லகப்போரை அடுத்து அமெரிக்காவில் பிரெட்டன் உட்ஸ்ஸில் நடைபெற்ற பன்னாட்டு மாநாட்டில் ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி உலக வங்கியும் பன்னாட்டு நிதிசார் நிதியமும் அமைக்கப்பட்டன. ஆகவே இந்த பன்னாட்டு நிதி நிறுவனங்கள் பிரெட்டன் உட்ஸ் நிறுவனங்கள் என்று அறியப்பட்டன.

ஐரோப்பாவில் உலகப்போரினால் ஏற்பட்ட அழிவுக்குப் பிறகு புனர் அமைப்பு பணிகளுக்காக அமெரிக்காவின் வளங்களை வழங்குவதற்காக உலக வங்கி அமைக்கப்பட்டது. 1930-களில் ஏற்பட்ட மிகப்பெரிய தொழில் மந்தத்திற்குப் பிறகு தங்க நாணய முறை குலைந்த தினால் உலக நிதி அமைப்பை சீர் செய்யும் நோக்கத்தோடு பன்னாட்டு நிதிசார் நிதியம் அமைக்கப்பட்டது.

ஐரோப்பிய நாடுகளில் தீவிர மறுசீரமைப்பிற்குப் பின்னும் உலக நாடுகளின் பிரபலமான செலாவணிகள் மற்ற நாடுகளுக்கு எதிராக சந்தை மூலம் மதிப்பு நிர்ணயித்தல் ஏற்பட்டதை அடுத்தும், 1971-இல் அமெரிக்கா தங்க நாணய முறையிலி-ருந்து வெளியேறியதை அடுத்தும், உலக வங்கியும் பன்னாட்டு நிதிசார் நிதியமும் வளரும் நாடுகளின் தேவைகளுக்கு உதவி செய்தன. இதற்கு முக்கிய காரணம் இந்த வளரும் நாடுகளில் தீவிர நிதி பற்றாக்குறை உணரப்பட்டதுதான்.

அதற்கு அமைப்பு சார்ந்த இரண்டு முக்கிய பற்றாக்குறைகள் இருந்தன. முதலாவது வரவு செலவு பற்றாக்குறை.

Advertisment

அதை ஈடுகட்ட அந்நாடுகள் மற்ற நாடுகளின் சேமிப்பை நாடின. இரண்டாவது வளரும் நாடுகளில் சேமிப்பு பற்றாக்குறை. இந்த நிலைமை பெரிய திட்டங்களை செயல்படுத்தவும், உள் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்து வதினால் ஏற்பட்ட நிதிநிலை பற்றாக்குறை. இந்த நிதிநிலை பற்றாக்குறை அவ்வப்போது வரவு செலவு பற்றாக் குறையாகவும் உருவானது.

ஆகவே வளரும் நாடுகளின் வளர்ச்சிக்கு இடையூறாக இருப்பது, மூலதனத்திற்கு ஏற்ற வளர்ந்துவரும் சந்தைகளும் பன்னாட்டு நிதி நிறுவனங்களும் & அலோக் ஷீல் அளவு உள்நாட்டு சேமிப்பு இல்லாததும், மொத்த சேமிப்பில் பொது மக்கள் சேமிப்பு குறைவாக இருந்ததுமே ஆகும்.

ஆபத்துக்கள் சூழ்ந்த நிலையில் வளரும் நாடுகளுக்கு தனியார் முதலீடு கிடைப்பது கடினமாக உள்ள நிலையில் அவர்கள் தங்களுடைய முதலீட்டிற்கும் சேமிப்புக்கும் இடையேயான இடைவெளியை நிறைவு செய்ய உலக வங்கியிடமிருந்தும், ஆசிய வளர்ச்சி வங்கி, ஆப்ரிக்க வளர்ச்சி வங்கி போன்ற வட்டார பன்னாட்டு நிதி நிறுவனங் களி-லிருந்து குறைந்த வட்டியிலான, பல நாடுகளிலி-ருந்த பொருள்களை வாங்குவதற்கான கடன்களை நம்பியிருந்தார்கள்.

