காப்பிய காலம் தொடங்கி கணிப்பொறி காலம் வரை பெண் சார்ந்த பிரச்சனைகள் பேசு பொருளாகவே உள்ளன. பெண்கள் நிலவில் கால் வைத்து விட்டார்கள் என்று பெருமைப்படும் அதே சமயத்தில் பெண் பிள்ளைகள் நிலத்தில் கால் வைத்து நடக்கக்கூட பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகி இருப்பது பெரும் ஏமாற்றத்தைத் தருகிறது. கற்காலம் முதல் தற்காலம் வரை பெண்கள் பகடைக்காய்களாக பயன்படுத்தப்பட்டிருப்பதோடு அல்லாமல் ஒவ்வொரு முறையும் தங்களை நிரூபிக்க தனித்து நின்றே போராடி இருக்கிறார்கள்.

பெண்கüன் முன்னேற்றத்தைப் பார்த்து மூக்கில் விரல் வைக்கும் அதே சமூகம் பெண்கüன் சுயம் சார்ந்தவைகளை சுரண்டிவிட்டு அவர்களை பலவீனமானவர்களாகவே சித்தரித்துக் கொண்டிருக்கிறது. உண்மையைச் சொல்லப் போனால் இந்த சமூகத்தில் பலவீனமானவர்கள் ஆண்கள் தான் என்று சொல்ல வேண்டும். மாதவியிடம் தன்னையும் தன் செல்வத்தையும் தொலைத்து விட்டு வெறுங்கையோடு வந்து நின்ற கோவலனுக்கு தன் சிலம்பைக் கொடுத்து மனதளவிலும் பொருளாதார அளவிலும் நம்பிக்கை அüத்தது அவன் மனைவி கண்ணகி தான் என்று காப்பியம் சொல்கிறது.

ராமாயண காவியத்தை எடுத்துக்கொண்டால், இராமன் இராவணனை தோற்கடிப்பதற்கு முன்பே சீதை இராவணனை அசோகவனத்திலேயே தோற்கடித்து விட்டாள்.

“எல்லை நீத்த உலகங்கள் யாவும் என் சொல்லினால் சுடுவேன்; அது தூயவன் வில்லின் ஆற்றற்கு மாசு என்று வீசினேன்.

Advertisment

நான் நினைத்தால் என்னுடைய சொல்லாலேயே உன்னையும் உன் இலங்கையையும் அழித்துவிட முடியும் ஆனால் நான் அவ்வாறு செய்தால் என் தூயவன் தலைவன் இராமன் வில்லுக்கு மாசு வந்து விடுமே என்பதால் தான் இராமன் வந்து என்னை மீட்கும் வரை பொறுமையாக இருக்கிறேன் என்று சீதை சொல்கிறாள்.

அது மட்டுமல்லாமல் ‘துரும்பு எனக் கனன்று சொன்னாள்’ இராவணனைப் பார்த்து நீயெல்லாம் என்னைப் பொறுத்தவரையில் துரும்புக்கு சமம் என்று சீதை கனன்று சொன்ன போதே கையாலாகாது நின்று கொண்டிருந்த இராவணன் இறந்து போய்விட்டான். இந்த இடத்திலே தன்னந்தனியாக நின்று சீதை வென்று விட்டாள். ஆனால், இராமன் சீதையை மீட்டு வந்த பிறகு நெருப்புக் குüயல் நடத்தி தன்னை நிரூபிக்க வேண்டிய சூழல் சீதைக்கு வந்த போதும் நெருப்போடு போராடி வெற்றி பெற்றாள்.

பெண்கள் எவ்வளவு தான் வளர்ந்து முன்னே வந்தாலும் இந்த சமூகம் அவர்களுக்கு நெருப்புக் குüயல் நடத்தாமல் விடுவதில்லை. சூதில் பாண்டவர்கள் பாஞ்சாலியை பணையமாக வைத்து ஆடியபோதும் பின்பு தோற்றபோதும் பாஞ்சாலியிடம் ஒரு சிறு ஆலோசனை கூட அவர்கள் நடத்தவில்லை. அதனால் தான் தன்னை அழைக்க வந்த துரியோதனன் அனுப்பிய தேர்ப்பாகனிடம் சூதில் வல்ல சகுனியிடம் தோற்ற நாயகனிடம் “தான் என்னை முன்னே பணயம் வைத்து இழந்தாரா? தம்மையே முன்னால் இழந்த பின்னர் என்னை வைத்து தோற்றாரா? என்று சபையில் கேட்டு வா என பாஞ்சாலி கேள்விக் கணை தொடுக்கி றாள். பெண்ணின் சொல் அம்பலம் ஏறவில்லை.

