ந்த உலகம் ஆண்களுக்கு மட்டுமானது என்ற மனமயக்கத்தைப் பெண்கள் பெரும்பாலும் தங்கள் அதிரடி ஆற்றலால் கலைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த உலகப்பந்து இருவருக்குமான அச்சின் மீதுதான் சுழல்கிறது. இதை உணர்ந்து தெளிந்த பெண்கள், பெண்புத்தி பின் புத்தி என்று பிதற்றும் பிற்போக்காளர்களின் தலையில் சம்மட்டியடி கொடுத்துக்கொண்டிருக் கிறார்கள். *உலகின் தலைவாசல் என்று சொன்னால் அது பெண்களின் கருவறைதான். ஏனெனில் உலகில் உள்ள எல்லா உயிரினங்களும் அதனதன் பெண்ணினத்தில் இருந்துதான் உயிர்த்துக்கொண்டிருக்கின்றன. அந்த வகையில் பெண்மை என்பது படைப்பின் ஆதிவேர். இத்தகைய மதிப்புடைய பெண்மையைப் போற்றுவது மானுடக்கடமையாகும். ஆதி உலகில் தாய்வழிச் சமூகம்தான் செழித்திருந்தது. அதுதான் ஆண்களையும் வழிநடத்தியது. ஈன்றவளான பெண்ணே ஆணையும் பராமரிக்கும் தன்மை கொண்டவளாக இருந்தாள்.

w

இதன்பின் காலம் மாறியது. தமக்கென்று ஒன்றைப் பத்திரப்படுத்தும் தனிமனித எண்ணத்தால், உடமைச் சமுதாயம் தோன்றியது. அப்போது ஆண்களின் உடைமைகளில் ஒன்றாகப் பெண் சுருங்கினாள். இதனால், ஆண்களின் சகலவிதமான சுரண்டலுக்கும் பெண்கள் தன்னியல்பாய் ஆளாக நேர்ந்தது. பாதுகாப்பு என்ற பெயரிலேயே பெண்களை அடைத்து வைக்கத் தொடங்கினார்கள் ஆண்கள். அது ஜென்மாந்திர சிறையாகப் பெண்களுக்கு ஆனது. இடையில், நாகரிகம் மேலோங்கிய காலமான சங்க காலம், பெண்களுக்கும் கல்வி கொடுத்தது. இதனால் பெண்கள் எழுச்சி பெறத் தொடங்கினர். காதலையும் காமத்தையும் பெண்கள் சிந்திக்கவே கூடாது என்ற நிலையைத் தகர்க்கும் வண்ணம் நம் ஔவையார்... ""முட்டுவேன் கொல்? தாக்குவேன் கொல்? ஒரேன் யானும்; ஓர் பெற்றி, மேலிட்டு, ஆஅ! ஒல் எனக் கூவுவேன் கொல்? அலமரல் அசைவளி அலைப்ப, என் உயவுநோய் அறியாது துஞ்சும் ஊர்க்கே'' -என தன் நெஞ்சில் இருந்து பீறிடும் காதல் உணர்வையும், ஐம்புலனையும் அதகளப்படுத்தும் காமநோயான உயவுநோயின் தகிப்பையும் பகிரங்கமாக இலக்கிய மேடையில் ஏற்றினார். சங்கப் பெண்பாற்புலவர்கள், இவ்வாறாக காதலையும் காமத்தையும் மனத் தடையின்றிப் பாடி தங்கள் சுதந்திரத்தின் எல்லையை அன்றே நிறுவினர். குறைகளைச் சுட்டிகாட்டி ஆண்களின் தலையில் பலமாக வலிக்குமாறு குட்டினர். அவர்களைச் சமாளிக்கமுடியாத ஆண்களின் சமூகம், பழையபடி பெண் சமூகத்தின் கல்வியை மெல்ல மெல்லப் பறித்து, மீண்டும் அடிமை இருட்டுக்குள் அவர்களை அமரவைத்தது. ஆண்களுக்கு எதிராகச் சிந்திப்பதும் தெய்வ நிந்தனை என்று நம்பவைத்தது. கற்பு என்ற கற்பித வேலியைக் குடும்பப் பெண்களுக்கு மட்டும் போட்டுவிட்டு, அவர்கள் உலகம் வெளியே சுந்தந்திரமாக மேய்ந்தது. அது பெண்களை மரத்துப்போன கற்சிலைகளாக மாற்றிவைத்திருந்தது. *இந்த சூழலில், உலகில் மறுமலர்ச்சிச் சிந்தனைகள் 19-ஆம் நூற்றாண்டில் மெல்ல மெல்லத் தலையெடுக்கத் தொடங்கின.

