டல் பென்ஷன் திட்டம்(Atal Pension Yojana) அமைப்பு சாராத (Unorganised) துறையில் வேலை செய்பவர்கள், ஓய்வு காலத்துக்குப் பின், அதாவது 60 வயதுக்குப் பின் மாதம் ரூ. 1000 - 5000 வரை ஓய்வூதியம் பெற வேண்டும் என்பது தான் அடல் பென்ஷன் திட்டம் . அதற்காக அரசு தன் சார்பாக ஒரு சிறு தொகையை செலுத்தும்.

18 வயது முதல் 40 வயதுடைய, இந்தியாவில் வங்கி சேமிப்பு கணக்கு வைத்துள்ள இந்தியர் யார் வேண்டு மானாலும் இத்திட்டத்தில் இணையலாம். ஒரே குடும்பத்தில் 18 வயதுக்கு மேற்பட்டு 40 வயதுக்குள் உள்ள அனைவரும் இந்தத் திட்டத்தில் இணையலாம்.

பென்ஷன் தொகை தரக்கூடிய திட்டங் களில் ஏற்கெனவே இணைந்திருப் பவர்கள், சமூக பாதுகாப்புத் திட்டங் களில் இணைந்திருப்பதாக கருதப் படுவார்கள். அப்படிப்பட்ட சமூக பாதுகாப்புத் திட்டங்களில் இருப்பவர்கள் இத்திட்டத்தில் இணைய முடியும் என்றாலும், அரசு தன் சார்பாக செலுத்தும் தொகையை இவர்களுக்கு வழங்காது. அதே போல், வரி கணக்கு தாக்கல் செய்பவர்களும் இந்தத் திட்டத்தில் சேரலாம் என்றாலும் அவர்களுக்கும் அரசு தன் சார்பாக செலுத்தும் தொகை கிடைக்காது.

அனைவருக்கும் ஓய்வூதியம் திட்டம் (NPS # National Pension System) அனைத்து குடிமக்களுக்கும் ஓய்வு காலத்தில் வருமானம் கிடைக்கச் செய்வது தான் இத்திட்டத்தின் முக்கிய நோக்கம். இது, முதுமையில் பொருளாதார பாதுகாப்பின்றி இருப்பதை தவிர்ப்பதுடன், மக்களுக்கு சேமிக்கும் பழக்கத்தையும் ஏற்படுத்தும் .

Advertisment

அஞ்சல் துறை, பொதுத் துறை வங்கிகள், தனியார் வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்கள் உள்ளிட்ட 58 நிறுவனங்களில், இந்த திட்டத்துக்கான கணக்கு ஆரம்பிக்கும் வசதி உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக ‘பிரான் எண்’ [National Skills Qualifications Framework (NSQF தரப்படும்.

இது 18 வயது முதல் 55 வயது வரை உள்ளவர்கள் இத்திட்டத்தில் சேரலாம். மத்திய அரசு ஊழியர்கள், மாநில அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், தனி நபர்கள், ஏழை எளியோர் என்று அனைவரும் பயன் பெறலாம். வெளிநாடு வாழ் இந்தியர்கள் (ச.த.ஒ.) மற்றும் பப்ளிக் பிராவிடண்ட் ஃபண்ட் (ட.ட.எ.) சந்தாதாரர்களும் முதலீடு செய்யலாம். இது அனைத்து வங்கிகளிலும், குறிப்பாக தென் இந்திய வங்கிகள் அனைத்திலும் நடைமுறையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆம் ஆத்மி பீமா யோஜனா

Advertisment

சமூக பாதுகாப்பு திட்டங்களான ஆம் ஆத்மி பீமா யோஜனா (ஆஆஇவ), ஜனஸ்ரீ பீமா யோஜனா (ஓஇவ) இரண்டையும் ஓன்றிணைக்க மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்தது. ஒன்றிணைக்கப்பட்ட திட்டம் ஆம் ஆத்மி பீமா யோஜனா என்ற பெயரில் 2013 ஜனவரி முதல் தேதியி-லிருந்து செயல்பட்டு வருகிறது.

18 வயது நிரம்பியவராகவும், 59 வயதுக்கு மேற்படாமலும் இருக்க வேண்டும்.

பொதுவாக, வறுமை கோட்டுக்குக் கீழ் உள்ள அல்லது சில குறிப்பிட்ட தொழில்களில் ஈடுபட்டுள்ள – நிலமற்ற குடும்பங்களின் தலைவர் அல்லது சம்பாதிக்கின்ற ஒரு நபர் இத்திட்டத்தின் கீழ் பயன் பெறலாம்.

இந்த திட்டத்தை நிர்வகிப்பதற்கென அறிவிக்கப்படும் மத்திய – மாநில – யூனியன் பிரதேச அரசுத் துறைகள் அல்லது பதிவு செய்யப்பட்ட தொண்டு நிறுவனங்கள் அல்லது நிறுவன பூர்வ ஏற்பாடுகள் ஒப்புதல் அளிக்கும் முகமைகளாகும். கிராமப்புற நிலமற்ற ஏழைகள் என்ற விஷயத்தை பொறுத்த மட்டில் அதனை நிர்வகிப்பதற்கான அமைப்பு மாநில அரசு – யூனியன் பிரதேச அரசைக் குறிக்கும்.

ஆம் ஆத்மி யோஜனாவில் உறுப்பினராக உள்ளவருக்கு இயற்கையாக மரணம் ஏற்பட்டால் அவருடைய வாரிசுதார ருக்கு ரூ. 30000 ஆயிரம் வழங்கப்படும்.

ஆம் ஆத்மி பீமா யோஜனாவின்படி மரணம் அல்லது ஊனம் ஏற்பட்டவருக் கான பண பலன்கள் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தால் (கஒஈ) வழங்கப்படும். அவை பயனாளி அல்லது வாரிசுதாரரின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.

இஞ்சியோன் செயல்திட்டம்

இஞ்சியோன் செயல்திட்டம் என்பது அடுத்த 10 ஆண்டுகளில் மாற்றுத் திறனாளிகளுக்காக தடையற்ற சமுதாயத்தை உருவாக்குதல், அவர்களின் உரிமைகளை உறுதி செய்தல் ஆகியவற்றை ஏற்படுத்துவதற்கான ஆசிய - பசுபிக் பிராந்தியம் மற்றும் அகில உலகத்துக்கான செயல்திட்டமாகும். இந்த செயல்திட்டத்தில் மாற்றுத் திறனை உள்ளடக்கிய சில வளர்ச்சி இலக்குகள் உள்ளன.

இந்த இலக்குகள் உலக வரலாற்றில் முதன்முறையாக பிராந்திய அளவில் ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கின்றன. தென் கொரியாவின் இன்சியோன் நகரில் 2012-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 29-ஆம் தேதி முதல் நவம்பர் 2-ஆம் தேதி வரை நடைபெற்ற ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்திற்கான பொருளாதார, சமூக ஆணையத்தின் உறுப்பு நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள் பங்கேற்ற கூட்டத்தில் இந்த செயல்திட்டம் ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இஞ்சியோன் செயல்திட்டம் என்று இதற்கு பெயர் வந்ததற்கு காரணம் இந்த செயல்திட்டம் கொரிய நகரமான இன்சியோனில் நடைபெற்ற மாநாட்டில் ஏற்றுக் கொள்ளப்பட்டதுதான். இன்சியோன் செயல்திட்டத்தின்படி அனைத்து அரசுகளும் அவர்களின் நாட்டில் உள்ள அனைத்து வகையான மாற்றுத் திறனாளிகள் குறித்த தகவல்களையும் திரட்டித்தர வேண்டும். அப்போது தான் அவர்களின் நலனுக்காக என்ன செய்ய வேண்டும் என்பதை திட்டமிட முடியும் என்பதால் இந்த தகவல்கள் கோரப்படுகின்றன.

