வானவில் மன்றம் திட்டம்
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதன் அடிப்படையில், ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசு நிதி பங்கீட்டின்கீழ் பள்ளிகளில் ஒன்று முதல் 9-ஆம் வகுப்புவரை படிக்கும் மாணவ-மாணவிகளின் கல்விக்காக பல்வேறு கட்டமைப்பு வசதிகள் ஏற்பட்டு வருகின்றன.பள்ளிகளில் வகுப்பறைகள், கல்வி உபகரணங்கள், கழிப்பிடம், குடிநீர் வசதி உள்பட பல்வேறு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.
அதன் தொடர்ச்சியாக, தற்போது மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்த, பல்வேறு திட்டங்களையும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டம் மூலமாக தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இதன் அடிப்படையில், அனைத்து பள்ளி மாணவர்களும் பங்கேற்கும் வகையில் கலைத்திருவிழா எனும் திட்டம் தொடங்கப்பட்டது. இதில், மாணவர்களின் திறனை வெளிப்படுத்தும் வகையில் பேச்சு, ஓவியம், பண்பாடு, கலைத்திறன்களை அறியும் வகையில் போட்டிகள் நடைபெற்றன. இதில் பள்ளியளவில் வெற்றி பெறும் மாணவர்கள், மாவட்ட அளவிலான போட்டிகளுக்கும், அதில் வெற்றி பெறும் மாணவர்கள் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறும் நிலையில், அம்மாணவருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டா-லின், பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் பரிசுகள் வழங்கினர்.
இந்நிலையில், மாணவர்களிடையே அறிவியல் மற்றும் கணிதப் பாடங்களில் அதிக ஆர்வத்தையும் திறமையையும் வளர்க்கும் வகையில் "வானவில் மன்றம்' என்ற பெயரில் புதிய திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டா-லின் தொடங்கி வைத்தார். தமிழக சட்டசபையில், 2022-23-ஆம் ஆண்டு மானிய கோரிக்கையின்போது வெளியிட்ட அறிவிப்பின்படி, இந்த வானவில் மன்றம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த வானவில் மன்றத்தின் அடிப்படை முழக்கம் எங்கும் அறிவியல், யாவும் கணிதம் என்பதே. இத்திட்டம் மாணவர்களிடையே அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும். எதையும் ஆராய்ந்து பார்த்து, கேள்வி கேட்கும் பழக்கத்தை உருவாக்கும். அறிவியல், கணிதம் தொடர்பாக புதியவற்றை அறிந்து கொள்ளும் ஆர்வத்தை உருவாக்கும். குழந்தைகளிடையே இயல்பாக உள்ள படைப்பாற்றலை ஊக்குவித்து, புதுமை காணும் மனப்பாங்கை வளர்த்தெடுக்கும்.
அதேபோல், அன்றாட வாழ்க்கையில் இருக்கும் அறிவியலை உணர செய்யும் வகையில் பயனடைவர். மேலும், இத்திட்டத்தின் மூலம் ஆசிரியர்களின் வகுப்பறை கற்பித்தலை எளிதாக்கி, மேம்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு உருவாகிறது.
இத்திட்டத்தில் கையாளும் வழிமுறைகளை பகிர்ந்து கொள்வதற்கும், தொடர்ந்து செயல்படுத்திட ஆலோசனை வழங்குவதற்கும் விருப்பம் தெரிவித்த ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கென 710 ஸ்டெம் கருத்தாளர்கள் தேர்வு செய்யப்பட்டு ஏதுவாளர்களாக செயல்படுவர். இதற்கென முதல் கட்டமாக 100 மோட்டார் சைக்கிள்கள் கருத்தாளர்களுக்கு வழங்கப்பட்டு, தமிழக அளவில் நடமாடும் அறிவியல் ஆய்வக வாகனம் மூலமாக 6 முதல் 8-ஆம் வகுப்புவரை படிக்கும் மாணவர்களுக்கு எளிய அறிவியல் பரிசோதனை கருவிகளை உடன் எடுத்து சென்று, பள்ளிகளில் ஆசிரியர் களின் துணையுடன் கருத்தாளர்கள் பரிசோதனை செய்து காண்பிக் கின்றனர்.