wwவெளிச்சம் பல திசைகளில் இருந்தும் பலவிதமாகக் கசிய ஆரம்பித்தது. பகுத்தறிவின் சுடரில் எல்லா வகையான மூடக் கட்டுக்களும் இற்றுப்போகத் தொடங்கின. இந்தக் காலத்தில்தான் பெண்ணியம் மீண்டும் கண்விழித்தது. இங்கே நம் பாரதி களும்,வீட்டுக்குள்ளே பெண்னை பூட்டிவைக்கும் விந்தை மனிதர் தலைகவிழ்ந்தார்’ என்று முரசுகொட்டத்தொடங்கினர். பெரியார் ‘பெண் ஏன் அடிமையானாள்?’ என்று தன் அதிரடிக் குரலை உயர்த்தி, பெண்களுக்கு மீண்டும் முதுகெலும்பை முளைக்கவைத்தார். ‘கல்வி இல்லாப் பெண்கள் களர் நிலம்’ என பெண்களுக்கு சிறகைத் தரும் கல்வியைப் புரட்சிக்கவிஞர் பாரதிதாசனைப் போன்றவர்கள் வலியுறுத்தத் தொடங்கினர். இப்படிப்பட்ட முற்போக்குவாதிகள் கொடுத்த உரத்தால், இன்று பெண்களை சுற்றிவளைத்திருந்த சிறைகள் எல்லாம் பல வகையிலும் உடைந்து தெறித்துக்கொண்டே இருக்கின்றன. காரணம் பெண்கள் விழிப்புற்று எழுந்ததோடு, நிமிர்ந்து நிற்கவும் ஆரம்பித்து விட்டார்கள். பெண்களின் இத்தகைய பேரெழுச்சியின் அடையாளமாகத் தான் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. * உலகப் பெண்கள் தினத்தை ஐ.நா.சபை 1975-ல் அங்கீகரித்தது என்றாலும், அதற்கு முன்னரே இதற்கான விதைகள் பரவலாக விழத் தொடங்கிவிட்டன. பெண்களுக்கு கடுமையான வேலைப்பளு இருந்தது. கால நேரம் பார்க்காமல் வேலை பார்க்கும் கொடுமை அவர்களை கோபப்பட வைத்தது. எப்படி உழைத்தாலும் ஆண்களை விடவும் குறைவான கூலியையே பெறக்கூடிய அவல நிலையில் பெண்கள் இருந்தார்கள். தேர்தல் காலங்களில் வாக்களிக்கும் உரிமையும் பெண்களுக்கு மறுக்கப்பட்டு வந்தது. இத்தகைய ஆணாதிக்கக் கொடுமைகளை எதிர்த்து.. அமெரிக்க நாட்டின் நியூயார்க் நகரில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் 1908- ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8 ஆம் தேதி பெருந்திரளாய்த் திரண்டனர். எழுசியோடு அங்கே உரிமைப் பேரணியை நடத்தினர். அதுதான் உலகையே திகைப்போடு திரும்பிப் பார்க்க வைத்தது. இந்த நாளைத்தான் உலகப் பெண்கள் தினமாக முதன்முதலில் அறிவித்தது அமெரிக்க சோசலிஸ்ட் கட்சி. இதைத் தொடர்ந்து இந்த மார்ச் 8-ஐ உலகப் பெண்கள் தினமாக அறிவிக்கவேண்டும் என்று கிளாரா ஜெட்கின் அம்மையார் 1910-ல் கோபன்ஹேகனில் நடந்த உழைக்கும் பெண்களுக்கான சர்வதேச மாநாட்டில் வேண்டுகோள் வைத்தார். அந்த மாநாட்டில் 17 நாடுகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர். கிளாரா அம்மையாரின் கோரிக்கையை ஆஸ்திரியா, டென்மார்க், ஜெர்மனி, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகள் உடனடியாக ஏற்றுக்கொண்டு மார்ச் 8-ஐ பெண்கள் தினமாகக் கொண்டாடியது. இது பல்கிப்பெருகிய நிலையில் 1975-ல் மார்ச் 8-ஐ உலகப்பெண்கள் தினமாக ஒருவழியாய் அறிவித்தது ஐ.