லகப் புகழ் பெற்ற அங்கோர்வாட் கோயில் அமைந்துள்ள கம்போடியா நாட்டின் சியம் ரீப் நகரில், கம்போடியா சியாம்ரீப் மாநில கலை மற்றும் பண்பாட்டுத் துறை, அங்கோர்வாட் தமிழ்ச் சங்கம், வி.ஜி.பி. உலகத் தமிழ்ச்சங்கம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், பன்னாட்டுத் தமிழர் நடுவம் ஆகிய அமைப்புகள் இணைந்து உலகத் திருக்குறள் மாநாட்டை செப்டம்பர் 29, 30 ஆகிய இரு நாள்கள் மிகச் சிறப்பாக நடத்தின.

இவ்விழாவின் தொடக்க நிகழ்வாக முதல் நாள் காலையில் கம்போடிய அரசின் கலை மற்றும் பண்பாட்டுத் துறை அமைந்த தலைமைச் செயலக அரசு வளாகத்தில் வி.ஜி.பி. உலகத் தமிழ் சங்கத் தலைவர் வி.ஜி. சந்தோசம், கொடையாக வழங்கிய திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டது.

d

திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவிற்கு கம்போடியா அரசின் கலை மற்றும் பண்பாட்டுத் துறை இயக்குநர் மோர்ன் சொப்பீப் தலைமை வகிக்க, சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதியரசர் வள்ளிநாயகமும் புதுச்சேரி மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் சந்திர பிரியங்காவும் முன்னிலை வகித்தனர். வி.ஜி.பி. உலகத் தமிழ்ச்சங்கத் தலைவர் வி,ஜி. சந்தோசம் சிலையைத் திறந்து வைத்தார்.

உலகத் திருக்குறள் மாநாடு, முறைப்படி டிராகன் ராயல் நட்சத்திர விடுதியில் அமைக்கப்பட்ட மாநாட்டு அரங்கத்தில் காலை 10 மணி அளவில் கம்போடியா நாட்டின் பாரம்பரிய நடனத்துடன் தொடங்கியது.

முதல் நிகழ்வாக என்னைச் செதுக்கிய குறள் என்ற தலைப்பில் சொல்லரங்கம் தமிழிசை வேந்தர் டி.கே.எஸ்.கலைவாணன் தலைமையில் நடைபெற்றது. முனைவர் உலகநாயகி பழநி, தொடக்கவுரை ஆற்ற, பாவலர் கருமலைத்தமிழாழன், கவிதாயினி ஓசூர் மணிமேகலை, தஞ்சாவூர் கவிஞர் சுப்பராயலு, திருச்சி த.வானதி, சேலம் விசயகுமார் ஆகியோர் உரையாற்றினார்கள்.

*

முதல் நாள் மாலை நிகழ்ச்சியாக திருக்குறள் நேற்று இன்று நாளை என்ற தலைப்பில் பாவலர் கருமலைத்தமிழாழன் தலைமையில் கவியரங்கம் நடைபெற்றது.

பேரா.முனைவர் கு.வணங்காமுடி, கவிஞர் இதயகீதம் இராமாநுசம், கவிஞர் கவிரிசி மகேசு, கவிஞர் ந.கருணாநிதி, கவிதாயினி சத்யசாந்தி, கவிதாயினி மகேசுவரி ஆகியோர் கவிதை வழங்கினர்.

Advertisment

ff

முதல் நாள் மாலை இரண்டாம் நிகழ்ச்சியாக வாழ்த்தரங்கம் சென்னை உயர்நீதி மன்ற மேனாள் நீதியரசர் வள்ளிநாயகம் தலைமையில் நடைபெற்றது. அங்கோர்வாட் நகரில் திருக்குறள் மாநாடு நடைபெற முக்கியப் பங்காற்றிய அங்கோர்வாட் தமிழ்ச்சங்கத் தலைவர் சீனுவாச ராவ், செயலாளர் ஞானசேகரன், பொருளாளர் தாமரை சீனுவாச ராவ், துணைத்தலைவர் இரமேசுவரன், வி.ஜி.பி. உலகத் தமிழ்ச்சங்கத் தலைவர் வி.ஜி.சந்தோசம், பன்னாட்டுத் தமிழர் நடுவம் அமைப்பாளர் திருத்தணிக்காசலம், கம்போடியா நாட்டுக் கலை, பண்பாட்டு பண்பாட்டுத் துறை இயக்குநர் மோர்ன்சொப்பீப் ஆகியோரை வாழ்த்திப் புதுச்சேரி சுற்றுலாத்துறை அமைச்சர் சந்திரா பிரியங்கா, நீதியின் குரல் ஆசிரியர் சி.ஆர்.பாசுகரன், மல்லை சத்யா, விஜிபி தமிழ்ச்சங்க இணைச்செயலாளர் விஜிபி.இராசா தாசு, முனைவர் கு.வணங்காமுடி ஆகியோர் உரையாற்றினர்.

