நாட்டின் சுதந்திர தினமான ஜூலை 4-ஆம் தேதிக்குள் 70% அமெரிக்க வயது வந்தோர்களுக்கு தடுப்பூசி போடப்படுமென அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்தார்.
இதுவரை, நாட்டில் 247,769,049 டோஸ் கோவிட் -19 தடுப்பூசிகளை அமெரிக்கா வழங்கியுள்ளது என்று அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (சி.டி.சி) தெரிவித்துள்ளது. சி.டி.சி பட்டியலில் இரண்டு டோஸ் செலுத்த வேண்டிய மாடர்னா மற்றும் ஃபைசர் / பயோஎன்டெக் தடுப்பூசிகளும், ஒரு டோஸ் மட்டும் செலுத்தக் கூடிய ஜான்சன் & ஜான்சனின் தடுப்பூசியும் அடங்கும்.
தற்போது அடுத்த தலைமுறை கோவிட் -19 தடுப்பூசிகளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஆராய்ச்சியாளர்கள், தடுப்பூசிகள் எதிர்காலத்தில் ஊசி வடிவில் இருக்காது என்றும், அதற்கு பதிலாக மாத்திரைகள் அல்லது நாசி ஸ்ப்ரேக்களாக வழங்கப்படும் என்றும் கூறுகின்றனர். இதன் மூலம், தற்போது கொடிய தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்குப் பயன்படுத்தப்படும் திரவ வடிவ தடுப்பூசிகளை ஒப்பிடும்போது புதிய வடிவிலான தடுப்பு மருந்துகள் சேமித்து வைப்பதற்கு மிகவும் எளிமையானதாக மாறும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். இந்த எதிர்கால தடுப்பூசிகளை அமெரிக்காவின் அரசு ஆய்வகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களான சனோஃபி எஸ்.ஏ, ஆல்டிமுன் இன்க் மற்றும் கிரிட்ஸ்டோன் ஆன்காலஜி இன்க் போன்றவற்றால் உருவாக்கி வருவதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தெரிவித்துள்ளது. தற்போது நடைபெற்று வரும் 93 தடுப்பூசி பரிசோதனைகளில், இரண்டு மட்டும் மாத்திரைகளாகவும் மற்றும் ஏழு மட்டும் நாசி ஸ்ப்ரேக்களாகவும் உள்ளது என்று உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.
அஸ்ட்ராசெனெகா மற்றும் ஃபைசர் கோவிட் -19 தடுப்பூசிகளின் ஒற்றை டோஸ் 60 வயதிற்கு மேற்பட்டவர்களிடையே தொற்றுநோய்களைத் தடுப்பதில் 86.6 சதவீதம் பயனுள்ளதாக இருப்பது கண்டறியப்பட்டது. முதல் டோஸ் வழங்கப்பட்ட இரண்டு வாரங்களுக்குப் பிறகு ஃபைசர் தடுப்பூசி நோயைத் தடுப்பதில் சுமார் 89.7 சதவீதம் பயனுள்ளதாக இருப்பதாகவும் அதே நேரத்தில் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி 86 சதவீதம் பயனுள்ளதாக இருப்பதாகவும் கொரியா நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நிறுவனம் (கே.டி.சி.ஏ) தெரிவித்துள்ளது.
கோவிஷீல்ட் (சீரம் இந்தியா நிறுவனம்
தயாரித்த அஸ்ட்ராஜெனெகாவின் தடுப்பூசி) அல்லது கோவாக்சின் (பாரத் பயோடெக் லி-மிடெட் தயாரித்த) ஆகியவற்றுடன் 17.7 கோடிக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது, அவர்களில் 3.9 கோடிக்கும் அதிகமானோர் இரண்டாவது டோஸ் பெற்றுள்ளனர்.
