ரஜினியின் 168-ஆவது படத் தின் படப்பிடிப்பு பாதிக்கும்மேல் முடிந்த நிலையில், "அண்ணாத்த' என்ற தலைப்பை அதிகாரப்பூர்வ மாக அறிவித்திருக் கிறது சன் பிக்சர்ஸ். "சிறுத்தை' சிவா டைரக்ஷனில் மீனா, குஷ்பு, பிரகாஷ்ராஜ், கீர்த்தி சுரேஷ், சூரி, அருள்தாஸ் என அனைவருமே ஹைதராபாத்தில் டேரா போட்டுள்ளார்.
""தலைவருக்கு ஜோடியா "நெற்றிக்கண்' படத்துல என்னோட அம்மா நடிச்சாங்க.
நானும் தலைவருக்கு ஜோடி போட்ரு வோம்னு நம்பிக்கையில இருந்தேன். ஆனா "அண்ணாத்த'-வுக்கு தங்கச்சியாக் கிட்டீங்களே, இது நியாயமா அண்ணா?' என "சிறுத்தை' சிவாவிடம் சொல்லிச் சொல்லி புலம்புகிறாராம் கீர்த்தி சுரேஷ். தனது திருமண நாளையொட்டி, கடந்த 26-ஆம் தேதி, ஹைதராபாத்திலிருந்து சென்னை திரும்பிய ரஜினி, ஒருசில நாட்களில் மீண்டும் ஹைதராபாத் சென்று "அண்ணாத்த'-வின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார்.
அநேகமாக மார்ச் இரண்டாவது வாரத்தில் கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் படத்தின் துவக்கவிழா கமலின் அலுவலகத்தில் சிம்பிளாக நடக்கவுள்ளதாம். ""சினிமா உலகில் எனக்கு அண்ணனாக இருப்பவர் கமல்'' என அடிக்கடி ரஜினி சொல்வார்.
அந்த அண்ணனின் தயாரிப்பில் ரஜினி நடிக்கிறார், லோகேஷ் கனகராஜ் டைரக்ட் பண்ணுகிறார். பவர்ஃபுல் கேரக்டர் ஒன்றில் கமலும் நடிக்கிறார்.