நா. எனவே இந்த ஆண்டு 112 -ஆவது உலகப் பெண்கள் தினமாக மலர்ந் திருக்கிறது. * ஒரு wwகாலத்தில்..’தையல் சொல் கேளேல்’ என்ற பிரச்சாரம் பெண் புலவர்களின் பெயரிலேயே நடந்தது. ’பெண்ணாகி வந்ததொரு மாயப் பிசாசு’ என்று சித்தர்களும்கூட சித்தம் கலங்கிப் பெண்மை யைச் சிறுமைப்படுத்தினர். சிற்றின்ப வேட்கையைக் கட்டுப்படுத்த முடியாமல் சீரழிந்தவர்களே, தங்கள் பலவீனத்தை மறைக்கப் பெண்களை மாயப்பிசாசாக வக்கற்று வர்ணித்தனர். ’பெண் புத்தி பின் புத்தி’ என்றும் அவதூறு செய்து பெண் குரலைப் புறக் கணித்து வந்தனர். இத்தகைய அடித்தளம் இல்லாத சகுனித்தனப் பரப்புரைகளை எல்லாம் 20, 21- ஆம் நூற்றாண்டுப் பெண்கள், உலகின் உயரந்த சிகரங்களைக் கைப்பற்றியதன் மூலம் தெறிக்க விட்டனர். ஆண்கள் மட்டுமே உட்கார்ந்திருந்த சிம்மாசனங்களில் ஆளுமைமிக்க பெண்கள அமர்ந்து தங்கள் அறிவுக் கூர்மையையும் தொழில்நுட்பத் திறத்தையும் நிரூபித்து நிமிர்ந்த னர். இந்த மண்வெளியை மட்டுமல்லாது, விண்வெளியையும் விட்டுவைக்காமல் தங்கள் சாதனைக் காலடியை எடுத்து வைத்தனர். இன்று பெண்கள் விண்வெளி ஆராய்ச்சியிலும் கொடிகட்டிப் பறக்கின்றனர். பார்வைத் திறனும் செவித்திறனும் இல்லாமலே மானுடத்தைத் தன் சாதனையால் வியக்கவைத்து நோபல் பரிசு பெற்றார் ஹெலன் கெல்லர். கருணையினால் உலகத்தின் வணக்கத்திற் குரியவர் ஆனார் அன்னை தெரசா. உலகின் முதல் பெண் பிரதமர் என்ற சிறப்பைப் பெற்றார். இலங்கையைச் சேர்ந்த பண்டார நாயகே. இந்தியாவின் கவிக்குயில் என்று உலகளவில் பெயர் பெற்றவர் சரோஜினி நாயுடு. பிரதமர் பதவியில் அமர்ந்து உலகின் இரும்புப் பெண்மணி என்ற பெயரைப் பெற்றார் அன்னை இந்திராகாந்தி, இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ். என்ற சிறப்பைப் பெற்றவர் கிரண்பேடி. தமிழகத்தின் முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி wwஎன்ற சிறப்பை எட்டியவர் நம் திலகவதி. கல்பனா சாவ்லா என்னும் நம் இந்தியப் பெண்மணி விண்வெளி ஆராய்ச்சியின்போது ஏற்பட்ட விபத்தில் விண்ணோடு விண்ணாகக் கலந்தார். பிரபஞ்ச சக்தியாக அவர் இன்றும் நீக்கமற நிறைந்து நிற்கிறார். நான் வானத்தை ரசிக்கும்போதெல்லாம் நிலாவையும் விண்மீன்களையும் ரசிப்பதுபோல், என் மனக் கண்ணுக்கு தரிசனம் தரும் கல்பனா சால்வாவின் புன்னகை முகத்தையும் தரிசித்து ரசிக்கிறேன். * இன்று அறிவியல் துறையாக இருக்கட்டும் அரசியல் துறையாக இருக்கட்டும். படைப்பிலக்கியத் துறையாக இருக்கட்டும்... ‘ஆணுக்குப் பெண் இளைப்பில்லை காண்’ என்று சகல துறைகளிலும் பெண்கள் சாதித்துக் காட்டி வருகிறார்கள்.