இன்சியோன் மனித செயல்திட்டத்தின் முக்கிய நோக்கம் என்பது மாற்றுத்திறன் கொண்ட மனிதர்கள் மதிக்கப்பட வேண்டும்; அவர்களின் விருப்பத்தை தேர்ந்தெடுக்க அனுமதிக்கப்பட வேண்டும்; பாகுபாடு காட்டப்படக் கூடாது; மற்றவர்களைப் போலவே சமூகத்தின் அனைத்து செயல்பாடுகளிலும் பங்கேற்க அனுமதிக்கப்பட வேண்டும் ஆகியவை ஆகும்.

இஞ்சியோன் செயல்திட்டத்தின் லட்சியங்கள்: வறுமை ஒழிப்பு, பணி மற்றும் வேலைவாய்ப்புகளை அதிகரித்தல் அரசியல் நடைமுறைகள் மற்றும் முடிவெடுக்கும் நடைமுறைகளில் பங்கேற்பதை ஊக்குவித்தல் இயல் சூழல், பொதுப்போக்குவரத்து, அறிவு, தகவல் மற்றும் தொலைத் தொடர்பு வசதிகளை அணுகுவதற்கான சூழலை அதிகரித்தல் சமூக பாதுகாப்பை வலுப்படுத்துதல் இளைஞர்களுக்கான திறன் பயிற்சி இளைஞர்கள் வருங்காலத்தின் தலைவர்கள் என்பதோடு வளர்ச்சியின் பங்காளிகள் என்பதால், தங்களுடைய கருத்துக்கள் செவிமடுக்கப்பட வேண்டும் என்றும், கவனிக்கப்பட வேண்டும் என்றும் விரும்புகிறார்கள். எனவே, வளர்ச்சிப்பாதையின் வேக விசைக்குள் இந்தியா அடியெடுத்து வைக்கின்ற தருணத்தில், நம்முடைய இளைஞர்களுக்குத் தேவையான திறன் பயிற்சிகளையும் அறிவு விளக்கத்தையும் அளிப்பது தற்போதைய அவசியத் தேவையாகும்.

இந்திய மொத்த மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்கள்.

2020-ஆம் ஆண்டில் நம் மக்கள் தொகையின் சராசரி வயது 29 ஆக இருக்கும் போது, சுமார் நான்கு கோடியே 70 லட்சம் இளைஞர்கள் வேலைத்திறனுடன் உபரியாக இருப்பார்கள். எனவே திறன் பயிற்சி மற்றும் தொழில் முனைவு ஆகியவற்றில் அவர்களை நெறிப்படுத்த வேண்டும்.

இந்தியாவின் உழைக்கக் கூடிய மக்களின் எண்ணிக்கை 2040-ஆம் ஆண்டு வரை அதிகரித்துக் கொண்டே போக வாய்ப்பு உள்ளதால், ‘வளர்ந்து வரும் நாடு' என்ற நிலையில் இருந்து ‘வளர்ந்த நாடு' அந்தஸ்தை எட்டி விடக்கூடும் என்று உலக வங்கி ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

dd

புதிய சிந்தனை போக்குகளை ஊக்குவித்தல், புத்தாக்க முயற்சிகளில் ஈடுபடல், முடிவெடுத்தலில் இளைஞர் களையும் சேர்த்துக் கொள்ளுதல் போன்றவை கவனம் பெற வேண்டும். இவற்றுக்கு அடித்தளமாக, வேலை செய்யும் ஆற்றல் மிக்கவர்களாக்கும் திறன்களை இளைஞர்களுக்கு கற்பித்தாக வேண்டும். இதற்கென பலமுனை உத்திகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. இந்தியாவில் தயாரிப்போம், திறன்மிகு இந்தியா இயக்கம், தொடங்கிடு இந்தியா, எழுக இந்தியா, டிஜிட்டல் இந்தியா என்பன அந்த உத்திகளாகும்.

இந்தியாவில் தயாரித்தல்

2022-ஆம் ஆண்டுக்குள் பத்து கோடி பேருக்கும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கக் கூடிய இத்திட்டம், முதலீடு, துரிதமான புத்தாக்கம், அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்பு போன்றவற்றுக்கு உத்வேகம் அளிக்கும். இத்திட்டத்தால் பல துறைகளிலும் ஏற்படும் அடுத்தடுத்த சாதகமான விளைவுகளால் எண்ணற்ற வாழ்வாதார வாய்ப்புகள் இளைஞர்களுக்குக் கிடைக்கும்.

உலக நாடுகளின் உற்பத்திக் கூடமாக இந்தியாவை மாற்றிவிடக்கூடிய இத்திட்டத்தினால், நமது நாட்டின் மொத்த வருவாய், உற்பத்தித் துறையின் பங்கு அடுத்த ஐந்தாண்டுகளில் 25 சதவீதமாக உயர்ந்துவிடும். கட்டுமானம், ஜவுளித் தொழில், உணவு பதனத் தொழில், வான்வழிப் போக்குவரத்து, பாதுகாப்புத் தளவாடங்கள், மின்னணு பொருள்கள் போன்ற 25 துறைகளில் இந்தியத் தயாரிப்பு நடைமுறைகளைச் செயல்படுத்தலாம் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இதற்கென அந்நிய முதலீடுகளுக்கான விதிமுறைகளைத் தளர்த்தியுள்ள மத்திய அரசு, இந்திய நிறுவனங்களையும் இங்கே பெருமளவு முதலீடு செய்து, உற்பத்தி செய்து, உலக அளவில் விற்பனை செய்வதை ஊக்குவிக்கிறது.

திறன் மிகு இந்தியா

மக்கள்தொகை வளர்ச்சியின் அனுகூல மான, உழைக்கும் சக்தி கொண்ட தொழிலாளர்கள் இந்தியாவில் இருக் கிறார்கள் என்றாலும், அவர்களை வேலைக்கு அமர்த்துகிறவர்கள் எதிர்பார்க்கிற திறன்களை அவர்களுக்கு அளிப்பது மிகவும் சவாலான பணியாகவே உள்ளது. ஆண்டுதோறும் சுமார் ஒரு கோடியே 20 லட்சம் பேர், வேலைவாய்ப்பு சந்தையில் புதிதாக நுழைந்தாலும், அவர்களில் சுமார் இரண்டு சதவீதம் பேர் மட்டுமே முறையான பயிற்சியைப் பெற்றுள்ளனர்.

தகுதியுள்ள அனைவருக்கும் திறன் பயிற்சிகளை அளிக்கவும், அத்தகைய பயிற்சித் திட்டங்களை ஒருங்கிணைக் கவும், திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம் என்ற புதிய அமைச்சகத்தை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது.

திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவுக்கான முதலாவது ஒருங்கிணைந்த தேசியக் கொள்கை 2015, இளைஞர்களின் திறன் மேம்பாட்டும் பயிற்சிக்கு மட்டுமல்லாது, உயர்நுட்பத்திறன் தேவைப்படுகிற வேலைகளைப் பெறுவதற்கும்,

அத்தகு தொழில்களை அவர்களே தொடங்கிட ஊக்குவிக்கவுமான அடித்தளத்தை நிறுவியுள்ளது. பெருமளவிலான இளைஞர்களுக்கு மிக துரிதமாகவும், தரமானதாகவும் திறன் பயிற்சிகளை அளிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

தற்போதைய சூழ-லில் தொழில்நுட்ப செயல்பாடுகளிலும் வாணிக நடவடிக்கைகளிலும் பெருத்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. எனவே, புதிய வேலைவாய்ப்புகள் என்பது உடல் உழைப்பு வேலை என்றோ, மூளை உழைப்பு வேலை என்று பிரித்தறியப் படாமல், புதிய உழைப்புத்தளம் என்று தான் பார்க்கப்படும். செயற்கை நுண்ணறிவு, தானியக்கம், இணைய தள உலாவல், புள்ளிவிவர பகுப்பாய்வு, போன்றவை உயர்நுட்பத்திறன் மிக்க வேலைகளாகும். இத்தகு பணிகளை வழங்கும் நிறுவனங்களும் அதிக திறன் பெற்றவர்களையே தேடித்தேடி பிடிப்பதால், நமது இளைஞர்களுக்கு வழங்கப்படும் பயிற்சிகளும் சர்வதேசத் தரத்தில் இருக்க வேண்டியது மிகவும் அவசியமானதாகும்.

தேசியத் திறன் வளர்ச்சிக் கழகம், ஒவ்வொரு தொழில் துறையும் வேண்டுகிற திறன்களை அளிப்பதற்காக பிரத்யேகத் திறன் கவுன்சில்களை ஏற்படுத்தியுள்ளது. தேசிய வேலைத் திறன் தரம் (சஹற்ண்ர்ய்ஹப் ஞஸ்ரீஸ்ரீன்ல்ஹற்ண்ர்ய் நற்ஹய்க்ஹழ்க்) என்ற அளவுகோலை இவை வரையறுத்துள்ளன. இந்தத் தரத்தை எட்டுவதாக, இளைஞர்களுக்கான பயிற்சிகள் அமைய வேண்டும். தேசியத் திறன் தகுதி ளசஹற்ண்ர்ய்ஹப் நந்ண்ப்ப்ள் ணன்ஹப்ண்ச்ண்ஸ்ரீஹற்ண்ர்ய்ள் எழ்ஹம்ங்ஜ்ர்ழ்ந் (சநணஎ)ன் தொழிற்பயிற்சி கல்விக்கும், பொது கல்விக்கும் இடையேயான இணைப்புகளை ஏற்படுத்துகிறது.

எழுக இந்தியா திட்டம்

எழுக இந்தியா திட்டம் என்பது, பெண்களும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரும் புதிய தொழில் முனைவோராக ஆவதற்கு ஊக்கம் அளிக்கும் திட்டமாகும். இவர்களுக்கு பத்து லட்ச ரூபாய் முதல், ஒரு கோடி ரூபாய் வரை புதிய தொழில் தொடங்குவதற்காக கடன் அளிக்கப்படும். இதனை ஏழாண்டுகள் வரையில் திருப்பிச் செலுத்தலாம். ஆன்லைன் வாணிகம், மின்னணு வியாபாரத்தலம் போன்றவற்றில் இவர்களை ஈடுபடுத்தவும் இத்திட்டம் ஊக்குவிக்கிறது.

ஒவ்வொரு வங்கிக் கிளையில் இருந்தும் குறைந்தபட்சம் ஒரு ஆதிதிராவிடர் அல்லது பழங்குடி இனத்தவர் பெண்ணுக்கு பத்து லட்சம் ரூபாய் முதல் ஒரு கோடி வரை கடன் வழங்கி அவர்கள் புதிதாக ஒரு தொழிலைத் தொடங்க எழுக இந்தியா திட்டம் உதவுகிறது. புதிய தொழில் என்பது உற்பத்தி சார்ந்தோ, சேவைகள் துறையாகவோ, வணிகமாகவோ இருக்கலாம். தனி நபர் அல்லது கூட்டு நிறுவனத் தொழில் முனைவோராக இருந்தால், அத்தகையை நிறுவனத்தில் குறைந்தது 51% உரிமை ஆதிதிராவிடர் அல்லது பழங்குடியினர் பெண்களிடம் இருக்க வேண்டும்.

18 வயதுக்கு மேற்பட்ட ஆதிதிராவிடர்/ பழங்குடியினர் / பெண்கள்.

புதிய தொழில் தொடங்கப்பட வேண்டும். புதிய தொழில் என்பது கடன் பெறுவோர் புதிதாகத் தொடங்கும் உற்பத்தி / சேவை / வணிகம் சம்பந்தப் பட்டதாக இருக்கலாம். கடன் பெறுவோர், ஏற்கனவே எந்த வங்கி யிலாவது அல்லது நிதி நிறுவனத் திலாவது கடன் பெற்று திரும்ப செலுத்த தவறியவராக இருக்கக் கூடாது. நீண்ட கால கடன் மற்றும் செயல்முறை மூலதனக் கடன் என்று மொத்தமாக ரூ. 10 லட்சம் முதல் ரூ. 100 லட்சம் வரை பெறலாம்.

ஒருங்கிணைந்த கங்கை பாதுகாப்புத் திட்டம்

சுத்திகரிக்கப்படாத சாக்கடை, தொழிற்சாலை கழிவுகள், நீர்வரத்து குறைவு மற்றும் வேகமாக சரிந்து வரும் நிலத்தடி நீர் மட்டம் போன்ற காரணங்களால் கங்கை நீரை சார்ந்துள்ள லட்சக்கணக்கான மக்கள் பாதிப்புக்குள்ளாக்கப்பட்டுள்ளனர். இதை கருத்தில் கொண்டு, அனைவரின் ஒருங்கிணைந்த முயற்சியுடன் கங்கை நதியை தூய்மைப்படுத்த இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்திற்கென ஒதுக்கப்பட்ட நிதி 2037 கோடி ரூபாய் ஆகும். மேலும் கணவாய், நதிக்கரையோர நகரங்களான கேதார்நாத், ஹரித்துவார், கான்பூர், வாரணாசி, அலகாபாத், பாட்னா, டெல்-லி போன்ற நகரங்களை அழகுபடுத்துவதற்காகவும் ரூ. 100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

நமாமி கங்கை' திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள்:

நீடித்த நகர கழிவு நீர் சுத்திகரிப்பை உறுதி செய்தல், கிராமப்புற பகுதிகளில் கழிவு நீரை கையாள்தல், தொழிற்சாலைகள் வெளியேற்றும் கழிவு நீரை நிர்வகித்தல், கங்கைக் கரை பகுதிகளில் நதிகள் வரன்முறைப் பகுதிகளை செயல்படுத்துதல்.

கிராமாலயா - தூய்மைத் தமிழ்நாடு திட்டம்

சமுதாயத்தில் உள்ள அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர், சுகாதாரம், நலவாழ்வு மற்றும் பொருளாதார மேம்பாடு ஆகியவற்றை எவ்வித பாலின பாகுபாடின்றி அனைவருக்கும் கிடைக்கச் செய்வதே கிராமாலயாவின் தொலைநோக்குப் பார்வை ஆகும்.

