லக்கியங்களின் தேவை, போக்கு வகைகளைத் தாண்டி, அவை நம் வாழ்வியலோடு பின்னிப் பிணைந்து பெரும் பங்காற்றும் நிலைகளைச் சொல்லியே ஆகவேண்டும்.

காலம் கடந்து இன்றைக்குச் சொல்லப்பட்டது என்பதுபோலத் தோன்றும் இலக்கியங்களையே வாழும் இலக்கியமாகக் கருதவேண்டும்.

gg

Advertisment

இளமையும். இயல்பும். எளிமையுமாக எத்தனை இலக்கியங்கள்!

ஒரு சில வரிகளிலேயே நம்மை பிரமிக்கச் செய்து, நம் கூடவே காதுகளில் ஒலித்தபடி வரும் ஒரு பாடலின் வரிகள் தான் இவை... 'ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல்;

போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை 'பண்பு' எனப் படுவது பாடு அறிந்து ஒழுகுதல்; 'அன்பு' எனப்படுவது தன் கிளை செறாஅமை; 'அறிவு' எனப்படுவது பேதையார் சொல் நோன்றல்;

Advertisment

'செறிவு'எனப்படுவது கூறியது மறாஅமை; 'நிறை' எனப்படுவது மறை பிறர் அறியாமை; 'முறை' எனப்படுவது கண்ணோடாது உ'ர் வௌவல்;

'பொறை' எனப்படுவது போற்றாரைப் பொறுத்தல்;

(கலித்தொகை-133)

- இதைச் செய் இதைச் செய்யாதே என்ற முறை அறிவுரையாக மாறும். அறிவுரை அச்சம் நமக்கு எப்போதுமே உண்டு.

ஆனால் போகிற போக்கில் விதைகளைத் தூவிவிட்டு. வேண்டுமானால் எடுத்துக் கொள் என்று கூறும் முறை அழகானது...

அச்சுறுத்தல் இல்லாதது!

tt

இதைத்தான் சாப்பிட வேண்டுமென்று சொல்லாமல் உணவு மேசை'ல் காத்திருக்கும் உணவு பரிமாறலாக இதைக் கூறலாம்! பரிமாறலாக, ஒரு அறிமுகமாக, கைபற்றி நடக்கும் நட்பின் பேச்சாக நம்மைத் தழுவிக்கொள்ளும் வரிகளுக்குச் சொந்தக்காரர் நல்லந்துவனார்.

ஒரு தோழியாய் இருந்து அவர் பாடுகிறார். நீ இதைச் செய்... செய்யவேண்டும்... செய்தால் நன்று என எப்படி ஒருவர் கூறினாலும் எரிச்சல் வரும். மனநிலை எல்லா காலத்திற்கும் இனம், மொழி, மதம் கடந்து உரியதாகிறது. மாறாக... உனக்கு இவைகளைத் தெரியுமா என்று அழைத்து.. கேட்க வைத்து... நம்மில் விதைத்து வெற்றி பெறுகிறார் நல்லந்துவனார்...

முகம் தெரியாத கவிஞன்...

இவனது பிறந்தநாள் தெரியாது...

ஆனால் இவன் என்றும் நம்முடன் கலந்திருக்கி றான்.

ஆறுதலாக ஒருவனை வழிநடத்திச் செல்வது... திசைதெரியாமல் அவனுக்கு உதவுவதாகும். ஒன்றை நீ பாதுகாக்கிறாய். போற்றுகிறாய் என்பதை, நீ உன்னை சார்ந்து வாழ்பவர்களைப் பிரியாமல் இருப்பதால் அறியலாம்.

தேவை அறிந்து நடப்பதே பண்பாகும்/ சுற்றத் தாரை, தன் உறவுகளை வெட்டாமல் வாழ்வது அன் பாகும்... அறிவின்மையால் யார் எதைச் சொன்னா லும் பொறுத்துக் கொள்வது அறிவாகும்.

அறிவு பட்டமோ, பட்டயமோ தருவது அன்று. செறிவான அறிவாற்றல் நினைவுகளே... சொல்லியதை மறப்பது என்றும் தவறே.. முழுமை என்பது இரகசியங்களைக் காப்பாற்றுதல். அதை வைத்தே ஒருவனை எடை போடலாம்.

இவர் அவர் என்ற பாகுபாடின்றி உ'ர்களை ஆராதிப்பதே வாழ்வின் முறையாகும் இவ்வளவு சொல்லியும் ஒருவர் தூற்றினால் அதைப் பொறுத்து வாழ்வதே பொறுமையாகும். பொருள் புரியாவிட்டாலும் பரவா'ல்லை. தவறான பொருள் புரிதல் பயனற்றது என்பதை இப்பாடல் சொல்லாமல் சொல்கிறது.

கேட்க எல்லாமே எளிமை... நடைமுறைப்படுத்த நிச்சயம் ப'ற்சி தேவை. அக்காலத்திலேயே புரிதலில் தடுமாற்றம் இருந்திருக்கிறது. இளைஞர்கள் மனதில் இவைகளை இருத்திக்கொண்டால் வாழ்வு சிறக்கும்.

ஒன்பது வரிகளில் தலைவனுக்கு மறைமுகமாக தோழி சொல்வதுபோல் சொல்லப்பட்ட செய்திகள் தோழமை அழகுடனே மென்மையாக நம்மை வந்தடைகின்றன.

இயந்திரமயமான உலகில் அச்சங்களும் போட்டிகளும் பணம் பண்ணுவதே வாழ்க்கை என்ற சூழலியலில் சிக்கித் தவிக்கும் இதயங்கள், தங்களுக்கான இளைப்பாறுதலை இலக்கியங்கள் தரும் என நம்பினால், மன அழுத்தங்களில் இருந்து வெளியே வரலாம். இன்று கொரோனா ஏற்படுத்தி'ருக்கும் மனப் பதட்டங்களில் இருந்து மீளவும் இலக்கியம் கைகொடுக்கும். எனவே படிப்பது அல்லது வாசிப்பது பத்தாம் பசலித் தனம் என்பதிலிருந்து குழந்தைகளை, இளைஞர்களை வெளிக்கொணர்வதும் நம் கடமையே.

இதயம் தருவோம் இலக்கியங்களுக்கு. இனிய உதயம் எனும் நன்னாள் வரும்.