இந்திய தலைமை மருந்துக் கட்டுப்பாட்டு (டி.ஜி.சி.ஐ) அமைப்பு வழங்கிய ஆரம்ப அனுமதியின்படி, கோவிஷீல்டு தடுப்பூசி முதல் டோஸ் போட்டபின், 4-6 வாரங்களுக்குப் பிறகு இரண்டாவது டோஸ் போடப்பட வேண்டும். கோவேக்ஸின் தடுப்பூசி முதல் டோஸ் போட்ட பிறகு, 28 நாட்களுக்குப் பிறகு கோவேக்ஸின் 2-வது டோஸ் போடப்பட வேண்டும். இந்த இடைவெளி பின்னர் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு 8-16 வாரங்களுக்கும், கோவாக்சினுக்கு 4-6 வாரங்களுக்கும் நீட்டிக்கப்பட்டது.
ஒருவர் கோவிட்-19க்கு தடுப்பூசி போடவில்லை என்றால், அவருக்கு பரிசோதனையில் கோவிட்-19 தொற்று உறுதிசெய்யப்பட்ட நாளி-லிருந்து 90 நாட்கள் காத்திருக்குமாறு அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (சி.டி.சி) பரிந்துரைக்கிறது. நோய்த்தொற்று ஏற்பட்டதும் நோய் எதிர்ப்பு சக்தி சில மாதங்களுக்கு நீடிக்கும். அதனால், தொற்றில் இருந்து குணமடைந்த ஒருவர் 6-8 வாரங்கள் காத்திருப்பது நல்லது என்று இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் (ஐ.ஐ.எஸ்.இ.ஆர்) நோயெதிர்ப்பு நிபுணர் டாக்டர் வினிதா பால் கூறினார். முன்னணி தடுப்பூசி விஞ்ஞானி டாக்டர் ககன்தீப் காங் கூறுகையில், நஆதந-ஈர்ய-2 வைரஸால் ஏற்பட்ட இயற்கையான தொற்றுநோயைத் தொடர்ந்து 80% பாதுகாப்பு இருப்பதாக இங்கிலாந்தின் தரவு காட்டுகிறது. அதனால், 6 மாதங்கள் வரை காத்திருப்பது நல்லது என்று அவர் கூறினார். இது தரவுகளை ஆய்வு செய்த உலக சுகாதார அமைப்பின் (WHO) பரிந்துரைகளுக்கு ஏற்ப அமைந்துள்ளது. மேலும், தொற்றுநோய் ஏற்பட்டதற்குப் பிறகு 6 மாதங்களுக்கு தடுப்பூசி போடுவது தாமதமானது. ஏனெனில், அதுவரை இயற்கையான ஆன்டிபாடிகள் உடலி-ல் தொடர்ந்து இருக்கும்.
முதல் டோஸ் செலுத்திய பின்னர் கொரோனா வைரஸ் பரிசோதனையில் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட பின்னர், தொற்று உறுதிப்படுத்தப்பட்டு 8 வாரங்களுக்குப் பிறகு இரண்டாவது டோஸ் கொடுக்கப்படலாம் என்று கர்நாடகாவின் நஆதந-ஈர்ய2-இன் மரபணு உறுதிப்படுத்தலுக்கான நோடல் அதிகாரி டாக்டர் வி ரவி மற்றும் தேசிய மனநல மற்றும் நரம்பியல் அறிவியல் கழகத்தில் (நியூரோவைராலஜி ஓய்வு பெற்ற பேராசிரியர்) நிம்ஹான்ஸ்) என்று குறிப்பிட்டுள்ளார். உடல் நோய்த்தொற்றுக்குப் பிறகு ஆன்டிபாடி களை உருவாக்கத் தொடங்குகிறது. மேலும், இது ஒரு தடுப்பூசி பெறுவதற்கு சமமானது. இருப்பினும், இரண்டாவது டோஸ் எடுப்பதற்கு முன் குறைந்தது எட்டு வாரங்கள் காத்திருப்பது நல்லது என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
ஒருவருக்கு இரண்டு டோஸ்களுக்கு இடையில் தொற்றுநோய் ஏற்பட்டால், பல பேருக்கு நோய் லேசாக அல்லது மிதமானதாக இருக்கக்கூடும். அது நோய்த்தொற்று எப்போது ஏற்பட்டது என்பதைப் பொறுத்தது. தடுப்பூசியின் முதல் டோஸைப் பெற்ற 1 முதல் 3 வாரங்களுக்குள் தொற்று ஏற்பட்டால் தடுப்பூசி விளைவைக் கொண்டிருக்க வாய்ப்பில்லை. தொற்றுநோய் அதன் போக்கைத் தொடரும். ஆனால், முதல் தடுப்பூசி டோஸ் போட்டுக்கொண்ட மூன்று வாரங்களுக்குப் பிறகு ஒருவருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டால், அந்த நபர் நோயால் லேசாக பாதிக்கப்படுவார்.
