சென்னைப் பல்கலைக்கழகத்தில் 27 ஆண்டுகள் பேராசிரியராக பணிசெய்து தற்போது தகைசால் பேராசிரியராகப் பணியாற்றி கொண்டிருக்கும் பேராசிரியர் சற்குணவதி அவர்கள் இலக்கிய அறிஞர் எனும் டி.லிட் பட்டம் பெற்ற முதல் பெண்மணி ஆவார்.

லம்பாடிகள், இருளர், பளியர், முதுவர் ஆகிய நான்கு மலைவாழ் மக்கள் பற்றி கள ஆய்வு செய்து நூலாக வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்துள்ள வெள்ளிமுடி, கரிமுட்டிமலை, பூச்சங்கொட்டாம் பாறை மலை, ஆட்டுமலை, சங்கரன் குடிமலை, இடமலை, மஞ்சம்பட்டிமலை, வெள்ளக்கல்மலை, மேல் குறுமலை ஆகிய ஒன்பது மலைப்பகுதிகளில் "முதுவர்' இனமக்கள் வாழ்கின்றனர். அவற்றுள் பூச்சங் கொட்டாம் பாறைமலை, மேல் குறுமலை ஆகிய இரண்டு மலைப்பகுதியில் வாழும் முதுவர் பழங்குடிமக்களை கள ஆய்வு செய்துள்ளார்.

Advertisment

sss

வனத்துறைக்கு விண்ணப்பித்து, முறையாக அனுமதி பெற்று ரூ.25 ஆயிரம் கட்டணம் செலுத்தி தனது களஆய்வை மேற்கொண்டுள்ளார். கோவையிலிருந்து உடுமலை சென்று அங்கிருந்து பொன்னாலம்மன் சோலைக்குச் சென்று, அங்கிருந்து !9 கி.மீ. தூரம், பாதையற்ற, அடர்ந்த காடுகள் நிறைந்த, கொடிய விலங்குகள் வாழும் மலையில் கால்நடையாக ஏறிக் சென்று பூச்சங்கொட்டாம் பாறை மலையில் தங்கியிருந்து அங்குவாழும் முதுவர்களையும், திருமூர்த்தி மலை அடிவாரத்திலிருந்து 21 கி.மீ. தூரம் கால் நடையாக ஏறிச் சென்று மேல் குறுமலையில் தங்கி இருந்து அங்கு வாழும் முதுவர் மக்களையும் கள ஆய்வு செய்து நூலாக வெளியிட்டுள்ளார்.

பூச்சங்கொட்டாம் பாறையில் 38 குடில்களில் மொத்தம் 200 பேர் வாழ்கின்றனர். மேல் குறுமலையில் 40 குடில்களில் மொத்தம் 220 பேர் வாழ்கின்றனர்.

Advertisment

தேன் எடுத்தல், தைலம் காய்ச்சுதல், சீமார் புல் வெட்டுதல், சில தானியங்களைப் பயிரிடுதல் ஆகியவை இவர்களது தொழிலாகும். வயதில் மூத்த ஊர்த்தலைவரின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு வாழ்கின்றனர். திருமணம் ஆகும் வரை அனைத்து ஆண்பிள்ளைகளும் "ஆண்கள் சத்திரம்' எனும் குடிலில் வாழ்கின்றனர். திருமணம் ஆனதும் தனிச் குடில் அமைத்துத் தருகின்றனர். வனதேவதை, மீனாட்சியம்மை ஆகியவற்றை தெய்வங்களாக வணங்கு கின்றனர். பழங்கால பாண்டியநாட்டு மதுரையே தங்களது பூர்வீகம் எனக் கூறுகின்றனர். ஆண்டிற்கொருமுறை நடத்தும் தைநோன்பு திருவிழாவில் முதுவர் ஆண்கள், பெண்கள் சந்தித்துக் கொள்கின்றனர். அப்போது தான் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. கோமாளி ஆட்டம் என்பது இவர்களின் தனித்துவமான கலையாகும்.

