அவள் சுமக்கும் சிலுவைகள் ஓராயிரம். தினம் தினம் அவளின் முதுகில் சுமத்தப்படுகின்ற சிலுவைகளில் அறையப்படுகிறாள். ஆனாலும் தனக் குத்தானே உயிர்த்தெழுதல் வழங்கிக் கொள்கிறாள்.
தனக்குத்தானே உயிர்ப்பும் உயிர்த்தலும் வழங்கிக்கொள்கிறாள். இத்தனை வளர்ச்சியும் தொழில்நுட்ப முன்னேற்றமும் செலுமையும் உள்ள இந்தக் காலகட்டத்திலும்கூட அவள் சிலுவைகள் சுமப்பதாகச் சொல்லுவது கட்டுக்கதை. நம்பமுடியாத புனைகதை என்று இளக்காரமாகச் சிரித்துவிட்டுச் செல்பவர்களும் இருக்கிறார்கள். அப்படி உதட்டோரச் சிரிப்போடு உலா வருபவர்களுக்குப் பெரிய வணக்கம். பெண்ணின் வலிகளை உணரும் பக்குவம் விரைந்து பெறவும் வாழ்த்துகள்.
அவளின் பாடுகள் பலவகை. அவளின் ரணங்கள் பலவகை. அவளின் தழும்புகள் பலவகை. அவளின் தவிப்புகள் பலவகை. வெளிப்பார்வைக்கு இயல்பாக மூச்சு விடுகிறாளெனத் தோன்றலாம். வெளிப்பார்வைக்குச் சிரித்து வளைய வருபவளாகத் தோன்றலாம். வெளிப்பார்வைக்குச் சிக்கல்கள் ஏதுமற்ற வாழ்க்கை வாழ்வதற்கான வரம் வாங்கி வந்தது போலவும் தோன்றலாம்.
ஆனால் அவளின் பாடுகளைப்பட்ட வர்த்தனமாகச் சொல்ல உலகமொழி தெற்குமே வல்லமை கிடையாது. "எனக்கு மனசு வலிக்கிறது'' என்று மட்டும்தானே வார்த்தைகளால் சொல்லமுடியும். எவ்வளவு நீளமாக வலிக்கிறது? எவ்வளவு ஆழமாக வலிக்கிறது? எவ்வளவு அகலமாக வலிக்கிறது? எவ்வளவு மடங்கு அடர்த்தியில் வலிக்கிறது? இதையெல்லாம் அளக்கும் கருவியும் கிடையாது. தொழில்நுட்பமும் கிடையாது.
அவள் இருக்கிறாள்லி வலியோடு. அவள் நடக் கிறாள்லி வலியோடு. அவள் கடக்கிறாள் வலியோடு. அவள் பாடுகிறாள் வலியோடு. அவள் ஆடுகிறாள்லி வலியோடு. அவள் ஓடுகிறாள்லி வலியோடு. அவள் கூடுகிறாள் வலியோடு. அவள் பெரிய மனுஷி ஆகிறாள் வலியோடு. அவள் திருமணம் செய்து கொள்கிறாள் வலியோடு. அவள் புணரப்படுகிறாள் வலியோடு.
அவள் குழந்தைகள் பெறுகிறாள் வலியோடு. அவள் குடும்பம் உருவாக்குகிறாள் வலியோடு. அவள் இறுதிமூச்சுவரை சறுக்குகிறாள் வலியோடு. அவள் செத்துப்போகிறாள் வலியோடு.
அவள் உள்மூச்சும் வலியின் மூச்சு. அவள் வெளிமூச்சும் வலியின்மூச்சு. அவள் மௌனமும் வலியின் மொழி.
அவள் வார்த்தையும் வலியின் மொழியே.
அவள் மறுப்பும் வலியின் மொழியே.
அவள் விருப்பும் வலியின் மொழியே.
அவள் காதலும் வலியின் மொழியே
அவள் காதலின்மையும் வலியின் மொழியே.