கிராமாலயாவின் சுகாதாரத் திட்டங்கள்:

நகர மேம்பாட்டு சுகாதாரத்திட்டம், மழைநீர் சேகரிப்பு திட்டம், வாழை ஆராய்ச்சி (வாழை உபபொருள்கள் தயாரித்தல்), இந்தியாவின் முதல் திறந்த வெளியில் மலம் கழிக்க தடை செய்யப்பட்ட கிராமம், முன்மாதிரி கிராமங்களை உருவாக்குதல்.

இத்திட்டத்தில் பங்கேற்கும் பஞ்சாயத்து தலைவர்களை ஊக்கப்படுத்தும் வகையில், வருடந்தோறும் நடைபெறும் உலக கழிப்பறை தினவிழாவில் (நவம்பர்’19) சுகாதார திட்டத்தில் முன்மாதிரியாக செயல்படும் பஞ்சாயத்து தலைவர்களுக்கு விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்படும்.

பிரதமரின் தேசிய பாதுகாப்பு நிதி தேசிய பாதுகாப்பு நடவடிக்கையின் மேம்பாட்டுக்காக, நிதியாகவும் பொருளாகவும் தன்னார்வ நன்கொடைகளை பெறுவதற்காகவும் அவற்றை இந்த நோக்கத்திற்காக பயன்படுத்துவதற்காகவும் தேசிய பாதுகாப்பு நிதி ஏற்படுத்தப்பட்டது. ராணுவ படையினர் (துணை ராணுவ படைகள் உட்பட) மற்றும் அவர்களின் குடும்பத்தினர் நலனுக்காக இந்த நிதி பயன்படுத்தப்படுகிறது.

ஒரு செயற்குழுவால் நிர்வகிக்கப்படும் இந்த நிதியின் தலைவராக பிரதமரும், பாதுகாப்பு, நிதி மற்றும் உள்துறை அமைச்சர்கள் இதில் உறுப்பினர்களா கவும் இருக்கிறார்கள். நிதியமைச்சர் இந்த நிதியின் காசாளராகவும், பிரதமர் அலுவலகத்தின் இணைச்செயலர் செயற்குழுவின் செயலராகவும் செயல்படுகிறார்கள். இந்த நிதியின் கணக்குகள் இந்திய ரிசர்வ் வங்கி வசம் உள்ளன. தேசிய பாதுகாப்பு நிதியானது முற்றிலும் பொதுமக்களின் பங்களிப்புடன் மட்டுமே செயல்படுகிறது. இதற்கென பட்ஜெட்டில் எந்தத் தொகையும் ஒதுக்கப்படுவதில்லை. இந்த நிதி தொகுப்புக்காக இணையம் வழியாக அனுப்பப்படும் நன்கொடையும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

தேசிய பாதுகாப்பு நிதியின் கீழ் உள்ள திட்டங்கள்:

ராணுவப்படைகள், துணை ராணுவப்படைகளில் பணியாற்றி இறந்த வீரர்களின் மனைவியர் மற்றும் குடும்பத்தினர், தொழில்நுட்ப மற்றும் முதுநிலை கல்வி கற்பதற்காக கல்வி உதவித்தொகை அளிக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் நலத்துறை, ராணுவ படைகளுக்கான திட்டத்தை செயல்படுத்துகிறது. துணை ராணுவப்படைகள் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படையைப் பொறுத்தவரை மத்திய உள்துறை அமைச்சகமும், ரயில்வே அமைச்சகமும் இத்திட்டத்தை கவனித்துக் கொள்கின்றன.

பிரதமரின் தேசிய நிவாரண நிதி

பாகிஸ்தானில் இருந்து குடிபெயர்ந்த மக்களுக்கு உதவுவதற்காக, 1948-ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேருவினால், பிரதமர் தேசிய நிவாரண நிதி (பி.எம்.என்.ஆர்.எப்.) உருவாக்கப்பட்டு, இந்நிதிக்காக அழைப்பு விடுக்கப்பட்டது. தற்போது இந்த பி.எம்.என்.ஆர்.எப். நிதி ஆதாரமானது, இயற்கை சீற்றங்களான வெள்ளம், புயல், பூகம்பம் போன்றவற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உடனடி உதவி அளிக்க பயன்படுத்தப்படுகிறது.

பெரிய விபத்துகள், கலவரங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உடனடி நிவாரணம் வழங்கவும் இந்த நிதி பயன்படுத்தப்படுகிறது. பி.எம்.என்.ஆர்.எப். உதவி மூலம், இதய அறுவை சிகிச்சை, சிறுநீரக மாற்று சிகிச்சை, புற்றுநோய் சிகிச்சைக்கான செலவு பகுதியளவு வழங்கப்படுகிறது.

நிதியானது முற்றிலும் பொதுமக்களின் பங்களிப்புடன் மட்டுமே செயல் படுகிறது.

இதற்கென பட்ஜெட்டில் எந்தத் தொகையும் ஒதுக்கப்படுவதில்லை.

இந்த நிதித் தொகுப்பு, வங்கிகளில் நிரந்தர வைப்பு நிதியாக முதலீடு செய்து வைக்கப்படுகிறது.

நிதி வழங்கல், பிரதமரின் ஒப்புதலி-ன் பேரில் மேற்கொள்ளப்படுகிறது. பி.எம்.என்.ஆர்.எப். நாடாளுமன்றத் தால் தோற்றுவிக்கப்பட்டது அல்ல. இது வருமான வரி சட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட ஒரு அறக்கட்டளை நிதியமாக பிரதமர் அல்லது பல்வேறு பிரதிநிதிகளால் தேசிய நலனுக்காக நிர்வகிக்கப்படுகிறது.

பிரதம மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா

பிரதம மந்திரி சுரக்‌ஷா பீமா யோஜனா (ஆயுள் காப்பீட்டுக்கான முதல் திட்டம்) வங்கிக் கணக்கு வைத்துள்ள 18 முதல் 70 வயது வரை உள்ள எல்லோரும் இத்திட்டத்தில் சேர தகுதி உடையவர்கள். அனைத்து பொதுத்துறை பொது காப்பீடு நிறுவனங்களும், இத்திட்டத்தைச் செயல்படுத்த விரும்புகிற மற்ற ஆயுள் காப்பீட்டுக் கழகங்களும், வங்கிகளுடன் இணைந்து இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தும்.

பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா

பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (ஆயுள் காப்பீட்டுக்கான இரண்டாவது திட்டம்) வங்கிக் கணக்கு வைத்துள்ள 18 முதல் 50 வயது வரை உள்ள எல்லோரும் இத்திட்டத்தில் சேர தகுதி உடையவர்கள். ஐம்பது வயது நிறைவடைவதற்கு முன் இத்திட்டத்தில் சேருபவர்கள், தொடர்ந்து பிரிமியம் செலுத்தி வந்தால் 55 வயது வரை ஆயுள் காப்பீடு உண்டு.

பிரிமியம் ஒவ்வொரு ஆண்டும் சந்தாதாரர்களின் வங்கிக் கணக்கிலி-ருந்து நேரடியாக எடுத்துக்கொள்ளப்படும். இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகமும், இத்திட்டத்தை செயல்படுத்த விரும்புகிற மற்ற ஆயுள் காப்பீட்டு கழகங்களும், வங்கிகளுடன் இணைந்து இந்தத் திட்டத்தை செயல்படுத்தும்.