Advertisment

பொருளாதார செயல்பாடுகள்

உள்கட்டமைப்பு வசதிகளுக்கும் சமுதாய திட்டங்களுக்கும் உலக வங்கி நிதி ஆதரவு அளித்தது. இந்த வளரும் நாடுகளுக்கு தேவையான நிதி உள்ளுர் செலவாணியில் தேவைப்பட்டாலும் உலக வங்கி அளிக்கும் நிதி உதவி உயர் வெளிநாட்டு செலாவணியில் அளிக்கப்படுவதால் சில சிக்கல்கள் இருந்தாலும், இந்த நாடுகள் தங்களுடைய ஏற்றுமதி, இறக்குமதி பற்றாக்குறையை ஈடு செய்ய தங்கள் நாட்டில் கடன்கள் வாங்காமல் இது போன்ற பன்னாட்டு நிதிகளை நாடின. வெளிநாடுகளி-லிருந்து கிடைக்கும் நிதி உதவி திடீரென்று நின்று போகும் வாய்ப்பு உள்ளதால் பன்னாட்டு நிதிசார் நிதியம் இந்த வளரும் நாடுகளுக்கு ஏற்றுமதி இறக்குமதி சமாளிப்பு நிதி வசதியை வழங்கி வந்தது. 1991-இல் மேற்கு ஆசியாவில் ஏற்பட்ட போருக்கு பிறகு இந்தியாவில் அந்நிய செலாவணி இருப்பு ஒரு பில்-லியன் டாலருக்கும் கீழே குறைந்து ஏற்றுமதி, இறக்குமதி இடைவெளி உண்டாகி தீவிர பிரச்சினை ஏற்பட்டது.

இதனால் இந்தியா தன்னுடைய ஏற்றுமதிகளுக்கும், கடன்களுக்கும் அந்நிய செலாவணி கொடுக்க இயலாமல் திணரும் நிலை ஏற்பட்டு மற்ற நாடுகள் இந்தியாவின் மீதிருந்த நம்பிக்கையை இழந்தன. இந்தியா வெளிநாடுகளிலி-ருந்து வாங்கும் அந்நிய செலாவணி கடன்களின் மதிப்பு குறைக்கப்பட்டது. இதனால் பன்னாட்டு நிதிசார் நிதியத்தோடு ஏற்பட்ட ஒப்பந்தத்தால் கடுமையான சட்ட திட்டங்களை ஏற்றுக்கொண்டு இந்தியா தன்னுடைய பொருளாதார கொள்கையில் தாராளமயமாக்கும் பணியை மேற்கொண்டது.

இந்த காலக்கட்டத்தில் இந்திய பொருளாதார செயல்பாடுகள் துறையின் முக்கிய அணுகு- முறையாக பல நாடுகளிலி-ருந்தும், பன்னாட்டு நிறுவனங் களி-லிருந்தும் பெறப்படக்கூடிய அந்நிய செலாவணி கடன்களை கட்டுக்குள் வைத்திருப்பதாக இருந்தது. இந்திய ரூபாய்க்கும் மற்ற செலாவணிகளுக்கும் உள்ள மாற்று விகிதத்தை அரசு நிர்ணயித்தது. அந்நிய செலாவணியை கண்காணித்து எந்த பணிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டும் என்றும் நிர்ணயிக்கப்பட்டது. பெட்ரோ-லிய பொருட்களை இறக்குமதி செய்வதற்காக மிக அதிக அளவில் அந்நிய செலாவணி தேவைப்பட்டதால் இந்திய பொருளாதார துறையில் ஒரு பெட்ரோ-லியத்துறையே அமைக்கப் பட்டது.

அது இந்திய வர்த்தகத்தில், இறக்குமதி செய்யப்பட வேண்டிய பொருட்களை இந்தியாவிலேயே தயாரிக்கும் முயற்சிகளை மேற்கொண்டு அந்நிய செலாவணியை குறைத்து செலவு செய்யும் பணியை மேற்கொண்டது.