மேலும், வாரம்தோறும் ஆசிரியர் களுக்கு அறிவியல், கணித வல்லுநர் களுடன் இணையவழி (டெலிகிராம்) கலந்துரையாடல் செய்வதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
அந்தந்த மாவட்டங்களில் ஆசிரியர்களும் மாணவர்களும் பள்ளிக்கு அருகாமையில் உள்ள ஆராய்ச்சி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த இடங்களுக்கு சென்று, நேரடி அனுபவம் பெறுவதற்கும் வானவில் திட்டம் வழிவகை செய்கிறது. தமிழக அரசு பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவர்களும் எதிர்வரும் காலங்களில் தங்களின் அறிவியல், கணிதம் உள்ளிட்ட பாடங்களில் முழுமையான படைப்பாற்றல்களை வெளிக்கொணர வானவில் திட்டம் வழிவகுக்கும் வகையில் பயனுள்ளதாக அமையும்.
சிற்பி திட்டம்
பள்ளிக் குழந்தைகளை நல்வழியில் செல்ல வகை செய்யும் சிற்பி திட்டத்தில் பங்கேற்கும் மாணவர்களுக்கு தனிச் சீருடை வழங்கப்பட உள்ளது.
சென்னை பெருநகர காவல் துறையின் சார்பில் பள்ளி மாணவர்களுக்கென பிரத்யேகமாக சிற்பி திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டமானது ரூ.4.25 கோடி மதிப்பில் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் 100 பள்ளிகளில் இருந்து தலா 50 மாணவ மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு நல்லொழுக்கம் குறித்த பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.
இந்தப் பயிற்சி வகுப்புகள் ஒவ்வொரு புதன்கிழமையும் மாணவர்களுக்கு அளிக்கப்படும். காவல் துறை அதிகாரி களும், துறைசார் நிபுணத்துவம் பெற்றவர்களும் பயிற்சி வகுப்புகளை நடத்துவர். இதற்கென பிரத்யேகமாக புத்தகம் வழங்கப்படும்.
சத்தான உணவு
சிற்பி திட்டத்தின் கீழ், ஆண்டுக்கு 5,000 மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். அதில், மாணவர்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்து 764. மாணவிகள் 2 ஆயிரத்து 236. மொத்தம் 5 ஆயிரம் பேர். இந்த வழங்கப்படும், திட்டத்தின் நோக்கமாக சில பண்புநலன்கள் வடித்தெடுக்கப்பட்டுள்ளன.
அதன்படி, சமத்துவ உணர்வு, மதச்சார்பற்ற கண்ணோட்டம் மற்றும் விசாரணை மனப்பான்மையுடன் கூடிய தலைமைப் பண்புகளை வளர்த்தல், காவல் துறை எவ்வாறு சமூகத்துடன் இணைந்து செயல்படுகிறது என்பதை கவனிக்கச் செய்தல், வகுப்புவாதம், போதை பழக்கம் மற்றும் மதுப்பழக்கத் துக்கு எதிராக மாணவர்களை உருவாக்குதல் ஆகியன திட்டத்தின் நோக்கங்களாகும். இந்தத் திட்டத்தில் இணையும் மாணவர்களுக்கு தனிச் சீருடை வழங்கப்படும்.
பாட வேளையின் போது, முளை கட்டிய பயறு வகைகள், இனிப்பு கொழுக்கட்டை, பழங்கள் ஆகியன சிற்றுண்டிகளாக வழங்கப்படும். கவாத்துப் பயிற்சி, போக்குவரத்து விதிகள் குழந்தைகளுக்கான பாதுகாப்பு வழிமுறைகள், பேரிடர் கால முன்னெச்சரிக்கை குறித்தும் விளக்கப் படும். மேலும், மாணவ, மாணவிகள் சென்னையில் புகழ்பெற்ற எட்டு இடங்களுக்கு சுற்றுலாவாக அழைத்துச் செல்லப்படுவர்.
