த்திய குடிமைப்பணி தேர்வாணை யத்தால் நடத்தப்படும் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எப்.எஸ் போன்ற பணிகளுக்கான குடிமைப்பணி தேர்வின் இறுதி முடிவுகள் சென்ற மாதம் அறிவிக்கப்பட்டன. இந்த இறுதி தேர்வின் முடிவில் 685 மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இவர்களில் சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமியில் பயின்ற 261 மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். அதில் யக்ஷ் சௌத்ரி அகில இந்திய அளவில் 6-ஆம் இடத்தை பிடித்துள்ளார். இவர் சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமியில் முதன்மை நிலை தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் பயிற்சி பெற்றுள்ளார். முதல் 100 இடங்களில் சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமியில பயின்ற 41 மாணவர்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் 15 பேர் பெண்கள். தமிழகத்தில் இருந்து மொத்தம் சுமார் 27 மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இதில் சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமியில் பயின்ற 19 மாணவர்கள் இடம் பெற்றுள்ளனர்.

சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமியில் பயிற்சி பெற்று வெற்றி பெற்ற 261 மாணவர்களில் 19 பேர் தங்களது முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றுள்ளனர்.

அகில இந்திய அளவில் 42-ஆம் இடத்தை பிடித்த செல்வி சுவாதி ஸ்ரீ என்ற மாணவி சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமியில் பயிற்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு மத்திய தேர்வாணையத்தால் முதல் நிலை தேர்வு 2021 அக்டோபர் 10-ஆம் தேதியன்று நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதன்மை தேர்வானது 2022 ஜனவரி 7-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரை நடைபெற்றது. இத்தேர்வின் முடிவுகள் 2022 மார்ச் 17-ஆம் தேதியன்று வெளியிடப்பட்டது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஆளுமைத் தேர்வு ஏப்ரல் 5-ஆம் தேதி முதல் மே 26-ஆம் தேதி வரை டெல்லி-யில் நடைபெற்றது. இவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.

சென்னை சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமியில் படித்து சிவில் தேர்வில் வெற்றி பெற்ற எஸ். சிவானந்தம், டாக்டர் சி. மதன் நக்கீரன் டிவி யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்தனர்.

Advertisment

அதனை முழுமையாக இங்கு வெளி யிடுகிறோம். எஸ். சிவானந்தம் அகில இந்திய அளவில் 87-வது ரேங்கையும் தமிழகத்தில் 3-வது இடத்திலும் வெற்றி பெற்றுள்ளார். நேர்முகத் தேர்வில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். டாக்டர் சி. மதன் அகில இந்திய அளவில் 195-வது ரேங்க் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

உங்களை பற்றி சொல்ல முடியுமா?

எஸ். சிவானந்தம்:

Advertisment

எனக்கு பூர்வீகம் சென்னை. அப்பா ஐ.சி.எப்-இல் வெல்டராக பணிபுரிகிறார்.

அம்மா இல்லத்தரசி. நான் திருச்சி சஒப-இல் பி.டெக் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தேன். பின்பு பெங்களூருவில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்தேன். கொரோனா காலத்தில் சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு தயாராவது பற்றிய ஆர்வம் ஏற்பட்டது. 2020 ஆகஸ்ட் மாதம் பணியை விட்டு விலகி சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு தயார் செய்ய ஆரம்பித்தேன். முதல் முயற்சியிலேயே வெற்றி கிடைத்தது.

டாக்டர் சி. மதன்:

நான் மதுரை மாவட்டம், வேலம்மாள் மருத்துவக் கல்லூரியில் டாக்டர் பட்டம் பெற்றேன். சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு தயாராவது என்பது எனது சிறு வயதிலி-ருந்து லட்சியம். எனது அம்மாவின் ஆசைக்காக மருத்துவம் படித்தேன்.

எனது லட்சியத்திற்காக இந்த தேர்வுக்கு தயார் செய்தேன். மருத்துவ படிப்பு முடிந்தவுடன் சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதுவது என தீர்மானித்து விட்டேன்.

இந்த தேர்வுக்காக இரண்டரை வருடம் தயார் செய்தேன்.

குறுகிய காலத்தில் இந்த வெற்றி எப்படி சாத்தியமானது?

எஸ். சிவானந்தம்:

சாப்ட்வேர் பணியி-லிருக்கும்போது யுபிஎஸ்சி தேர்வு பற்றிய தகவல்களை திரட்டிக் கொண்டிருந்தேன். எந்த புத்தகங்களை படிக்க வேண்டும், தேர்வு எப்படி இருக்கும் என்பதை தீவிரமாக அலசினேன். பின்னரே தேர்வு எழுத தீர்மானித்தேன். அதேபோல என்ன புத்தகங்கள் உள்ளன, எந்த புத்தகங்களை படிக்கக் கூடாது, தேர்வுக்கு எவ்வளவு காலம் தயாராக வேண்டும் என்பது பற்றிய ஒரு திட்டத்தை தயாரித்தேன். இதை வைத்து பத்து மாத படிப்புக்கு தேவையான திட்டத்தை வைத்திருந்தேன். அனைத்து நாட்களும் இந்த தேர்வுக்கு முழுமையாக தயார் செய்தேன். முழுமையான ஈடுபாடு என்பது சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு மிகவும் இன்றியமையாதது.

gg

பொதுவாக சிவில் சர்வீசஸ் தேர்வு கடினமாக இருப்பது ஏன், அதற்கு எப்படி தயார் செய்தீர்கள்?