தொடங்கிடு இந்தியா (Startup India)

நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி நிலைபெற்று நீடிக்கும் விதமாகவும், பெருமளவிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் விதமாகவும் புத்தாக்க முயற்சிகளுக்கும் தொடக்க நிலை தொழில் முயற்சிகளுக்கும் உகந்த வலுவான சூழலைக் கட்டமைக்கும் நோக்கில் இந்திய அரசு அறிவித்துள்ள திட்டம் தான் ‘‘தொடங்கிடு இந்தியா” என்னும் திட்டமாகும்.

அரசின் இந்த முயற்சியின் இலக்குகளை எட்டும் விதமாக, ‘தொடங்கிடு இந்தியா’ திட்டத்திற்கு ஏற்ற சூழலை உருவாக்குவதற்கான அறிவிப்புகளும் வெளியிடப்பட்டுள்ளன. டிஜிட்டல் தொழில்நுட்பம் முதற்கொண்டு, வேளாண்மை, உற்பத்தி, சமூகவியல் துறை, சுகாதாரம், கல்வி போன்ற அனைத்து துறைகள் வரை புதிய தொழில் தொடக்க முயற்சிகளை மேற்கொள்ளலாம். முதல் நிலை நகரங்கள் தொடங்கி, இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை நகரங்கள் வரையிலும், கிராமப்புறங்களிலும் கூட தொடங்கிடு இந்தியா திட்டத்தின் கீழ் புதிய தொழில் முயற்சிகளை மேற்கொள்ளலாம்.

dd

தேசிய பாலர் தூய்மை திட்டம்

பிரதமர் நாட்டின் மாபெரும் தூய்மை திட்டமாக, மகாத்மா காந்தி பிறந்த தினமான அக்டோபர் 2, 2014 அன்று தன் கையில் துடைப்பம் கொண்டு தூய்மை இந்தியா என்ற திட்டத்தை மிகுந்த ஆரவாரத்துடன் தொடக்கி வைத்தார். மேலும், இத்திட்டத்தின் ஒரு பகுதியாக தேசிய பாலர் தூய்மை திட்டம் குழந்தைகள் தினமான நவம்பர் 14 அன்று தொடங்கப் பட்டது.

ஜன்தன், ஆதார் மொபைல் ‘‘ஜாம்” ஊக்க சக்தி அனைவருக்கும் வங்கிக் கணக்கு, ஆதார், மொபைல் ஆகிய மூன்றும் இணைந்த ஜாம் திட்டத்தின் பார்வை பல திட்டங்களின் அடிப்படை அஸ்திவாரமாக அமையும். ஒவ்வொரு ரூபாய் செலவிலும் அதிகபட்ச மதிப்பு இருக்க வேண்டும். நமது நாட்டு ஏழைகளுக்கு அதிகபட்ச அதிகாரம் அளிக்க வேண்டும். இந்த மக்களின் மத்தியில் அதிகபட்ச தொழில்நுட்பம் ஊடுருவ வேண்டும்.

நாடு சுதந்திரம் பெற்று 67 ஆண்டுகள் ஆகிய பிறகும் பெரும் அளவு மக்களுக்கு வங்கி சேவைகள் கிடைக்கவில்லை. இதற்கு என்ன அர்த்தம் என்றால் அவர்களுக்கு சேமிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை, அவர்கள் கணக்கில் பணம் சேருவதற்கான வாய்ப்பும் வழங்கப்படவில்லை. இந்த நிலையில் தான் பிரதம மந்திரியின் ஜன்தன் யோஜனா எனப்படும் வங்கிக் கணக்குத் திட்டம் தொடங்கப்பட்டது.

இந்தத் திட்டம் தொடங்கப்பட்டதன் சில மாதங்களிலேயே லட்சோப லட்சம் இந்திய மக்களின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டது. ஒரே ஆண்டில் 19 கோடியே 72 லட்சம் வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டன. 16 கோடியே 8 லட்சம் ரூபே கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த கணக்குகளில் 28 ஆயிரத்து 699 கோடியே 65 லட்சம் ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 697 வங்கி தொடர்பாளர்கள் இதில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஒரே வாரத்தில் 1 கோடியே 80 லட்சத்து 96 ஆயிரத்து 130 வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டது கின்னஸ் சாதனையாகும்.

பிரதம மந்திரியின் சுரக்ஷா பீமா

யோஜனா திட்டம் பயனாளிகளுக்கு 2 லட்சம் ரூபாய் விபத்து காப்பீடு வழங்குகிறது. பிரதம மந்திரியின் ஜீவன் ஜோதி பீமா யோஜனா திட்டம் ஆண்டுக்கு 330 ரூபாய் செலவில் ஆயுள் காப்பீட்டை மக்களுக்கு வழங்குகிறது. அடல் பென்ஷன் யோஜனா திட்டம் பயனாளி களின் பங்களிப்பு அடிப்படையில் மாதம் 5 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியத்தை முதுமை காலத்தில் வழங்குகிறது. 9 கோடியே 2 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பிரதம மந்திரியின் சுரக்ஷா பீமா திட்டத்திலும், 3 கோடி பேர் பிரதம மந்திரியின் ஜீவன் ஜோதி பீமா யோஜனா திட்டத்திலும் சேர்ந்துள்ளனர்.

அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் 15 லட்சத்து 85 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர்.

பஹல் (PAHAL)

பஹல் (PAHAL) திட்டத்தின்படி சமையல் எரிவாயு மானியம் நேரடியாக வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படுகிறது. இத்திட்டத்தின்படி 10 கோடிக்கும் மேற்பட்டோர் நேரடியாக ரொக்க மானியம் பெறுகின்றனர். இதனால் சுமார் 4000 கோடி ரூபாய் சேமிப்பில் சேருகிறது. வங்கி வசதிகள் அளிக்கப்பட்ட பின்னர் அரசு காப்பீடு மற்றும் ஓய்வூதியம் அளிக்கவும் எளிமையாக்கப்பட்டுள்ளது.

‘இ–பெட் ரோல்’ திட்டம்

படுக்கை விரிப்பை விலை கொடுத்து வாங்கும் திட்டம் தமிழகத்தில் உள்ள ரெயில் நிலையங்களில் விரிவுபடுத்தப் படுத்தப்பட்டுள்ளது. ரெயில் பயணத்தின் போது குளிர்சாதன ரெயில் பெட்டிகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு தலையணை, படுக்கை விரிப்பு மற்றும் கம்பளி ஆகியவை வழங்கப்படுகின்றன. இதே போல் ஏ.சி. அல்லாத இரண்டாம் வகுப்பு பெட்டியில் பயணம் செய்யும் பயணிகளுக்கு அந்த வசதி கிடைக்கும் வகையில் ‘இ–பெட் ரோல்’ திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம் ஐ.ஆர்.சி.டி.சி. மூலம் சில குறிப்பிட்ட ரெயில்களில் முதற்கட்டமாக நடைமுறைக்கு வந்தது. தமிழகத்தில் சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்திலும், திருவனந்தபுரத் தில் திருவனந்தபுரம் சென்டிரல் ரெயில் நிலையத்திலும் நடைமுறைக்கு வந்து தற்போது செயல்பாட்டில் உள்ளது.

