மஞ்சு சினிமாஸ் சார்பில், கே. மஞ்சு தயாரிப்பில் உருவாகி யுள்ள படம் "சூர்யவம்சி.' பிரபல இயக்குநர் மகேஷ் ராவ் இயக்கியுள்ள இந்தப்படத் தில் கதாநாயகனாக யஷ் நடிக்க, கதாநாயகியாக ராதிகா பண்டிட் மற்றும் வித்தியாச மான ரோலில் நடிகர் ஷாம் ஆகி யோர் நடித்திருக்கிறார்கள்.
கடந்த வருடம் கன்னடத்தில் உருவாகி, தமிழ், தெலுங்கு மட்டுமல்லாது; இந்தியிலும் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற படம் "கேஜிஎப்.'
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/yash_1.jpg)
"சாப்டர் 1' படம்மூலம் தென்னிந்தியா முழுவதும் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளும் ஒரு கதாநாயகன் ஆகி விட்டார் நடிகர் யஷ். இந்த நிலையில் யஷ் நடிப்பில் தமிழில் உருவாகியுள்ள இந்த "சூர்யவம்சி' படம் வரும் நவம்பர் மாதம் ரிலீஸுக்கு தயாராகிவருகிறது.
நேர்கொண்ட பார்வை கொண்ட துணிச்சலான இளைஞன் யஷ், தன் மனதைக் கவர்ந்த ராதிகாவை விரட்டி விரட்டி காதலிக்கிறார். ராதிகா யஷ்ஷை விரும்பினாலும், அதை வெளியே சொல்ல தயக்கம் காட்டுகிறார். ராதிகாவின் பெற்றோர்கள் தாங்கள் இறப் பதற்குமுன்பு தங்கள் உறவுக் காரபையன் ஷாமைத்தான் திருமணம் செய்ய வேண்டும் என சத்தியம் வாங்கி இருப்பது யஷ்ஷிற்கு தெரியவருகிறது. ஷாம் ஒரு மிகப்பெரிய டான். அதேசமயம் ராதிகாவுக்காக தன்னை மாற்றிக்கொள்ள நினைப்பவர். இதன்பிறகு என்ன நடக்கிறது என்பதை காதல், காமெடி, ஆக்ஷன் என கமர்ஷியல் பார்முலா கலந்து படமாக்கி இருக்கிறார் இயக்குநர் மகேஷ் ராவ்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2019-10/yash-t.jpg)