உலக வங்கியி-லிருந்தும் பன்னாட்டு நிதிசார் நிதியத்திலிருந்தும் ஆசிய வளர்ச்சி வங்கி மற்றும் தனித்தனியாக பிற நாடுகளிலி-ருந்தும், வணிக நிறுவனங் களிலி-ருந்தும் அந்நிய செலாவணிகளை பெறுவதே இந்திய பொருளாதாரத்துறைகளின் மிகப்பெரிய அமைப்பாக இருந்தது. இதற்குண்டான கொள்கைகளையும் வழிமுறைகளையும் இந்த அமைப்பு அமைத்தது. உலக நிதிச்சந்தை முடக்கப்பட்டிருந்ததால் அந்நிய முதலீடு என்பது இல்லாமலேயே இருந்தது.

1991-க்குப் பிறகு ஏற்பட்ட ஏற்றுமதி இறக்குமதி பற்றாக்குறையினால் இந்திய பொருளாதாரத்தில் ஏற்பட்ட தாராளமயமாக்கப்பட்டதிற்கு பின்பு அந்நிய செலாவணி பெறுவது ஒரு பெரிய பிரச்சினையாக இருக்கவில்லை. அந்நிய செலாவணி வரவு செலவு திட்டமும் தனியான பெட்ரோ-லிய அமைப்பும் தேவைப்படவில்லை. வெளியி-லிருந்து வியாபார ரீதியிலான கடன்களை பெறும் பொறுப்பு மத்திய வங்கிக்கு அளிக்கப்பட்டது.

இந்திய பொருளாதார துறையில் அந்நிய முதலீட்டு அமைப்பு உருவாக்கபட்டது. ஏற்றுமதி இறக்குமதி கொள்கைகள் உலக வர்த்தக அமைப்பின் கட்டுப்பாட்டுக்குள் வந்ததால் அது வர்த்தக துறையின் கீழ் வந்தது. மற்ற நாடுகளுடன் நேரடியாக மற்றும் பல நாடுகளோடு சேர்ந்து பெறப்பட்டு வந்த கடன் வாங்கும் துறை மதிப்பிழந்தது. சமீபத்திய உலகப் பொருளாதார நிலையில் இவைகள் மிகப்பெரிய மாற்றங்களாகும்.

கடந்த நூற்றாண்டின் இறுதியிலி-ருந்து இந்த வளரும் நாடுகள் வளர்ந்து வரும் சந்தைகளாக வேகமாக உயர்ந்து அவர்களுடைய பொருளாதார கொள்கைகள் தாராளமயமாக்கப்பட்டு அவர்களுடைய வளர்ச்சியின் மூல காரணமாக மற்ற நாடுகள் இவர்களிடமிருந்து இறக்குமதி செய்த தினால் இந்த வளரும் நாடுகளில் வரவு செலவு உபரியாக காணப்பட்டது.

இந்நாடுகளில் சேமிப்பு வளர்ந்தும் அவர்கள் நிதி மூலதனம் இறக்குமதி செய்வதைக்காட்டிலும் அதிகமாக ஏற்றுமதி செய்தன. அதனால் அவர்களின் அந்நிய செலாவணி இருப்பும் வெகுவாக உயர்ந்தது. இந்தியாவைப்போன்ற வளரும் சந்தைகளில் முதலீட்டிற்காக தேவைப்படும் சேமிப்பு பற்றாக்குறை இருந்தாலும் பெருமளவிலான அந்நிய முதலீடு இந்நாடுகளுக்கு வந்ததால் அவர்களிடம் அந்நிய செலாவணி இருப்பு மிகுந்து காணப்பட்டது. அந்நிய செலாவணி கிடைப்பதில் திடீரென்று நிறுத்தம் ஏற்படுவதைக்காட்டிலும் இந்த உபரி நிலைமை சிறப்பாக காணப்பட்டது. ஆகவே பன்னாட்டு நிதிசார் நிதியத்திடமிருந்து நிதி உதவி பெறும் நாடுகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. மிகத்தாழ்ந்த வருவாய் உள்ள நாடுகளிலும் சண்டை சச்சரவு உள்ள நாடுகளில் தனியார் முதலீடு குறைவாக இருப்பது தவிர வாழ்வுரிமை திட்டங்களுக்கு நேரடியாக எதற்காக உலக வங்கி நிதி உதவி அளித்தது என்று தெரியவில்லை. இதற்கு முக்கிய காரணம் வளரும் நாடுகளில் ஏற்படும் வளர்ச்சி ஏழைகளுக்கு சென்றடையாமல் ஏற்றத்தாழ்வை விரிவாக்குகிறது என்று 1970-களில் உலக வங்கியின் கொள்கை திட்டத்துறையின் இயக்குனரும், மனித வள மேம்பாட்டு அறிக்கையின் நிறுவனருமான மெஹபூப் உல்ஹக் டிசம்பர் 3, 1982-இல் ராபர்ட் ஹர்த்க்கு அளித்த பேட்டியில் தெரியவருகிறது. நேரடியாக தலையிட்டு சமுதாய நல மற்றும் வாழ்வுரிமை திட்டங்கள் மூலம் ஏழைகளின் வருமானத்தையும் உற்பத்தி திறனையும் மேம்படுத்த வேண்டியுள்ளது என்று உணரப்பட்டது.