ஏ.சி. அல்லாத இரண்டாம் வகுப்பு பெட்டியில் பயணிக்கும் பயணிகள் ரெயில் பயணத்தின் போது பயன்படுத்தும் வகையில் தலையணை, படுக்கை விரிப்பு, கம்பளி போர்வை ‘இ–பெட் ரோல்’ திட்டம் மூலம் சில ரெயில் நிலையங்களில் விற்பனை செய்யப்பட்டது.

ஸ்வச் பாரத் இயக்கம்

ஸ்வச் பாரத் இயக்கம் எனப்படும் தூய்மை இந்தியா இயக்கம் தொடங்கப்பட்டு பாதி தூரம் கடந்துள்ள நிலையில், இந்த இயக்கத்தின் செயல்பாடுகளில் வேகம் ஏற்பட்டு குறிப்பிடத்தக்க முன்னேற்றமும் ஏற்பட்டுள்ளது. கடந்த 2014 அக்டோபர் மாதம் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது முத-ல், நாட்டின் கிராமப்புறங்களில் துப்புரவு உள்ளடக்கம் 42 முதல் 63 சதவிகிதமாக அதிகரித்திருப்பதுடன், இந்திய கிராமப்புறங்களில் திறந்தவெளியில் இயற்கை உபாதையை கழிப்பவர்களின் எண்ணிக்கை 550 மில்லி-யனில் இருந்து 330 மில்-லியனாக குறைந்திருப்பதுடன், 190,000 கிராமங்கள், 130 மாவட்டங்கள் மற்றும் மூன்று மாநிலங்கள் திறந்தவெளி கழிப்பிடங்கள் அற்றவையாக மாறியுள்ளன. 2019 அக்டோபர் 2-ஆம் தேதி திறந்தவெளி கழிப்பிடங்கள் அற்ற இந்தியா என்ற நிலையை அடையும் வகையில் இந்தத் திட்டம் சிறப்பான முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

துப்புரவுக்கு முன்னுரிமை அளிப்பது பல்வேறு காரணங்களால் முக்கிய மாகிறது. ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் வயிற்றுப் போக்கு பாதிப்பால் அவதிப்படுவதற்கு போதிய கழிவறைகள் இல்லாததே காரணமாக அமைகிறது. துப்புரவு என்பது பெண்களின் பாதுகாப்பு மற்றும் கண்ணியத்திற்கு மிகவும் முக்கியமானதாகும். ஒரு பெரும் பொருளாதாரமாகத் திகழ திறந்தவெளி கழிப்பிடங்களை அகற்றுவது முக்கியமானதாக உள்ளது.

முந்தைய துப்புரவு திட்டங்களைப் போல் இன்றி தூய்மை இந்தியா இயக்கம் என்பது வெறும் கழிவறை கட்டும் திட்டமாக மட்டுமல்லாமல், மக்களின் பழக்க வழக்கங்களில் மாற்றத்தை ஏற்படுத்தும் ஒரு திட்டமாக உள்ளது. சாலை அமைப்பது, பாலம் கட்டுவது அல்லது விமான நிலையம் அமைப்பது போன்ற பணிகள் மனிதர்களின் பழக்க வழக்கத்தை மாற்றுவதற்கான முயற்சியுடன் ஒப்பிடுகையில் எளிதான பணியாகவே இருக்கும்.

பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டம்(PMMY)

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் (MSME) வளர்ச்சிகளுக்காக இந்திய அரசால் உருவாக்கப்பட்டது தான் இந்த பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டம் (PMMY). இது குறுந்தொழில் மேம்பாட்டு மற்றும் மறுநிதி நிறுவனம் Micro Units Development and Refinance Agency (MUDRA) மூலமாக செயல்படுத்தப்படுகிறது. முத்ரா வங்கி என்பது ஒரு தனிப்பட்ட வங்கி அல்ல. இது ஒரு அரசின் திட்டமாகும், இது அனைத்து வங்கிகளின் மூலம் செயல்படுத்தப்படுகிறது.

இது முற்றிலும் குறுந்தொழில் மேம்பாட்டிற்காக இந்திய அரசால் நிறுவப்பட்ட ஒரு புதிய திட்டமாகும். நிதி அமைச்சர் 2015-16 நிதியாண்டில் வெளியிட்டார். தனியார் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு தேவையான நிதியினை வழங்குவது இதன் முக்கிய பணியாகும். 2015-16 நிதியாண்டில் சுமார் 1.5 கோடி நிறுவனங்களுக்கு இத்திட்டத்தில் கடன் வழங்கியுள்ளனர்.

பத்து லட்சத்திற்கும் குறைவான அளவு கடன் தேவைப்படும் பண்ணை தொழிலுக்கு சாரா உற்பத்தி நிறுவனங்கள், வர்த்தக மற்றும் சேவை நிறுவனங்களுக்கு பொதுவுடைமை வங்கிகள், தேசிய வங்கிகள் மட்டும் மாநில கூட்டுறவு வங்கிகளின் மூலமாக இந்த கடன் வழங்கப்படுகிறது.

இந்த முத்ரா யோஜனா திட்டம் மூன்று வகைகளில் குறுந்தொழில் முனைவோருக்கு தங்களின் தொழிலை மேம்படுத்தவும், விரிவுபடுத்திக் கொள்ளவும் கடன்களை வழங்குகிறது. இது சிசு, கிஷோர் மற்றும் தருண் ஆகிய முறைகளில் வழங்கப்படுகிறது.

சிசு (SHISHU) – இத்திட்டம் மூலமாக தள். 50000 வரை கடன் பெறலாம்.

கிஷோர் (KISHOR) – இத்திட்டம் மூலமாக தள். 50000 முதல் ஐந்து லட்சம் வரை கடன் பெறலாம்.

தருண் (TARUN) - இத்திட்டம் மூலமாக ஐந்து லட்சம் முதல் பத்து லட்சம் வரை கடன் பெறலாம்.

பிரதான் மந்திரி பாரதிய ஜன் ஔஷதி யோஜனா பிரதான் மந்திரி ஜன் அவுஷதி யோஜனா /

பிரதான் மந்திரி பாரதிய ஜன் ஔஷதி யோஜனா திட்டத்தின் கீழ், ஏழை மக்களும் உயிர் காக்கும் மருந்துகளை மலிவு விலையில் வாங்க வகை செய்யப்பட்டுள்ளது. இதற்காக நாடு முழுவதும் ஜன் ஔஷதி மருந்தகங்கள் தொடங்கப்பட்டுள்ளது.

தனி நபர், வணிக நிறுவனம், மருத்துவமனைகள், என்.ஜி.ஓ-க்கள், அறக்கட்டளை அமைப்புகள், சுய உதவி குழுக்கள், பார்மசிஸ்ட்டுகள், டாக்டர்கள் மற்றும் பதிவு பெற்ற மருத்துவப் பணியாளர்கள் தஙடக்கள் போன்றவர்கள் ஏழைகள் பயன்பெறும் வகையில் மக்கள் மருந்தகங்கள் (ஜன அவுஷதி கேந்திரம்) சொந்தமாக அமைக்கவும் இத்திட்டத்தின் கீழ் வகை செய்யப்பட்டுள்ளது .

இத்திட்டம் சுயவேலை வாய்ப்பு வழங்குவதோடு, வருமானம் வரும் வாய்ப்பையும் தருகிறது. இதற்கு 10 சதுர மீட்டர் இடம் இருந்தாலே போதும். இது ஒரு மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் திட்டமாகும்.

