கொரோனா வைரஸ், நம் அனைவரின் வாழ்விலும் பல தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. நாம் வாழும் முறை, நம் உறவுகள் என பலவற்றிலும் அதன் தாக்கத்தை பார்க்க முடிகிறது. ஆனால், இந்த பெருநோயிலிருந்து தற்காத்துக் கொள்வது என்பது குறித்து நமக்கு தொடர்ந்து அளிக்கப்படும் அறிவுரைகள் சற்றே கடினமாக அமையலாம்.
கொரோனா நோய்த்தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள உலக சுகாதார அமைப்பின் மிக முக்கியமான மற்றும் அடிப்படை பாதுகாப்பு அறிவுரை என்பது சுகாதாரமான முறையில் வாழ்வது.
உங்களின் கைகளை அடிக்கடி, சரியான முறையில் சுத்தம் செய்யுங்கள். சோப்பு மற்றும் தண்ணீரை பயன்படுத்தியோ, ஆல்கஹால் நிறைந்த கிருமிநாசினியை பயன்படுத்தியோ சுத்தம் செய்யுங்கள். இவை, உங்களின் கைகளில் வைரஸ் இருந்தால், அவற்றை கொன்றுவிடும்.
உங்களின் கண்கள், மூக்கு மற்றும் வாயை தொடுவதை தவிருங்கள். நாம் பல பொருட்களை கைகளால் எடுத்து பயன்படுத்துவதால், கைகளில் வைரஸ் இருக்கக்கூடும். அவ்வாறு கண்கள், மூக்கு மற்றும் வாயை தொடுவதால், அவை நம் உடலினுள் நுழைய வாய்ப்புள்ளது.
நோய் பரவலை தடுப்பது
உங்களுக்கு தும்மல் அல்லது இருமல் வந்தால், கைக்குட்டை/டிஷ்யு பேப்பரை பயன்படுத்துங்கள். அப்போதைய சமயத்தில் கைவசம் அவை இல்லை என்றால், உங்களின் மணிக்கட்டை வைத்து மறைத்துகொள்ளுங்கள்.
பயன்படுத்திய டிஷ்யு பேப்பரை உடனடியாக அப்புறப்படுத்திவிடுங்கள். இது, வைரஸ் நிறைந்துள்ள அந்த காகிதத்தால் பிறருக்கு நோய்த்தொற்று ஏற்படுவதை தவிர்க்க உதவும்.
இதே காரணத்திற்காகவே, மக்களை 2மீ சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
பல இடங்களில், அத்தியாவசியத் தேவை களை தவிர்த்து, வேறு எதற்காகவும் மக்களை வெளியே போக வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம், இருமல் மற்றும் தும்மல் பிரச்சினை உள்ளவர்களை மக்கள் சந்திக்கும் வாய்ப்புகள் குறையும்.
அப்படி நீங்கள் வெளியே சென்றுள் ளீர்கள் என்றால், ஒருவருக்கொருவர் கைகுலுக்கிக்கொள்வதை விடுத்து, பாதுகாப்பான முறையில் வரவேற்றுக் கொள்ளுங்கள் என்கிறது உலக சுகாதார நிறுவனம். அதாவது, கை அசைத்தல், தலை தாழ்த்துதல் போன்ற முறைகளை பயன்படுத்திக்கொள்ளலாம் என்கிறது.
முகமூடி மற்றும் கையுறைகள்
நீங்கள் கடைகளில் வாங்கும் சாதாரண மான முகக் கவசங்கள் உங்களை வைரஸ்களிடமிருந்து பாதுகாக்காது. ஏனென்றால், அவை பெரும்பாலும் மிகவும் வலுவிழந்து இருக்கும், கண்களை மறைக்காது, பல நாட்கள் நீடித்து உழைக்காது. ஆனால், நோய்த்தொற்று உள்ள ஒருவரின் உமிழ்நீர் மற்றவர்கள் மீது பட்டு, அவர் களுக்கு நோய்த்தொற்று ஏற்படாமல் இருக்க அவை உதவும்.