Advertisment

dd

அவளைத் துகிலுரியும் போது கௌரவர் சபையும் பாண்டவர்களும் குருடாகவும் ஊமையாகவும் செவிடாகவும் மாறிப்போனார்கள். அடிமைகளுக்கு எதற்கு மேலாடை என்ற ஆதிக்கச் சிந்தனை தான் பாஞ்சாலியைத் துகிலுரிய காரணமாக அமைந்தது.

பெண்கள் பாவத்தின் சின்னமாகவே பார்க்கப்பட் டார்கள்.

பாஞ்சாலியைக் காப்பாற்ற அழைத்த குரலுக்கு கிருஷ்ண பகவான் வந்தான். அங்கேயும் அவள் தனியாகத் தான் போராடி சபதம் எடுத்து வென்றாள். இது கதைக்கு வேண்டுமானால் சாத்தியமாகலாம். ஆனால் நடைமுறையில் பெண்கள் விழிப்புணர்வுடன் இருந்தால் மட்டுமே தங்களைத் தற்காத்துக் கொள்ள முடியும். பெண்கள் பல்வேறு சூழ்நிலைகüல் அடிமைப்படுத்தப்பட்ட போதும் தனக்கு எதிரான முடிச்சுகளைத் தானே அவிழ்த்துக்கொண்டு வெüயே வந்திருப்பது பெண்கüன் தனித்துவமான பலம் என்று போற்ற வேண்டும். ஆனால், இன்றும் ஆண்களால் பெண்துணையின்றி தனித்து இயங்க முடியாது என்பதே அவர்கüன் பலவீனம். கணவனால் கைவிடப்பட்ட பெண்ணோ இல்லை கைம்பெண்ணோ தனித்து நின்று இந்த உலகில் போராடி வெற்றி பெற்றிருக்கிறார் கள். ஆனால் மனைவியை இழந்த ஒரு ஆணால் தனித்து போராட இயலாமல் மறுமணம் செய்து கொண்டு நகர்வதை நாம் கண்கூடாகக் கண்டு வருகிறோம். பெண்கள் இந்த சமூகத்தில் போகப் பொருளாக பார்க்கப்படுகிறார்கள்.

பெண்களுக்கு உடலால் மட்டுமல்ல சொல்லாலும் வன்முறைகள் நிகழ்த்தப்படுகின்றன. ஐந்து வயது தாண்டினால் பெண் குழந்தைகளுக்கு உடையில் கட்டுப்பாடு; பத்து வயது தாண்டினால் அவள் நடையில் கட்டுப்பாடு; பூப்பெய்திய பிறகு பேசுவதில் கட்டுப்பாடு; திருமணமான பின்பு பெண்களுக்கு கட்டுப்பாடுகளைத் தாண்டி அவர் கüடமிருந்து எதிர்பார்ப்புகள் நீடிக்கிறது. பிள்ளை பெறாத பெண்ணை இந்த சமூகம் ‘மலடி’ என்றும் ‘வறடி’ என்றும் வார்த்தைகளாலேயே நெருப்புக் குüயல் நடத்திக் கொண்டிருக்கிறது. நவீன கருத்தரிப்பு மையங்கüல் பணத்தை விதைத்து குழந்தையை அறுவடை செய்ய நினைக்கும் பெண்கள் பலர் பல நேரங்கüல் பலன் இல்லாமல் தோற்றுப் போகிறார்கள்; சிலர் பணம் இல்லாமல் தோற்றுப் போகிறார்கள். திருமணம் ஆகாத பெண்களையும் கைம்பெண்களையும் இந்த சமூகம் தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பது நமக்கு மிகப்பெரிய சாபக்கேடானது.