Advertisment

இதைவிட பெருமை யானது இங்கே என்ன இருக்கிறது?.பெண்ணியத்தின் அண்மைக்கால வளர்ச்சி, உலகையே திகைப்பில் ஆழ்த்தி வருகிறது. 25 ஆண்டுகளுக்கு முன் நான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த காலத்தில், பெண்கள் அதிகபட்சம் ஆசிரியர்களாகத்தான் இருந்தனர். எங்காவது பெண் மருத்துவத் தாதிகளும் மருத்துவர்களும் அபூர்வமாகக் காணப்பட்டார்கள். இன்று நிலைமை அப்படியில்லை. இந்த 25 ஆண்டு காலத்தில், நான் பார்க்கும் திசைகளில் எல்லாம் நீக்கமற நிறைந்து பெண்கள் சுடர்ந்து கொண்டிருக்கி றார்கள். எல்லா வகையிலும் மேலோங்கி நிற்கிறார் கள். பெண்களில்லாத துறையையோ அலுவலகத் தையோ எங்கும் பார்க்க முடியாது. எல்லாப் பக்கமும் சட்டங்கள் ஆள்வதும் பட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்’ -என்று பெண்கள் சாதனைச் சரித்திரம் படைப்பதைக் கண்கூடாகப் பார்த்து வியக்கிறோம். * படைப்புலகம் என்று எடுத்துக் கொண்டால் என்னைச் சுற்றி இருக்கும் பெண்கள் உச்சம் தொட்டுக் கொண்டிருப்பதைப் பார்க்கிறேன். உதாரணத் திற்கு ஒரு சிலரை இங்கே சுட்டிக் காட்டுகிறேன்.

ஏறத்தாழ 75 வயதை நெருங்கும் முனைவர் ந. நளினிதேவி, தனது கேட்கும் திறனை, ஒரு மருத்துவ விபத்தில் இழ்ந்தவர். இந்த நிலையிலும் ஏராளமான இலக்கிய ஆராய்ச்சியில் ஈடுபட்டு, தமிழிலக்கிய உலகையே திரும்பிப் பார்க்க வைத்து வருகிறார். தமிழ் இலக்கியம் என்றால் திருக்குறளையும், கம்ப ராமாயணத்தையும், சிலப்பதிகாரத்தையும் தான் எல்லோரும் தலையானவை என்று சுட்டிக் காட்டுவார்கள். ஆனால் நளினி தேவி அம்மாவோ,. ’தமிழர்களின் பேரிலக்கியம் புறநானூறே’ என்று தகுந்த காரணங்களைச் சுட்டிக் காட்டி, அழுத்தமாக நிரூபித்திருகிறார். இதை கோவை ஞானி, ஆய்வாளர் மருதநாயகம் உள்ளிட்ட அறிஞர்கள் பலரும் வழிமொழியத் தொடங்கி விட்டார்கள். அதேபோல் வள்ளுவரின் அறத்துப் பாலையும் பொருட்பாலையும் மட்டுமே பலரும் தூக்கிப்பிடித்து வந்தனர். நம் நளினிதேவி அம்மாவோ, மூன்றாம் பாலான இன்பத்துப்பாலின் சிறப்புக் கூறுகளைத் தூக்கிப்பிடிக்கும் வகையில் ’காதல் வள்ளுவன்’ என்ற தலைப்பில் ஒரு நூலையே எழுதி, மாகவி ஈரோடு தமிழன்பன், ஆய்வாளர் ய.மணிகண்டன், அருள்நெறி அறிஞர் பிலிப் சுதாகர் உள்ளிட்டவர்களால் பாராட்டப்பட்டிருக்கிறார். நளினிதேவி ஏறத்தாழ 15 நூல்களை படைத்திருப்ப தோடு, இப்போதும் சுறுசுறுப்பாக இயங்கி எல்லோரையும் வியக்க வைத்துக் கொண்டிருக்கிறார். சிறுத்தைகள் இயக்கத் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களின் கைகளால் வெளியிடப்பட்ட நளினிதேவியின் ’அக விடுதலையே