அந்த மிருக விழிகளை அறிவேன் எளிது/ எல்லாமே எளிது/ அவற்றுக்கு/
தலையணையருகே ரூபாய் நோட்டுகளைப் போட்டு திருடியாக்குவதும் குளிர் நடுக்கத்தைக் கூடக் கோழைத்தனம் என்பதும் நானறிந்த ரகசியங்களைப் பொய்யாக்க வென்று எனக்குப் பைத்தியமெனச் சொல்வதும் வாசல் படியிலமர்ந்து எனக்கு நானே புண்ணகைப்பதால் விபச்சாரியென்பதும் எளிது மிக எளிது மலையுச்சி/ தடுமாறும் என்தால்களை கிடறிவிட்டு அதைத் தற்கொலை என்பதுகூட உமா மகேஸ்வரி இந்தக் கவிதைக்கு "எளிது' என்று தலைப்பு தந்திருக்கும் எள்ளல் புரிகிறதா? கற்பனைக் கெட்டாத மாபாதகங்கள்கூட மனிதர்களுக்கு எளிதாகக் கைவரப் பெறுகிறது. ஆனால் அவளின் மனசை உணர்வதும். அவளின் அழகியல் ரசனையை உணர்வதும், அவளின் மெல்லியில் ஆளுமையை உணர்வதும் அவர்களுக்கு வாய்க்கப் பெற வில்லை. உணர்வதற்கான முன்னெடுப்பையாவது அந்த நல்லவர்கள் ஏற்படுத்திக் கொள்ளட்டுமே என்கிற உந்துதல்தான் "எளிது' கவிதையின் அடிநாதம்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/andal1_1.jpg)
"பாருங்கள். பாருங்கள். உங்களின் இயல்பாக இதையெல்லாம் உணர்கிறேன். கொஞ்சம் சீரமைத்துக் கட்டமைத்துக் கொள்ளுங்கள். செய்தால் வாழ்க்கை சுவாராஸ்யமாக இருக்கும். கொடுமைகளும் கடுமைகளும் அற்றதாக இருக்கும். செய்வீர்களா?'' இந்தத் தொனிதான் அடிநாதமாக ஒலிக்கிறது.
இல்லற வலிகள் தாண்டி இலக்கிய வலிகளும் அவளுக்கு உண்டு. எழுத்துக்கும் இலக்கியப் படைப்புக்கும், சிந்தனைக்கும், அவளுக்கும் தொடர்பே இல்லை. சம்பந்தமேள இல்லை. தொப்புள் கொடி உறவே இல்லை என்று விலக்கி வைத்த சமூகம்தான் அவளிடம் இப்போது சொல்கிறது. "நீ எழுதுவதில் இலக்கியம் இருக்கிறதா?'' என்று. "உன் பேஸ்ட்டில் உப்பு இருக்கி றதா?'' என்று ஒலி வாங்கியோடு அலையும் கும்பலைப் போலவே பெண் எழுத்தில் இலக்கியம் இல்லை என்று சொல்லும் கும்பலும் காணக்கிடைக்கிறது. அதனால்தான் பெருந்தேவி "என்னைப் பார்த்து அவர்கள் கேட்பதுண்டு'' என்கிறார்.
நீங்கள் எழுதுவதில்
கவித்துவம் இல்லையே
கவிதைக்கான சொற்கள் இல்லையேv கவிதை மாதிரி இல்லையே
எளிமையாக இருக்கிறதே
எப்படி கவிதை என்கிறீர்கள்v ஒவ்வொரு முறையும்
இந்தச் சாம்பல் கேள்விகளை
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/andal_7.jpg)
என்னிடம் கேட்கும்போது
மூச்சை நன்றாக உள்ளிழுக்கிறேன்
கண்ணை மூடிக்கொள்கிறேன்
என் காதுகளுக்குள்
இறந்த கவிஞர்கள் சிலர்
சிரிக்கிறார்கள்
பின் மெதுவாகக்
கண் திறந்து பார்க்கிறேன்
கேட்டவர்கள் மறையவில்லை
ஆனால் ஒவ்வொரு முறையும்
இதைச் செய்கிறேன்
அற்புதத்தை எதிர்பார்க்காதவர்கள்
இங்கே யார் இருக்கிறார்கள்?
அவர்கள் கேட்ட கேள்விகள் இப்போது சாம்பல் கேள்விகள் என்கிறார் பெருந்தேவி. அந்த அளவுக்குக் கேள்விகள் முற்றமுழுக்க எரிந்து சாம்பலாக விடுகிறார். அது எரிதலைப பற்றியோ, எரித்தலைப் பற்றியோ பொருட்படுத்தாமல், மூச்சை நன்றாக உள்ளிழுத்துத் தன்னைத் தானே ஆசுவாசப் படுத்திக் கொள்ளும் உத்தியை பெருந்தேவி கையாள்கிறார்.
ஒரு தூக்குக் கயிறென
தேங்காய்ச் சில்லு
தொங்கிக் கொண்டிருக்கும்
மரணத்தின் கூண்டுக்குள்
இரவெல்லாம் அல்லாடிக்
கொண்டிருந்த எலியொன்று
இப்போது
திறந்து விடப்படுகிறது
ஒரு கயிற்றுச் சாக்குக்குள்
உயிரைக் கையில் பிடித்தபடி
ஓடுகிறது எலி
சாவிலிருந்து சாவுக்குள்
என்பதாக வைகறை சொல்லுவது அவளுக்குப் பெரும் பொருத்தம். அவளுடைய எல்லா விடியலும் ஒரு மரணசாசனத் திலிருந்து மறு மரண சாசனத் துக்குத்தான்.