பிரதமர் வேளாண் நீர் பாசனத் திட்டம் அனைத்து வேளாண் நிலங்களுக்கும் ஏதாவது ஒரு வகையில் நீர்பாசனம் கிடைக்கும் வகையில் செயல்பாடுகளை உறுதி செய்வது. வேளாண் பயிர்கள் மூலம் கிடைக்கும் வருவாயைப் பெருக்குதல், விவசாய உற்பத்தியையும், உற்பத்தித் திறனையும் மேம்படுத்துதல். ஒரு துளி நீரில் நிறை தானியம்.

இத்திட்டத்தில் உள்ள பகுதிகள் நீர் ஆதாரங்கள் உள்ள இடங்களை பழுது பார்த்தல், உருவாக்குதல், புதுப்பித்தல் போன்றவை (நீர் ஆதார அமைச்சகம்). உற்பத்தி செய்யப்பட்ட இடத்தில் இருந்து விற்பனை நிலையம் வரை உள்ள பகுதிகளை வலுவாக்குதல் மற்றும் மேம்படுத்துதல் (நிலம் பயன்பாட்டுத் துறை).

நீர் ஆதாரங்களைத் திறமையுடன் செயல்படுத்த தேவையான கருவிகள் (விவசாயம் மற்றும் கூட்டுறவுத் துறை).

பிரதமரின் திறன் மேம்பாட்டு திட்டம் மத்திய அரசு புதிதாக ஏற்படுத்தியுள்ள திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகத்தினால், தேசிய திறன் மேம்பாட்டுக் கழகத்தின் (NSDC) மூலமாக இளைஞர்களுக்கு திறன் பயிற்சிகள் வழங்கும் முன்னோடித் திட்டம் இதுவாகும். இத்திட்டத்தின் கீழ் சுமார் 24 லட்சம் இளைஞர்கள் பயன் பெறுவார்கள்.

தேசிய திறன் தகுதி கட்டமைப்பு (NSQF) மற்றும் தொழில் துறையின் நிர்ணயித்துள்ள தரத்திற்கு திறன் பயிற்சி அளிக்கப்படும். இத்திட்டத்தின் கீழ் திறன் பயிற்சி பெறுவோரின் திறன்களை மூன்றாம் தரப்பினரைக் கொண்டு மதிப்பிட்டு வெகுமதியும் அளிக்கப்படும். ஒவ்வொரு திறன் பயிற்சியாளருக்கும் ரூ. 8000 அளவிற்கு வெகுமதிகள் கிடைக்கும்.

அண்மையில் இந்திய அரசு தொடங்கியுள்ள இந்தியாவில் தயாரிப்போம், டிஜிட்டல் இந்தியா, தேசிய சூரிய சக்தி இயக்கம், தூய்மை பாரத இயக்கம் போன்ற திட்டங்களுக்கு தேவைப்படும் திறன்களை உருவாக்குவதாகவும் பயிற்சிகள் அமையும். தொழிலாளர் சந்தையில் முதன்முதலாக அடியெடுத்து வைக்கும் இளைஞர்களை – குறிப்பாக, 10–ஆம் வகுப்பு அல்லது 12–ஆம் வகுப்பு படிப்புகளை பாதியில் நிறுத்தி விடும் இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளிப்பதாக இத்திட்டம் இருக்கும்.

தேசிய திறன் மேம்பாட்டு இயக்கம்

எந்த ஒரு நாடானாலும், பொருளாதார வளர்ச்சிக்கும், சமூக மேம்பாட்டுக்கும் உந்துவிசையாக இருப்பது திறனும் அறிவும் தான். வளர்ந்த நாடுகளின் தொழிலாளர்களில் சுமார் 60 சதவீதம் முதல் 90 சதவீதம் பேர் வரை திறன் பெற்றவர்களாக உள்ளனர். ஆனால் இந்தியாவிலோ முறையான தொழில் திறன் பெற்றவர்களின் அளவு (20-24 வயதுடையவர்களில்) மிக சொற்ப அளவாக, ஐந்து சதவீதம் மட்டுமே உள்ளது.

நமது இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்ந்து மத்திய அரசின் இருபது அமைச்சகங்களும் / துறைகளும், திறன் மேம்பாட்டுக்காக எழுபதுக்கும் மேற்பட்ட திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. பல்வேறு துறைகளிலும், மாநிலங்களிலும் செயல்பட்டு வரும் திறன் பயிற்சி திட்டங்களை ஒருங்கிணைக்கும் நோக்கத்தில், 2015 ஜூலை 15–ஆம் தேதியன்று, தேசிய திறன் மேம்பாட்டு இயக்கத்தை மத்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம் தொடங்கியது.

திறன் பயிற்சி வழங்கும் முயற்சிகளை ஒருங்கிணைப்பதோடு, அந்த பயிற்சிகள் தரமானதாகவும், விரைவாகவும் வழங்கப்படுவதோடு, பெரும் எண்ணிக்கையிலானவர்களுக்கு வழங்கப்படுவதை உறுதி செய்வதாகவும் இந்த இயக்கம் செயல்படுகிறது.

திட்ட அறிக்கை : வாழ்க்கை தரத்தை தொடர்ந்து மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற மக்களின் விருப்பங்களையும், திறன் பயிற்சி பெற்ற தொழிலாளர்களுக்கான பணியமர்த்துவோரின் தேவைகளையும் ஒத்திசையச் செய்யும் விதமாக, தொடக்கம் முதல் இறுதி வரையிலான பயிற்சி கட்டமைப்புகளை ஏற்படுத்தி, திறன் மேம்பாட்டு முயற்சிகளை துரிதகதியில் அதிகரிப்பதே இந்த இயக்கத்தின் நோக்கமாகும். அதன்படி கீழ்க்காணும் இலக்குகளை அடைவதற் கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படும்.

திட்ட இலக்குகள் : திறன் மேம்பாட்டுக் கான தொடக்கம் முதல் இறுதி வரையிலான கட்டமைப்பை உருவாக்கி, அதன் மூலம் வாழ்நாள் முழுவதுமான கற்றலுக்கான வாய்ப்பு ஏற்படுத்தப்படும். இதன்படி, பள்ளி பாடத்திட்டத்தில் திறன் வளர்த்தலும் சேர்க்கப்படும். தரமான நீண்டகால மற்றும் குறுகிய கால திறன் பயிற்சிகளுக்கான வாய்ப்புகள் உருவாக்கப்படும். அவ்வாறு திறன் பெறும் பயிற்சியாளர்களுக்கு நல்ல ஊதியத்துடன் வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தித் தருவதோடு, வேலையில் தொடர்ந்து படிப்படியான முன்னேற்றத் திற்கும் வாய்ப்புகள் உருவாக்கித் தரப்படும்.