நினைவில்கொள்ளுங்கள், இந்த சார்ஸ்-சிஓவி-2 வைரஸ் தாக்குதலுக்கு உள்ளான பலரிடம் அறிகுறிகள் தெரிவதில்லை. எனவே, பொதுவெளி யில், முகமூடி அணிந்து செல்வது என்பது, பொதுவாகவே நமக்கு நன்மை அளிக்கும் ஒரு விஷயம்தான்.
நீங்கள் கையுறை அணிந்தாலும், கோவிட்-19 நோயால் தாக்கப்பட வாய்ப்புள்ளது என்றே உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது. உங்கள் கைகளில் வைரஸ் இருந்து முகத்தைத் தொட்டால், அவை நிச்சயமாக உள்ளுக்குள் போகும்.
கையுறைகளை அணிவதைவிட, சோப் மற்றும் தண்ணீர் கொண்டு கைகளை அடிக்கடி கழுவுவதால், நோய்த் தொற்றிலிருந்து அதிக பாதுகாப்பு கிடைக்கும் என்கிறது உலக சுகாதார நிறுவனம்.
நோயின் தாக்கம்
வறட்டு இருமல் மற்றும் காய்ச்சல் ஆகியவையே இந்த நோயின் முக்கிய அறிகுறிகள். உங்களுக்கு அந்த அறிகுறிகள் உள்ளனவா என்பதை கவனித்துக்கொள்ளுங்கள்.
சிலருக்கு, தொண்டை கட்டுதல், தலைவலி, வயிற்றுப்போக்கு ஆகிய அறிகுறிகளும் அறியப்பட்டுள்ளன. நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு, வாசனையை நுகர்தல் மற்றும் உணவின் சுவை அறிதல் ஆகிய உணர்வுகள் இல்லாமல் போவதாகவும் கூறப்படுகிறது.
உங்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் போய், தலைவலி, மூக்கிலிருந்து நீர் வருவது ஆகிய லேசான அறிகுறிகள் தெரிந்தாலும், அவை சரியாகும்வரை வீட்டில் இருக்குமாறு உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.
நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், 80% பேருக்கு கோவிட் நோய் மிகவும் லேசான தாக்கத்தையே உண்டாக்கு கிறது என்பதால், அவர்கள் மற்றவர் களிடமிருந்து தங்களை தனிமைப் படுத்திக்கொள்ள வேண்டியது அவசியம்.
உங்களுக்கு காய்ச்சல், இருமல் அல்லது சுவாசிப்பதில் பிரச்சினை ஏற்பட்டால், மருத்துவ உதவியை நாடுங்கள். இது, சுவாசப் பிரச்சினை அல்லது பிற தீவிர நோயின் காரணமாக இருக்கலாம்.
முன்கூட்டியே உங்களின் மருத்து வரிடம் தொலைப்பேசியில் பேசுங்கள்.
இதன்மூலம், நீங்கள் எந்த மருத்துவமனைக்கு, என்ன சிகிச்சைக்கு செல்ல வேண்டும் என்பதை சொல்லி, அவர்களால் உங்களுக்கு உதவ முடியும்.
கோவிட்-19 நோய் ஆபத்து தி லான்செட் இவ்ஃபெக்டஸ் டிசீசஸ் என்ற மருத்துவ சஞ்சீகையில் வெளியாகி யுள்ள புதிய ஆய்வுக்கட்டுரை.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட வர்களில் 0.66% பேர் பேர் மட்டுமே இறப்பதாக குறிப்பிட்டுள்ளது.
பருவக்காலங்களில் வரக்கூடிய ஃப்ளூ நோயின் தாக்கம் 0.1% என்பதால், கொரோனாவின் இந்த 0.66% அதிக மானது என்றே பார்க்கப்பட்டாலும், முன்பு வெளியான கணக்கீடுகளைவிட குறைவாகவே இது உள்ளது.
ஆனால், உலகில் மொத்தம் எவ்வளவு பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதற்கான முழு எண்ணிக்கை தெரியாதவரை இந்த நோயால் இறப்பவர்களில் விகிதத்தை நம்மால் துல்லியமாக சொல்ல முடியாது.