பெண் விடுதலை’ என்ற ஆய்வுநூல், சிந்தனை உலகில் wwகலகக்குரலை எழுப்பிக் கொண்டிருக்கிறது. பெண்களும் பாலியல் விடுதலை பெறவேண்டும் என்று இந்த நூல் உரத்துப் பேசி ஆணாதிக்க வாதிகளை அதிரவைத்து வருகிறது. தனது தமிழ்ப்பணியையே தியானமாக எண்ணி, அதிலேயே மூழ்கும் அவரது உழைப்பை அருகில் இருந்து நான் கவனித்திருகிறேன். அதேபோல் கவிஞர் நர்மதா, பெண்ணிய சிந்தனைகள் கொண்ட கவிதைகளை எழுதி, அவைகளை நூல்களாக்கித் தந்து வருவதோடு,’பெண்’ என்ற அமைப்பைத் தோழிகள் சிலரோடு சேர்ந்து கட்டியெழுப்பி இருக்கிறார். கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட அந்த அமைப்பில் இப்போது ஏறத்தாழ 150 பல்துறைப் பெண்கள் செயல்படும் உறுப்பி னர்களாக இருக்கிறார்ர்கள். அடுத்த மாதம் பெண் அமைப்பின் ஆண்டு விழாவைச் சிறப் புற நடத்தும் ஏற்பாட்டிலும் அந்த ’தலைநிமிர்’ பெண்மணி செயலபட்டுக் கொண்டிருக்கிறார். இரண்டு டஜன் கவிதை நூல்களைத் தந்த ஆளுமை அவர். நான் மேடைகளில் சந்திக்கும் அன்புச் சகோதரி ஆண்டாள் பிரியதர்ஷினி, கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழிலக்கிய உலகில் இயங்கி வருகிறார். தொலைக்காட்சி நிலைய இயக்குநராக பணியாற்றிய பெருமைக்குரியவர் இவர்.

இவரது நூல்களும் மேடை உரைகளும் நெஞ்சத்தை அள்ளக் கூடியவை. தமிழிலக்கியம் படைக்கும் பெண்களில் புகழ்பெற்ற பெண்மணியான இவரை, நவீன ஆண்டாள் என்று பாராட்டினாலும் தகும். ஒடுக்கப்பட்ட காயங்களில் இருந்து உயித்தெழுந்த நர்த்தகி நடராஜன், திருநங்கையர் உலகின் விடியலாய் பத்மவிருது பெற்று உயர்ந்திருக்கிறார். கவிஞர் சக்திஜோதி, சங்க இலக்கியத் தோய்வறிவோடு தமிழ் இலக்கியத்தில் தனித்தடம் பதித்துவருகிறார். புதுவை வானொலி நிலையத்தில் பணியாற்றும் கவிஞர் உமா மோகன், தன் கவிதைகளால் புகழ்பெற்று வருகிறார். அதேபோல் வடசென்னையில் வாழும் அன்புமிகும் இலக்கியச் சகோதரி லதா சரவணன், 50 நூல்களுக்கும் மேல் எழுதியிருக்கிறார். சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மூன்றாம் பாலினரான திருநங்கையருக்காக இவரெழுதிய நூல்களும கட்டுரைகளும் சமூகத்தின் கவனம் பெறுபவை. பெண்ணியத்தின் நிமிர்வைப்பற்றியே எண்ணும் இவரது படைப்புகளும் இலக்கிய மேடைகளும் நம்மை வியக்கவைக்கின்றன. இப்போது மின்னிதழ் ஒன்றையும் சிறப்புற நண்பர்களுடன் இணைந்து நடத்திவருகி றார் லதா சரவணன். * முகநூலில் நான் கண்டெடுத்த சகோதரி கோ.லீலா, முகநூல் குழுமமான ’படைப்பு’க் குழுமத்தின் மூலம் ‘மறைநீர் என்ற அறிவியல் சார்ந்த நூலைத் தந்து இன்று இலக்கிய உலகத்தின் கவனத் தைத் தன் பக்கம் திருப்பி இருக்கிறார்.

