மிழில் வெளிவந்த "போங்கு' திரைப்படத்தில் நடித்தவர் ரூஹி சிங். இப்போ அவருக்கு ஹாலிவுட் படமே கிடைச்சிருக்கு.

Advertisment

இந்திய அழகியான ரூஹி சிங் ஹிந்தி, தமிழ்ப் படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார். ஒரு வெப் சீரியலிலும் நடித்து வருகிறார்.

Advertisment

dd

உலக அழகியாக இருந்தாலும், பல திறமைகளை தனக்குள் வைத்திருப்பவர் ரூஹி. ஆம், இவருக்கு கதகளி தெரியும், பெல்லி டான்ஸ், போல் டான்ஸ் பின்னுவார். குங்ஃபூ மட்டுமின்றி, ஷாவோலின் குங்ஃபூவிலும், கிக் பாக்ஸிங்கிலும் பயிற்சி பெறுகிறார்.

daf

இவ்வளவு திறமை வைத்திருப்பவரை சும்மா விடுவார்களா?

அவர்தான் சும்மா இருப்பாரா?

"காலண்டர் கேர்ள்ஸ்', "போங்கு' போன்ற படங்களில் நடித்த இவரை தெலுங்கு நடிகர் விஷ்ணு மஞ்சு ஒரு ஹாலிவுட் படத்துக்கு தூக்கி யிருக்கிறார்.

Advertisment

அந்தப் படம் ஆங்கிலத்துடன் தெலுங்கு, ஹிந்தியும் பேசப்போகிறது என்கிறார் ரூஹி. ரூஹி விஷ்ணுவுடன் காஜல் அகர்வாலும் நடிக்கிறார். ஜெஃப்ரி ஜீ சின் டைரக்ஷனில் நடிக்க அழைத்த போது ரொம்ப திரில்லா இருந்துச்சாம். அதுவும் மூன்று மொழிகளில் எடுக்கப்படும் படத்தில் நடிப்பது, ஹாலிவுட்டில் நல்ல என்ட்ரியாக இருக்கும் என்று நினைத்து உற்சாகத்தில் துள்ளிக் குதித்தாராம்.

தென்னக மொழிகளில் நல்ல தொடர்பு இருக்கவேண்டும் என்பதற்காக தமிழ், தெலுங்கு மொழிகளைக் கற்றுவந்தாராம். அது இப்போது நல்ல பலனைக் கொடுக்குதாம். ""ஹைதராபாத் தனக்கு ரொம்பப் பிடிச்ச நகரம். கூட நடிக்கிற விஷ்ணு மஞ்சு கூலான ஆள். அவர் செட்டில் இருந்தால் கலகலப்புக்கு பஞ்சமே இருக்காது.

அவருடன் நடிப்பது சந்தோஷமாக இருக்கிறது. காஜலும் பழகுவதற்கு இனிமையானவர். இளம் நடிகையான எனக்கு இவர்களிடம் கத்துக்கிறதுக்கு ரொம்ப விஷயம் இருக்கு'' என்கிறார்.

""என்னிடமுள்ள திறமைகளை வெளிப் படுத்தக்கூடிய ஒரு படம் கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்தேன். கிடைத்தது மட்டுமின்றி நான் ரொம்ப நாட்களாக நடிக்கவேண்டும் என்று ஆசைப்பட்ட ஆட்களோடு நடிக்கவும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. எனக்கு டைரக்டர்கள் பூரி ஜெகனாத், விஜய்தேவர கொண்டா ஆகியோரை ரொம்பப் பிடிக்கும்.

அவர்களுடனும் வேலை செய்ய ஆசையாக காத்திருக்கிறேன்'' என்கிறார் ரூஹி சிங்.

அப்பாடியோவ்! ஒரே பேட்டியில் இத்தனை பேரை கவுத்திருக்கியேம்மா. நீ பொழைச்சுக்கவ!