விஞ்ஞானிகள் இன்னும் இயற்கையாக தொற்றுநோயால் தூண்டப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி பற்றியும் தடுப்பூசியால் தூண்டப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி பற்றியும் ஆய்வு செய்துகொண்டிருக் கிறார்கள். சி.டி.சி படி, தடுப்பூசிக்குப் பிறகு உட-ல் பாதுகாப்பை உருவாக்க பொதுவாக இரண்டு வாரங்கள் ஆகும். எனவே, நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.
இரண்டாவது டோஸ் எடுக்க தாமதமாகிவிட்டால் பீதி அடைய வேண்டிய அவசியமில்லை, ஆனால் அதை காலவரையின்றி ஒத்திவைக்க வேண்டாம் என்று மகாராஷ்டிரா கோவிட்-19 பணிக்குழுவின் உறுப்பினர் டாக்டர் சஷாங்க் ஜோஷி கூறினார்.
கோவேக்ஸினுக்கு, முதல் டோஸில் இருந்து 45 நாட்கள் வரை இடைவெளியை நீட்டிக்க முடியும். கோவிஷீல்ட்டைப் பொறுத்தவரை, முதல் டோஸ் எடுத்துக்கொண்டபின் மூன்று மாதங்களுக்குப் பிறகு இரண்டாவது டோஸ் எடுக்கப்பட வேண்டும் என்றார். இவை முதல் தலைமுறை தடுப்பூசிகள் மற்றும் ஆய்வுகளாக நடந்து வருகின்றன.
லான்செட் சமீபத்தில் ஒரு ஆய்வை வெளியிட்டது. கோவிஷீல்ட் இரண்டு டோஸ் 12 வாரங்கள் இடைவெளியில் போடப்பட்டால் 81.3% செயல்திறனைக் கொண்டுள்ளது என்பதைக் காட்டியது. ஆனால், அவை 6 வாரங்களுக்கும் குறைவான இடைவெளியில் போடப் படும் போது 55.1% செயல்திறனை மட்டுமே காட்டியது. பேராசிரியர் ரவி கூறுகையில் “அடிப்படைக் கொள்கை என்னவென்றால், 2 டோஸ்களுக்கு இடையேயான இடைவெளி அந்தள வுக்கு நல்லது.ஆனால், நீண்ட இடைவெளியை வேண்டாம் என்று நாங்கள் ஏன் சொல்கிறோம் என்றால், இந்த காலகட்டத்தில் ஒருவர் தொற்று நோயைப் பெறலாம். மேலும், இரண்டாவது டோஸ் எடுக்க மறந்து போவதற்கும் ஒரு வாய்ப்பு இருக்கலாம்” என்று அவர் கூறினார்.