Advertisment

சிறந்த கவிஞராகவும் பேச்சாளராகவும் கட்டுரையாளராகவும் இருக்கும் இவர், பொதுப்பணித் துறையில் இளநிலைப் பொறியாளராகப் பணியாற்றி, அந்தத் துறையிலும் தன் இருப்பை சிறப்புற நிலைநாட்டிக் கொண்டிருக்கிறார். இவர்களைப் போலவே கவிஞராகவும் எழுத்தாளராகவும் சிந்தனையாளராகவும் திகழும் தோழி லதா, திரைமறைவுப் பிரச்சினைகள் என்று கருதப்பட்டு வந்த பாலியல் குறித்தும், அதில் பெண்கள் பெறவேண்டிய விழிப்புணர்வு குறித்தும் கலகக்குரல் எழுப்பி, கருத்துலகின் கவனத்தை ஈர்த்து வருகிறார். இவர் முன்னெடுக்கும் முற்போக்குச் சிந்தனைகள், பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. காதலை அழகியல் உணர்வோடு வெளிப்படுத்துவதில் கோவையைச் சேர்ந்த பேராசிரியரும் என் தோழியுமான சுசீலா மூர்த்தி, உச்சத்தைத் தொட்டவர். இவர் கையாளும் படிமங்களும் கற்பனைகளும் பாறைகளையும் கரைய வைக்கும் தன்மை கொண்டது. இவரது படைப்பான ’பெருங்காட்டு நேசம்’ காதல் தேசத்தின் தேசிய நூலாகக் கருதத் தக்கது. இவரைப் போலவே என் தோழிகளில் கவிஞர் இன்போ.அம்பிகா ‘பச்சைய மழை’ என்ற காதல் தேனூறும் கவிதை நூலைக் கொடுத்து, தமிழ் மொழியின் அழகை கூடுதலாக்கி வருகிறார். இயற்கையையும் கொண்டாடுகிறவர் இவர். இவரைப் போலவே வேலூரைச் சேர்ந்த பேராசிரியர் கயலும் தன் காதல் பொங்கும் படிமக் கவிதைகளால், இலக்கிய உலகில் நறுமணம் வீசும் தனித்தடத்தைப் பதித்து வருகிறார். இவர் வனத்தின் காதலர். மரங்களின் நேசர். அதனால் இவரது கவிதைகளில் மூலிகை வாசம் அதிகமாகவே வீசுகிறது. என் மதுரைத் தோழியான நான்சி, அன்பில் ஊறிய எழுத்துகளால் இலக்கியத்தை இனிப்பாக்கி வருகிறவர். தன் பேரக் குழந்தைகளுக்காக யூ டியூப்பில் தேர்ந்த ’கதை சொல்லியாக’த் தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் இவர், ’மீட் அண்ட் wwஈட்’ உணவகத்தை சிறப்புற நடத்தி, தன்னை ஒரு சாதனைப் பெண்மணியாக நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறார், முகநூல் தங்கையான பாரதி பத்மாவதி, தன் கவிதைகளால் மட்டுமல்லாது இலக்கிய அரங்குகளில் நிகழ்ச்சிகளைச் சுவைபடத் தேன்குரலில் தொகுத்து வழங்கி, எல்லோரையும் கவர்ந்து வருகிறார். இவர்களைப் போலவே தோழியர் பெருமாள் ஆச்சியும், அன்புச்செல்வி சுப்புராஜும் நம்பிக்கை விளக்கேற்றும் கவிதைகளால் சிறந்து வருகின்றனர். இவர்களின் இலக்கிய பங்களிப்பு மகளிருக்கு உத்வேகத்தைத் தரும்வகையில் அமைந்திருப்பது சிறப்பிலும் சிறப் பாகும். அண்மையில் என் நட்பு வட்டத்திற்குள் வந்திருக்கும் செல்வி சிவஞானம், ’மாந்தளிர் நினைவுகள்’ என்ற கட்டுரை நூலை எழுதியிருக்கிறார்.