‘கற்புநிலை என்று வந்துவிட்டால் அதை ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவில் வைப்போம்’ என்று பாடினான் மகாகவி பாரதி. பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளால் தொடர்ந்து பெண்கள் சமூகம் படுகுழிக்குள் தள்ளப்பட்டு இருக்கிறது. ஏனென்றால் இங்கு கற்பும் ஒழுக்கமும் பெண்களுக்கு மட்டுமே போதிக்கப்படுகிறது. இந்த ஒழுக்க நெறியில் இருந்து ஆண்கள் பிறழ்ந்து போனால் அவனுக்கு ஏற்பட்ட போதை தெüய நம் சமூகம் தண்ணீர் தெüத்து ஏற்றுக் கொள்கிறது. ஆண்கள் தவறு செய்தால் போதை; பெண்கள் தவறி விழுந்தால் அவர்களுக்கு போதனை என்ற வகையில் நம் சமூகம் தவறான எண்ணங்களால் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. டெல்லியில் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட நிர்பையா, பொள்ளாச்சியில் காமப் பிசாசுகளுக்கு பலியான பெண்கள், இன்று பாண்டிச்சேரியில் ஒன்பது வயது சிறுமிக்கு எதிராக நடந்த பாலியல் வன்புணர்வு என்று பெண்களுக்கு உடலளவிலும் மனதளவிலும் தொடர்ந்து வன்முறைகள் நடந்து கொண்டே வருகின்றன.

2018 ஆம் ஆண்டில் 33,977 கற்பழிப்பு வழக்குகளை போலீசார் பதிவு செய்துள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் புள்ü விவரங்கள் காட்டுகின்றன. சமூகத்தில் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கும் சாதி இனக் கலவரத்தில் கூட பெண்கள் தான் வன்முறைக்கு இரையாக்கப்படுகிறார்கள்.

மணிப்பூரில் கொழுந்து விட்டு எரிந்த இனக் கலவரத்தில் இரண்டு பெண்களை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதோடு அதில் ஒருவரை கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்து வீதிகüல் நிர்வாண ஊர்வலம் நடத்திய பிறகும் எப்படிச் சொல்ல முடிகிறது நாங்கள் பாரத மாதாவின் புதல்வர்கள் என்பதுதான் நமக்குப் புரியவில்லை. காலம் காலமாக நாம் கட்டிக் காத்த பண்பாட்டு நதியின் புனிதத்தைக் கெடுத்துவிட்டது இன்றைய நுகர்வுக் கலாச்சாரம். பல கொடிய காமப் பிசாசுகüன் பசிக்கு பிஞ்சுக் குழந்தைகள் இரையாகும் அவலம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

இன்னொரு புறம் கள்ளக்காதலுக்காக தான் பெற்ற குழந்தையையும் கணவனையும் கொன்றுவிட்டு ஓடும் அவலங்களும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. திருமணம் செய்து கொள்ளாமல் குடும்பம் நடத்தும் ‘லிவிங் டு கெதர்’ (Living to gather) கலாச்சாரமும் மனைவிக்கு அடுத்த நிலையாக ‘பெஸ்டி’(Besti) என்று ஒரு உறவை ஏற்படுத்திக் கொள்வதும் நம் முன்னோர்கள் வரையறுத்த இல்லறத்திலிருந்து தவறி வெறும் சதைப் பிண்டங்களாக இவர்கள் பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதைத் தான் காட்டுகிறது. சங்க இலக்கியமான ஐங்குறுநூற்றில் புலவர் பேயனார் எழுதிய ஒரு அழகான பாடல் உண்டு. ஒரு எüமையான வீட்டில் கணவன், மனைவி மற்றும் குழந்தை என்று மூன்று பேர் உள்ளார்கள். காதலும் மழலை இன்பமும் அவர்கüடம் துள்ü விளையாடுகிறது. இரவு உணவுக்குப் பிறகு அவர்கள் உறங்கப் போகிறார்கள். அப்போது கணவன் பாசத்துடன் தன் குழந்தையை அணைத்துக்கொண்டு படுத்திருக்கிறான். இனிய மொழிகளைப் பேசக்கூடிய மனைவியோ தன் கணவனையும் குழந்தையையும் சேர்த்து அனைத்தபடி பாசத்தோடு படுத்திருக்கிறாள். இந்த இனிய காட்சிக்கு ஈடாக இந்த உலகத்தையே பரிசாகக் கொடுத்தாலும் ஈடாகாது.