*

இரண்டாம் நாள் காலை நிகழ்ச்சியாக திருக்குறள் பற்றிய ஆய்வுக் கட்டுரைகள் கருத்தரங்கம் அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் முனைவர் பெரியண்ணன் தலைமையில் நடைபெற்றது. முனைவர் வாசுகி, முனைவர் நீலகேசி, முனைவர் கவிதா, முனைவர் மணிமேகலை, முனைவர் மெய் சித்ரா, மலேசியா கோமதி, முனைவர் மகேசுவரி, முனைவர் கு.சின்னப்பன், உள்ளிட்டோர் தங்களின் ஆய்வுக் கட்டுரைகளை வாசித்தார்கள்.

*

இரண்டாம் நாள் மாலை நிறைவு விழா விஜி.சந்தோசம் தலைமையில் நடைபெற்றது.

அங்கோர்வாட் தமிழ்ச்சங்கத் தலைவர் சீனுவாச ராவ் வரவேற்புரை நிகழ்த்தினார். கம்போடியா நாட்டு ஆய்வாளர் தங்ரூ, கெமர் மொழியில் மொழிபெயர்த்த திருக்குறள் (நூலை சென்னை செம்மொழி நிறுவனம் வெளியிடுகிறது.

அந்நூலைக் காணொலி வாயிலாக இந்திய ஒன்றிய அரசின் தலைமை அமைச்சர் மாண்புமிகு நரேந்திர மோடி வெளியிட இருப்பதையும், கெமர் மொழியில் நூலை உருவாக்கியதைப் பற்றியும் செம்மொழி நிறுவன இயக்குநர் முனைவர் சந்திரசேகர் காணொலி வாயிலாகத் தெரிவித்து மாநாட்டிற்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார். மாநாட்டு மலரை சந்தோசம் வெளியிட இயக்குநர் மோர்ன் சொப்பீப் பெற்றுக்கொண்டார். மாநாட்டில் பங்கு கொண்ட திருக்குறளுக்கு உரை எழுதிய தமிழறிஞர்களுக்கும், ஆய்வுக்கட்டுரைகளை வழங்கிய ஆய்வாளர்களுக்கும் கம்போடியா அரசின் விருதுகளை இயக்குநர் வழங்கினார். திருக்குறளை கெமர் மொழியில் மொழிபெயர்த்த தங்ரூவுக்கு சிறப்பு செய்யப்பட்டது. மாநாட்டின் நிறைவாக கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1 இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கெமர் மொழியில் மொழிபெயர்த்த திருக்குறள் நூலை வெளியிடுவதற்கு நன்றி தெரிவித்தும்,

2 தெற்காசிய நாடுகளில் உள்ள அனைத்து நாடுகளின் தாய்மொழிகளிலும் திருக்குறளை மொழிபெயர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், 3 கம்போடியாவில், அரசு அளிக்கும் நிலத்தில் இராசேந்திர சோழனுக்குச் சிலை நிறுவவேண்டும் என்றும், 4. இந்திய, கம்போடியா உறவை மேலும் வலுப்படுத்தவும், வரலாற்று ஒற்றுமைகளை உலகிற்குத் தெரியப்படுத்தவும் வேண்டுமென்றும், 5. கம்போடியாவில் திருவள்ளுவர் சிலை அமைக்க உதவிய வி.ஜி.பி உலகத் தமிழ் சங்கத்தின் தலைவர் சந்தோசத்துக்கும் சிலை அமைக்க இடம் அளித்த கம்போடிய அரசுக்கும், கலை மற்றும் பண்பாட்டுத் துறையைச் சேர்ந்த இயக்குநர் மோர்ன் சொப்பீப்புக்கும் நன்றி தெரிவித்துத் தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

கடல்கடந்து குறளையும் தமிழையும் உயர்த்திப்பிடித்திருக்கிறார்கள், தமிழின் காதலர்கள்.