ர்வதேச செஸ் கூட்டமைப்பு (பிடே) சார்பில் 20 வயதுக்குட்பட்டோருக்கான உலக ஜூனியர் செஸ் சாம்பியன்ஷிப் தொடர், மான்டினிகிரோவில் நடந்தது.

ஓபன் பிரிவில் மொத்தம் 157 பேர் பங்கேற்றனர். இந்தியா சார்பில் 18 வயது பிரனவ் வெங்கடேஷ், பிரனீத், அஷ்வத் உள்ளிட்டோர் களமிறங்கினார்.

11-வது, கடைசி சுற்றில் பிரனவ், குரோஷியாவின் மாடிக் லாவ்ரென்சிக்கை சந்தித்தார்.

வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கினார் பிரனவ். போட்டியின் 18-வது நகர்த்தலில் டிரா செய்தார்.

இதையடுத்து 11 சுற்றில் 7 வெற்றி, 4 டிரா செய்த பிரனவ், 9.0 புள்ளி பெற்று முதலிடம் பிடித்து, உலக ஜூனியர் செஸ் சாம்பியன் ஆனார்.

மாடிக் லாவ்ரென்சிக் (8.5), டென்மார்க்கின் எல்ஹாம் (8.5) அடுத்த இரு இடம் பிடித்தனர்.

உலக ஜூனியர் செஸ் சாம்பியன் தொடரில் இந்தியாவின் ஆனந்த் (1987), ஹரிகிருஷ்ணா (2004), அபிஜீத் குப்தா (2008) கோப்பை வென்றனர்.

ss

தற்போது 17 ஆண்டுக்குப் பின், இந்திய வீரர் பிரனவ் இத்தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

உலக ஜூனியர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற தமிழக வீரர் பிரனவ் வெங்கடேஷுக்கு ஊக்கத் தொகையாக ரூ.20 லட்சத்துக்கான காசோலையை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

Advertisment

பிரனவ் வெங்கடேஷ் கடந்த 2022-ஆம் ஆண்டில் கிராண்ட் மாஸ்டர் பட்டத்துக்கு தகுதி பெற்றார்.

கடந்த 2024 நவம்பர் மாதம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்திய சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் போட்டியில் சேலஞ்சர்ஸ் பிரிவில் வெற்றி பெற்ற அவருக்கு பரிசு தொகையாக ரூ.6 லட்சம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பிரனவ் வெங்கடேஷ் சென்னையைச் சேர்ந்தவர். மேலஅயனம்பாக்கத்தில் உள்ள வேலம்மாள் வித்யாலயா பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.

Advertisment

அவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சுலோவேனியாவில் நடந்த உலக இளையோர் ரேபிட் மற்றும் பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் 18 வயதுக்குட்பட்ட பிரிவில் இரட்டை தங்கப்பதக்கம் வென்று இருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.

சமீபத்தில் சீனியர் உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் தமிழகத்தின் குகேஷ் பட்டம் வென்ற நிலையில் இப்போது தமிழகத்திற்கு பிரனவ் வெங்கடேஷ் மூலம் மேலும் ஒரு மணிமகுடம் கிட்டியுள்ளது.