டாக்டர் சி. மதன்:

யுபிஎஸ்சி தேர்வை பொறுத்தவரையில் நம்முடைய தனித்துவமான புரிதல் மிகவும் தெளிவாக இருக்க வேண்டும். மேலோட்டமாக இல்லாமல் ஆழமான புரிதல் இங்கு வேண்டும். தனித்துவமான பதில்கள் எழுத்து தேர்விலும் சரி, நேர்முகத் தேர்விலும் சரி மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது. வித்தியாசமான பார்வை இருந்தால் நிச்சயம் வெற்றி பெறலாம்.

எஸ். சிவானந்தம்:

இந்த தேர்வு மூன்று கட்டங்களாக நடத்தப்படுகிறது. முத-லில் நுழைவுத் தேர்வு, இரண்டாவது மெயின் தேர்வு, மூன்றாவ தாக நேர்முகத் தேர்வு. இதில் முதல் கட்ட நுழைவுத் தேர்வுதான் சற்று சிரமமானது.

நூறு கேள்விகளுக்கு இரண்டு மணி நேரத்தில் பதில் தரவேண்டும். இத்தேர்வில் பத்து லட்சம் பேர் விண்ணப்பிப்பார்கள். 5 லட்சம் பேர் தேர்வை எழுதுவார்கள். ஆனால் பத்தாயிரம் பேர் தான் தேர்ச்சி அடைகின்றனர். இந்த நுழைவுத் தேர்வில் தேர்ச்சி அடைவதுதான் மிக முக்கியமானதாகும். மிகவும் போட்டியான தேர்வும் இதுதான்.

சிவில் சர்வீசஸ் மெயின் தேர்வு என்பது பாடங்களுக்கான தேர்வு. பொது அறிவு 1 முதல் 4 தாள்கள், கட்டுரைத்தாள், இவற்றில் பெற்ற மதிப்பெண்களை வைத்து கணக்கிடப்படும். நான் பிரீலி-மினரிக்கும் மெயின் தேர்வுக்கும் சேர்த்தே ஒன்றாக தயார் செய்தேன். மெயினுக்கு கொஞ்சம் அதிகமாக படிக்க வேண்டும். சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு படிக்கும் போதே மெயின் தேர்வுக்கு படிப்பதை போன்று படித்து குறிப்பு எடுத்து வைத்துக் கொண்டால், அதி-லிருந்து பிரீலி-மினரித் தேர்வை வெற்றிகரமாக அணுகலாம். பிரீலி-மினரி தேர்வில் அனைத்து வினாக்களுக்கு விடையளிக்க முடியாது.

பல ஆண்டுகள் படித்தாலும் இதுதான் நிலைமை. பொதுவாக 45 வினாக்களுக்கு தான் துல்லி-யமான சரியான விடை தெரியும். ஆனால் அதை வைத்து தேர்ச்சி பெற முடியாது. மீதி வினாக்களுக்கு சிறந்த படிப்பின் பின்புலத்தில் தான் சிறப்பாக விடையளிக்க முடியும். அனைத்தையும் படித்து முடித்தவுடன் 12 மாதிரி தேர்வுகளை எழுதினேன். முந்தைய ஆண்டுகளின் யுபிஎஸ்சி வினாத்தாள்களுக்கு விடையளித்தேன். இதற்கு பின்னர் தான் இறுதித் தேர்வுக்கு சென்றேன்.

விருப்பப்பாடங்களை எப்படி தேர்ந்தெடுத்தீர்கள், அதற்கு எப்படி தயார் செய்தீர்கள்?

டாக்டர் சி. மதன்:

மிகவும் விருப்பமான பாடங்களையே விருப்பப்பாடமாக தேர்வு செய்ய வேண்டும். எனது விருப்பப் பாடம் புவியியல். அந்த பாடம் எனக்கு இயற்கையாகவே மிகவும் பிடிக்கும். மற்ற பாடங்கள் ச-லிப்பை தந்தாலும் புவியியல் பாடத்தை தொடர்ந்து படித்தேன்.

கட்டுரைத்தாளுக்கு எப்படி தயார் செய்தீர்கள்?

டாக்டர் சி. மதன்:

கட்டுரைத்தாளுக்கு 250 மதிப்பெண்கள். இதற்காக தனியாக திட்டமிட்டு படித்து எழுதி பார்க்க வேண்டும். இந்த முறை எட்டு கட்டுரைகள் ஒவ்வொரு விஷயத்தையும் தத்துவார்த ரீதியாக அலசுமாறு கேட்கப் பட்டிருந்தது. இதற்கு பரவலான வாசிப்பு தேவை. அதேபோல் விசாலமான பார்வையும் இருக்க வேண்டும். எனது கட்டுரைத்தாள் மதிப்பெண்கள் 132.