“புதல்வற் கவைஇயினன் தந்தை; மென்மொழிப்

புதல்வன் தாயோ இருவரும் கவைஇயினள்

இனிது மன்ற அவர் கிடக்கை

நனி இரும் பரப்பின் இவ் உலகுடன் உறுமே”

(ஐங்குறுநூறு -பாடல் எண் - 409)

என்று கரை படாத காதலைச் சொல்கிறது இலக்கியம். இன்று காமம் என்ற சிற்றின்பத்திற்காக அன்பு என்ற பேரின்பத்தை மறந்து விடுகிறார்கள்.

பெண் சுதந்திரம் தேவைதான். ஆனால் கட்டுப்பாடு களைக் களைந்தால் அதற்குப் பெயர் சுதந்திரம் அல்ல; வரம்பு மீறுதல் என்றாகிவிடும். கரை புரண்டு ஓடும் காட்டாற்று வெள்ளம் கூட இரண்டு கரைகளுக்கு நடுவே ஓடினால் தான் அது ஆறு என்று அழைக்கப் படுகிறது. சுழற்றி அடிக்கும் சூறாவüக்காற்று கூட மூங்கில் துளைக்குள் நுழையும் போது தான் அது இசை யாக மாறுகிறது. பெண்கள் தங்கüன் தற்காப்புக்காக போட்டுக் கொள்கிற வளையம் தான் அவர்கüன் சுதந்திரம் வெற்றி பெறக் காரணமாக அமைகிறது. பெண்களுக்கான முழு உரிமையும் கிடைக்கப்பெற்றால் மட்டுமே அது பெண் சுதந்திரம் ஆகும்.

ஆனால் உரிமைகளைப் புறந்தள்üவிட்டு வெறும் சலுகைகளுக்காக மட்டுமே பெண்கள் சமூகம் கொக்கரித்துக் கொண்டிருக்கிற சூழல் உருவாகி இருக்கிறது. பாலியல் சமத்துவத்தால் மட்டுமே முழுமையான பெண் சுதந்திரத்தைப் பெற முடியும். முறத்தால் புலியைத் துரத்திய பெண், நீதிக்காக அரசனையே எதிர்த்து குரல் கொடுத்த கண்ணகி, நெல்லிக்கனியால் நட்பு பாராட்டிய ஔவையார், சத்தியவானின் உயிரை மீட்ட சாவித்திரி என்று விரல் விட்டு எண்ணக்கூடிய பெண்களை உதாரணமாகக் காட்டி பெண்கள் சமூகம் வளர்ந்து விட்டது என நம்ப வைத்து குருட்டு சமாதானம் செய்து வைத்திருக்கிறார் கள். இன்றைக்கும் பெண்கள் பேருந்தோ ஆட்டோவோ ஓட்டினால் அதிசயமாகப் பார்க்கும் உலகத்தில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பெண்கள் பல்வேறு துறைகüல் பரிணமித்து வந்தாலும் அதை ஆச்சரியமான கண்ணோட்டத்தில் பார்க்கும் மனநிலையில் தான் இந்த சமூகம் பழகி இருக்கிறதே தவிர இயல்பான கண்ணோட்டத்தில் பார்க்க முடிவதில்லை.

அனைத்து துறைகüலும் பெண்கüன் பங்கீடு ஆணுக்கு இணையாக அதிகரிக்கும் போது சமூகத்தில் பெண்களைப் பற்றிய பார்வை மாறுபடலாம். வெறும் அழகுப் பதுமைகளாக சித்தரிக்கப்பட்ட பெண்கள் சிறந்த ஆளுமைகளாக வலம் வரும்போது அவர்களுக்கான இட ஒதுக்கீடும் கொடுக்கப்பட வேண்டும். பெண்கüன் கூந்தலைப் போலவே 33 சதவீத இட ஒதுக்கீடும் பின்னாலேயே இருக்கிறது. சட்டமன்றம், மற்றும் நாடாளுமன்றத்தில் 33 சதவீத இட ஒதுக்கீடு அறிவித்த பிறகும் மக்களவையிலும் நடைமுறையிலும் நிறைவேற்றப்படாத சாத்தியமற்ற நிலைதான் நிலவுகிறது. அரசியலில் பெண்கüன் பிரதிநிதித்துவத்தில் பெரிய முன்னேற்றம் இல்லாமல் போனதற்கு காரணம் அரசியலில் உள்ள ஆணாதிக் கமே ஆகும். 2013 ஆம் ஆண்டு மே மாதத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் பெண்கள் நிலைகுறித்து ஆராய ஒரு குழு அமைத்தது.