இந்தியா உட்பட மற்ற நாடுகளிலும் இந்த கொள்கை மாற்றம் உள்ளது. ஆகவேதான் முந்தைய அரசு, வளர்ச்சி பாதையி-லிருந்து விலகி சமுதாய பாதுகாப்பு திட்டங்களுக்கும் வளங்களை பகிர்ந்தளிப்பதற்கும் முக்கியத்துவம் கொடுத்தது நிலையான உற்பத்தித்திறனை உருவாக்குவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது, ஏனெனில் வறுமைக்கு மற்றொரு பெயர்தான் குறைந்த தொழிலாளர் திறன் உற்பத்தி.

இந்தியாவில் இப்போது அறியப் பட்டுள்ளது போல உள் கட்டமைப்பு வசதிகள் பற்றாக்குறை இருந்தால் மூலதனத்தின் உற்பத்தி திறன் குறைகிறது. அதுபோலவே சமுதாய உள் கட்டமைப்பு பற்றாக்குறை இருந்தால் தொழிலாளர் திறன் உற்பத்தி குறைகிறது.

வாழ்வுரிமை திட்டங்கள்

சமூக பாதுகாப்பு திட்டங்களாக விளங்கலாம். ஆனால் அவைகளால் வறுமையை ஒழிக்க முடியாது. ஏனெனில் சிறிய உற்பத்தியாளர்கள் பெரும் தொழில்களோடும் உலகளாவிய சந்தைக்கு எதிர்த்தும் போட்டியிட முடியாது. பல ஆண்டுகளுக்கு முன்பாக தொழிற் புரட்சி ஏற்பட்டவுடனேயே நாம் இந்த போட்டியில் தோற்று விட்டோம்.

இந்திய வளர்ச்சியின் சமீப கால வீழ்ச்சிக்கு மூலதன குறைவு காரணமல்ல. உயர்ந்து வரும் உள் கட்டமைப்பு மற்றும் அரசு சார்ந்த இடர்பாடுகளால் உற்பத்தி குறைந்ததே இதற்கு காரணம்.

பிரெட்டன் உட்ஸ் நிறுவனங்களின் வளம் குறைந்ததற்கு மற்றொரு காரணம் அதற்கு நிதி உதவி அளிக்கும் பெரிய நாடுகள் வயதாகி, சிறிதளவே வளர்ச்சி கண்டு அந்நாடுகளில் பட்ஜெட் பற்றாக்குறை மிகுந்ததுதான். பிரெட்டன் உட்ஸ் நிறுவனங்களின் நிதிகள் வேகமாக வளர்ந்துவரும் வளரும் நாடுகளுக்கு செல்வதால் வளர்ந்த நாடுகள் இந்நிறுவனங்களுக்கு நிதி அளிக்க இயலவும் இல்லை, விரும்பவும் இல்லை. இந்தியாவில் மிகப்பெரிய திட்டங்கள் பலவும் தொடர்ந்து செயல்பட இருந்ததால் உலக வங்கியால் அதன் தேவையை நிறைவு செய்ய முடியவில்லை. பிரெட்டன் உட்ஸ் நிறுவனங்களில் நிதி வளங்கள் மிகக் குறைந்த வருவாய் உள்ள அதிக பிரச்சினைகள் உள்ள வளரும் நாடுகளுக்கு மட்டுமே தேவையானதாக கருதப்பட்டது.

