வாழலாம். கேதுவின் பார்வை ஜென்ம ராசிக்குக் கிடைப்பதால் ஆன்மிக நாட்டம் அதிகமாகும். எல்லாரும் வணங்கத்தக்க அளவு மதிப்பும் மரியாதையும் கூடும். கணவன் அல்லது மனைவி பேரில் தொழில் ஆரம்பிக்கலாம். என்றாலும் பெரிய முதலீடுகளைத் தவிர்த்து சிறிய அளவில் ஆரம்பித்து நடத்தலாம். வியாழக்கிழமை லட்சுமி நரசிம்மரை வழிபடவும்.

கும்பம்

கும்ப ராசிக்கு 6-ஆவது ராசியிலும், 8-ஆவது லக்னத்திலும் 2021 புத்தாண்டு பிறக்கிறது. அத்துடன் கடந்த சனிப்பெயர்ச்சி முதல் ஏழரைச்சனி ஆரம்பமானது. ராசிநாதன் சனி விரய ஸ்தானத்தில் இருப்பதால் கும்ப ராசியினருக்கு நண்பரும் அவர்களே; பகைவரும் அவர்களே. 10-க்குடைய குரு 12-ல் இருக்கிறார். தொழில்துறையில் தர்மசங்கடமான சூழ்நிலைகள் உண்டாகும். தேவையற்ற மன உளைச்சலுக்கு ஆளாகலாம். 4-ஆமிடத்து ராகு தாய்சுகம், தன் சுகத்தை பாதித்தாலும், 4-ஆமிடத்தைப் பார்க்கும் குருவால் சிறிய மருத்துவச் செலவுகளோடு முடிந்துவிடும். ஏழரைச்சனியில் விரயச்சனி நடக்கிறது. முதல் சுற்று மங்குசனி, இரண்டாம் சுற்று பொங்குசனி, மூன்றாம் சுற்று மரணச் சனி என்று சொல்வார்கள். இதில் எந்தச் சுற்று என்று அறிந்துகொண்டு செயல்படுங்கள். பழகிய வட்டாரத்தில் எச்சரிக்கையும் விழிப்புணர்வும் அவசியம். புதன்- குரு, சனியுடன் சேர்வதால் விபரீத ராஜயோகத்திற்கும் வாய்ப்புண்டு. சிலநேரம் திட்டமிடாத காரியங்களில்கூட வெற்றிவாய்ப்பு உண்டாகும். செய்யும் முயற்சிகளில் தாமதம் நிலவினாலும் தடையாகாது. சனிக்கிழமைதோறும் காலபைரவரை வழிபடவும்.

மீனம்

மீன ராசிக்கு 5-ஆவது ராசியிலும், 7-ஆவது லக்னத்திலும் இந்த 2021 புத்தாண்டு பிறப்பதால், எடுத்து வைத்தவர்களிலும் கொடுத்து வைத்தவர்கள் நீங்கள்தான். அத் துடன் 10-க்குடைய குரு 11-ல், 11-க்குடைய ஆட்சிபெற்ற சனியோடு சேர்க்கை. நீங்கள் தொழில் துறையில் இருப்பவர்கள் என்றால் நல்ல முன்னேற்றம், லாபம் போன்றவற்றை சந்திக்கலாம். நீங்கள்தான் ராஜா என்று மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். செல்வாக்குள்ள பிரமுகர்களின் தொடர்பு கிடைக்கும். பாராட்டும் கிடைக்கும். வீடு கட்டுவது, அறச்சாலை நிறுவுவது, ஆலயத் திருப்பணி செய்வது, குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவது போன்ற பணிகளில் ஈடுபடலாம். உங்களின் நீண்டகாலக் கனவுகளும் லட்சியங்களும் நிறைவேறும். உடன்பிறப்புகள் வழியில் நல்ல தகவல்கள் வந்துசேரும். பாகப்பிரிவினைகள் சாதகமான பலனைத் தரும். தொழில் வளர்ச்சிக்குப் புதிய பங்குதாரர்கள் வந்துசேர்வர். அசையா சொத்துகள் வாங்கும் முயற்சி கைகூடும். எதிரிகள் விலகுவர். விடாமுயற்சிக்கு வெற்றி கிடைக்கும். மனக்குழப்பம், எதிர்காலம் பற்றிய பயம் விலகும். அருப்புக்கோட்டை அருகே திருச்சுழி சென்று பூமிநாதரை வழிபடவும். ரமண மகரிஷி பிறந்த ஊர்.