உள்ளாட்சி அமைப்புகள், மாநில சட்டப்பேரவைகள், நாடாளுமன்றம் அமைச்சர்கள் மற்றும் அரசாங் கத்தின் அனைத்து முடிவெடுக்கும் அமைப்புகüலும் பெண்களுக்கு குறைந்தபட்சம் 50 சதவீதம் இட ஒதுக்கீடு அüக்க வேண்டும் எனப் பரிந்துரைத்தது.

ஆனால் 2015 ஆம் ஆண்டில் இந்தியாவில் பெண்கüன் பிரதிநிதித்துவ நிலை மோசமாக இருந்ததாக அறிக்கையில் வெüயானது. பெரும்பாலான மாநிலங்கüல் பஞ்சாயத்து அளவில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு கொடுத்தாலும் பெண்கள் ரப்பர் ஸ்டாம்ப்புகளாகவோ பினாமிகளாகவோ பயன்படுத்தப்படுகிறார்கள் என்பது தான் உண்மை. ஆனால் பஞ்சாயத்து முதல் பாராளுமன்றம் வரை பெண்கüன் குரல் ஒலித்தால்தான் அது முன்னேற்றத் திற்கான முழு அடையாளமாக இருக்கும். அரசியலில் பெண்கüன் பிரதிநிதித்துவம் குறைவாக உள்ள நாடுகüல் இந்தியாவும் ஒன்று.

இந்தியாவில் பெண்கள் பல்வேறு நிலைகüல் ஆண்களை விட பின்தங்கியுள்ளனர். இந்திய தேர்தல் ஆணையத்தின் புள்üவிவரத்தின்படி 2021 ஆம் ஆண்டில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கüல் 10.5% மட்டுமே பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்டை நாடுகளான பாகிஸ்தானில் கூட 20 சதவீதமும் நேபாளத்தில் 34 சதவீதமும் பெண்களுக்கு கொடுத்தி ருப்பதைப் பார்க்கும் பொழுது இந்தியாவில் பெண் கüன் பிரதிநிதித்துவம் அடிமட்டம் தான். தந்தை அல்லது கணவன் என்ற ஆணின் கைப்பாவைகளாகவே பெண்கள் இயக்கப்படுகிறார்கள் என்பது வேதனைக் குரியது. பெண்களுக்கான நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தொகுதிகüல் மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கீட்டை கட்டாயமாக்கும் சட்டம் இருந்தாலும் பாலின சமத்துவத்தை மனதளவில் கொண்டு வந்தால் தான் பெண்கüன் முன்னேற்றம் சாத்தியமாகும்.

2024 மக்களவைத் தேர்தலில் பாமக 30 சதவீதம் மகüருக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறது. அவர்கள் போட்டியிடும் 10 தொகுதிகüன் வேட்பாளர்கüல் மூவர் பெண்கள். நாம் தமிழர் கட்சியில் போட்டியிடும் 40 வேட்பாளர்கüல் 20 வேட்பாளர்களை பெண் களாக நிறுத்தி பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு அüத்திருக்கிறார்கள். திமுக தன் 21 வேட்பாளர்கüல் மூவரைப் பெண் வேட்பாளர்களாக நிறுத்தியிருக்கிறது. காங்கிரஸ் 10 தொகுதிகüல் ஒரு பெண் வேட்பாளரை யும் பாஜக 24 தொகுதிகüல் மூன்று பெண் வேட்பாளர் களையும் அதிமுக 32 தொகுதிகüல் ஒரு பெண் வேட்பாளரையும் நியமித்திருக்கிறது. தமிழகத்தில் மொத்தம் உள்ள 39 மக்களவைத் தொகுதிகüல் 950 பேர் போட்டியிடுகின்றனர். இதில் 874 பேர் ஆண்கள்; 76 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

“பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்

எட்டு மறிவினில் ஆணுக்கிங்கே பெண்

இளைப்பில்லை காணென்று கும்மியடி”