தமிழ்நாடு அரசின் பத்திரிகையாளர்களுக்கான திட்டம்
தமிழ்நாடு அரசின் பத்திரிகையாளர் களுக்கான திட்டம் என்பது தமிழ்நாட்டில் பத்திரிகை நிறுவனங்கள் மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களில் பணியாற்றும் செய்தியாளர்களுக்கு தமிழ்நாட்டு அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் நலத்திட்டம் ஆகும்.
செய்தியாளர் அடையாள அட்டை
ஒவ்வொரு பத்திரிகை நிறுவனத்திற்கும் 2 செய்தியாளர்கள், 1 புகைப்படக்காரர் என்கிற அளவிலும் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திற்கும் 2 செய்தியாளர்கள், 2 ஒளிப்பதிவாளர்கள், 2 ஒளிப்பதிவு உதவியாளர்கள் ஆகியோருக்குச் செய்தியாளர் அட்டைகள் வழங்கப்படுகின்றன. பத்திரிகையாளர் அங்கீகார அட்டை சென்னையில் ஒரு நாளிதழுக்கு 9 செய்தியாளர்கள், 2 புகைப்படக்காரர்கள் மற்றும் பிற மாவட்டங்களில் 2 செய்தியாளர்கள், 1 புகைப்படக்காரர் ஆகியோருக்கு பத்திரிகையாளர் அங்கீகார அட்டை வழங்கப்படுகிறது.
பயன்கள்
அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணம் ரயில் பயணங்களில் 50 சதவிகித கட்டணச் சலுகை, ரயில் பயணங்களில் முன்னுரிமைப் பதிவுகள் தொலைபேசி இணைப்புப் பெறுவதில் முன்னுரிமை வீட்டுவசதி வாரியக் குடியிருப்புகளில் முன்னுரிமை அடிப்படையில் சிறப்பு ஒதுக்கீடு நம்ம ஸ்கூல் திட்டம் ஒவ்வொரு பள்ளிக்கும், அந்தப் பள்ளியில் படித்தவர்கள் உதவ வேண்டும். இதேபோல ஒரு முன்னெடுப்பை தமிழக அரசு சார்பில் மேற்கொள்ளப் பட உள்ளது..
அதோடு அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள், மாணவர்களின் தனிப்பட்ட திறமைகளை வெளிப் படுத்த கலைத்திருவிழா, வானவில் மன்றம் என பல திட்டங்கள் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அரசுப் பள்ளிகளை மேலும் மேம்படுத்தும் வகையில், "நம்ம ஸ்கூல்” என்ற புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டா-லின் தொடங்கி வைத்தார்.
இந்த திட்டமானது அரசுப் பள்ளிகளில் பயின்று தற்போது நல்ல நிலைமைகளில் இருக்கும் முன்னாள் மாணவர்களின் உதவியோடு செயல்படுத்தப்படவுள்ளது.
இந்த திட்டம் மூலம், அரசுப் பள்ளிகளில் பயின்று, தற்போது பல்வேறு நிறுவனங்களில் உயர்ந்த பதவியில் இருக்கும் முன்னாள் மாணவர்கள், தொழிலதிபர்களாக உள்ள முன்னாள் மாணவர்கள், சமூக அக்கறை கொண்ட நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் சமூகப் பொறுப்புணர்வு நிதி மூலம் அரசுப் பள்ளிகளைத் தத்தெடுத்து, சுற்றுச்சுவர் அமைத்தல், வர்ணம் பூசுதல், இணையதள வசதி, சுகாதாரமான கழிப்பறைகள், ஆய்வகங்கள், நூலகங்கள் போன்ற அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும்.
மேலும், இதற்கான இணையதளத்தையும் முதல்வர் மு.க. ஸ்டாலி-ன் தொடங்கி வைத்தார். இதன் மூலம், திட்டத்தில் பங்கேற்க விரும்புவோர், எந்தப் பள்ளிக்கு வேண்டுமானாலும் நிதியுதவி வழங்கலாம்.
இவ்வாறு வழங்கப்படும் நிதி முறையாகப் பயன்படுத்தப்படுகிறதா என்பதையும் நிதி வழங்கியவர்கள் அறியும் வகையில் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.