டாக்டர் காங்கின் கூற்றுப்படி, மற்ற தடுப்பூசிகள் (கோவேக்ஸின் போன்றவை) பொதுவாக ஒரு டோஸுடன் சிறிய பாதுகாப்பை வழங்குகின்றன. எனவே, மக்களுக்கு 80% பாதுகாப்பு அளிக்கும் இரண்டு டோஸ்கள் அவசியம் தேவைப்படு கின்றன. இங்கே ஒரு சில வாரங்கள் அதிக வித்தியாசத்தை ஏற்படுத்தாது. அதனால், இரண்டாவது டோஸ் எடுத்துக் கொள்ளுங்கள் என்று அவர் கூறினார். இந்த சுழற்சியை மீண்டும் செய்வதற்கு எந்த காரணமும் இல்லை என்று அவர் உறுதியளித்தார். மருத்துவ பரிசோதனைகளில் சில தன்னார்வலர்களுக்கு கோவேக்ஸின் மூன்றாவது டோஸ் கொடுக்க பாரத் பயோடெக்கிற்கு டி.ஜி.சி.ஐ சமீபத்தில் அனுமதி அளித்தது.
உலக தடுப்பூசிகள்
வேறெந்த தொற்றுகளுக்கும் இல்லாத வகையில் தடுப்பூசிகளை மிகவும் அதிக அளவில் தடுப்பூசிகள் கொரோனா தொற்றுநோயை எதிர்க்க உருவாக்கப்பட்டு வருகிறது. இதுவரையில் 250 நிறுவனங்கள் தடுப்பூசிகள் தயாரிப்பில் இறங்கி யுள்ளன. அதில் குறைந்தது 10 தடுப்பூசிகள் அவசர தேவைக்காக உலகின் பல்வேறு பகுதிகளில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதில் குறைந்த பட்சம் இரண்டு தடுப்பூசிகள் இதற்கு முன்பு மனிதர்களிடம் பயன்படுத்தாத தொழில்நுட்பம் கொண்டு உருவாக்கப்பட்டது. ஃபைசர் பையோடெக், மொடெர்னா நிறுவனங்களின் எம்.ஆர்.என்.ஏ தடுப்பூசிகள் மற்றும் வைரல் வெக்டார் அடிப்படையில் ஆஸ்ட்ராஜெனகா, ஸ்புட்னிக் வி, ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் ஜன்சென் மற்றும் சீனாவின் கொரோனாவாக் ஆகிய தடுப்பூசிகளும் இந்த பட்டிய-லில் இடம் பெற்றுள்ளது.
பாரத் பையோடெக்கின் கோவாக்ஸின் மற்றும் சீனாவின் சினோஃபார்ம் நிறுவனத்தின் சினோவாக் போன்றவை செயல்படாத வைரஸை பயன்படுத்தி டைம்-டெஸ்ட்ட தொழில்நுட்பம் கொண்டு உருவாக்கப்பட்ட தடுப்பூசிகள் ஆகும். கடுமையான பாதிப்பு மற்றும் இறப்புகளில் இருந்து காக்கும் வகையில் இந்த தடுப்பூசிகள் பாதுகாப்பானதாக இருந்தாலும் தொற்றில் இருந்து தப்பிக்க உதவுவதில்லை. இந்த தடுப்பூசிகள் அனைத்தும் இருமுறை எடுத்துக் கொள்ளவேண்டியவை.
ஆனால் ஜான்சென் (ஓஹய்ள்ள்ங்ய்) ஒரு முறை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டியது. வருங்காலத்தில் தடுப்பூசிகள் இந்த முறை கொண்டு அதிக அளவில் உருவாக்கப்படும்.
குறைந்தது 50 தடுப்பூசிகள் உலகின் பல்வேறு பகுதிகளில் மூன்று அல்லது நான்கு ஒப்புதல்களுடன் நெருக்கமாக உள்ளன. இந்தியாவில் சைடஸ் காடிலாவி-லிருந்து டி.என்.ஏ அடிப்படையிலான தடுப்பூசி உட்பட பல தடுப்பூசிகள் இறுதி கட்ட சோதனையில் உள்ளன.