இந்த பெருந்தொற்று ஏற்பட்டுக்கொண்டு இருக்கும்போதே இதை கணக்கிடுவது சரியான விஷயமான இருக்காது. ஏனெனில், இந்த நோயால் ஒருவர் பாதிக்கப்படுவதற்கும், அதனால் அவர் இறப்பதற்குமான கால இடைவேளை அதிகமாக உள்ளது.
இம்பீரியல் கல்லூரியில் தற்போதைய கணக்கின்படி, 80 வயதை தாண்டியவர் களில் இந்த நோய் பாதித்தவர்கள், சராசரியைவிட 10 மடங்கு அதிகமாக இறப்பதாகவும், 40 வயதுக்கு கீழே உள்ளவர்களில் அந்த எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது என்று தெரியவருகிறது.
சீனாவில் நடந்த முதல் கட்ட ஆய்வில், அங்குள்ள 44,000 நோயாளிகள் குறித்து கணக்கிட்ட போது, நீரிழிவு நோய், அதிக ரத்த அழுத்தம், இதயம் மற்றும் சுவாசப் பிரச்சினை உள்ளிட்ட பிரச்சினை உள்ளவர்கள் ஐந்து மடங்கு அதிகம் இறப்பது தெரிய வந்தது.
கொரோனா வைரஸுக்கு மருந்து இந்த புதிய வைரஸுக்கு எதிராக இதுவரை எந்த மருந்தோ, தடுப்பூசியோ இல்லை. ஆண்டிபயாடிக் மருந்துகளும் இதற்கு எதிராக வேலை செய்வதில்லை (அவை பாக்டீரியாக்களுக்கு எதிராக போராடுகின்றன, ஆனால் வைரஸுக்கு எதிராக இல்லை).
இதற்கு சிகிச்சைகள் உள்ளன என்றாலும், பெரும்பான்மையான மக்கள் தாங்களாகவே சரியாகி விடுகிறார்கள்.
உலகளவில், பல விஞ்ஞானிகள் இதற்கான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள். ஆனால், அவற்றை சோதனை செய்ய வேண்டும். இதனால், அவை மக்களின் பயன்பாட்டிற்கு வர சற்று காலம் ஆகும்.
உங்களின் உடல்நிலை மீது கவனம் கொள்ளுங்கள். முறையே உடற்பயிற்சி செய்யுங்கள்; சத்தான உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள்; தேவையான அளவு தண்ணீர் குடியுங்கள். புகை பிடித்தல், மது அருந்துதல் ஆகிய பழக்கங்களை ஒதுக்கி வையுங்கள்.
சரியான வழியில் இந்த பெருந்தொற்று குறித்த தகவல்களை பெறுங்கள்.
அதேபோல, கொரோனா தொற்று குறித்து ஒரு நாளுக்கு எவ்வளவு மணிநேரம் செலவழிக்கிறீர்கள் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.
கடினமான சூழல்களை எதிர்கொள்ளுங் கள். உங்களால் கட்டுப்படுத்த முடியாத சூழல்களை உங்களால் எதுவுமே செய்ய முடியாது; அதை ஏற்றுக்கொள்ள பழகுங்கள். ஆனால், கட்டுப்படுத்தக்கூடிய விஷயங்களின் மீது கவனத்தை செலுத்துங்கள்.
உங்களுக்கு விருப்பமான விஷயங்களை செய்யுங்கள். பிடித்தவை என்ற பட்டியல் மிகவும் சிறியதாக இருந்தால், புதியதாக ஒரு விஷயத்தை சேர்க்க முடியுமா என்று பாருங்கள்.
தற்போது நடப்பவை மீது கவனம் கொள்ளுங்கள். இப்போது உலகில் நடந்து வரும் அனைத்தும் தற்காலிக மானதே என்பதை மறக்காதீர்கள்.
உங்களின் தூக்கத்தில் கவனம் கொள்ளுங்கள். ஒரே நேரத்தில் தூங்கி எழுந்துகொள்ளும் வழக்கத்தை கொண்டுவாருங்கள். தூங்குவதற்கு முன்பு, கைபேசியில் மூழ்காதீர்கள்; காபி போன்ற பானங்களை பருகாதீர்கள்.