நேர்முகத் தேர்வு எப்படி இருந்தது அதற்கு எப்படி தயார் செய்தீர்கள்?

டாக்டர் சி. மதன்:

யுபிஎஸ்சி நேர்முகத் தேர்வு முழு உறுப்பினர்கள் சராசரியாக அறுபது வயதுக்கு மேல் இருக்கும். அனைத்து மாணவர்களும் சிரமப்பட்டே படித்து வருகின்றனர் என்பது அவர்களுக்கு தெரியும். அதனால் அந்த அரை மணி நேர நேர்முகத் தேர்வை தளர்வாக வைத்துக்கொள்ள விரும்புவார்கள். மிகவும் அழுத்தம் தரும் கேள்விகளை கேட்கமாட்டார்கள். நம்முடைய ஆளுமையை அந்த அரை மணி நேரத்தில் கணித்துவிடுவார்கள். பத்து நிமிடத்திலேயே நாம் உண்மையை சொல்லுகிறோமா அல்லது பொய் சொல்லுகிறோமா என்பதை கண்டுபிடித்து விடுவார்கள். இங்கு அறிவை விட ஆளுமைதான் முக்கியம். நான் மதுரை ஜல்-லிக்கட்டு பற்றி பதிலளித்தேன். ஏன் ஜல்-லிக்கட்டு தேவை, அது எப்படி தமிழரின் பண்பாட்டுடன் சேர்ந்துள்ளது என்பதை விளக்கினேன். பதில் தரும்போது படப்படப்பில்லாமல் பேசுகிறோமா, நம் நிலையி-லிருந்து மாறாமல் பேசுகிறோமா என்பதை கவனிப்பார்கள்

எஸ். சிவானந்தம்:

எனக்கு நேர்முகத் தேர்வில் அகில இந்திய அளவில் இரண்டாவது மதிப்பெண்கள் தரப்பட்டது. ஐந்து முழு உறுப்பினர்கள் மிகச்சிறந்த அறிவும் அனுபவமும் கொண்டவர்கள். நாம் ஏற்கனவே நம்மை பற்றி ஒரு விரிவான தகவல்களை கொடுத்திருப்போம். அதிலி-ருந்துதான் கேள்வி கேட்பார்கள். எனது சாப்ட்வேர் பணி அனுபவம் பற்றி தான் பத்து நிமிடங்கள் கேள்விகளாக கேட்கப்பட்டது. என்னுடைய பணி அனுபவத்தை விளக்கி கூறினேன். இந்த பணி எப்படி நாட்டுக்கு உதவும்.

இதனால் நல்லது என்ன என்பதை பதிலளித்தேன். சென்னையை பற்றியும் நான் படித்த பள்ளியை பற்றியும் கேள்விகள் கேட்டனர். கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டப்படிப்பு என்பதால் சோசியல் மீடியாவின் வளர்ச்சி, சைபர் செக்யூரிட்டி, ஆன்லைன் பேமண்ட் சிஸ்டம் போன்ற கேள்விகள் கேட்டனர். நான் அனைத்து கேள்விகளுக்கும் பதில் தரவில்லை. ஏழு கேள்விகளுக்கு மேல் தெரியாது என்று கூறினேன். அது அனுமதிக்கப்படுகிறது. நேர்முகத் தேர்வில் பொய் சொல்லக்கூடாது. தெரியாத விஷயங்களை தெரியும் என கூறினால் மதிப்பெண்கள் குறையும். பொதுவாக சிவில் மெயின் தேர்வில், அறிவு பரிசோதனையும் நேர்முகத் தேர்வில் ஆளுமையும் பரிசோதிக்கப் படுகிறது.

சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமி உங்களின் வெற்றியில் எந்தளவு பங்களிப்பு செய்தது?

டாக்டர் சி. மதன்:

எனது சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமி ஊக்கமும் நம்பிக்கையும் கொடுத்தது. முழுமையாக இங்கு பயிற்சி எடுத்துக் கொண்டேன். இந்த தேர்வு பற்றிய சிறந்த ஆலோசனை பெற்றேன். மாதிரித் தேர்வுகள் மிக சிறப்பாக இருந்தன. இவைகள் அதிக மதிப்பெண்கள் பெற மிக உதவியாக இருந்தது.

எஸ். சிவானந்தம்:

எனது விருப்பப்பாடமான சமூகவியல் பாடத்தில் அதிக மதிப்பெண்கள் எடுத்ததற்கு முக்கிய காரணம் சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமி. இங்கு நடத்தப்பட்ட மாதிரித் தேர்வுகள் அனைத்தையும் சிறப்பாக எழுதினேன்.

சிறந்த அணுகுமுறையுடன் பயிற்சி அளித்தனர். நான் அகில இந்திய அளவில் நேர்முகத் தேர்வில் இரண்டாவது இடம் பெற்றதற்கு சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமி இன்டர்வியூதான் முக்கிய காரணம். இதன் மூலம் சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமிக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

- நேர்க்காணல்: ப. இளையராஜா