பல தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு வருகிறது. நஆதந-ஈர்ய-2 போன்ற தொற்றுக்கு எதிராக செயல்திறன் மிக்க தடுப்பூசிகளை தயாரிப்பது கடினமானது அல்ல என்ற பிம்பத்தை இது உருவாக்கலாம். ஆனால் தடுப்பூசிகள் உருவாக்கம் என்பது மிகவும் சிக்கலானது மற்றும் சிறப்புமிக்க தொழிலாகும். சாதாரண நிலைகளில் ஒரு தடுப்பூசியை உருவாக்க 10 முதல் 15 ஆண்டுகள் ஆகலாம். இந்தியா உட்பட உலகெங்கிலும் பல தடுப்பூசிகள் அங்கீகரிக்கப்பட்ட பின்னரும் கூட, ஏன் ஒரு பெரிய பற்றாக்குறை உள்ளது, மற்றும் இந்த தடுப்பூசிகள் ஏன் நியாயப்படுத்த முடியாத மற்றும் சமமற்ற அணுகலைக் கொண்டுள்ளது என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.
7 பில்லியன் மக்களுக்கும் இரண்டு டோஸ்கள் தடுப்பூசிகளை வழங்க வேண்டும். எனவே தேவை அதிகமாக உள்ளது. எப்போதும் போல் உலகில் பணக்கார நாடுகள் நடந்து கொண்டன. 80% அதிகமாக தற்போது இருக்கும் தடுப்பூசிகள் ஏற்கனவே அவர்களால் ஒப்பந்தம் முறையில் பெறப்பட்டும் சேமிக்கப்பட்டும் உள்ளது. மீதம் இருக்கும் 20% தடுப்பூசிகள் மட்டும் தான் இதர நாடுகளுக்கு வழங்கப்படுகிறது. கோவாக்ஸ் போன்ற விசயத்தில் உலக சுகாதார அமைப்பு தலையிட்டும் வெறும் 1% ஆப்பிரிக்க மக்களுக்கு தான் தடுப்பூசிகள் சென்று சேர்ந்துள்ளது.
இதில் மற்ற சிக்கல்களும் உள்ளது. ஃபைசர், மொடர்னா மற்றும் ஜான்சென் போன்ற 3 தடுப்பூசிகள் மட்டுமே அமெரிக்காவின் எஃப்.டி.ஏ அனுமதி பெற்றுள்ளது. மலிவு விலையில் கிடக்கும் அஸ்ட்ரென்காவிற்கான ஒப்புதல் இன்னும் நிலுவையில் உள்ளது. ஃபைசர் 12 முதல் 16 வயதினருக்கு தடுப்பூசிகள் வழங்குவதற்கான ஒப்புதலை பெற்றுள்ளது. மொடெர்னா மற்றும் ஜான்சென் போன்ற தடுப்பூசிகள், இந்த வயதினரிடையே பாதுகாப்பு மற்றும் செயல்திறன் சோதனைகளை முடிக்கும் நிலையில் உள்ளது. மேற்கு நாடுகள், ஏற்கனவே தங்கள் வயதுவந்த மக்களில் கணிசமான பகுதியை நோய்த்தடுப்புக்கு உட்படுத்தியுள்ளன என்பது தெளிவாகிறது. சிறு வயதினர் மற்றும் கைக்குழந்தைகளுக்கும் கூட தடுப்பூசிகள் போடும் நிலை ஏற்பட்டலாம். எனவே இது தடுப்பூசி களை சந்தையில் அணுகுவதை மேலும் கடினமாக்கிவிடும்.
மற்றொருபக்கம் ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கான ஒப்பந்தத்தை பிரேசில் சமீபத்தில் மறுத்தது. சீனாவின் சினோவாக் மற்றும் சினோஃபார்ம் தடுப்பூசிகள் மேற்கு நாடுகளால் இன்னும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. தடுப்பூசிகள் தயாரிக்கப்படும் நாடுகளை பொருட்படுத்தாமல் விரைவில் செயல்திறன் மிக்க பாதுகாப்பான தடுப்பூசிகளை விரைவாக ஆராய்ந்து விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்.