தீனதயாள் உபாத்யாய கிராமப்புற திறன் வளர்ச்சித் திட்டம் முறையான படிப்பறிவு இல்லாமை, சந்தைப்படுத்தக் கூடிய திறன் இன்மை போன்ற காரணங்களால் கிராமப்புறத்து ஏழை மக்கள் நவீனயுகத்தில் போட்டி யிடுவதால் மிகவும் சிரமப்படுகிறார்கள். இந்த இடைவெளியை நிரப்புவதற்காக, சர்வதேச தரத்திலான பயிற்சிகளை கிராமப்புற மக்களுக்கு வழங்கும் திட்டங்களுக்கு தீனதயாள் உபாத்யாய கிராமப்புற திறன் வளர்ச்சித் திட்டம் நிதி உதவி அளிக்கிறது. பயிற்சிக்குப் பின்னர் வேலைவாய்ப்பு, வேலையில் உயர்வு, வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு போன்றவற்றுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

தீனதயாள் உபாத்யாய கிராமப்புறத் திறன் வளர்ச்சித் திட்டத்தின் சிறப்பு அம்சங்கள் ஏழைகள் மற்றும் விளிம்பு நிலை மக்களுக்கு பயன் கிடைக்கிறது.

அவர்களுக்கு எந்த விதமான செலவும் இல்லாமல் திறன் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. அனைவரையும் உள்ளடக்கிய திட்டம், சமூகரீதியாக பின்தங்கியுள்ள ஆதிதிராவிடர் / பழங்குடியினர் 50% சிறுபான்மையினர் 15% பெண்கள் 33% என்று திறன் பயிற்சி பெறுபவர்கள் தேர்ந்தெடுக்கபடுவார்கள்.

இளைஞர்களின் திறன் மேம்பாடு

தேசிய இளைஞர்கள் கொள்கை 2014-இன் படி 15-29 வயதுக்குட்பட்ட எல்லோரும் இளைஞர்களாக கருதப்படுகிறார்கள். அவர்கள், பல்வேறு தன்மைகள், தேவைகள், எதிர்பார்ப்புகள் ஆகியவைகளைக் கொண்டவர்களாக உள்ளனர். 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மக்கள்தொகையில் இவர்கள் 28 சதவிகிதம் உள்ளனர். இந்தியாவின் மொத்த உள் நாட்டு உற்பத்திக்கு 34 சதவிகிதம் பங்களிக்கிறார்கள்.

இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்பு அளித்து அவர்களின் உற்பத்தித் திறனை அதிகரித்தால், உள் நாட்டு மொத்த உற்பத்தியில் அவர்களின் பங்களிப்பை அதிகரிக்க முடியும். இன்றைய தேவை இந்த இளைஞர்கள் தங்களுடைய முழு திறன்களையும் வெளிப்படுத்த வாய்ப்பளித்து திறன்மிகு தொழிலாளர் படையில் இந்தியா முன்னணி வகிக்க வேண்டும்.

இந்தியாவில் படித்த இளைஞர்கள் ஒன்று வேலையில்லாமல் இருக் கிறார்கள் அல்லது குறைவான பணியில் உள்ளனர், வேலை தேடும் நிலையில் உள்ளனர், வேலைகளில் மாறிக் கொண்டே இருக்கின்றனர் அல்லது பாதுகாப்பற்ற பணிச் சூழ்நிலையில் வேலை செய்து கொண்டிருக்கின்றனர். 2017 இந்தியத் திறன் அறிக்கையின்படி சுமார் 40 சதவிகித படித்த இளைஞர்கள் பணி செய்ய திறம் பெற்றவர்களாக இருக்கிறார்கள். ஆகவே, முக்கிய சவால்களாக உள்ளது பணி செய்யும் ஏழைகள், பணி பாதுகாப்பின்மை, சந்தைக்கு ஏற்ற திறன் இல்லாமை, தகவல் விழிப்புணர்வின்மை மற்றும் திறன் மேம்பாடு பற்றிய போதிய அறிவு இல்லாமையாகும். இதனால் நாம் தெரிந்து கொள்வது, (ண்) தற்போது தேவைப்படும் திறன்களுக்கேற்ற மனித வளத்தை அளிப்பது (ண்ண்) ஏற்பட்டு வரும் மாற்றங்களை ஏற்றுக் கொள்ளும் வண்ணம் பணியாளர்களும், நிறுவனங் களும் மாறிக் கொள்ளும் தன்மை மற்றும் (ண்ண்) எதிர்கால தொழில் சந்தைக்கு ஏற்ப திறமைகளை வளர்த்துக் கொள்வது.

இந்தியாவில் தயாரிப்போம் (ஙஹந்ங் ண்ய் ஒய்க்ண்ஹ) திட்டம் 125 கோடி மக்கள்தொகை கொண்ட இந்தியாவை வலுவான உற்பத்தி கேந்திரமாக மாற்றி, புதிய வேலைவாய்ப்பு களை ஏற்படுத்தும் நோக்கில், நம் நாட்டிலும் வெளிநாடுகளிலும் உள்ள முதலீட்டாளர்களுக்கு தொழில் நடத்துவதற்கு உகந்த சூழலை உருவாக்கி தருவதே இந்தியாவில் தயாரிப்போம் திட்டமாகும்.

தற்போது நம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உற்பத்தி துறையின் வளர்ச்சி ஆண்டொன்றுக்கு சுமார் 3.3 சதவீதமாக மட்டுமே உள்ளது. இந்தப் பின்னணியில் மேற்குறிப்பிட்ட இலக்குகளை எட்டுவதற்கு அதிக முயற்சிகள் தேவை. எனவே கிராமப்புறங் களில் இருந்து நகரங்களுக்கு குடிபெயரும் தொழிலாளர்களுக்கு சரியான திறன் பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும். மேலும், இந்திய உற்பத்தி துறையின் சர்வதேச போட்டித் திறமையை மேம்படுத்த வேண்டும்.

உற்பத்தியை பெருக்குகிற அதே வேளையில், சுற்றுச்சூழலுக்கு கேடுவராமல் பாதுகாப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும். 2020-ஆம் ஆண்டில் உலகின் முதல் மூன்று இடங்களில் உள்ள வளர்ந்த பொருளாதார நாடுகளில் ஒன்றாகவும், உலக நாடுகள் விரும்புகிற உற்பத்தி கேந்திரங்களில் முதல் மூன்று இடங்களில் ஒன்றாகவும் இந்தியா திகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய அரசு புதிதாக ஏற்படுத்தியுள்ள திறன் வளர்ச்சி மற்றும் தொழில் முனைதலுக்கான அமைச்சகம், திறன் வளர்ச்சிக்கான தேசிய கொள்கையை மறுவரையறை செய்ய உள்ளது. இது தவிர ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் கீழ் தீனதயாள் உபாத்யாய கிராமீன் கௌஷல்யா யோஜனா என்ற திறன் பயிற்சித் திட்டம் ஒன்றையும் மத்திய அரசு தொடங்கியுள்ளது.

புதிய திறன் பயிற்சி திட்டங்களின் படி நாடு முழுவதும் சுமார் 1500 முதல் 2000 வரையிலான பயிற்சி மையங்கள் ஏற்படுத்தப்படும். அரசு மற்றும் தனியார் துறை பங்களிப்புடன் செயல்படும் இத்திட்டத்திற்கு சுமார் ரூ. 2000 கோடி வரை செலவிடப்படும். சந்தை பொருளாதாரத்தில் தேவையின் அடிப்படையில் அமெரிக்கா, ஜப்பான், ரஷ்யா, சீனா, இங்கிலாந்து, மேற்கு ஆசிய நாடுகள் ஆகியவற்றில், திறன் பயிற்சி பெற்ற இந்திய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும். முதல் இரண்டு ஆண்டுகளில் ஆண்டுதோறும் மூன்று லட்சம் இளைஞர்களுக்கும் இத்திட்டங்களின் மூலம் திறன் பயிற்சி அளிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.