நிதிசார் நிதியத்தின் வளங்கள்

சமீபத்தில் ஏற்பட்ட உலகளவிலான பிரச்சினைக்கு தீர்வு காணும் முன்னர் ஜி20 நாடுகளின் கூட்டமைப்பு மேற்கொண்ட நடவடிக்கைகளால் பன்னாட்டு நிதிசார் நிதியத்தின் வளங்கள் பெருகின.

உலகளாவிய உயர் அளவிலான முதலீடு பரிமாற்றங்களும் அதனால் ஏற்பட்ட தீவிர பிரச்சினைகளினால் ஏற்பட்ட ஏற்றுமதி இறக்குமதி பற்றாக்குறையை சமாளிக்க பன்னாட்டு நிதிசார் நிதியத்தின் வளங்கள் மூன்று மடங்காக பெருகின. பெரிய வளரும் சந்தை நாடுகள் பெரிய அளவில் அந்நிய செலாவணி இருப்பை வளர்த்துக்கொண்டதால் அவர்களுக்கு பன்னாட்டு நிதி சார் நிதியத்தின் உதவி தேவைப்பட வாய்ப்பிருக்கவில்லை. அதற்கு பதிலாக ஐரேப்பாவின் எல்லையிலுள்ள சில வளர்ந்த நாடுகளுக்கு பெருமளவில் உதவி தேவைப்பட்டது.

உண்மையில் வளர்ந்து வரும் சந்தை நாடுகள் பன்னாட்டு நிதிசார் நிதியத்திற்கு பங்களிக்கும் நாடுகளாக மாரின. ஆகவே, இப்படிப்பட்ட நாடுகளுக்கு உதவி செய்யக்கூடிய வாய்ப்பு டாலரை வெளியிடும் அமெரிக்காவிடமும் மிக அதிக அளவிலான அந்நிய செலாவணி இருப்பை கொண்ட சீனா போன்ற வளரும் சந்தை நாடுகளிடம் உள்ளது.

பன்னாட்டு நிதிசார் நிதியத்திடம்

அல்ல. இதற்கிடையே உலக வங்கியின் கடன் வழங்குதலும் சிறிதளவு மட்டுமே உயர்ந்தது. அதுவும் தனியார் முதலீடு குறைந்த நிலையில் முதலீட்டு பற்றாக்குறையை நீக்குவதற்காக. ஜி20 நாடுகளும் ஒரு நல்ல வாய்ப்பை இழந்து விட்டன. அதாவது உலக வங்கியின் மூலதனத்தை பெருக்கி அதன் கடன் வாங்கும் அளவை உயர்த்துவது. அப்படி செய்திருந்தால் உலக வங்கி, பெருகி வரும் அந்நிய செலாவணி இருப்பை பயன்படுத்தி வளரும் நாடுகளில் உயர் வளர்ச்சி அடையக்கூடிய திட்டங்களை செயல்படுத்தியிருக்க முடியும். அப்படி செய்திருந்தால் இப்போது ஏற்பட்டுள்ள உலக நிதி நெருக்கடி காரணமாக வளர்ந்த நாடுகளில் தேவைகளின் குறைவால் வளர்ச்சி குன்றி இருப்பதை உலக வங்கியால் ஈடுகட்ட முடிந்திருக்கும். ஆகவே, ஜி20 நாடுளின் உந்துதலால் உலக வங்கி உள் கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதி வழங்குதல் அதிகரித்தாலும் நிலைமையை பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை.

இன்றைய நிலையில் வளரும் நாடுகளின் பிரெட்டன் உட்ஸ் நிறுவனங்களோடு உள்ள உறவு எப்படி உள்ளது? இன்றுள்ள நிலையில் இந்தியா உள்ளிட்ட பல வளரும் நாடுகள் உள் கட்டமைப்பு வசதி மேம்பாடு உள்ளிட்ட பல திட்டங்களுக்காக உலக வங்கியிடமிருந்து கடன் வாங்கும் பெரிய நாடுகளாக உள்ளன.