கல்வி அறிவு இல்லாதிருந்த முதுவர் மக்களுக்கு தனது ஆய்வின் போது பேராசிரியர். சற்குணவதி அவர்கள் கல்வி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

அதன் விளைவாக தற்போது 17 பிள்ளைகள் வால்பாறை, மறையூர், சாலக்குடியில் உள்ள தங்கும் விடுதியுடன் கூடிய அரசு பள்ளிகளில் படிக்கின்றனர். தொடர்ந்து பன்னிரெண்டு ஆண்டுகளாக அவர்களுக்கு கல்வி விழிப்புணர்வுடன், பொருள் உதவியும் பேராசிரியர் சற்குணவதி அவர்கள் செய்து வருகின்றார். தற்போது சமீபத்தில் 2022 ஜீன் 23 ந் தேதி வனத்துறை அனுமதியுடன் 15 பேர் அடங்கிய குழுவுடன், வனத் துறை ஜீப்பில் பயணம் செய்தும், கால் நடையாகவும் சென்று அங்கு தங்கி இருந்து முதுவர் மக்களை நேரில் சந்தித்து, படிக்கும் 17 பிள்ளைகளுக்கும் முதுகுபை, நோட்டுப்புத்தகம் முதலிய கல்வி உபகாரணங்களையும், நாற்காலி, முக்காலி, பாய், லுங்கி, டவல், சேலை, வேட்டி முதலிய பொருட்களையும் வழங்கியுள்ளார். அத்துடன் தன் உறவினர் மருத்துவர் ஆ.கோகுல் ராஜ், மருத்துவர் ரா.சித்ரா கோகுல்ராஜ் இருவரையும் தன்னுடன் அழைத்து சென்று மருத்துவ முகாம் நடத்தி 40 பேர் சிகிச்சை பெறச் செய்துள்ளார். தற்போது பூச்சங் கொட்டாம் பாறை மலையில் உள்ள 38 குடும்பங்களையும் பொறுப்பெடுத்து, தொடர்ந்து கல்விசார் விழிப்புணர்வை வழங்கி முதுவர் மக்கள் வாழ்வை மேம்பட திட்டமிட்டு வனத்துறையில் அனுமதி பெற்று, செயல்பட்டு வருகின்றார். அதன் படி வால்பாறை, சாலக்குடி, மறையூர் ஆகிய ஊர்களில் தங்கி படிக்கும் பிள்ளைகளை விடுமுறை நாட்களில் அழைத்து வர வேன் மற்றும் வனத்துறை ஜிப்பிற்கும் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார். முதுவன் செல்லமுத்து என்பவரின் மகள் சீதேவி + 2 தேர்ச்சி பெற்றுள்ளார். அவளுக்கு மேல் படிப்பிற்கான செலவு முழுவதையும் பேராசிரியர் சற்குணவதி ஏற்றுள்ளார்.

உடல் பொருள் ஆவியை செலவிட்டு பண்ஞ்ங்ழ் தங்ள்ங்ழ்ஸ்ங் எர்ழ்ங்ள்ற் ற்குச் சென்று அங்கு வாழும் மலைமக்களின் முன்னேற்ற வாழ்விற்கு வழி வகுத்து வருவது பேராசிரியர் சற்குணவதி அவர்களின் தனித்துவ சாதனைகளில் முதன்மையானதாக அமைகிறது.

ஈரோடு மாவட்டம் பவாணி தாலுகா அம்மாப்பேட்டை அடுத்த கோமராயனூர் என்னும் ஊரில் சின்னமலை அடிவாரத்தில் வாழும் "லம்பாடி' பழங்குடி மக்களையும் களஆய்வு செய்து நூலாக வெளியிட்டுள்ளார். இராஜஸ்தானை பூர்விகமாக கொண்டவர்கள் என்றும் நெருக்கடி காலத்தில் சின்னமலையைத் தஞ்சம் அடைந்தாகவும் லம்பாடிகள் கூறுகின்றனர். ஆணின் நாக்கில் செம்பு கம்பியால் சூடு போட்டு அதனை தாங்கி கொள்ளும் ஆண் மகனுக்குகே திருமணம் செய்து வைக்கும் பழக்கம் இவர்களிடம் உள்ளது.

