ஆர்.ஜி. மீடியா சார்பாக டி. ராபின்சன் தயாரித்துள்ள "கடலை போட ஒரு பொண்ணு வேணும்' படத்தை வேகமாக எடுத்துள்ள இயக்குநர் ஆனந்த்ராஜன் படத்தைப் பற்றிக் கூறும்போது, ""யோகிபாபுவின் இன்னொரு பரிணாமத்தை இந்தப்படம் காட்டும். வழக்கமாக படங்களில் காமெடியை தொழிலாகப் பண்ணும் யோகிபாபுவைப் பார்த்திருக்கிறோம். இந்தப்படத்தில் யோகிபாபு பண்ணும் தொழிலே பக்கா காமெடியாக இருக்கும்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/yogibabu_2.jpg)
யோகிபாபு செய்யும் தொழிலுக்கு இடது வலதாக இருக்கும் அடியாட்கள் அனைவரும் பெண்கள். அந்தப் பெண்களை அவர் கடலை போட்டு உஷார் பண்ணுவார் என்பதுதான் படத்தின் ஹை பாயிண்ட் காமெடி. கடலைபோட்டு கடலைபோட்டு பெண்களை உஷார் செய்து ரவுடித் தொழில் செய்யும் அவரிடம், கடலைபோட பெண் தேடும் ஹீரோ அசார் மாட்டிக்கொண்டு விழிபிதுங்கும் இடங்களில் எல்லாம் சிரிப்பால் நம் வயிறு பிதுங்கும். முழுக்க முழுக்க மக்களை ஜாலியாக என்டர்டெயின்மென்ட் பண்ண வேண்டும் என்ற நோக்கத்தில் மட்டுமே எடுக்கப்பட்டிருக்கிற படம் இது. நிச்சயம் இந்தப்படம் கமர்சியலாக பெரிய வெற்றிபெறும்.
அதற்கான எல்லா சாத்தியங்களையும் படத்தில் கையாண்டிருக்கிறோம்'' என்கிறார். சமுத்திரகனியிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர் ஆனந்த்ராஜன்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2019-06/yogibabu-t.jpg)