மிகப்பெரிய அளவில் அந்நிய செலாவணி இருப்பைக்கொண்ட வளரும் சந்தை நாடுகள் தங்களுடைய வளர்ச்சி தேவைகளுக்கு தேவையான உள்நாட்டு செலாவணிக்காக ஏன் பன்னாட்டு நிதி நிறுவனங்களிடமிருந்து மேலும் மேலும் கடனை பெற்று தங்கள் கடன் தொல்லையை அதிகரித்துக்கொண்டு அதனால் ஏற்படும் திடீர் பிரச்சினைகளுக்கு ஆளாகின்றன என்று தெரியவில்லை.

பல வளரும் நாடுகளில் உள் கட்டமைப்பு வசதிக்கும் சமூக நல சேவைகளுக்கும் முதலீடு பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில் வெளிநாட்டு அந்நிய செலாவணி முதலீடுகள் தனியார் மயமாகவே உள்ளன. அவர்கள் உள் நாட்டிலேயே கடன் வாங்கி தங்கள் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள முடியும். அதே சமயத்தில் அருகாமையில் உள்ள நாடுகளோடு இணைந்து செயல்படுத்தப்படும் உள்கட்டமைப்பு வசதிகளுக்கு பன்னாட்டு நிதி நிறுவனங் களை நாடலாம். எது எப்படி ஆனாலும் மிகப்பெரிய வளரும் சந்தை நாடுகளில் உலக வங்கியிலிருந்து கடன் பெறுவது உள்நாட்டு நிதியைவிட குறைவாகவே இருக்கும்.

ஏனென்றால் பன்னாட்டு நிதிசார் நிதியத்திற்கு நிதி வசதி பெருக்கியது போல ஜி20 நாடுகள் உலக வங்கிக்கு வளம் பெருக்க உதவி செய்யவில்லை.

அவர்களுடைய எண்ணம் என்ன வென்றால் இதனால் மிகப்பெரிய வளரும் சந்தை நாடுகளுக்குத்தான் பயன் கிடைக்கும் என்பதாகும். இது மட்டுமல்லாமல் இந்தியா போன்ற நாடுகளுக்கு உள் நாட்டு வளர்ச்சி திட்ட முதலீடுகளின் தேவைகள் அதிகமாக இருப்பதால் அவர்களும் உலக வங்கிக்கு உதவ முடியாது.

வளர்ச்சி பெற்ற நாடுகளும் பிற வளர்ச்சி பெற்ற நாடுகளுக்கும் இணையாக உள் கட்டமைப்பு மற்றும் சமுதாய கட்டமைப்பு வசதிகளை பெருக்க வேண்டியிருப்பதால் அவர்களும் உலக வங்கிக்கு உதவுவதில் பற்றாக்குறை இருக்கும். தற்போது பன்னாட்டு நிதிசார் நிதியம், வளர்ந்து வரும் சந்தை நாடுகளைவிட உயர் தனிநபர் வருமானம் கொண்ட வளர்ச்சி பெற்ற யூரோ நாடுகளுக்கு கடன் வசதி அளிப்பதால் இந்த நிதியத்திற்கு வளம் கூட்டாமைக்கு மேற்கூறப்பட்ட காரணங்களே பொருந்தும்.