என்று பாரதி பெண்ணுரிமை பாடிய தேசத்தில் பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு எட்டாக்கனியாக இருக்கும்போது 50 சதவீத இடஒதுக்கீடு கனவாகத் தான் இருக்கிறது. பாலின சமத்துவம் இல்லாத நாட்டில் பெண்கüன் முன்னேற் றம் வெறும் சவாலாகவே உள்ளது. 2022 ஆம் ஆண்டுக்கான பாலின இடைவெü அறிக்கையின்படி 146 நாடுகüல் இந்தியா 135 வது இடத்தில் பின் தங்கிய நிலையில் தான் இருக்கிறது. பாலின சமத்துவம் ஏற்பட இன்னும் 132 ஆண்டுகள் ஆகும் என்ற அதிர்ச்சி தகவலையும் அறிக்கைகள் வெüயிட்டுள்ளன.

தற்போது இந்தியாவில் பாலின வேறுபாடு 68 சதவிகிதமாக இருக்கிறது. ஆரோக்கியத்தில் இந்தியா 146 ஆவது இடத்திலும் பெண்களுக்கான பொருளாதார பங்கெடுப்பு மற்றும் வாய்ப்புகüல் 142 ஆவது இடத்திலும் கல்வி பெறுதலில் 107-ஆவது இடத்திலும் அரசியல் அதிகாரத்தில் 48 ஆவது இடத்திலும் இந்தியா உள்ளது. பெண்களுக்கான அரசியல் அதிகாரம் பெறுவதில் இந்தியா தோல்வியைத் தான் தழுவியிருக்கிறது. குடும்பம், கல்வி, பொருளாதாரம், அரசியல் மற்றும் சமூகம் என எல்லா தளங்கüலும் பெண்கள் கிள்ளுக்கீரைகளாகவே பயன்படுத்தப்படுகிறார்கள். பெண் சுய உதவிக் குழுக்களும் வளர்ந்து வரும் பெண் தொழில் முனைவோரும் ஆண்கüன் சர்வாதிகாரம் என்ற மூளையின் கட்டுப்பாட்டில் தான் இயங்குகிறார்கள்.

பெண்களைக் கவர்ச்சிப் பண்டமாக பார்க்காமல் ஒரு மனித உயிராகப் பார்க்கும் நிலை உருவாக வேண்டும். ‘எல்லா வீட்டிலும் குழந்தைகள் பிறக்கி றார்கள். ஆனால் நம் வீட்டில் மட்டும் தான்

அவர்கள் ஆணாகவும் பெண்ணாகவும் பிறக்கிறார்கள்’

என்று வேதனைப்பட்டான் ஒரு புதுக்கவிஞன்.

அரசியல் அதிகாரம் பெண்களுக்கு கிடைக்குமா? என்று பார்ப்பதற்கு முன்னால் குடும்பத்தில் அங்கீகாரம் ஒவ்வொரு பெண்ணுக்கும் கிடைத்துவிட்டால் வெற்றிக்கான பாதையை அவர்களால் வகுத்துக் கொள்ள முடியும். அன்னையர் தினம், மகüர் தினம் மற்றும் பெண் குழந்தைகள் தினம் என்று தினங்களை மட்டுமே கொண்டாடும் கலாச்சாரம் உருவாகி உள்ள சூழலில் பெண்களை என்று நாம் கொண்டாடப் போகிறோம்?

ஆங்கிலேயனின் அடிமைச் சங்கிலியை உடைத்து இந்தியாவுக்குக் கூட சுதந்திரம் வாங்கி கொடுத்தாகிவிட்டது. ஆனால் நூற்றாண்டுகளைக் கடந்த பின்பும் பெண்கüன் கைகüல் கட்டப்பட்டே இருக்கிறது அடிமைச்சங்கிலி. கூலிக்கு மாரடிக்கும் சமூகத்தில் பெண்ணுரிமையும் பெண் சுதந்திரமும் வெறும் ஏட்டுச் சுரக்காய் தான். ஒவ்வொரு முறையும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கு நீதிமன்றத்தில் தீர்ப்புகள் தரப்படுகின்றன. ஆனால் தீர்வுகள் இன்னும் கேள்விக்குறியாய் வளைந்தே நிற்கிறது. விடை கிடைக்கும் வரை பெண்களுக்கான நீதியைத் தேடிய நெடும் பயணம் தொடரும்