ssa

தமிழ் நாட்டிற்கும் கேரளாவிற்கும் இடைப்பட்ட சம்பங்காடு என்னும் மலைப் பகுதியிலிருந்து 13 கி.மீ. தூரம் கால்நடையாக மலை ஏறி பயணம் செய்து, தளிஞ்சி மலையில் வாழும் 'பளியர்' இமைக்களையும் கள ஆய்வுசெய்து நூலாக வெளியிட்டுள்ளார். தமிழகத்தை ஆட்சி செய்த பாளையக்கார அரசர்களுடன் வேட்டையாட மலைக்குச் சென்று அங்கு தங்கிவிட்டதாக பளியர் கூறுகின்றனர். நீர் வழிபாடு இவர்களிடம் உள்ளது. கொண்டம்மாள் என்னும் பெண் தெய்வத்தை இவர்கள் குலதெய்வமாக வணங்குகின்றனர்.

தமிழகத்தில் கோவை மாவட்டத்தில், உள்ள ஆனைமலையை அடுத்த சேத்துமடையிலிருந்து 80 கி.மீ. தொலைவில் உள்ள "சர்க்கார்பதி' காட்டின் நடுவில் வாழும் 'மூப்பர்' இனமக்களை கள ஆய்வு செய்து பேராசிரியர் சற்குணவதி அவர்கள் நூலாக வெளியிட்டுள்ளார். இவர்கள் இருளர் இனத்தைச் சேர்ந்தவர்களாக தங்களைக் கூறுகின்றனர். கேரளமாநிலத்தில் வடக்கு வாளையார் பகுதியிலிருந்து நாடோடிகளாக தமிழ் நாட்டில் பிழைக்க வந்ததாகக் கூறுகின்றனர். எலிக்கறி உண்பதும், பாம்பு பிடிப்பதும் இவர்களின் தனித்துவ செயல்களாகும்.

நான்கு மலைவாழ் மக்கள் பற்றிய ஆய்வுடன் 'உடுக்கடியில் அண்ணன்மார் கதைப்பாடல்' என்னும் கதைப்பாடலை மதுரை மாவட்டத்திற்கும் கோவை மாவட்டத்திற்கும் இடைப்பட்ட கணியூர் எனும் ஊரில் ஒரு ஆண்டு காலம் கள ஆய்வு செய்து 25 ஒ- நாடாக்களில் கதைப் பாடலைச் சேகரித்து வந்து குறுந்தகடுகளாக்கி 1050 பக்கங்களில் "உடுக்கடியில் அண்ணன் மார்கதைப்பாடலை' நூலாக்கம் செய்துள்ளார். ஆதிசெட்டி பாளையத்தை ஒட்டிய பகுதியை ஆண்ட பொன்னர், சங்கர் என்னும் இரண்டு வீரர்களின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் வாய்மொழி வரலாற்று காப்பியமாகத் திகழும் உடுக்கடியில் அண்ணன்மார் கதைப்பாடலை குறுந்தகடாகவும் நூலாகவும் உலகிற்கு வழங்கி உள்ளதும் பேராசிரியர் சற்குணவதியின் சாதனை பட்டியலில் அடங்கும்.

தனித்துவமான, சவாலான, சாதனைகளை சர்வ சாதாரணமாக செய்து வரும் பேராசிரியர் சற்குணவதி அவர்கள் உலகம் அதிகம் அறிந்திராத தனித்துவ சாதணை பெண்மணி ஆவார். தனது ஆர்வத்தினாலும் சேவை மனப்பான்மையினாலும் பேராசிரியர் சற்குணவதி அவர்கள் செய்து வரும் சாதனைப் பணிகளைத் தமிழ் உலகம் வரவேற்று போற்றும் என்பது உறுதி.