1990-களில் ஏற்பட்ட ஏற்றுமதி இறக்குமதி பற்றாக்குறை காரணமாக ஏற்பட்ட மிகப்பெரிய பிரச்சினைகளைவிட அதிகமான பிரச்சினையாக சமீபத்தில் ஏற்பட்ட உலகளாவிய நிதி நெருக்கடி இருந்தாலும் அதனால் ஏற்பட்ட அந்நிய முதலீடு வெளியேற்றத்தினால் இந்தியாவிற்கு பெரிய பாதிப்பு ஏற்படாததற்கு முக்கிய காரணம் அதனிடம் இருந்த மிகப்பெரிய அளவிலான அந்நிய செலாவணி இருப்புதான். கச்சா எண்ணெய் விலை குறைந்திருப்பதால் இந்தியாவின் வரவு செலவு பற்றாக்குறையைவிட நிகர அந்நிய நிதி முதலீடு அதிகமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளைப்போலவே வரும் ஆண்டுகளில் இந்தியாவிற்கு வெளிநாட்டு மூலதனம் அதிகமாகவே கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தன்னிடம் உள்ள அதிக அளவிலான அந்நிய செலாவணி இருப்பால் இந்தியா நிகரமாக பன்னாட்டு நிதிசார் நிதியத்திற்கு நிதி வழங்கும் நாடாக இருக்குமேயன்றி நிதி பெறும் நாடாக இருக்காது. கடந்த சில ஆண்டுகளில் மற்ற சில வளர்ந்து வரும் சந்தை நாடுகளோடு இணைந்து பன்னாட்டு நிதிசார் நிதியத்திற்கு நிதி வளம் சேர்க்க இந்தியா ஒப்புக் கொண்டுள்ளது. ஆகவே பிரெட்டன் உட்ஸ் நிறுவனங்கள் இரண்டிலும் இந்தியாவும் மற்ற பிற வளரும் நாடுகளும் ஒரு வித்தியாசமான நிலையிலேயே இருக்க வாய்ப்புள்ளது. ஆனால் இந்த இரு அமைப்புகளையும் நிர்வகிப்ப தற்காக மூத்த செயலர் பதவிகளும் வாக்களிக்கும் உரிமைகளும் இந்த நாடுகளுக்கே இனி அதிகமாக கிடைக்க வாய்ப்புள்ளது.

ஏனெனில் அவர்கள் இனிமேல் மிக அதிக அளவு கடன் வாங்கும் நாடுகளாக இல்லாமல் இந்நிறுவனங்களுக்கு நிதி வழங்கும் நாடுகளாக இருப்பார்கள். ஆகவே, பன்னாட்டு நிதிசார் நிதியத்தில் பெருமளவிலான நிர்வாக சீர்திருத்தம் ஏற்பட வேண்டியுள்ள தேவை உள்ளது. அப்போதுதான் வளர்ந்து வரும் சந்தை நாடுகள் இந்நிறுவனத்திற்கு வளங்கள் வழங்க அவர்களுக்கு ஆளுமை அதிகாரங்கள் தேவைப்படுகின்றன.

உலக வங்கியை பொறுத்தவரையில் பெரும்பான்மையான வளரும் நாடுகளின் திட்டங்களின் தேவைகள் தனிப்பட்ட வகையிலும் இரு நாடுகளுக்கிடையே யான ஒரு நிலையாகவே இருக்கும்.

ஆனால், பன்னாட்டு நிதிசார் நிறுவனத்தில் அவர்கள் பல நாடுகளுடன் இணைந்து செயல்பட வாய்ப்புள்ளது.

வளங்களை பெருக்க என்ன வகையான உத்திகளை கையாளவேண்டும், அந்த வளங்களை திறமையாகவும் பாதுகாப்பா கவும் உரிய கண்காணிப்புடன் எங்கு வழங்குவது மற்றும் எப்படி நிர்வகிப்பது என்பதில் அவர்களின் செயல்பாடு கூட்டாக இருக்கும். இதுவரை பிரெட்டன் உட்ஸ் நிறுவனங்களின் கண்காணிப்பு மற்றும் கொள்கை பரிந்துரைப்பு அமைப்புகள் கடன் வாங்கும் வளரும் நாடுகளை சார்ந்து இருந்தது. ஆனால் இது பன்னாட்டு நிதிசார் நிதியத்தில் மாற வேண்டியுள்ளது. ஏனெனில் இதனிடமிருந்து கடன் வாங்குபவர்கள் பெருமளவில் ஐரோப்பிய நாடுகளே. வளரும் நாடுகளில் காணப்பட்ட வளர்ச்சி மந்தம் ஏற்றுமதி இறக்குமதி பற்றாக்குறைவு, பட்ஜெட் பற்றாக்குறை, சமாளிக்க முடியாத அளவிலான கடன் ஆகிய பிரச்சினைகள் இப்போது வளரும் நாடுகளிலும் கண்காணிக்கப்பட உள்ளது. வளர்ந்த நாடுகளிலும் சீர்திருத்தங்கள் அவசியமாகின்றன. பிரெட்டன் உட்ஸ் நிறுவனங்களில் ஆளுமை மாற்றங்கள் ஏற்பட்டாலொழிய இது சாத்தியமில்லை. இப்போது ஆளுமை வளர்ந்த நாடுகளிடம் உள்ளது.