இந்தியாவில் தடுப்பூசிகளுக்கான தட்டுப்பாடு
உலகில் வேறெந்த பகுதியிலும் இல்லாத வகையில் இந்தியா கொரோனா இரண்டாம் அலையில் சிக்கி பெரும் சவால்களை சந்தித்து வருகிறது. நாள் ஒன்றுக்கு 4 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. வைரஸ் மிகவும் ஆபத்தான வகைகளாக மாறக்கூடும் என்பதில் தீவிர கவலை உள்ளது, மேலும் வைரஸ் பெருக்கத்தின் சங்கிலி- விரைவில் கட்டுப்படுத்தப்படாவிட்டால், அது உலகளாவிய பிரச்சினையாக மாறும். உலகெங்கிலும் உள்ள புதிய அலைகள் பிறழ்வு வைரஸ்களால் உருவாகியுள்ளது. தற்போதைய தடுப்பூசிகள் இவற்றுக்கு எதிராக பயனுள்ளதாகத் தோன்றினாலும், தொற்றுநோயைக் கட்டுக்குள் கொண்டுவராவிட்டால் நோயெதிர்ப்பில் இருந்து மரபுபிறழ்ந்த வைரஸ்களின் உருவாக்கம் அதிகரித்துக் கொண்டே இருக்கும்.
இந்தியா, இயல்பாகவே உடையக்கூடிய சுகாதார அமைப்பைக் கொண்டு இருக்கிறது. தற்போது ஏற்பட்டுள்ள தொற்றின் தீவிரத்தால் பெரும் அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளது. மருத்துவ ஆக்ஸிஜனிற்கும் கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. வயது வந்த அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கான திட்டத்திலும் கூட விநியோகச் சங்கிலி-யில் ஒரு பெரிய இடைவெளி உள்ளது. அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு அடுத்தபடியாக அதிக மக்களுக்கு தடுப்பூசிகளை வழங்கிய நாடாக இந்தியா இருக்கின்ற போதிலும் இந்திய மக்கள் தொகையில் வெறும் 13% மக்கள் மட்டுமே முதல் டோஸை பெற்றுள்ளனர். 2% மக்கள் மட்டுமே முழுமையாக தடுப்பூசிகளை பெற்றுள்ளனர். பல நாடுகளில் ஏற்கனவே வயது வந்தோரின் பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட்டுள்ளனர்.
தடுப்பூசி உற்பத்தியின் மையமாக இருக்கின்ற போதிலும் ஏன் இந்தியாவால், இருக்கின்ற இரண்டு தடுப்பூசிகளின் உற்பத்தியை அதிகரிக்க முடியவில்லை என்று கேள்வி எழுப்புகின்றனர். தடுப்பூசிகள் பல கூறுகளின் சிக்கலான சூத்திரங்கள் மற்றும் பெரும்பாலும் இறக்குமதி செய்யப்படும் மூலப்பொருட்களின் தடையற்ற விநியோகத்தை சார்ந்துள்ளது. மொத்த பொருட்களின் உற்பத்தி முதல் குப்பிகளில் தடுப்பூசிகளை நிரப்புவது வரை அனைத்தும் மிகவும் சிக்கலானது மற்றும் அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் செயல்முறையாகும். தற்போதுள்ள உற்பத்தியை அதிகரிக்க, போதுமான நிதி கிடைத்த பிறகும், தேவையான தடுப்பு மருந்துகளை உருவாக்க குறைந்தபட்சம் 2-3 மாதங்கள் ஆகும். தடுப்பூசி உற்பத்தியாளர்களுக்கு உரிமம் வழங்கப்பட்டாலும், உண்மையான உற்பத்தி தொடங்குவதற்கு பல மாதங்கள் ஆகும். அதிக எண்ணிக்கையிலான தடுப்பூசிகள் இறக்குமதி செய்யப்படாவிட்டால் இந்தியாவின் வயதுவந்த மக்களை உள்ளடக்கும் தடுப்பூசி இயக்கம் குறைந்தபட்சம் அடுத்த சில மாதங் களுக்கு ஒரு விநியோக சங்கிலி நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும்.
