ண்மையில் மத்திய அரசு ஒளிப்பதிவு (திருத்த) சட்ட வரைவு 2021-ஐ பொதுமக்கள் கருத்திற்காக வெளி யிட்டது. இந்த புதிய வரைவு, ஒளிப்பதிவு சட்டம் 1952-ஐ திருத்தி, மத்திய அரசுக்கு திருத்த அதிகாரங்களை வழங்க முன்மொழிகிறது. மேலும் ஏற்கனவே மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்தால் (Central Board of Film Certification (CBFC)) வழங்கப்பட்ட சான்றினை மறுபரிசீலனை செய்ய உதவும்.

வரைவு என்னென்ன மாற்றங்களை முன்மொழிகிறது என்பதை காண்போம் சான்றிதழ் திருத்தம் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் இந்த சட்டத்தில், பிரிவு 5பி (1) (திரைப்படங்களை சான்றளிப்பதில் வழிகாட்டுதலுக்கான கொள்கைகள்)-ல் ஏதேனும் விதிமுறைகள் மீறப்பட்டிருந் தால், மத்திய அரசு அதனை திருத்துவதற்கான அதிகாரங்களை வழங்க வேண்டும் என்ற முன்மொழிவை வைத்துள்ளது. தற்போதைய சட்டம், பிரிவு 6-இல், ஒரு திரைப்படத்தின் சான்றிதழ் தொடர்பான நடவடிக்கை களின் பதிவுகளை பெற மத்திய அரசுக்கு ஏற்கனவே அதிகாரம் வழங்குகிறது. ஆனால், திருத்தம் என்பது நிலைமைக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டால், வாரியத்தின் முடிவை மாற்றியமைக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு தேவை என்பதையே பொருளாக கொள்கிறது என்று அமைச்சகம் கூறியுள்ளது. மத்திய அரசு, ஏற்கனவே சான்று வழங்கப்பட்ட படங்களின் சான்று களை திருத்தம் செய்வதற்கான அதிகாரங்கள் கிடையாது என்பதை கர்நாடக உயர் நீதிமன்றம் ஏற்கனவே அறிவித்துள்ளது. மேலும் இதனை உச்ச நீதிமன்றம் 2020-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மீண்டும் உறுதி செய்தது குறிப்பிடத் தக்கது.

fbfc

திரைப்பட சான்றிதழ் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் பொதுமக்கள் பார்வைக்கு சான்றளிக்கப் பட்ட ஒரு திரைப்படத்தில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளது என்று மத்திய அரசு ஏதேனும் குறிப்புகள் அளித்தால், சட்டத்தின் பிரிவு 5 பி (1) இன் விதிமுறைகள் மீறப்பட்டிருப்பதாக அரசு உணர்ந்தால், வாரியத்தின் தலைவரை, சான்றினை மறுபரிசீலனை செய்ய அறிவுறுத்தும் வகையில் பிரிவு 6 இன் துணைப்பிரிவு (1) க்கு ஒரு விதிமுறையைச் சேர்க்கவும் வரைவு மசோதாவில் முன்மொழியப்பட்டுள்ளது.

திரைப்பட சான்றிதழ் மேல்முறையீட்டு தீர்ப்பாயம்(Film Certificate Appellate Tribunal) ரத்து செய்யப்பட்ட சிறிது காலத்தில் இந்த வரைவு வெளியாகி யுள்ளது. திரைப்பட தயாரிப்பாளர்கள், தங்கள் படங்களுக்கு வழங்கப்பட்ட சான்றுகளுக்கு எதிராக மேல் முறையீடு செய்ய இறுதியான அமைப்பாக இது திகழ்ந்தது. இந்த வரைவை அடூர் கோபாலகிருஷ்ணன் போன்ற திரைப்பட தயாரிப்பாளர்கள் விமர்சித்தனர்,

அவர் அதை "சூப்பர் சென்சார்' என்று குறிப்பிட்டார்.

வயது அடிப்படையிலான சான்றிதழ் வரைவு வயது அடிப்படையிலான வகைப்படுத்தல் மற்றும் வகைப்பாட்டை அறிமுகப்படுத்த முன்மொழிகிறது. தற்போது, திரைப்படங்கள் மூன்று பிரிவுகளாக சான்றளிக்கப்பட்டன கட்டுப்பாடற்ற பொதுமக்கள் பார்வைக்கு யு சான்று வழங்கப்படுகிறது. 12 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு, பெற்றோரின் வழிகாட்டுதல் தேவைப்படும் படங்களுக்கு யு/ஏ சான்று வழங்கப்படுகிறது. ஏ சான்று வயது வந்தவர்களுக்கான படங்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது. புதிய வரைவு வகைகளை மேலும் வயது அடிப்படையிலான குழுக்களாக பிரிக்க முன்மொழிகிறது: ம / ஆ 7+, ம / ஆ 13+ மற்றும் ம / ஆ 16+. படங்களுக்கான இந்த முன்மொழியப்பட்ட வயது வகைப்பாடு ஸ்ட்ரீமிங் தளங்களுக்கான புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை எதிரொலிக்கிறது.

திருட்டுக்கு எதிரான ஏற்பாடு ஒளிப்பதிவு சட்டம் 1952-ன் கீழ் திரைப்பட திருட்டுக்கு எதிரான ஏற்பாடுகள் ஏதும் இல்லை என்பதை கூறியுள்ள அமைச்சகம், இந்த வரைவு 6ஏஏ என்ற பிரிவை இணைக்க வேண்டும் என்று கூறியுள்ளது. இது அங்கீகரிக்கப்படாத பதிவுகளை (Recording) தடைசெய்யும். எந்த விதிகள் நடைமுறையில் இருந்தாலும், ஆசிரியரின் எழுத்துப்பூர்வ ஒப்புதல் இன்று, படம் உருவாக்கப்படும் பகுதியில் ஆடியோ காட்சி கருவிகளை பயன்படுத்தி படத்தை எடுக்கவோ, அனுப்பவோ அல்லது தயாரிக்கவோ முயற்சிக்க கூடாது என்றும் கூறப் பட்டுள்ளது. இந்த விதிமுறை மீறப் பட்டால், சிறைத்தண்டனை விதிக்கப் படும். இது மூன்று மாதத்திற்கு குறைவாக இருக்காது. ஆனால் அது மூன்று வருடங்கள் வரை அதிகபட்சமாக இருக்கலாம். 3 லட்சம் அபராதம் துவங்கி, படம் உற்பத்திக்கான நிதியில் 5% வரை அபாரதம் விதிக்கப்படலாம். அல்லது இரண்டு அபராதமும் விதிக்கப்படலாம். வரைவு நிரந்தரமாக திரைப்படங்களை சான்றளிக்க முன்மொழிகிறது. தற்போது சிபிஎப்சி வழங்கிய சான்றிதழ் 10 ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.

Advertisment