வாசிக்கவும், இசைக்கவும், பாடவும், ஆடவும், நாடக நிகழ்த்துக் கலை ரசனையாளராகவும், காடு பார்க்கவும், கடல் பார்க்கவும் ஆர்வம் கொண்ட சகோதரி இப்போது எப்படி இருக்கிறாள்? என்பதை தஸ்லீமா நஸ்ரீன் "அதற்குப் பிறகு'' என்று சொல்கிறார்.
இப்போது என் சகோதரியின்
கவிதை நோட்டில்
பசுமை நிறைந்த
காய்கறிக் கணக்கு எழுதப் பட்டிருக்கிறது
இப்போதெல்லாம்
அரசியல் பற்றிச் சிந்திப்பதில்லைv என அவள்
பெருமையுடன் சொல்கிறாள்
அவளது சிதாரில்
புழுதி படிந்துவிட்டது
அவளது தம்புரா
எலி வலையாகிவிட்டது
அவள் இப்போது
கடைகளுக்குச் செல்லும்
நேர்த்தியான வாடிக் கைக்காரி
ஆகிவிட்டாள்
வீட்டுக்கு அவள்
மதிய சாப்பாட்டைச் சேமித்து வைக்கப்
பீங்கான் பாத்திரங்கள்
வாங்கி வருகிறாள்
மேலும்
புத்தம் புதிய மீன்வகைகள்
விலையுயர்ந்ததாகத் தோற்றம் தருகிற
படுக்கை விரிப்புகளும்
வாங்கி வருகிறாள்
"அதற்குப் பிறகு'' என்பது எப்போது நிகழ் கிறது? எல்லாப் பொழுதும். ஒவ்வொரு நொடியுமே அவளைக் குப்புறத் தள்ளும் வாழ்வியலில். அவள் பசுமைவெளியைக் கனவு காண்பாள். பாலை வெளியில் குப்புறத் தள்ளப்படுவாள். அவள் சிகரத்தைக் கனவு காண்பாள். அடிவாரத்தில் நசுக்குப் படுவாள். அவள் சிறகு விரித்துப் பறக்கக் கனவுகாண்பாள். அவளுடைய சிறகுகள் முறிக்கப்பட்டு முடமாக்கப்படுவாள். இப்படியான வாழ்க்கைச் சூழலை தினசரி அட்டவணையாக சுவீதரிக்கும் அவள்லி சகலத்தை யும் புறம் தள்ளுகிறாள் கவிதையாக. கதையாக, புன்னகையாக. அப்புறம் அவள்லி உரக்கக் கேட்கிறாள் சமூகத்திடம். ஒரு கேள்வி ஒலிக்கிறது. அந்தக் கேள்விக்கான பதில் எங்கே என்று உலகத்தின் எல்லாக் காதுகளிலும் நுழைகிறது. "எது கம்பீரம்?' என்கிற கேள்விக்கு வழமையான கனாதனச் சிந்தனையாளர்கள் ஆண் மைய பதிலுரைக்கலாம். ஆனால் அவள் எதிர்பார்ப்பது அதுவா? இல்லை. இல்லை. இல்லை.
கம்பீரம்
அது உன் குறி விறைப்பில்
என்பது பொய்
சிலவற்றைச் செய்தும்
சிலவற்றைச் செய்யாமலும்
நிகழ்த்தல் அது
கூட்ட நெரிசலில் இடிக்காது நிற்றல்
ஒரு பெண்ணிடம் மன்னிப்பு கேட்கையில்
ஆண்மைக் குறைவை உணராதிருத்தல்
உன் சாப்பாட்டை நீயே பரிமாறிக்கொள்ள
தயங்காதிருத்தல்
பார்க்கும் முலைக்குள் எல்லாம்
உன் மூடியைப் புதைக்காதிருத்தல்
எத்தனை எளிய வார்த்தைகள் இவை
உருவற்ற மண்ணுலகில்
ஒளி தோன்றுக என்ற ஒற்றை அறிவிப்பில்
ஒளியைத் தோன்ற வைத்த கடவுள்
ஏன் உருவாக்கிய ஆணிடம்
கம்பீரம் தோன்றுக
எனக்
கடைசிவரை கூறவேயில்லை?