அன்பின் வழியது உயிர் நிலை’ என்ற வள்ளுவனின் இலக்கணத் துக்கு இலக்கியமாகவே இவர் தன் எழுத்துக்களைப் படைத்து வருகிறார். முரடர்களிடம் இவரது எழுத்துக்களைப் படிக்கக் கொடுத்தால் அவர்கள், மென் மலர்களாக மாறிவிடுவார்கள் என்பது என் நம்பிக்கை. அவரது எழுத்துக்கு அப்படிப்பட்ட சக்தி இருக்கிறது. கிராமிய வாழ்வை உயிர்ப்பகச் சித்தரிக்கும் கவிஞர் இளம்பிறை, என்னுடைய நீண்டநாள் ஊர்த் தோழியாவார். எத்தனையோ மேடைகளில் நாங்கள் சேர்ந்து ஏறி இருக்கிறோம். இவர் தன் காயங்களையும் மலர்களாக்கிக் காட்டிய வித்தகி. சறுக்கும் பள்ளத்தில் இருந்தும் படிக்கட்டுக்களைத் தயாரித்துக்கொள்ளும் ஆற்றல் பெற்றவர். அவர் இன்று புகழின் உச்சத்தைத் தொட்டு, தன் இருப்பை நிலைநாட்டி இருக்கிறார். அதேபோல், சேலத்தில் இருக்கும் கவிஞர் சக்தி அருளா னந்தம், தன்னம்பிக்கைக் கவிதைகளைப் படைத்து வருகிறார். பெண்களின் இருப்பை யும் உயர்வையும் அவர் பாடும் விதம் பாராட்டுக்குரியது. தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் என் அன்புத்தோழி லஷ்மி, தன் கவிதைகளையே சங்கீதம் போல் இசைக்கக் கூடியவர். அன்பு ததும்பும் எழுத்துக்களால் இதயத்தைத் தட்டி எழுப்பி கட்டி இழுக்கிறவர் என் தோழி சுமதி சங்கர் ஆவார். மரபில் ஆளுமை செலுத்தும் அன்புத்தங்கை wwஅம்பிகா குமரனின், கவித்துவம் மகத்துவம் மிக்கவை. புதுவைச் சேர்ந்த பெண்ணியம் செல்வகுமாரி, களமாடும் ஆயுதக் கவிதாயிணி ஆவார். கவியரங்கக் கவிதைகளால் இதயத்தைத் தீண்டும் வல்லமை கொண்டவர்களாக ரேவதி அழகர்சாமி, மன்னை ஜீவிதா, சாரா பாஸ், கிருஷ்ணதிலகா, அன்புத் தங்கை நீரை பாத்திமா உள்ளிட்டோர் வலம் வருகிறார்கள். மதுரையைச் சேர்ந்த என் அன்புத்தோழி சுகுணா அம்மு, முகநூலில் சொற்களைக் கொண்டே வீணை வாசித்துவருகிறார். அவரது அன்பின் ஈரத்தில் தமிழின் இனிப்பு இருமடங்காவதை உணர்ந்து மகிழ்கிறேன். கவிதாயினி கிறிஸ்டினா அருள்மொழி, நட்சத்திரங்களைச் சொற்களாக்கி, மயிலிறகு கொண்டு உயிர்வருடுகிற வித்தக் கவிஞராய்த் திகழ்கிறார். கேரளாவில் இருந்தபடியே ஈரத் தமிழால் இதயம் கவரும் கவிஞரும் எழுத்தாளருமான என் அன்புக்குரிய தோழி அல்லிபாத்திமா, தன் முதல் புதினமான ’பாண்டிச்சி’யிலேயே உள்ளம்கவர் கள்வியாய் மாறியிருக்கிறார். கவித்துவத் தமிழால் நற்சிந்தனைகளை வளர்க்கும் தோழி சித்ரா மாணிக்கத்தின், மந்திரமொழி மனதை மயக்கும் தன்மை கொண்டது. தன்னம்பிக்கை மனுஷி என்று ஒருவரை அடையாளம் காட்டச்சொன்னால், நான் கொஞ்சமும் தயங்காமல் சுட்டிக்காட்டும் இரும்பு மனுஷி, வான்மதிதான். ‘பாவையர் மலர்’ என்னும் பல்சுவை இதழை நடத்திவரும் அவர், மேடை ஏறினால் கூன் விழுந்தவர்களும் நிமிர்ந்து உட்கார்ந்துவிடுவார்கள். அத்தகைய உரையாளர் அவர். அவரது தன்னம்பிக்கைப் பயணம். பெண்கள் பலருக்கும் வகுப்பறையாகும். இதேபோல் தஞ்சை மதுரா, சுசித்ரா மாரன், கவிக்குழல், கனகா பாலன் உள்ளிட்ட கவிதையாளர்களும் பெண்ணிய உலகின் நம்பிக்கை நட்சத்திரங்களாகத் திகழ்ந்து வருகின்றனர். கல்லூரிப் பேராசிரியரான ஆதிரா முல்லை, கவிதைகளாலும், சொற்பொழி வாலும் இதயம் கவர்கிறவர்.