எல்லா நாடுகளுக்கும் பங்கு சீரமைக்கப்பட்டு அதற்கு தகுந்த அளவில் ஆளுமை பரவலாக்கப்பட வேண்டும். ஜி20 நாடுகள் கூட்டமைப்பில் பிரிக்ஸ் நாடுகள் (பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா) இந்த பிரச்சினைகளை எழுப்பி யுள்ளன. ஜி20 நாடுகளின் எண்ணங் களுக்கு ஏற்ப இந்த இரு நிறுவனங்களின் ஆளுமை மாற்றியமைக்கப்பட வேண்டும். வளர்ந்து வரும் சந்தை நாடுகளும், இந்நிறுவனங்கள் வழங்கும் நிதியை கண்காணிக்கவும், பிரச்சினைகளை ஆரம்பத்திலேயே கண்டறியவும், வளர்ச்சி பணிகளை கண்காணிக்கவும் செய்ய வேண்டும். ஏனெனில் இந்த இரு நிறுவனங்களின் நிதித்தேவைகளை இவர்களே பெருமளவு நிவர்த்தி செய்கிறார்கள். வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளின் திட்டங்களுக்குமே இது பொருந்தும். முடிவாக, உலகளவிலான அரசியல் பொருளாதார நிலைமையில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய மாற்றங்களை பிரதிப-லிக்கும் வண்ணம் பிரெட்டன் உட்ஸ் அமைப்புகளின் நிர்வாக அமைப்பு விளங்காமல் பழைய காலத்தைப்போலவே உள்ளது. ஐரோப்பிய நாடுகளின் திட்டங்கள் முடிவடைந்தபின் இந்த நிறுவனங்களின் நிதி வசதி உயரவில்லை. பிரிக்ஸ் நாடுகளில் வாக்களிக்கும் சதவிகிதம் அவர்களின் உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 50 சதவிகிதமாகும்.

அவர்களின் மொத்த வாங்கும் சக்தியில் மூன்றில் ஒரு பங்குமாகத்தான் உள்ளது. வளர்ந்த நாடுகள், வளர்ந்து வரும் சந்தை நாடுகளோடு ஆளுமையை பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது அவர்களின் மிகுந்து வரும் நிதிநிலை பற்றாக்குறை மற்றும் மூப்பு நிலை மற்றும் குறைவான வளர்ச்சி ஆகியவற்றால் வளங்களை பெருக்காமல் இருப்பதைப்போலவே உள்ளது. இந்த இரண்டு பிரெட்டன் உட்ஸ் நிறுவனங்கள் இப்போது மெல்ல மெல்ல உணருவதைப்போல புதிதாக வளர்ந்து வரும் சந்தை நாடுகள் தங்களுடைய அதிகப்படியான சேமிப்பை முதலீடு செய்வதற்கு சியான்மாய் முனைவு, ஆசிய உள்கட்டமைப்பு நிதி, புதிய வளர்ச்சி வங்கி மற்றும் பிரிக்ஸ் நாடுகளுக்கிடையே அந்நிய செலாவணி நிர்வாக அமைப்பு போன்ற புதிய நிறுவனங்களை உருவாக்கியுள்ளனர்.

இவைகள் பன்னாட்டு நிதிசார் நிதியம் போலவும் (சியான்மாய் முனைவு மற்றும் அந்நிய செலாவணி நிர்வாக அமைப்பு) மற்றும் உலக வங்கி போலவும் (புதிய வளர்ச்சி வங்கி மற்றும் ஆசிய உள் கட்டமைப்பு வங்கி), இணையான அமைப்புகளை உருவாக்கும். ஆனால் புதிதாக உயர்ந்து வரும் இந்த பொருளாதார நாடுகள் முன்பு அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் நிர்வகித்ததை போல நிர்வகிப்பார்களா என்பது போகப்போகத்தான் தெரியும்.