எது கம்பீரம் என்பதற்கு அவளின் எதிர்பார்ப்பாக இருப்பது இதுதான். குர்ஆன் திருவாசகமாக நபி (ஸல்) கூறுகிறார்கள். "உங்களில் சிறந்தவர் யார் என்றால், யார் தன் மனைவியிடம் சிறந்தவரோ அவரே'' இந்த இறைவாசகம் போன்றதுதான் அவளின் எதிர்பார்ப்பும். அவளிடம்லி கம்பீராக இருத்தலும், புரிதலுடன் இருத்தலும், அவமதிக்காமல் இருத்தலும் அனுசரணையாக இருத்தலும், வலி வார்த்தைகள் இல்லாமல் இருத்தலும் என அந்தப் பட்டியில் மிக நீளமானது.
இனிவரும் வலிப் பொழுது அவளுக்கானது மட்டுமல்ல. இல்லறம் என்னும் இரு பக்கத் தராசில் அவளும் அவனும் என இருக்கிறார்கள். ஆனால் வயிறு திறக்காத சோதனைக்காத் தண்டனை பெறுவதும், பழிச்சொல் பெறுவதும் அவளுக்கானதாக இருக்கிறது. அதன் வலியும், ரோதனையும், வேதனையும் அவளை முறித்துப் போடுகிறது. அரிந்து போடுகிறது. குன்றிப்போக வைக்கிறது. அழுந்திப் போக வைக்கிறது.
அவளுடைய வயிறு திறத்தல் என்னும் வைபவம் இருவரின் கைங்கர்யம். இருவருக்குமான படுக்கைப் பகிர்வு. இருவரின் ஜனநாயக் காதலும், சமமான கொடுக்கலும் வாங்கலும் கொண்ட நேச நியமம். ஆனால் வயிறு திறத்தல் நிகழாத போதில் அவமானங் களும், குற்றச் சாட்டுகளும், தலைகுனிவுகளும் தடுமாறிக்குப்புறக் கவிழ்த்தலும் அவளுக்கானதாகவே அமைகிறது. அது ஊமைக்காயம். அது மௌனவலி அது இருதயப் பிளவு. அது உச்சந்தலையில் அடிக்கப்படுகின்ற ஆணி. அது உச்சந்தலையைப் பிளக்கின்ற கடப்பாரைக்குத்து. அது தரும் வலி என்ன? அது எந்த அவமான உச்சத்துக்கு அவளை அழைத்துச் செல்லும்?
ஒரு சொட்டு சிறுநீர் விட்டு
இருகோடுகள் தெளியக் காத்து
ஒரு கோட்டை வெறித்துப் பார்த்து
விட்டெறியத் தேவையில்லை இனி.
இரண்டு பன்னிரெண்டான நாள்
கணக்குள் எண்ணி மருத்துவர்
தேடவும் மருந்துகள் உண்ணவும்கூட
அவசியம் இருக்காதுதான்
இந்த மாசமும் ஒண்ணுமில்லையா
துர்வாசகங்கள் கேட்காமல் தூர்வாரி
செவிப்பறையை ஆணி அறைந்து
சாத்திவிடலாம் நிரந்தமாய்
பத்தியமிருந்து உண்ணவும் உடல்
வலி பொருட்படுத்தாது உழைக்கவும்
கனவு கலைக்கவும் வேண்டியிருக்காது
உறைந்துவிட்ட உதிரப்போக்கால்
மாதத்தில் பாதிநாட்கள் விரதமிருந்தும்
வேண்டுதலை நிராகரித்த கடவுளை
வேண்டுதலை நிராகரிப்பது இம்முறை
சந்தேகமில்லாமல் அவளுடையதாகிறது
கோவை கவிஞர் ஷெண்பா என்னும் மஞ்சு கண்ணன் காட்டுகிறார் அவமானத்தின் உச்சத்தை அவர் காட்டும் அவள் கடவுளை நிராகரிக்கிறாள்லி அவளுக்கு நேர்ந்த அவமானங்களுக்காக. அவளின் கடவுள் மறுப்பும் கடவுள் நிராகரிப்பும் அவளுக்கான அவமானமல்ல இனி. அது கடவுளுக்கான அவமானம்.
சமூகத்துக்கான அவமானம். வார்த்தைகளால் அவளைக் குதறும் உறவுகளுக்கான அவமானம். ஒவ்வொரு மாதமும் அவளைக் கழுவிரீற்றிய மருத்துவத்தின் அவமானம்.
அத்தனை அவமானங்களையும் அவள் எப்படிக் கடக்கிறாள்? அவள் எப்படி நிராகரிக்கிறாள்? கடவுளைக் கடப்பதன் மூலமாக. கடவுளை நிராகரிப் பதன் மூலமாக. எல்லையில்லாத தண்டனைகள் தருகின்ற அவள் வலிகளுக்கான நீதிபதியும் அவளே... நீதியும் அவளே.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-06/andal-t.jpg)