அவரது ‘உச்சிதனை முகர்ந்தால்’ நூலில் இடம்பெற்ற கட்டுரைகள், குழந்தைகளுக்குப் பாடமாக வைக்கத் தகுந்த பயன்மிகும் கட்டுரைகள். இன்னும் நூலாகத் தொகுக்கப்படவில்லை என்றாலும் முகநூலில் தங்கை ஸ்டெல்லா தமிழரசி எழுதிவரும் கவிதைகளும் கஜலும், குலோப்ஜாமூன் தமிழால் நம்மை கரையவிடுகின்றன. இவரைப் போலவே தோழி ஜானு இந்துவின் கவிதைகள், ரத்த அணுக்களைத் தித்திக்க வைப்பவையாகத் திகழ்கின்றன. பெண்கள் எழுதுகோலைப் பிடித்தால் மொழியே உயர்வடையும், மேலதிகச் சுவையாகும் என்பதற்கு இத்தகைய பெண் படைப்பாளிக்கள் சான்றாகத் திகழ்கிறார்கள். முகநூல் குழுமத்தைக் கட்டி எழுப்பி, அதன் மூலம் ஏராளமான படைப்பாளி களை மேடை ஏற்றி அறிமுகப்படுத்தி வருகிறார் அன்புச் சகோதரி ஞானி. அயராது உழைக்கும் இவரையும் இவரது இலக்கியப் பணிகளையும் வியப்போடு பார்த்து வருகிறேன். இப்போது மின்னிதழ் மூலமும் தன் சாதனைப் பயணத்தைத் தொடங்கியிருக்கிறார் ஞானி. திருச்சியைச் சேர்ந்த தோழி கவிச் செல்வா, வீறுகொண்ட படைப்புப் பெண்மணி. காவல்துறையில் பணியாற்றி, இலக்கியத்தினாலேயே பணியைத் துறக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டவர். இருந்தும் இவரும் இவரது இலக்கிய இதயமும் சோர்ந்து விடவில்லை. அவரது கவிதைகளின் உரத்த தொனியும் , சமூக அவலத்திற்கு எதிரான கவிதைக் குரலும் தனித்த தன்மைகொண்டது. அவருடைய சொற்பொழிவுத் திறன் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். இதே போல் தோழி மருத்துவர் ஜீவரேகாவும் முகநூல் குழுமத்தைச் சிறப்புற நடத்திப் படைப்பாளர் கள் பலருக்கும் ஊக்கம் தந்து வருவதோடு, சுவையான கவிதைகளையும் படைத்து வருகிறார். என் மனதில் இருக்கும் பலரை பட்டியல் போட்டால் அதைத் தனி நூலாகத் தொகுக்க வேண்டியிருக்கும். இப்படி நான் பார்க்கிற, என் கண்களில் தென்படுகிற, நான் கேள்விப்படுகிற அத்தனை பெண்களும் சாதனை மகளிராக இருக்கிறார்கள் என்பது பெருமிதத் திற்குரியது. ஆணாதிக்க அநீதிகளை வெற்றிகொண்டு, இன்று சமத்துவப் பேரொளியை நோக்கி நகரும்இந்த உலகம், பெண்களால் ஆனதே. இதை எந்த சபை யிலும் சத்தியம் அடித்துச் சொல்ல முடியும்.