ஸ்புட்னிக், ஜென்சென், நோவாக்ஸ் உள்ளிட்ட மூன்று அல்லது நான்கு தடுப்பூசிகளை இந்தியா உருவாக்க உள்ளது. சில உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட தடுப்பூசிகள்.
2021-ஆம் ஆண்டு இறுதிக்குள் உலகில் உள்ள பல நாடுகளுக்கு தேவையான தடுப்பூசிகளை இந்தியா உற்பத்தி செய்யும்.
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்காவின் கூட்டு முன்மொழிவு உலக வர்த்தக அமைப்பில் மீண்டும் தாக்கல் செய்யப்படும். சமீபத்திய அறிவிப்பின் படி இந்த முன்மொழிவுற்கு அமெரிக்கா நேர்மறையாக ஆதரவு தந்துள்ளது. இந்த முன்மொழிவின் கீழ் கொரோனா தடுப்பூசிகளை தயாரித்து வரும் தடுப்பூசி நிறுவனங்கள் தங்களின் அறிவுசார் காப்புரிமைகளை குறைந்த காலத்திற்கு பகிரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது அதிக அளவில் ம-லிவான விலையில் தடுப்பூசிகளை உலகெங்கும் உற்பத்தி செய்ய உதவும். இது வைரஸ் புதிய பிறழ்வுகளை உருவாக்குவதற்கு முன்பு நடைமுறைக்கு வரும்.
தடுப்பூசிகள் அதிகமான மக்களை சென்றடைய வேண்டும், முடிந்தவரை அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் திட்டம் செயல்படுத்த வேண்டும், முடிந்தவரை தடுப்பூசி உற்பத்தியை விரைவாகவும் செலவு குறைந்ததாகவும் செய்ய வேண்டும் இவையே ஒரு நல்ல தடுப்பூசி கொள்கை என்று நாங்கள் நம்புகிறோம். இத்தகைய கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கான நிர்வாகத் திறன் நம்மிடம் இருக்க வேண்டும். தொற்று, ஏழை மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களையும் பாரபட்சமில்லாமல் பாதிக்கிறது என்பதால், கொள்கையும் சமமாக இருக்க வேண்டியது அவசியம். தற்போதைய விகிதத்தில், 75 சதவீத மக்களுக்கு தடுப்பூசி போட இந்தியாவுக்கு இரண்டு ஆண்டுகள் ஆகலாம்.
பெரும்பாலான முக்கிய நாடுகளில், அனைத்து குடியிருப்பாளர்களுக்கும் தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப் படுகின்றன. அமெரிக்கா போன்ற பெரும்பாலான முதலாளித்துவ நாடுகளில், கோடீஸ்வரர்கள் கூட இலவச தடுப்பூசிகளைப் பெறுகிறார்கள்.
அது மட்டுமல்லாமல், கணக்கில் வராத தொழிலாளர்களும் இலவச தடுப்பூசி திட்டத்தின் ஒரு பகுதியாக உள்ளனர். அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசிகளை வழங்குவதே அதிக மக்களுக்கு தடுப்பூசி கிடைப்பதற்கான எளிதான வழி. எனவே, இந்தியாவில் அனைத்து தடுப்பூசி கொள்முதல் களையும் மத்திய அரசே செய்ய வேண்டும் என்று அவர்கள் முன்மொழிகின்றனர்.
உற்பத்தியாளர்களை அடையாளம் காணுதல், விலைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துதல், விநியோகங்களை திட்டமிடுதல் மற்றும் நிதி பரிமாற்றங்களை செயல்படுத்துதல் ஆகியவற்றை மத்திய அரசு கையாள வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திற்கும் தடுப்பூசிகளை விநியோகிப்பதற்கான ஒரு வெளிப்படையான சூத்திரத்தை மத்திய அரசு உருவாக்க வேண்டும். வைரஸை தோற்கடித்து இந்த பந்தயத்தில் முன்னேறுவதை தவிர நமக்கு வேறுவழியில்லை.